2010–2019
அவரது குரலைக் கேட்டல்
ஏப்ரல் 2019 பொது மாநாடு


2:3

அவரது குரலைக் கேட்டல்

சகோதர சகோதரிகளே, அநேக போட்டிக் குரல்கள் உள்ள உலகத்தில் அவரது குரலைக் கேட்கவும் பின்பற்றவும் பரலோக பிதா நமக்கு சாத்தியப்படுத்தியிருக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன்.

இக்காலையில் முன்பு, பல ஆண்டுகளுக்கு முன்பு, அவளது அம்மாவுக்கு எழுதிய குறிப்பை எனது மனைவியின் சகோதரன் கொடுத்தார். அச்சமயத்தில், சகோதரி ஹோமர் ஒரு சிறுமி. ஒரு பகுதியில், அக்குறிப்பு கூறியது, ”அன்பு அம்மா, இன்று நான் சாட்சி கூறாதற்காக வருந்துகிறேன்--ஆனால் நான் உங்களை நேசிக்கிறேன்.” நாங்கள் மதிய உணவுக்கு சென்றபோது, அது ஒரு ரசிக்கத்தக்க காரியம் என நான் நினைத்தேன். ஆகவே நான் உட்கார்ந்து ஒரு குறிப்பு எழுதினேன், ”அன்பு தலைவர் நெல்சன் இன்று நான் எனது செய்தியைக் கொடுக்காததற்காக வருந்துகிறேன்--ஆனால் நான் உங்களை நேசிக்கிறேன்.” எனினும் அது சரியாகத் தெரியவில்லை. ஆகவே நாம் இங்கிருக்கிறோம், இன்று இக்கூட்டத்தில் பேசப்பட்டவற்றுடன் என் வார்த்தைகளையும் சேர்க்கிறேன்.

அநேக ஆண்டுகளுக்கு முன், ஒரு புதிதாக சான்றிதழ் பெற்ற விமானியின் கட்டுப்பாட்டிலிருந்த சிறிய விமானத்தில் பயணித்தேன். எங்கள் பயணத்தின் முடிவில் நாங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டோம். ஆனால் நாங்கள் தரையை நெருங்கியபோது, விமானி மேலே ஏற எச்சரிக்கையை விமானியின் அறையிலிருந்து கேட்டேன். விமானி அதிக அனுபவமுள்ள சக விமானியை பார்த்தார், அவர் ஓடுபாதையிலிருந்து தள்ளி கீழ்நோக்கிய பாதையைக் காட்டி சொன்னார், ”இப்போது!”

எங்கள் விமானம் விரைவாக இடதுபுறம் கீழ்நோக்கி நகர்ந்து, பின்னர் சரியான உயரத்துக்கு திரும்பவும் ஏறி, தரையிரங்கும் மாதிரிக்கு திரும்ப வந்து, எங்கள் இலக்கை பத்திரமாக அடைந்தோம். மற்றொரு விமானம் மேலேற வழிவிடப்பட்டது என பின்னர் நாங்கள் அறிந்தோம். எச்சரிக்கை அறிவுறைகளை நாங்கள் பின்பற்றி இருந்தால், எதிரில் வந்த விமானத்துக்கு விலகுவதை விட அதன் மீது மோதியிருப்போம். இந்த அனுபவம் எனக்கு இரண்டு முக்கிய பாடங்களைப் போதித்தது. முதலாவது நமது வாழ்க்கையின் சிக்கலான தருணங்களில் நமது கவனத்துக்காக பல குரல்கள் கேட்கும். இரண்டாவதாக, நாம் சரியானதைக் கேட்பது முக்கியம்.

