2010–2019
இயேசு கிறிஸ்துவின் பாவ நிவர்த்தி
ஏப்ரல் 2019 பொது மாநாடு


2:3

இயேசு கிறிஸ்துவின் பாவ நிவர்த்தி

இரட்சகரின் பாவநிவர்த்தி சந்தர்ப்பங்களுக்கு எல்லையற்றது மட்டுமல்ல, தனிப்பட்ட பலனுமுடையது.

வருடத்தின் இந்த காலகட்டத்தில் இரட்சகரின் பாவ நிவர்த்தி பற்றி குறிப்பாக களிகூர்ந்து நினைக்கிறோம். இது உண்மையாகவே மிக முக்கிய, மனதை விரிவாக்குகிற, இந்த உலகம் அல்லது பிரபஞ்சம் எப்போதும் அறிந்திருக்கிற ஆர்வமிக்க கோட்பாடு ஆகும். நமது வாழ்க்கைக்கு நம்பிக்கையும் நோக்கமும் கொடுப்பது இதுதான்.

அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் பாவ நிவர்த்தி என்பது என்ன? ஒரு விதத்தில் இது கெத்சமனேவில் தொடங்கி, சிலுவையில் தொடர்ந்து, கல்லறையிலிருந்து இரட்சகரின் உயிர்த்தெழுதலில் நிறைவடைந்தது. நம் ஒவ்வொருவர் மீதும் சிந்திக்கமுடியாத அன்பால் அது தூண்டப்பட்டது. பாவமற்ற, பஞ்சபூதங்கள் உள்ளிட்ட, மரணத்தின் மீது கூட எல்லையற்ற வல்லமை பெற்றிருந்த, நமது எல்லா பாவங்கள் மற்றும் பாடுகளின் விளைவுகளுக்காக பாடனுபவிக்க அடக்க முடியாத ஆற்றல் படைத்த, உணன்மையாகவே இவை அனைத்துக்கும் கீழாக இறங்கிய ஒருவர் தேவைப்பட்டார்.1 அதுவே இயேசு கிறிஸ்துவின் ஊழியம்--அதுவே அவரது பாவ நிவர்த்தி.

அப்படியானால் அதன் நோக்கம் என்ன? நாம் தேவனுடைய பிரசன்னத்துக்கு திரும்ப செல்லுவதையும், அதிகமாக அவரைப்போலாகுவதையும், சந்தோஷத்தின் முழுமையைப் பெறுவதையும் சாத்தியப் படுத்துவதே. இது நான்கு தடைகளை தாண்டி செய்யப்பட்டது:

  1. சரீர மரணம்

  2. ஆவிக்குரிய மரணம் ஆதாமாலும் நமது பாவங்களாலும் உண்டாக்கப்பட்டது.

  3. நமது வேதனைகள் மற்றும் பெலவீனங்கள்

  4. நமது பெலவீனங்கள் மற்றும் பரிபூரணமின்மை

ஆனால் இரட்சகர் நீதியின் நியாயப்பிமாணங்களை மீறாமல் எப்படி இதை அடைய முடிந்தது?

விமானத்திலிருந்து விழுதல்

மயிர்கூச்செரியும் விழுதலை சிந்தித்து, உடனடி தீர்மானம் செய்து, சிறிய விமானத்திலிருந்து தானாகவே குதிக்கிற ஒருவரை ஒரு கணம் சிந்தியுங்கள். அப்படிச் செய்த பிறகு திடீரென தன் செயலின் முட்டாள் தனத்தை உணர்கிறான். அவன் பத்திரமாக தரையிரங்க விரும்புகிறான், ஆனால் ஒரு தடை இருக்கிறது--புவியீர்ப்பு விசை விதி. பறப்பதாக நம்பி, மிகுந்த வேகத்துடன் கைகளை அசைக்கிறான், ஆனால் முடியவில்லை. கீழிறங்கும் வேகத்தைக் குறைக்க மிதக்க அல்லது வழுக்கிச் செல்ல தன் உடம்பை சமப்படுத்துகிறான், ஆனால் புவியீர்ப்பு விசை விதி விட்டுக்கொடுக்கவில்லை, இரக்கம் காட்டவில்லை. இயற்கையின் அடிப்படை விதியைக் காரணம் காட்ட அவன் முயற்சிக்கிறான்: “அது தவறு. நான் அதை ஒருபோதும் திரும்பச் செய்ய மாட்டேன்.“ ஆனால் இந்த வேண்டுகோள் செவிட்டுக் காதுகளில் விழுகிறது. புவியீர்ப்பு விசைக்கு மனதுருக்கம் கிடையாது. அதற்கு எந்த விதிவிலக்கும் கிடையாது. திடீரென அந்த மனிதன் தன் முதுகில் ஏதோவொன்று இருப்பதை உணர்கிறான். விமானத்திலிருந்த அவனது நண்பன், முட்டாள்தனத்தை உணர்ந்து, குதிப்பதற்கு முன்பு பாராசூட்டை மாட்டியிருக்கிறான். அவன் இழுக்கும் கயிற்றைக் கண்டு பிடித்து இழுத்தான். ஆசுவாசப்பட்டவனாய் அவன் பத்திரமாக மிதந்து கொண்டிருந்தான். நாம் கேட்கலாம், புவியீர்ப்பு விசை விதி மீறப்பட்டதா, அல்லது பாதுகாப்பான தரையிறங்குதலுக்காக பாராசூட் விதிக்குட்பட்டு செயல்பட்டதா?“

