கிறிஸ்துவின் வார்த்தைகளின்மீது உண்டுகளித்தல்
நமது இருதயங்களை நாம் ஆயத்தப்படுத்தினால் கிறிஸ்துவின் வார்த்தைகளில் உண்டுகளித்தல் எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் நடக்கலாம்.
நமது பரலோக பிதா நம்மை நேசிக்கிறார். அவருடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்க ஒரு சரியான திட்டத்தை நமக்காக அவர் அளித்திருக்கிறார். கிறிஸ்துவண்டை வரவும், ஞானஸ்நானத்தின் மூலமாக, இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபித சுவிசேஷத்தைப் பெறவும், பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறவும், சுவிசேஷத்தின்படி உண்மையாக வாழவும் இந்த வாழ்க்கையில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். ஒரு “நெருக்கமும் இடுக்கமுமான பாதையில்” பிரவேசிக்கும்போது ஞானஸ்நானம் பெற்றவராயிருக்கும்படியான நமது ஒப்புக்கொடுத்தலை நெப்பி விவரித்து, பரலோக பிதா நமக்காக வைத்திருக்கிற அனைத்து ஆசீர்வாதங்களையும் பெறும்படியாக கிறிஸ்துவில் திடநம்பிக்கையுடன் முன்னேறிச்செல்லவும், கிறிஸ்துவின் வார்த்தைகளை உண்டுகளித்து, முடிவுபரியந்தம் நிலை நிற்க தொடர நமக்கு நினைவுபடுத்துகிறான். (2நெப்பி 31:19-20.)
நாம் “கிறிஸ்துவின் வார்த்தைகளின்மீது உண்டு களித்தால்” ”நாம் செய்யவேண்டிய காரியங்கள் அனைத்தையும் அவைகள் நமக்குத் தெரிவிக்கும்” ( 2நெப்பி 32:3) மற்றும் பொல்லாங்கனின் அக்கினியாஸ்திரங்களை மேற்கொள்ள நாம் அதிகாரம் பெறுவோம். (1நெப்பி 15:24)
உண்டுகளித்தல் என்றால் என்ன?
நான் இளைஞனாயிருந்தபோது உண்டுகளித்தல் என்றால், சாதத்துடன், சுஷி, சோயா சாஸூடன் ஒரு பெரிய சாப்பாடு என நினைத்திருந்தேன். ஒரு சுவையான சாப்பாட்டை அனுபவிப்பதைவிட உண்மையான விருந்து அதிகமானது என இப்போது நான் அறிகிறேன். இது சந்தோஷத்தின், ஊட்டச் சத்தின், கொண்டாட்டத்தின், பகிர்ந்துகொள்ளுதலின், குடும்பங்களிடத்திலும் அன்பானவர்களிடத்திலும் அன்பை வெளிப்படுத்தலின், தேவனுக்கு நமது நன்றியுணர்வை வெளிப்படுத்தலின், ஏராளமான சொல்லமுடியாத சுவைமிக்க உணவை அனுபவிக்கும்போது உறவுகளை வளர்த்தலின் ஒரு அனுபவம். கிறிஸ்துவின் வார்த்தைகளின்மீது நாம் உண்டுகளிக்கும்போது இதே வகையான அனுபவத்தை நாம் சிந்திக்கவேண்டியவர்களாயிருக்கிறோம் என நான் நம்புகிறேன்.. வேதங்களின்மீது உண்டுகளித்தல் என்பது வெறுமனே அவைகளைப் படித்தல் என்பதல்ல. இது உண்மையான சந்தோஷத்தைக் கொண்டுவந்து இரட்சகருடன் நமது உறவை வளர்க்கவேண்டும்.