போட்டிபோடும் குரல்கள்

நமது கவனத்தை ஈர்க்கிற அனேக குரல்கள் உள்ள உலகில் நாம் வாழ்கிறோம். புதிய செய்திகள், ட்வீட்கள், ப்ளாக்குகள், பாட்காஸ்ட்ஸ், அலக்ஸா, சிரி மற்றும் பிறவற்றின் அழுத்தமான புத்திமதிகளுடன் எக்குரலை நம்புவது என கண்டு பிடிப்பது நமக்கு கஷ்டமாக இருக்கிறது. பெரும்பான்மையினர்தான் உண்மையின் சிறந்த ஆதாரம் என எண்ணி, நமது வாழ்க்கையில் சில சமயங்களில் நமது வழியை கூட்டத்தினரிடம் கேட்கிறோம். பிற நேரங்கலில் நாம் ”இரண்டு அபிப்பிராயங்களுக்கிடையே நிற்கிறோம்,”1 ”குளிர் அல்லது வெப்பமாயில்லாதிருக்க” தேர்வு செய்கிறோம்2 இருப்பினும் பிற சமயங்களில் நாம் சௌகர்யமானதைப் பின்பற்றுகிறோம். ஒரு குரல் அல்லது பிரச்சினை நமக்கு வழிகாட்ட கவனம் செலுத்துகிறோம், அல்லது சிந்திக்கும் சொந்த திறமையில் முற்றிலும் சார்ந்திருக்கிறோம்.

இந்த ஒவ்வொரு அணுகுமுறையும் உதவிகரமானதாக இருக்கும்போது, அவை எப்போதும் சார்ந்திருக்கக் கூடியதல்ல என அனுபவம் போதிக்கிறது. பிரசித்தமானது எதுவோ, அது எப்போதும் சிறந்ததாக இல்லை. இரண்டு அபிப்பிராயங்களுக்கு மத்தியில் நிற்பது, எந்த வழியையும் காட்டுவதில்லை. சௌகர்யம் முக்கியமானவற்றுக்கு அரிதாக வழிநடத்துகிறது. ஒரே குரல் அல்லது பிரச்சினையில் நிலைத்திருப்பது, பார்க்கும் நமது திறமையை முடக்கும். நமது சொந்த சிந்தனையை மட்டுமே சார்ந்திருப்பது, நம்மை அதிமேதாவித்தனமான எண்ணத்துக்கு வழிநடத்தலாம். நாம் கவனமாக இல்லையானால், தப்பான குரல்கள், சுவிசேஷ மையத்திலிருந்து விசுவாசத்தை தக்க வைப்பது கடினமாக இருக்கக்கூடிய இடங்களுக்கு நம்மை இழுத்து செல்ல முடியும். நாம் வெறுமை, கசப்பு மற்றும் அதிருப்தியின்மையை விட அதிகம் காண்கிறோம்.

தவறான குரலைக் கேட்டல்

ஒரு ஒப்பீடு மற்றும் வேத உதாரணத்தை பயன்படுத்தி, நான் சொல்வதை செயலில் காட்டுகிறேன். மலை ஏறுபவர்கள் பொதுவாக 8000 மீட்டருக்கு அதிகமான உயரத்தை மரண மணடலம் என குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் அந்த உயரங்களில் உயிரைக் காக்க போதிய ஆக்ஸிஜன் அங்கு இல்லை. மரண மணடலத்துக்கு சமமான ஆவிக்குரிய காரியம் இருக்கிறது. விசுவாசம் இல்லாத இடங்களில் நாம் அதிக நேரம் செலவிட்டால், நமக்குத் தேவையான ஆவிக்குரிய ஆக்ஸிஜன் குறைவாகக் கிடைக்க நல்ல நோக்கமுள்ள குரல்கள் நம்மை ஏமாற்றும்.