பாதுகாப்பான தரையிறக்கத்துக்கு பாராசூட்டைப் பயன்படுத்துதல்

நாம் பாவம் செய்யும்போது, விமானத்திலிருந்து குதித்த முட்டாள்போல நாம் இருக்கிறோம். நாம் சொந்தமாக என்ன செய்தாலும், கீழே விழுவதுதான் நமக்காக காத்திருக்கிறது. புவியீர்ப்பு விசை விதி போல, நீதியின் நியாயப்பிரமாணத்துக்கு கட்டுப்பட்டிருப்பது கண்டிப்பாகவும், மன்னிக்காமலும் இருப்பதாகும். இரட்சகரால் மட்டுமே நாம் இரட்சிக்கப்பட முடியும் என்பதால், அவரது பாவநிவர்த்தி மூலம் இரக்கத்துடன் நமக்கு ஆவிக்குரிய பாராசூட் போன்றவற்றை நமக்கு கொடுக்கிறார். நமக்கு இயேசு கிறிஸ்து மேல் விசுவாசம் இருந்து, மனந்திரும்பினால், (நமது பங்கை செய்து கயிற்றை இழுத்தால்), அப்போது நமக்காக இரட்சகரின் பாதுகாப்பு வல்லமைகள் அவிழ்க்கப்பட்டு, நாம் ஆவிக்குரிய பிரகாரமாய் காயப்படாமல் தரையிறங்கலாம்.

எனினும் நமது ஆவிக்குரிய முன்னேற்றத்தை தடுக்கிற அந்த நான்கு தடைகளை இரட்சகர் மேற்கொண்டதால், இது சாத்தியமாகிறது.

மரணம் தமது மகிமை மிக்க உயிர்த்தெழுதல் மூலமாக அவர் மரணத்தை ஜெயித்தார். அபபோஸ்தலனாகிய பவுல் போதித்தான்:“ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். “2

2. பாவம் மனந்திரும்பிய அனைவருக்காகவும் இரட்சகர் பாவத்தையும் குற்றவுணர்வையும் ஜெயித்தார். ஏசாயா வாக்களித்தபடி, அவரது சுத்திகரிக்கும் வல்லமை ஆழமானதும் விரிவானதாகவும் உள்ளது. உங்கள் பாவங்கள் சிவேறென்றிருந்தாலும், உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்.3

சில சமயங்களில் தங்களை மன்னிப்பதில் பிரச்சினையுள்ள, இரட்சகரின் மீட்கும் வல்லமைகளில் வெகுளியாக, ஆனால் தவறாக கட்டுப்பாடுகள் வைத்த, நல்ல பரிசுத்தவான்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களது குறிப்பிட்ட பாவம் அல்லது பெலவீனத்துக்கு ஒருவாறு குறைவாக இருக்கிறதை அவர்கள் அறியாமலேயே எல்லையற்ற பாவநிவர்த்தியை எல்லைக்குட்பட்டதாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால் எல்லா பாவங்களையும் பெலவீனங்களையும், பிறரால் விளைக்கப்பட்ட எல்லா துர்ப்பிரயோகம் மற்றும் வலியையும் கூட அது உள்ளடக்கியும், சேர்த்தும் கொள்வதால், அது எல்லையற்ற பாவநிவர்த்தியாகும்.

ட்ரூமன் ஜி. மாட்சன் இந்த ஆறுதலான விஷயத்தை கவனத்தில் கொண்டார்.

