2010–2019
இதோ தேவ ஆட்டுக்குட்டி
ஏப்ரல் 2019 பொது மாநாடு


2:3

இதோ தேவ ஆட்டுக்குட்டி

பரிசுத்தமானதாக, எடுப்பானதாக, நமது வாராந்தர தொழுகையின் மையமாக ஒப்புக்கொள்ளப்பட்டதாக, கர்த்தருடைய போஜனத்தின் திருவிருந்தை, மாற்றியமைக்கப்பட்டிருக்கிற நமது ஞாயிறு கூட்டம் வலியுறுத்துகிறது.

இந்த தேர்ந்திசைக் குழுவிலுள்ள இளம் மக்களின் கண்களில் நான் கண்ணீரைப் பார்க்கும்வரை நான் நன்றாகத்தானிருந்தேன். என்னால் எப்போதுமே கொடுக்கக்கூடிய பிரசங்கத்தைவிட அந்த கண்ணீர்கள் மிக சரளமான சொற்பொழிவாயிருக்கிறது.

அவனுடைய கைகளில் ஞானஸ்நானம் பெற ஆர்வமுள்ள கூட்டத்தைக் கடந்து, அதே வேண்டுகோளுடன் தயக்கமின்றி தூரத்தில் அவனை நோக்கி முன்னேறி வந்த நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவான அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரனை, தண்ணீரின் எல்லையிலிருந்து மேலே நோக்கி, யோவான் ஸ்நானன் கண்டான் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னமும் நம்மைத் தூண்டுகிற, “இதோ தேவ ஆட்டுக்குட்டி” என பக்கத்திலுள்ளவர்கள் கேட்க, பயபக்தியுடன் ஆனால், போதுமான சத்தத்தில் யோவான் பாராட்டுதலைத் தெரிவித்தான்.1

அனைத்தும் அவருக்குப் பொருந்துகிற அவரை, யேகோவா என்றோ, அல்லது மீட்பர் என்றோ, அல்லது தேவ குமாரனென்றோ இயேசுவுக்கு முன் இந்த நீண்ட தீர்க்கதரிசனமுரைக்கப்பட்ட முன்னோடி, அழைக்கவில்லை. இல்லை, முந்தைய, ஒருவேளை அவனுடைய மக்களின் பாரம்பரியத்தில் மிகப் பொதுவாக அடையாளம் காணப்படுகிற உருவத்தை யோவான் தேர்ந்தெடுத்தான். பாவங்களுக்காவும், துக்கங்களுக்காகவும், ஒரு வீழ்ந்த உலகத்தின், அதனுள் வீழ்ந்த அனைத்து மக்களின் சோதனைகளுக்காகவும் தொந்திரவுகளுக்காகவும் பாவநிவர்த்தியில் வழங்கப்பட்ட ஒரு பலியின் ஆட்டுக்குட்டியின் உருவத்தை அவன் பயன்படுத்தினான்.

அந்த வரலாற்றின் சிறிய பகுதியை நினைவுபடுத்துவதில் தயவுசெய்து என்னை ஈடுபடுத்துங்கள்.

ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு ஆதாமும் ஏவாளும் ஒரு பேரழிவின் வருங்காலத்தை எதிர்கொண்டார்கள். நமக்கான அநித்தியத்தின், தற்கால வாழ்க்கையின் கதவுகள் திறக்கப்பட்டு, நித்தியத்திற்கும் நித்திய ஜீவனுக்குமான கதவை அவர்களே மூடினார்கள். மீறுதலினிமித்தம், இப்போது அவர்கள் எதிர்கொள்கிற ஒரு சரீர மரணத்தையும், ஆவிக்குரிய நாடு கடத்தலையும், என்றென்றைக்கும் தேவனின் பிரசன்னத்திலிருந்து பிரிக்கப்பட்டதையும் உணர்வுடன் அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.2 அவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்? இந்த அவலநிலையிலிருந்து வெளிவர ஏதாவது வழியிருக்குமா? அவர்கள் இன்னமும் தோட்டத்திலிருந்தபோது அவர்கள் பெற்ற அறிவுறுத்தலை நினைவுகூர எவ்வளவு தூரம் அனுமதிக்கப்பட்டார்கள் என நமக்கு நிச்சயமில்லை, ஆனால் தூய்மையான, பழுதற்ற, அவர்களுடைய மந்தையில் பிறந்த முதல் ஆண் ஆட்டுக்குட்டியை தேவனுக்கு ஒரு பலியாக வழக்கமாக அவர்கள் கொடுக்கவேண்டுமென நினைவுகூர்ந்தார்கள்.3