இது மார்மன் புஸ்தகத்தில் தெளிவாகப் போதிக்கப்படுகிறது. “அதன் கனி ஒருவரை மகிழ்விக்கக்கூடியதாயிருந்த” ஒரு விருட்சத்தை லேகி அவனுடைய சொப்பனத்தில் கண்டதை நினைவுகூருங்கள். இந்த கனி தேவனின் அன்பை பிரதிபலிக்கிறது, கனியை லேகி சுவைத்தபோது [அவன்] “முன்னால் சுவைத்த எல்லாவற்றையும் காட்டிலும் மிக மதுரமாயிருந்தது”. அது “அவனுடைய ஆத்துமாவை மிகுந்த மகிழ்ச்சியால் நிறைத்தது”, அதை அவன் தன் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள விரும்பினான். (1நெப்பி 8:10-12.)
நாம் உண்டுகளிக்கும்போது, நமது இருதயங்கள் நன்றியுணர்வால் நிறைந்தால் உணவின் அளவு அல்லது வகை நமக்கு பொருட்டாயிருக்காது என்பதையும் நாம் காண்போம். வனாந்தரத்தில் லேகியின் குடும்பம் பச்சை மாமிசத்தை உண்டு வாழ்ந்தது, ஆனால் இந்த கடினமான சோதனையை லேகி விவரிக்கிறான், “எங்கள் ஸ்திரீகள் வலிமையோடிருந்து முறுமுறுப்பில்லாமல் பிள்ளைகளைப் பெறுமளவுக்கு கர்த்தருடைய ஆசீர்வாதம் எங்கள்மேல் மிகவும் பெரிதாயிருந்தது”. (1நெப்பி 17:1-2)
சிலநேரங்களில் உண்டுகளித்தலில் பரிசோதனையும் ருசிபார்த்தலும் அடங்கும். நமது இருதயங்களில் விதைக்கப்படுகிற ஒரு நல்ல விதையைப்பற்றி ஆல்மா பேசுகிறான். அதைக் குறித்து நாம் பரிசோதிக்கும்போது, விதை “சுவையானதாய் இருக்கத் தொடங்குகிறது” என நாம் கண்டுணர்வோம்” (ஆல்மா 32:28-33). பார்க்கவும்
கிறிஸ்துவின் வார்த்தைகளின்மீது உண்டுகளித்தல்.
கிறிஸ்துவின் வார்த்தைகளின்மீது உண்டுகளித்தலின் ஆசீர்வாதம் ஆற்றல்மிக்கதாகும் வாழ்க்கை மாற்றமாகவுமிருக்கும். குறிப்பாக மூன்றை உங்கள் வாழ்க்கையில் பிரயோகிக்க நான் உங்களை அழைக்க விரும்புகிறேன்.
முதலாவதாக, வெளிப்படுதலைப் பெற [நமது] “ஆவிக்குரிய திறமையை அதிகரிக்க கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்கு உதவுகிறது (சபைக்காக வெளிப்படுத்தல், நமது வாழ்க்கைக்காக வெளிப்படுத்தல்,” Ensign or Liahona, May 2018, 96) மற்றும் நமது வாழ்க்கையினூடே நம்மை பாதுகாப்பாக வழிநடத்துகிறது. கிறிஸ்துவின் வார்த்தைகள் “நியாயமானதைச் செய்யும்படி ஜனங்களை வழிநடத்துகிற தன்மையும்”, “பட்டயம்” சாதிப்பதைவிட, யாதொன்றைக்காட்டிலும் அவை அதிக ஆற்றலுள்ளதாயிருக்குமென மார்மன் போதிக்கிறான். (ஆல்மா 31:5) நான் என்னுடைய சொந்த சவால்களைக் கையாளுவதில் தேவனின் ஞானத்தை நான் தேடியபோது, எப்போதுமே, “தேவனின் வார்த்தைகளின் நன்மையை” நான் முயற்சித்தேன். (ஆல்மா 31:5),நான் உணர்த்தப்பட்டவனாக உணர்ந்து, புத்திசாலித்தனமாக