“நீங்கள் அதிக தூரம் சென்றுவிட்டீர்கள் , … நீங்கள் இருந்திருக்க வேண்டிய விதத்துக்கு மீண்டும் செல்வதை சாத்தியமாக்காத பாவ விஷத்தை உட்கொண்டீர்கள் என நீங்கள் யாராவது தந்திரமாக சொல்லப்பட்டிருந்தால், நான் சொல்வதைக் கேளுங்கள், இயேசு கிறிஸ்துவின் ஒளியும் துடைக்கும் புத்திகூர்மையும் செல்லக் கூடியதை விட தூரமாக நீங்கள் மூழ்கிவிட முடியாது என நான் சாட்சியளிக்கிறேன்.

“இயேசு கிறிிஸ்துவின் ஒளியும், முற்றிலுமான ஞானமும் செல்லக்கூடியதை விட ஆழமாக நீங்கள் மூழ்க முடியாது. மனந்திரும்பவும் வந்து சேரவும், ஒரு பொறி எண்ணம் இருக்கும்வரைஅவர் இருக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். நமது நிலைமைக்கு மட்டும் அவர் இரங்கவில்லை, சத்தியத்தின் ஒளியாகிய அவர் எல்லாவற்றிலும், எல்லாவற்றிலும் இருக்கும்படிக்கு அவர் அதற்கும் கீழே இறங்கினார்.’ [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:6.]”4

இரட்சகரின் பாவநிவர்த்தியையும், அதன் எல்லையற்ற விளைவுகளையும் புரிந்து கொள்ள ஒரு முக்கிய காரணம், நம்மையும் பிறரையும் மன்னிக்க அதிக புரிதலுடன் அதிக வாஞ்சையும் தேவை.

நாம் கிறிஸ்துவின் சுத்திகரிக்கும் வல்லமைகளை நம்பினாலும், இக்கேள்வி அடிக்கடி எழுகிறது: “என் பாவங்களுக்காக நான் மன்னிக்கப்பட்டேன் என நான் எப்படி அறிவேன்?“ நாம் ஆவியை உணர்ந்தால், நாம் மன்னிக்கப்பட்டு விட்டோம், அல்லது சுத்திகரிக்கும் முறை நடக்கிறது என்பதே நமது சாட்சி. தலைவர் ஹென்றி பி. ஐரிங் போதித்தார், நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் செல்வாக்கை உணர்ந்தால், உஙகள் வாழ்க்கையில் பாவநிவர்த்தி வேலை செய்கிறது என நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.5

முட்டுச் சாலை

சிலர் கேட்டிருக்கிறார்கள், “நான் மன்னிக்கப்பட்டுவிட்டால், நான் இன்னும் ஏன் குற்றவுணர்வு பெற வேண்டும்?“ ஒருவேளை தேவனின் இரக்கத்தில் அந்த குற்றவுணர்வு ஒரு எச்சரிக்கை, ஒரு வித நிறுத்துக சமிக்ஞை, குறைந்தபட்சம் கொஞ்ச காலத்துக்காவது கூடுதல் சோதனை நம்மை எதிர்கொள்ளும்போது, கூக்குரலிடுகிறது: “அந்த சாலையில் செல்லாதே. அது கொடுக்கக் கூடிய வலியை நீ அறிவாய்.“ இந்த வகையில் அது ஒரு பாதுகாப்பாக வேலை செய்கிறது, தண்டனையல்ல.

நமது பாவங்களை நினைவில் கொண்டும், குற்றவுணர்வில்லாமலிருக்க முடியுமா?

அவன் மனந்திரும்பி பல ஆண்டுகள் ஆன பிறகும் ஆல்மா தன் பாவங்களை நினைத்தான். ஆனால் அவன் இரக்கத்துக்காக இயேசுவிடம் கூக்குரலிட்டபோது, அவன் சொன்னான், “என் கஷ்டங்களை நினைவுகூரவே இல்லை. ஆம் அதற்குப் பின்பு நான் என் பாவங்களின் நினைவால் அலைக்கழிக்கப்படவேயில்லை.“6