வரப்போகிற உலகத்தின் இரட்சகரால் அவர்களுடைய சார்பில் செய்யப்படவேண்டிய, முன்பே குறிக்கப்பட்ட காணிக்கையான இந்த பலி ஒரு வகை என பின்னர் ஒரு தூதன் விவரிக்க வந்தான். “இந்தக் காரியம் பிதாவின் ஒரேபேறானவரின் பலிக்கு ஒத்ததாயிருக்கிறது என தூதன் சொன்னான். “ஆகவே, … நீங்கள் மனந்திரும்பி என்றென்றைக்குமாக குமாரனின் நாமத்தில் தேவனை தொழுதுகொள்வீர்களாக”.4 அதிர்ஷ்டவசமாக, வெளியே ஒரு வழியும் உயரே ஒரு வழியும் இருக்கப்போகிறது.

பரலோகத்தின் அநித்தியத்திற்கு முந்தைய ஆலோசனையில், அவருடைய தூய்மையான, பழுதற்ற முதற்பேரான குமாரனாகிய தேவாட்டுக்குட்டி உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்டார் என பின்னர்5 அப்போஸ்தலனாகிய யோவான் அவரைக் குறித்து விவரித்த அவரிடமிருந்து உதவி வரலாமென ஆதாமுக்கும் ஏவாளுக்கும் (எஞ்சிய நம் அனைவருக்கும்) தேவன் வாக்களி்த்தார். அநித்தியத்தில் தங்களுடைய அடையாள சிறிய ஆட்டுக்குட்டிகளை பலி கொடுப்பதில் ஆதாமும் அவனுடைய சந்ததியும், தங்களுடைய புரிந்துகொள்ளுதலையும்,அபிஷேகிக்கப்பட்ட ஒருவரான இயேசுவின் பாவநிவர்த்தியின் பலியின்மேல் சார்ந்திருத்தலையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். 6 பின்னர், வனாந்தரத்தின் ஆசரிப்புக்கூடாரம் இந்த நியமிப்புக்கான அமைப்பாக மாறி, அதன் பின்னர் சாலொமோன் கட்டிய ஆலயமாக மாறியது.

துரதிருஷ்டவசமாக, உண்மையான மனந்திரும்புதலிலும் விசுவாசம் நிறைந்ததிலும் வாழ்வதின் ஒரு அடையாளமாக, பழைய ஏற்பாடு அதிகமாக வெளிப்படுத்துகிறதைப் போல, அவர்களுடைய பழுதற்ற ஆட்டுக்குட்டியின் சடங்காச்சாரமான இந்த பலி செயல்படவில்லை. இணைந்திருக்கவேண்டிய அந்த பலிகளான தார்மீக தேர்வு சிலநேரங்களில் கற்களின்மேல் இரத்தம் உலர போதுமான அளவு நீடித்திருப்பதில்லை. முதல் தலைமுறையில் காயீன் தனது சகோதரனை கொன்றதை தடுக்கவும் விலக்கவும் எந்த வகையிலும் போதுமான அளவுக்கு இது நீடித்திருக்கவில்லை.7

நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நடந்துகொண்டிருக்கும் இத்தகைய சோதனைகளிலும் பிரச்சினைகளிலும் இறுதியாக, நீண்டகாலமாக வாக்களிக்கப்பட்ட மேசியாவான இயேசு பிறந்தபோது தூதர்கள் சந்தோஷத்தில் பாடியது ஆச்சரியமில்லை. பின்னர் அவருடைய சுருக்கமான பூலோக ஊழியத்தைத் தொடர்ந்து, ஏதேனுக்கு வெளியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மிக தனிப்பட்ட நியமனத்தில் வடிவத்தில் கர்த்தரின் போஜனமான திருவிருந்து அறிமுகப்படுத்தப்பட்டதில் இந்த தூய்மையான சகல பஸ்கா பண்டிகையின் ஆடு அவருடைய மரணத்திற்காக சீஷர்களை ஆயத்தப்படுத்தியது. இன்னமும் ஒரு காணிக்கை இருக்கலாம், அதில் இன்னமும் ஒரு பலி ஈடுபட்டிருக்கலாம், ஆனால் அது, அதிக ஆழமான அடையாளத்துடன், முதல் பிறந்த ஆட்டுக்குட்டி இரத்தம் சிந்துதலைவிட அதிக தற்சோதனையாகவும் தனிப்பட்டதாகவுமிருக்கும். அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் நெப்பியர்களுக்கு இரட்சகர் இதைச் சொன்னார்:

“இனி இரத்தம் சிந்துதலை எனக்கு நீங்கள் படைக்கவேண்டாம்,. . .

“. . . ஆம், நீங்கள் எனக்கு உடைந்த இருதயத்தையும், நொருங்குண்ட ஆவியையும் எனக்கு பலியாக செலுத்துங்கள். என்னிடத்தில் உடைந்த இருதயத்தோடும் நொருங்குண்ட ஆவியோடும் வருகிற எவருக்கும் அக்கினியாலும் பரிசுத்த ஆவியானவராலும் ஞானஸ்நானம் கொடுப்பேன். . . .

“. . . ஆதலால் மனந்திரும்பி, இரட்சிப்பைப் பெறுங்கள்”.8

எனக்கன்பான சகோதர சகோதரிகளே, வீட்டில் அதிகரிக்கப்பட்ட சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலில் அற்புதமான புதிய வலியுறுத்தலுடன் “என்னுடைய பரிசுத்த நாளில் ஜெப ஆலயத்திற்குச் சென்று உங்களுடைய திருவிருந்துகளை நீங்கள் செலுத்துவீர்களாக” என இன்னமும் நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம் என்பதை நினைவுகூருவது நமக்கு முக்கியமானது9 வீட்டை அதிகம் மையப்படுத்தி சுவிசேஷ அறிவுறுத்தலில் நேரம் ஒதுக்குவதற்குக் கூடுதலாக, திருத்தப்பட்ட நம்முடைய ஞாயிறு கூட்டமும் ஒரு வழியில் கூட்ட நேர அட்டவணையின் சிக்கலைக் குறைக்கிறது. அது கர்த்தரின் போஜனமான திருவிருந்தை பரிசுத்தமாக, வெளிப்படையாக, நமது வாராந்தர தொழுகை அனுபவத்தை ஏற்றுக்கொண்ட மையப்புள்ளியாக சரியாக வலியுறுத்துகிறது. முழு மனுக்குலத்தின் பாவங்களையும் துக்கங்களையும் முற்றிலும் தனியாக சுமந்ததால், உள்ளம் உடைந்ததிலிருந்து கிறிஸ்து மரித்தார் என்பதை தனிப்பட்டவர்களாக சாத்தியமான ஒரு வழியில் நாம் நினைவுகூரவேண்டும்.