தீர்மானங்களை எடுக்கவும், சோதனைகளை மேற்கொள்ளவும், கிறிஸ்துவின்மீது அதிகரித்த விசுவாசத்துடன் என்னுடைய வாழ்க்கையை ஆசீர்வதிக்கவும், என்னைச் சுற்றியிருப்பவர்களிடம் அன்பு செலுத்தவும் சாத்தியமாக்கிற்று. “வருகிற நாட்களில், வழிகாட்டுதலில்லாமல், வழிநடத்துதலில்லாமல், ஆறுதலில்லாமல், பரிசுத்த ஆவியின் நிரந்தர செல்வாக்கில்லாமல் ஆவிக்குரியதில் பிழைத்திருப்பது சாத்தியமாகாது” என விமர்சன ரீதியாக நமது தீர்க்கதரிசி ரசல் எம்.நெல்சன் நமக்குப் போதித்தார். (“சபைக்காக வெளிப்படுத்தல், நமது வாழ்க்கைக்காக வெளிப்படுத்தல்,” 96). “வார்த்தையின் நன்மையை” நாம் முயற்சிக்கும்போது தேவைப்பட்ட வெளிப்படுத்தல் வரும், அந்த வார்த்தை நாம் முயற்சிக்கிற அல்லது கற்பனை செய்கிற எதைக்காட்டிலும் மிக ஆற்றலுள்ளதாயிருக்கும்.
இரண்டாவதாக, நமது சொந்த அடையாளத்துடனும் சுயமதிப்பில்லாமலும் நாம் போராடிக்கொண்டிருக்கும்போது ,வேதங்களிலுள்ள “பிரியமான தேவனுடைய வார்த்தை”, ( யாக்கோபு 2:8) உண்மையில் நாம் யாரென்றறிய நமக்குதவி, நமது சொந்தத்திற்கும் அப்பால் நமக்குதவும். தேவனுடைய பிள்ளையாக என்னுடைய அடையாளத்தை கண்டறிந்தது நான் எப்போதுமே அனுபவித்திராத இனிமையான நேரங்களில் ஒன்றாயிருந்தது. என்னுடைய குமரப் பருவத்தின் ஆரம்பத்தில் இரட்சகரின் போதனைகளைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. புதிய ஏற்பாட்டை முதலாவதாக நான் படித்தபோது, என்னுடைய காயமடைந்த ஆத்துமாவை கிறிஸ்துவின் வார்த்தைகள் உண்மையில் குணமாக்கிற்று. நான் தனியாக இல்லை, நான் தேவனுடைய ஒரு பிள்ளை என நான் கண்டுணர்ந்தேன். தேவனுக்கு முன்பாக என்னுடைய உண்மையான அடையாளத்தை நான் கண்டுணர்ந்தபோது, கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக என்னுடைய முடிவில்லா திறனை நான் கண்டுணர்ந்தேன்.
இதைப்போன்று, கிறிஸ்துவின் வார்த்தைகள் சிந்தித்தலிருந்து வருகிற அறிவொளியின் அவனுடைய தனிப்பட்ட அனுபவத்தை ஏனோஸ் பகிர்ந்துகொண்டான். “நித்திய ஜீவனையும் பரிசுத்தவான்களின் சந்தோஷம்பற்றியும் அவனுடைய தகப்பன் போதித்த வார்த்தைகள் ஏனோஸின் இருதயத்திலே ஆழமாகப் பதிந்து” அவனுடைய ஆத்துமா “பசியுற்று ஊக்கமான ஜெபத்தில் அவனை உண்டாக்கினவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டான்.” (ஏனோஸ் 1:3-4) அந்த ஜெபத்தில் இரட்சகரை அவன் அறியவந்து நமக்கு அதிக தகுதியுண்டு, நேசிக்கப்பட்டு, நமது தவறுகளுக்காக மன்னிக்கப்படுவோம், உண்மையில் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்றறிந்தான்.