அவன் எப்படி தன் பாவங்களை நினைவுகூர்ந்தாலும் வலியோ குற்றவுணர்வோ இல்லாதிருந்தான். ஏனெனில் நாம் மனந்திரும்பும்போது நாம், “தேவனில் பிறக்கிறோம்.“7 வேதங்கள் சொல்வது போல நாம் கிறிஸ்துவுக்குள் புதிய “சிருஷ்டிகள் ஆகிறோம்.“8 பரிபூரண நேர்மையுடன் நாம் இப்போது சொல்லலாம், “அந்த கடந்த கால பாவங்களை செய்த மனிதனோ மனுஷியோ நான் இல்லை. நான் ஒரு புதிய மாற்றமடைந்த மனிதன்.“

3.உபத்திரவங்களும் பெலவீனங்களும். “கிறிஸ்து புறப்பட்டுப்போய் சகலவித துன்பங்களையும், உபத்திரவங்களையும் சோதனைகளையும் பாடனுபவிப்பார்,“ என ஆல்மா தீர்க்கதரிசனம் உரைத்தான். ஏன்? “தம் ஜனத்தினுடைய பெலவீனங்களுக்குத் தக்கதாய் அவர்களுடைய மாம்சத்திற்கேற்ப ஒத்தாசை புரிவதெப்படி என தாம் அறிந்து கொள்ளும்படிக்கு, தாம் உருக்கமான இரக்கத்தால் நிறைக்கும்படிக்கும்.“9

அவர் இதை எப்படி அடைந்தார்? சில சமயங்களில் அவர் வேதனைகளை நீக்குகிறார், சில சமயங்களில் நாம் சகித்திருக்க நம்மை பெலப்படுத்துகிறார். சில சமயங்களில் அவர்களது தற்காலிக தன்மையை நன்கு புரிந்துகொள்ள, அவர் நமக்கு நித்திய பார்வையை கொடுக்கிறார். இரண்டு மாதங்களாக லிபர்ட்டி சிறைச்சாலையில் ஜோசப் ஸ்மித் இருந்த பிறகு, கடைசியாக கூக்குரலிட்டார், “தேவனே எங்கேயிருக்கிறீர்?“10 உடனடியாக நிவாரணம் கொடுப்பதற்குப் பதிலாக தேவன் பதிலளித்தார், “என் மகனே உன் ஆத்துமாவுக்கு சமாதானம் உண்டாவதாக. உன் கஷ்டமும் வேதனைகளும் கொஞ்ச காலத்துக்குத்தான். இதை நீ நன்கு சகித்தால் தேவன் உன்னை உன்னதத்துக்கு உயர்த்துவார்.“11

இந்த கசப்பான அனுபவம் நித்திய பார்வையில் ஒரு சிறு புள்ளிதான் என இப்போது ஜோசப் ஸ்மித் புரிந்தார். இந்த அதிகப்படியான பார்வையோடு அவர் அதே சிறைச்சாலை அறையிலிருந்து அவர் எழுதினார், அன்பு சகோதரரே, நமது வல்லமைக்கு ஏற்ப நாம் எல்லாவற்றையும் உற்சாகமாக செய்வோம். 12 இரட்சகரின் பாவநிவர்த்தியினிமித்தம், நமது பாடுகளுக்கு அர்த்தமும், நிவாரணத்துக்கு நம்பிக்கையும் கொடுக்கிற ஒரு நித்திய பார்வை பெறலாம்.

4. பெலவீனங்களும் பரிபூரணமின்மையும். அவரது பாவநிவர்த்தியினிமித்தம் இரட்சகர் பெலப்படுத்தும் வல்லமை பெற்றிருக்கிறார், அது சில சமயங்களில் கிருபை என குறிப்பிடப் படுகிறது.13. அது நமது பெலவீனங்களையும், பரிபூரணமின்மையையும் மேற்கொள்ள நமக்கு உதவும். அவ்விதமாக அதிகமாக அவரைப்போலாகும் நமது முயற்சிகளில் நமக்கு உதவுகிறது.

மரோனி இவ்விதமாக போதித்தான்: “ஆம் கிறிஸ்துவினிடத்தில் வந்து அவரில் பூரணப்பட்டிருங்கள்.“14 நம்மை சுத்திகரித்து, பூரணப்படுத்தக்கூடிய அந்த பெலனளிக்கும் வலல்லமைகளை நாம் பெற இரண்டு வழிகள் இருப்பதுபோல் தோன்றுகிறது.