நம்மால் முடிந்தளவுக்கு நாம் பங்களித்ததைப்போல, அத்தகைய ஒரு நேரத்தில் அந்த அபாயகரமான சுமைக்கு நமது மரியாதையை வேண்டுகிறது அப்படியாக,ஒரு பரிசுத்த நியமனத்தில் பங்கேற்பதற்காக, ஆரம்பத்திலேயேயும், பயபக்தியுடனும், பொருத்தமான உடையணிந்தும் வர உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். நமது காலங்களில் “ஞாயிறு சிறப்பானது” என்ற அதன் அர்த்தமும் யாருடைய பிரசன்னத்தில் நாம் வருகிறோமோ அவருடைய மதிப்பும் சிறிது காணாமல் போய், நம்மால் முடிகிறவரை தலைவாருகிற, உடையணிகிற அந்த பாரம்பரியத்தை நாம் மீீட்டெடுக்கவேண்டும்.

பிள்ளைகளுடனும், சீரியோஸ், டயபர் பைகளுடன், அற்புதமாக பின்தங்கி, அதை எல்லாவற்றையும் செய்துமுடிக்க அதிர்ஷ்டமுள்ள ஆசீர்வதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு நேரம் தவறாமையில் ஒரு தாமத அனுமதிச் சீட்டு எப்போதுமே அன்புடன் வழங்கப்படுகிறது அதற்கும் மேலாக ஒரு ஓய்வுநாளின் காலையில் தவிர்க்கமுடியாதபடி தங்கள் மாடுகளை சமுத்திரத்தில் காண்கிற மற்றவர்களும் அங்கே இருப்பார்கள். எப்படியாயினும் எப்போதாவது தாமதம் என நாம் சொல்கிற இந்த பிந்தைய குழு புரிந்துகொள்ளப்படுகிறது, ஆனால் ஒவ்வொரு ஞாயிறும் மாடு சமுத்திரத்திலிருந்தால், நீங்கள் மாட்டை விற்றுவிட அல்லது சமுத்திரத்தை நிரப்ப நாங்கள் பெலமாக சிபாரிசிக்கிறோம்.

அந்த அதே ஆவியில், நமது பரிசுத்தமான கட்டிடங்களில் சத்தத்தைக் குறைப்பதற்காக, நாங்கள் ஒரு அப்போஸ்தல வேண்டுதலை வைக்கிறோம். ஒருவருக்கொருவரை சந்திக்க நாங்கள் விரும்புகிறோம், விரும்பவேண்டும். இது சபை வருகையின் சந்தோஷங்களில் ஒன்று, ஆனால் தொழுகைக்கு குறிப்பாக அர்ப்பணிக்கப்பட்ட இடத்தில் இது பின்தொடரப்படக்கூடாது ஜெபம், சாட்சி, வெளிப்படுத்தல், சமாதானத்தால், வகைப்படுத்தப்படவேண்டிய அமைப்பில் சிலசமயங்களில் இரைச்சலும் பக்தியில்லாமலும் இருப்பதால் நமது விசுவாசத்திலில்லாத விசாரிப்பவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள் என நான் அச்சமடைகிறேன். ஒருவேளை அப்படியே பரலோகமும் சிறிது அதிர்ச்சியடைந்திருக்கும்.

நமது திருவிருந்து கூட்டம் ஆரம்பிப்பதற்கு மிகமுன்பே தலைமை தாங்கும் அலுவலர்கள் மேடையில் அமர்ந்து, முன்னோடி இசையைக் கேட்டுக்கொண்டு, எஞ்சியுள்ள நாம் பின்பற்றவேண்டிய பயபக்தியுடன் எடுத்து்காட்டை அமைத்தால், இது நம் திருவிருந்துக் கூட்டத்திற்கு உற்சாகத்தைக் கூட்டும். மேடையில் வீண்பேச்சிருந்தால் சபையிலும் வீண்பேச்சிருப்பதில் நாம் ஆச்சரியப்படவேண்டாம் நமது தொழுகையின் உற்சாகத்திலிருந்து திசை திருப்புகிற அறிவுப்புகளை நீக்குகிற அந்த ஆயத்துவங்களை நாங்கள் பாராட்டுகிறோம். அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் அவனுக்குக் கிடைக்கிற தியாகத்தின் சிலாக்கியத்தில் ஒரே உயர் ஆசாரியத்துவத்தில் ஒரே ஒருவனாக பங்கேற்கப் போகிற, கர்த்தரின் பண்டைய ஆலயத்திலிருந்த சகரியாவைப்போல ஒரு ஆசாரியன், பைன்வுட் போட்டிக்கு இன்னும் ஆறுவாரங்களே இருக்கிறதென நமக்கு நினைவூட்ட மேடைக்கு முன்பு கடந்து செல்வதை நான் ஒருவனாக, என்னால் பார்க்க முடிவதை கற்பனை செய்யமுடியாது.