மூன்றாவதாக, கிறிஸ்துவின் வார்த்தைகள் மூலமாக மற்றவர்களின் வாழ்க்கையை நாம் உயர்த்தமுடியும். ஏனோஸூக்கு அவனுடைய சொந்த நேரமிருந்ததைப்போல, கிறிஸ்துவின் வார்த்தைகள் அவனுடைய இருதயத்தைத் தொட்ட இடமிருந்ததைப்போல, சுவிசேஷத்தைப பகிர்ந்துகொள்ள நாம் விரும்புகிறவர்களின் இருதயங்களைத் தொட கர்த்தர் அவருடைய பங்கைச் செய்வார். நாம் விரும்பின விளைவு நடக்காததால், சுவிசேஷத்தைக் கேட்க ஒருவரை அழைக்க நாம் முயற்சிக்கும்போது நம்மில் அநேகர் சோர்வடையலாம். முடிவைப் பொருட்படுத்தாமல், நமது வாய்களைத் திறந்து சுவிசேஷச் செய்திகளை அவர்களோடு பகிர்ந்துகொள்ள கர்த்தர நம்மை அழைக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஞானஸ்நான நியமத்தைப் பெற தீர்மானிக்க அவருக்குதவிய, எனக்கன்பான தாயின் இருதயத்தை கர்த்தர் தொட்டார் அந்த நாள் நடந்தேற ஏறக்குறைய 35 ஆண்டுகள் நான் காத்திருந்தேன். அந்த தீர்மானத்தை அவர் எடுக்கும்படியாக, கிறிஸ்து செய்திருப்பதைப்போல சபையின் அநேக அங்கத்தினர்கள் உண்மையில் அவருக்கு ஊழியம் செய்தனர். ஒரு ஞாயிற்றுக்கிழமை சபைக்குப் போகவேண்டுமென அவர் உணர்ந்தார். உணர்த்துதலை அவர் பின்பற்றினார். முன் வரிசையில் அவர் அமர்ந்திருந்து திருவிருந்து சேவை ஆரம்பிக்க காத்திருந்தபோது, ஒரு நான்கு வயது பையன் அவருக்கு முன் நின்று அவரை நோக்கினான். ஒரு புன்னகையுடன் அவனுக்கு அவர் வணக்கம் சொன்னார். சிறு பையன் திடீரென்று அங்கிருந்து அகன்று, என்னுடைய தாய் அமர்ந்திருந்த வரிசைக்கு எதிர்புற வரிசையிலிருந்த அவனுடைய இருக்கைக்கு நடந்தான். இந்த சிறுவன் அவனுடைய இருக்கையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு திரும்பிவந்து என்னுடைய தாயிடம் ஒரு பாடல் புஸ்தகத்தைக் கொடுத்துவிட்டு தனது இருக்கைக்கு நடந்து சென்றான். ஜெபக்கூடத்தில் ஒவ்வொருவரின் இருக்கையிலும் ஒரு பாடல் புஸ்தகம் வைக்கப்பட்டிருந்ததை என் தாய் கவனித்தார். அவருககுப் பக்கத்திலுள்ள இருக்கையிலிருந்து எனது தாய் எளிதாக ஒரு புஸ்தகத்தை எடுத்திருக்கமுடியும். ஆயினும், அவனுடைய வீட்டிலும், சபையிலும் அவன் கற்றுக்கொண்ட அந்த பையனின் இரக்கத்தின் மாசற்ற செயலினால் அவர் மிக ஈர்க்கப்பட்டார். அவருக்கு அது ஒரு மென்மையான தருணம். வந்து இரட்சகரைப் பின்பற்ற தேவன் அழைக்கிறார் என்று அவருக்கு ஒரு வலுவான தாக்கம் ஏற்பட்டது. அவர் ஞானஸ்நானம் பெறவேண்டுமென அவர் உணர்ந்தார். இந்த சிறுவன் அவன் செய்ததற்கு அங்கீகாரத்தைத் தேடவில்லை, ஆனால், தேவனுடைய வார்த்தையில் வாழவும் அவனுடைய அண்டைவீட்டாரை நேசிக்கவும் அவனால் முடிந்த சிறப்பானதைச் செய்தான். அவனுடைய இரக்கம் என்னுடைய தாயின் இருதயத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தை உருவாக்கிற்று.