மார்மன் புத்தகத்தில் அப்படிப்பட்ட அனுபவமுள்ள கோரிகார் பற்றி நாம் வாசிக்கிறோம். ”மாம்ச சிந்தைக்கு பிரியமானவைகளாக”3 அவனது போதனைகள் இருந்ததால், அவன் அதிக பிரசித்தம் பெற்றான். பெற்றோரும் தீர்க்கதரிசிகளும், சுதந்திரத்தை கட்டுப்படுத்தவும், அறியாமையை வளர்க்கவும் வடிவமைக்கப்பட்ட முட்டாள்தனமான பாரம்பரியங்களை போதிக்கிறார்கள் என அவன் சொன்னான். 4 கட்டளைகள் வசதியாக திட்டமிடப்பட்ட கட்டுப்பாடுகள் தவிர ஒன்றுமில்லையாதலால் தாங்கள் தெரிந்துகொள்வதை செய்ய ஜனங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என அவன் வாதம் செய்தான்.5 அவனுக்கு, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியில் நம்பிக்கை” கிறுக்குப் பிடித்த மனதின் பாதிப்பு,” அவரைப் பார்க்க முடியாததால் அவர் இருக்க முடியாது என்ற நம்பிக்கையால் சிருஷ்டிக்கப்பட்டது. 6

அவன் தலைமை நியாயாதிபதிக்கும், பிரதான ஆசாரியனுக்கும் முன்பாக கொண்டுவரப்படும்பொருட்டு, கோரிகார் அவ்வளவு போராட்டத்தை உருவாக்கினான். அங்கு அவன் ”அதிக தடித்த வார்த்தைகளால்,” தலைவர்களைக் குறை சொல்லி, ஒரு அடையாளம் கேட்டு எழுந்தான். ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டது. அவன் பேச முடியாதபடிக்கு, அவன் அடிக்கப்பட்டான். கோரிகார் அப்போது தான் ஏமா்ற்றப்பட்டதை உணர்ந்து, அவன் கைவிட்ட அருமையான சத்தியங்களை எண்ணி அவன் புலம்பினான், ”நான் எப்போதும் அறிந்திருந்தேன்.” 7

ஒரு சோரோமிய குழுவினரால் மிதித்துக் கொல்லப்படும்வரை கோரிகோர் உணவுக்காக யாசித்தான்.8 அவனது கதையின் கடைசி வசனம் இந்த மென்மையான பிரதிபலிப்பு கொண்டிருந்தது. பிசாசு கடைசி நாளில் தன் பிள்ளைகளை ஆதரியாமல் அவர்களை பாதாளத்துக்கு துரிதமாய் இழுத்துச் செல்வதையும் நாம் காண்கிறோம்.9

சரியான குரல்

நமது பரலோக பிதா நமக்குச் சிறந்தது கிடைக்க வேண்டும் என விரும்புவதால், அவரது குரல் நமக்குக் கிடைப்பதைச் சாத்தியமாக்குகிறார். அடிக்கடி பரிசுத்த ஆவியால் கொடுக்கப்படுகிற உணர்வுகள் மூலம் அவரை நாம் கேட்கிறோம். பரிசுத்த ஆவி தேவத்துவத்தின் மூன்றாம் நபர். அவர் பிதா குமாரன் பற்றி சாட்சி கொடுக்கிறார்,10 ”எல்லாவற்றையும் நமக்குப் போதிக்க” அனுப்பப்பட்டவர்,11 அவர் ”நாம் செய்ய வேண்டியது அனைத்தையும் நமக்குக் காண்பிப்பார்.”12

ஆவியானவர் வெவ்வேறு ஜனங்களிடம் வெவ்வேறு விதமாக பேசுகிறார், அவர் அதே நபருக்கு வெவ்வேறு விதங்களில் வெவ்வேறு நேரங்களில் பேசுவார். அதன் விளைவாக, அவர் நம்மிடம் பேசுகிற பல வழிகளை கற்பதே ஒரு வாழ்நாள் முயற்சி. சில சமயங்களில் அவர் நமது ”மனதிலும் இருதயத்திலும் பேசுகிறார்,”13 மெல்லிய சத்தமாயினும், கேட்பவர்களின் ஆத்துமாவை ஊடுருவிப் போனது.14 பிற நேரங்களில் அவரது உணர்த்துதல்கள் ”[நமது] மனங்களை ஆக்கிரமிக்கிறது” அல்லது ”நமது உணர்வுகளை அழுத்துகிறது.”15 பிற நேரங்களில் நமது மனம் நம்முள்ளே எரிகிறது16ஆயினும் பிற சமயங்களில் அவர் நமது ஆத்துமாக்களை சந்தோஷத்தால் நிரப்பி, நமது மனங்களுக்கு தெளிவுபடுத்துகிறார், 17அல்லது நமது வேதனைப்பட்ட இருதயங்களுக்கு சமாதானம் பேசுகிறார்.18