சகோதர சகோதரிகளே, கர்த்தரால் நியமிக்கப்பட்ட இந்த மணிநேரம், நமது வாரத்தில் மிக பரிசுத்தமான மணிநேரம். கட்டளையால், சபையில் மிக உலகளவில் பெறப்பட்ட நியமனத்திற்காக நாம் கூடியிருக்கிறோம். நம்பொருட்டு இது கடந்துபோகமுடியாது என அவர் அறிந்திருந்ததால் மட்டுமே அவர் குடிக்கப்போகிற பாத்திரம் கடந்து போகமுடிந்தால் என கேட்ட இது அவரை நினைவுபடுத்துகிறது. ஒரு 11 அல்லது 12 வயது உதவிக்காரன் கையில் அந்த பாத்திரத்தின் அடையாளம் அந்தக் கணத்தில் மெதுவாக அதன் வழியில் கீழே வரிசையில் நம்மை நோக்கி வருவதை நாம் நினைவுகூர்ந்தால் இது நமக்குதவும்.

கர்த்தருக்கு நமது பலியின் பரிசை முன்வைக்க பரிசுத்த மணிநேரம் வரும்போது, தீர்க்கவேண்டிய நமது சொந்த பாவங்கள், குறைபாடுகள் நமக்கிருக்கின்றன, அதற்காகவே நாம் அங்கிருக்கிறோம் ஆனால், சுற்றிலும் கூடியிருக்கிற பிற உடைந்த இருதயங்களையும் துக்கமான ஆவிகளையும்பற்றி நாம் கவனமுள்ளவர்களாக இருந்தால் அத்தகைய மனம்வருந்துதலுக்கு நாம் அதிக வெற்றிகரமாயிருப்போம். மிகத் தூரத்தில் அமர்ந்திராத ஒருவர், திருவிருந்தின் பாடல் மற்றும் அந்த ஆசாரியர்களின் ஜெபம் முழுவதிலும், வெளிப்படையாகவும் உள்ளூரவும் அழுதுகொண்டிருக்கலாம். நாம் அதை அமைதியாகக் கவனித்து, சிறிது ஆறுதலையும், நமது சிறிய இரக்கத்தின் கோப்பையையும் கொடுக்கலாம். அல்லது சேவைக்குட்பட்டிராத அழுதுகொண்டிருக்கிற, போராடிக்கொண்டிருக்கிற அங்கத்தினர், நமது பங்கிற்கு மீட்பின் ஊழியத்திற்காக அன்றி அடுத்தவாரம் அங்கிருக்கமாட்டார்கள், அல்லது சபையின் அங்கத்தினரே அல்லாத நமது சகோதர சகோதரிகள் ஆனால் நமது சகோதர சகோதரிகளாக இருப்பவர்களுக்காக அதை நாம் அர்ப்பணிக்கமாட்டோமா? சபைக்கு உள்ளேயும் சபைக்கு வெளியேயும், உலகத்தில் வேதனைக்கு குறைவேயில்லை, ஆகவே, எந்த திசையிலும் தேடுங்கள், தாங்குவதற்கு அதிக சுமையுள்ளதாகத் தோன்றுகிற, மனவேதனை எப்போதுமே முடிவுக்கு வராததாகத் தோன்றுகிறவர்களை நீங்கள் காண்பீர்கள். பாரஞ்சுமக்கிறவர்களை தூக்கிவிடுகிற, கலக்கமடைந்தவர்களை ஆறுதல்படுத்துகிற, எப்போதுமே முடிவுக்கு வராத அவருடைய பணியில் மகத்தான மருத்துவரோடு சேருவது “எப்போதுமே அவரை நினைவுகூருதலுக்கு”10 ஒரு வழியாயிருக்கலாம்.