முதலாவது, இரடசிக்கும் வல்லமைகள். வேதங்கள் நமக்குச் சொல்லுகின்றன, “இருக்கிற நியமங்களில் தேவ தன்மையின் வல்லமை வெளிப்படுகிறது.“15 சில சமயங்களில் மேன்மைப்படுதலுக்கு போதுமான நியமங்களை ஒரு பரிசோதிக்கும் பட்டியலாக நினைக்கிறோம். ஆனால் உண்மையில் ஒவ்வொன்றும் நாம் அதிகமாக கிறிஸ்து போலாக உதவுகிற தெய்வீக வல்லமைகளை கட்டவிழ்க்கின்றன. உதாணமாக:

  • நாம் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றபோது, நாம் சுத்தமாகிறோம்--இவ்வாறாக தேவன் போல அதிக பரிசுத்தமாகிறோம்.

  • நாம் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறும்போது, அவரைப் போல நாம் அதிகமாக சிந்தித்து உணரும்படியாக நமது மனங்கள் தெளிவாக்கப்பட்டு, நமது இருதயங்கள் மென்மையாக்கப்படுகின்றன.

  • நாம் வாழ்க்கைத் துணைகளாக முத்திரிக்கப்படும்போது, நாம் சிங்காசனங்களுக்கும், இராஜ்யங்களுக்கும், துரைத்தனங்களுக்கும், வல்லமைகளுக்கும், தேவனின் வரமாக உரிமையை சுவீகரிக்கிறோம். 16

இந்த பெலப்படுத்தும் வல்லமைகளுக்கான இரண்டாம் வழி, ஆவியின் வரம். கிறிஸ்துவின் பாவநிவர்த்தியினிமித்தம், பரிசுத்த ஆவியின் வரத்தையும், அதனுடனுள்ள ஆவிக்குரிய வரங்களையும் பெற தகுதி பெறுகிறோம். இந்த தன்மைகள் தெய்வ தன்மையின் மனோபாவங்கள். ஆகவே ஆவியின் வரத்தைப் பெறுகிறபோதெல்லாம், நாம் தேவனைப்போல அதிகமாக ஆகிறோம். அதனால்தான் இந்த வரங்களை நாட பல சந்தர்ப்பங்களில் வேதங்கள் நமக்கு கட்டளையிடுகின்றன. 17

தலைவர் ஜார்ஜ் க்யூ. கானன் போதித்தார் “ஒருவனும் சொல்ல முடியாது. நான் இதற்கு உதவ முடியாது, இது எனது தன்மை.“ இதில் அவர் சொல்வதில் நியாயமில்லை. ஏனெனில் [நமது பெவீனங்களை] நீக்குகிற வரங்களைக் கொடுக்க அக்காரணத்துக்காகவே தேவன் வாக்களித்திருக்கிறார்.... நாம் யாராவது பரிபூரணமில்லாமல் இருந்தால், நம்மை பரிபூரணமாக்கும் வரத்துக்காக ஜெபிப்பது நமது கடமை.18

சுருக்கமாக, இரட்சகரின் பாவ நிவர்த்தி மரணத்துக்குப் பதிலாக ஜீவனையும், சாம்பலுக்குப்பதிலாக அழகையும் 19, காயத்துக்குப் பதிலாக குணமாக்குதலையும், பெலவீனத்துக்குப் பதிலாக பரிபூரணத்தையும் கொடுக்கின்றது. இவ்வுலகத்தின் தடைகள் மற்றும் போராட்டங்களுக்கு இது பரலோகத்தின் மருந்து.

உலகத்தில் இரட்சகரின் கடைசி வாரத்தில், அவர் சொன்னார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.“20 இரட்சகர் பாவ நிவர்த்தி செய்ததால், நாம் தேவனின் கட்டளைகளைக் காத்துக் கொண்டால், நாம் மேன்மைப்படுதலை தடுக்கிற எந்த புற நிகழ்ச்சியோ அல்லது நபரோ, பாவமோ, மரணமோ, அல்லது விவாகரத்தோ கிடையாது. அந்த புத்தியுடன் நாம் திடமனதாயும் இந்த பரலோக தேடுதலில் தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற முழு உறுதியுடன் முன்னேறலாம்.

இரட்சகரின் பாவநிவர்த்தி எதிர்பார்ப்பில் முடிவற்றது மட்டுமல்ல, பெறுவதற்கு தனிப்பட்டது, இது தேவ சமூகத்துக்கு திரும்புவது மட்டுமல்ல, கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் உயர் இலக்காகிய அவரைப்போலாக நமக்கு சாத்தியமாக்குகிறது என நான் சாட்சியளிக்கிறேன், அது பற்றி எனது நன்றிமிக்க உறுதியான சாட்சியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.