அவரது குரலைக் கண்டுபிடித்தல்

நாம் நமது பிதாவின் குரலை அநேக இடங்களில் காண்போம். நாம் ஜெபிக்கும்போதும், வேதங்களைப் படிக்கும்போதும், சபைக்குப் போகும்போதும், விசுவாசமுள்ள கலந்துரையாடல்களின்போதும், ஆலயம் செல்லும்போதும் நாம் கண்டு பிடிப்போம். கண்டிப்பாக, இந்த வாரக்கடைசியில் அதை நாம் மாநாட்டில் கண்டுபிடிப்போம்.

இன்று நாம் 15 ஆண்களை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் ஆதரித்தோம். அவர்களது ஆவிக்குரிய தன்மையும், அனுபவமும், நமக்கு கண்டிப்பாக தேவைப்படுகிற தனிப்பட்ட பார்வையைக் கொடுக்கின்றன. அவர்களது செய்திகள் மிகத் தெளிவுடன் கண்டுபிடிக்கவும் பேசவும் எளிதாக இருக்கின்றன. அது பிரசித்தி பெற்றதானாலும் இல்லையானாலும், அவை நாம் அறிய வேண்டுமென தேவன் விரும்புவதை நமக்குச் சொல்கின்றன.19

அவரது குரலை இந்த இடங்களில் ஏதாவதொன்றில் தேடுவது நல்லது, ஆனால் அவற்றை அநேக இடங்களில் தேடுவது மிக நல்லது. நாம் அதைக் கேட்கும்போது, கொடுக்கப்பட்ட வழிகாட்டுதலை நாம் பின்பற்ற வேண்டும். அப்போஸ்தலனாகிய யாக்கோபு சொன்னான்,”திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மட்டுமல்ல, அதன்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.”20 தலைவர் தாமஸ் எஸ். மான்சன் ஒருமுறை போதித்தார்: ”நாம் கவனிக்கிறோம். நாம் காத்திருக்கிறோம். நாம் அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்கிறோம். அது பேசும்போது, ஞானமுள்ள ஆண்களும் பெண்களும் கீழ்ப்படிகிறார்கள்.”21

வழிகாட்டுதல் வர மெதுவாக இருக்கும்போது

முன்பு என் தொழிலில், சகோதரி ஹோமரும் நானும், வேலை பணிப்பில் ஒரு மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்பட்டோம். அச்சமயத்தில் அது ஒரு பெரிய தீர்மானம் என எங்களுக்குத் தோன்றியது. நாங்கள் படித்தோம், உபவாசமிருந்தோம், ஜெபித்தோம், ஆனால் பதில் மெதுவாக வந்தது. கடைசியில், நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்து முன்னோக்கிச் சென்றோம். நாங்கள் அப்படிச் செய்தபோது, நாங்கள் அடைந்து விட்டதாக உணர்ந்தோம், விரைவில் அது ஒரு மிக சிறந்த தீர்மானம் என அறிந்தோம்.

அதன் பயனாக, சில சமயங்களில், பதில்கள் மெதுவாக வரும் என அறிந்தோம். இது சரியான நேரம் இல்லை என்பதாலும், ஒரு பதில் தேவையில்லை என்பதாலும், அல்லது நாமே தீர்மானம் செய்ய தேவன் நம்மை நம்புகிறார் என்பதாலும் இது இருக்கலாம். மூப்பர் ரிச்சர்ட் பி. ஸ்காட் அப்படிப்பட்ட நேரங்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என ஒருமுறை போதித்து இந்த வாக்குத்தத்தத்தை கொடுத்தார்: ”நீங்கள் தகுதியுடன் வாழ்ந்து, உங்கள் தேர்வு இரட்சகரின் போதனைகளுக்கு ஒத்ததாக இருக்கும்போது, நீங்கள் செயல்பட வேண்டும், நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். ... நீங்கள் தவறான தீர்மானம் செய்தால், ஒரு எச்சரிக்கும் உணர்வு இல்லாமல், நீங்கள் வெகுதூரம் செல்ல தேவன் உங்களை அனுமதிப்பதில்லை.”22