கிறிஸ்துவின் வார்த்தைகள் இருதயங்களை ஆழமாகத் தொட்டு அவரை இன்னமும் காணாதவர்களின் கண்களைத் திறக்கும். எம்மாவுக்குப் போகிற வழியில் இயேசுவோடு இரண்டு சீஷர்கள் நடந்து சென்றார்கள். அவர்கள் சோகமாயிருந்து, இயேசு மரணத்தை வெற்றி சிறந்தாரென்பதை அறிந்திராதிருந்தார்கள். அவர்களுடைய துக்கத்தில், ஜீவிக்கிற கிறிஸ்து அவர்களோடு நடந்துகொண்டிருக்கிறாரென்பதை கண்டுணராதிருந்தார்கள். இயேசு, “வேத வாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துச் சொல்லியபோதிலும்”, அவரோடு அவர்கள் அமர்ந்து அப்பத்தை பிட்கும் மட்டும் இன்னமும் அவரை உயிர்த்தெழுந்த இரட்சகராக அவர்களால் அவரைக் கண்டுணரவில்லை. பின்னர் அவர்கள் கண்கள் திறந்தன. நாம், அல்லது நமது நண்பர்கள், கூட்டாளிகள், அண்டைவீட்டார் அவரோடு விருந்துண்டு அப்பம் பிட்கும்போது புரிந்துகொள்ளுதலின் நமது கண்கள் திறக்கும். எம்மாவுவிலே சீஷர்கள் உயிர்த்தெழுந்த இரட்சகருடன் தாங்கள் கழித்த நேரத்தை சிந்தித்தபோது, அவர்களுக்கு அவர் வேதங்களைத் திறந்தபோது அவர்களுடைய இருதயங்கள் அவர்களுக்குள்ளே கொழுந்திவிட்டு எரிந்தனவென அவர்கள் சொன்னார்கள். (லூக்கா 24:27-32. பார்க்கவும்). இது நம் எல்லோருக்கும் உண்மையாயிருக்கும்.
முடிவுரை
அவைகளைப் பெற நமது இருதயங்களை நாம் ஆயத்தப்படுத்தியிருந்தால் கிறிஸ்துவின் வார்த்தைகளில் உண்டுகளித்தல் எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் நடக்கலாம் என முடிவுரையில் நான் சாட்சி பகருகிறேன். கிறிஸ்துவின் வார்த்தைகளில் உண்டுகளித்தல், வாழ்க்கை நீடித்திருக்கிற வெளிப்படுதலைக் கொண்டுவந்து, அவருடைய பிள்ளையாக தேவனுக்கு முன்பாக நமது உண்மையான அடையாளத்தையும் தகுதியையும் மீண்டும் உறுதி செய்து, கிறிஸ்துவண்டையும் நித்திய ஜீவனுக்கும் நமது நண்பர்களை நடத்துகிறது. நெப்பியின் அழைப்பை எதிரொலித்து நான் முடிக்கிறேன். அவன் சொன்னான், “கிறிஸ்துவில் திட நம்பிக்கையாய், பூரணமான நம்பிக்கையின் பிரகாசத்தோடும், தேவனிடத்திலும், எல்லா மனிதரிடத்திலும் அன்போடும் நீங்கள் முன்னேறிச்செல்லவேண்டும். அதனால் நீங்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளை உண்டுகளித்து, முடிவுபரியந்தம் நிலைநின்று முன்னேறிச் செல்வீர்களானால், இதோ, நீங்கள் நித்திய ஜீவனைப் பெறுவீர்கள் என பிதா உரைக்கிறார்” . (2நெப்பி 31:20) இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.