அன்பான நண்பர்களே, தேவனுடைய ஒரேபேரான குமாரனின் பாவநிவர்த்தியின் பலியின் ஒரு அதிகரித்த பரிசுத்த ஏற்றுக்கொள்ளுதல் என்ற நமது நம்பிக்கையில் ஒவ்வொரு வாரமும் உலகமுழுவதிலும் நாம் ஒன்றுகூடும்போது, “அவருடைய துக்கத்தில் அதிக கண்ணீர்களையும் அவருடைய துயரத்தில் அதிக வேதனையையும்” திருவிருந்து மேடையில் நாம் கொண்டுவருவோமா. அதன் பின்னர், நாம் சிந்தித்து, ஜெபித்து, புதிதாக உடன்படிக்கை செய்யும்போது பாடுகளில் “அதிக பொறுமையையும் … நிவாரணத்திற்காக அதிக துதியின்”11 அந்த பரிசுத்த கணநேரத்திலிருந்தும் நாம் எடுத்துக்கொள்வோமா. அத்தகைய பொறுமைக்காகவும் நிவாரணத்திற்காகவும், அத்தகைய பரிசுத்ததிற்காவும் நம்பிக்கைகாகவும், மன்னிப்பின் முதல் அப்பத்தை பிட்டவரும், மீட்பின் முதல் திராட்ச ரசத்தை ஊற்றியவருமான விலையேறப்பெற்ற, இரக்கமுள்ள, தேவனின் பரிசுத்த ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நம் அனைவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. யோவான் 1:29

  2. 2 நேபி 9:8–9 பார்க்கவும்.

  3. மோசே 5:5 பார்க்கவும், யாத்திராகமம் 12:3–10 ஐயும் பார்க்கவும்.

  4. மோசே 5:7-8; மோசே 5:9 ஐயும் பார்க்கவும்.

  5. வெளிப்படுத்தின விசேஷம் 13:8.

  6. Bible Dictionary, “Anointed One”; see also Guide to the Scriptures, “Anointed One,” scriptures.ChurchofJesusChrist.org. பார்க்கவும்.

  7. முரண்பாடாக, ஆபேலை காயீன் கொன்றுபோடுதல், முடிவாக சாத்தானால் வழிகாட்டப்பட்ட ஒரு செயல், அது ஒருவேளை ,ஆபேலின் பலி ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அவனுடைய பலி கர்த்தரால் புறக்கணிக்கப்பட்டதில் காயீனின் ஆரம்ப கோபத்திற்கு இணைக்கப்பட்டிருக்கலாம்.

    “கர்த்தருடைய பிரசன்னத்திற்குள் மனிதன் பிரவேசிக்க ஒரு கதவைத் திறக்கவேண்டியவரான அவருடைய சொந்தக் குமாரனை வரமாக்கியதில் தேவன் ஒரு பலியை ஆயத்தம்பண்ணினார்.

    “இந்த பாவநிவர்த்தியில் அல்லது மீட்பின் திட்டத்தில் விசுவாசத்தால் மந்தையின் தலையீற்றாயிருந்த ஒரு பலியை ஆபேல் தேவனுக்குச் செலுத்தினான், அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. பூமியின் கனியை காயீன் செலுத்தினான், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. [அவனுடைய பலி சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்] இரத்தம் சிந்துதல்” (Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 48; see also 107–8).

  8. 3 நெப்பி 9:19-20, 22.

  9. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:9.

  10. மரோனி 4:3; 5:2.

  11. “More Holiness Give Me,” Hymns, no. 131