நாம் தேர்வு செய்ய வேண்டும்

ஆகவே, வெவ்வேறு குரல்களுக்கு மத்தியில், எதற்கு நாம் கீழ்ப்படிவோம் என நாம் முடிவு செய்ய வேண்டும். நாம் உலகத்தால் சிபாரிசு செய்யப்படுகிற சார்ந்திருக்க முடியாத குரல்களைப் பின்பற்றுவோமா அல்லது நமது தீர்மானங்களை வழிநடத்துகிற மற்றும் ஆபத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கிற பிதாவின் குரலை அனுமதிக்க தேவையான வேலையைச் செய்வோமா? நாம் அவரது குரலை எவ்வளவு கருத்தாய் தேடுகிறோமோ, அவ்வளவு கேட்க எளிதாகிறது. அவரது குரல் சத்தமாகவில்லை, ஆனால் கேட்கும் நமது திறமை அதிகரித்திருக்கிறது. நாம், அவரது கொள்கைகளுக்கு செவிகொடுத்தால், அவரது ஆலோசனைக்கு காது கொடுத்தால், அவர் நமக்கு அதிகம் கொடுப்பார்.23 நம் ஒவ்வொருவருக்கும் இந்த வாக்குத்தத்தம் உண்மையானது என நான் சாட்சியளிக்கிறேன்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்பு ஒரு கொடூர வாகன விபத்தில் நாங்கள் எங்கள் மூத்த சகோதரரை இழந்தோம். ஜானின் இளம்பிராயம் நிச்சயமான சாதனைகளைக் கொண்டிருந்தது. ஆனால் அவன் வளர்ந்தபோது, ஒரு உடைந்த சரீரமும், ஒத்துழைக்காத மனமும், வாழ்க்கையைக் கடினமாக்கியது. இந்த வாழ்க்கையில் அவன் நம்பிய குணமாக்குதல் வராதபோது, எனினும் ஜான் அவனால் முடிந்தவரை இறுதிவரை சகிக்க தீர்மானித்தான்.

ஜான் பரிபூரணமானவனல்ல என நான் அறிவேன், ஆனால் அப்படிப்பட்ட உறுதியை அவனுக்கு எது கொடுத்தது என நான் ஆச்சரியப்பட்டேன். பைத்தியக்காரத்தனமானவற்றுக்கு அநேக குரல்கள் அவனை அழைத்தன, ஆனால் அவன் போவதில்லை என தேர்வு செய்தான். மாறாக, சுவிசேஷத்தை மையமாக அவனது வாழ்க்கையில் வைக்க அவனால் இயன்றதை அவன் செய்தான். அங்கு அவனது போதகரின் குரலை அவன் கண்டு பிடிப்பான் என அறிந்ததால், அப்படி அவன் தன் வாழ்க்கையை வாழ்ந்தான், ஏனெனில் அங்கு அவன் போதிக்கப்படுவான் என அவன் அறிந்தான்.

முடிவுரை

சகோதர சகோதரிகளே, அநேக போட்டிக் குரல்கள் உள்ள உலகத்தில் அவரது குரலைக் கேட்கவும் பின்பற்றவும் பரலோக பிதா நமக்கு சாத்தியப்படுத்தியிருக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். நாம் கருத்தாயிருந்தால் அவரும் அவரது குமாரனும், நாம் தேடுகிற வழிகாட்டுதலையும், நமக்கு தேவையான பெலத்தையும், நாம் வாஞ்சிக்கிற மகிழ்ச்சியையும் நமக்குக் கொடுப்பர். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.