2010–2019
ஆவிக்குரியதற்கும் பாதுகாப்பிற்கும் ஒரு அரணைக் கட்டுங்கள்
ஏப்ரல் 2019 பொது மாநாடு


ஆவிக்குரியதற்கும் பாதுகாப்பிற்கும் ஒரு அரணைக் கட்டுங்கள்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி நாம் வாழும்போது, இரட்சகரின் பாவநிவர்த்தியின்மீது நாம் இழுக்கப்பட்டு, விசுவாசத்துடன் முன்னேறிச்செல்லும்போது, சத்துருவின் தந்திரங்களுக்கு எதிராக நாம் பாதுகாக்கப்படுவோம்.

எனக்கன்பான சகோதர சகோதரிகளே இந்த மாநாடு முடிவுக்கு வரும்போது, கடந்த இரண்டு நாட்களாக இந்த மேடையில் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஆலோசனைக்கும், சத்தியங்களுக்கும், வெளிப்படுத்தலுக்கும் பரலோகத்திலுள்ள நமது பிதாவுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். அவருடைய பரிசுத்த வார்த்தைகளைப் பேசும்படி அழைக்கப்பட்ட தேவனுடைய வேலைக்காரர்களால் நாம் போதிக்கப்பட்டோம். “எனது சொந்தக் குரலிலானாலும் எனது ஊழியக்காரர்களின் குரலிலானாலும் அவை ஒன்றாயிருக்கும்”1 என பிற்கால வெளிப்படுத்தலில் கர்த்தர் நமக்கு நினைவூட்டினார்.

பரிசுத்தவான்களின் இந்த சபையைப் பார்க்கும்போது, உலகமுழுவதிலுமுள்ள அங்கத்தினர்கள் பொது மாநாட்டைக் கவனித்துக்கொண்டிருப்பதை படம்பிடிக்கும்போது, அவருடைய சிலுவையிலறைதலைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்து நெப்பியர்களுக்கு தோன்றியபோதுள்ள மார்மன் புஸ்தகத்தின் கூட்டத்தைப்பற்றி நான் நினைக்கிறேன். சுவிசேஷத்தை அவர்களுக்கு அவர் போதித்து, நீங்கள் “உங்கள் வீடுகளுக்குப் போய் நான் சொன்ன காரியங்களைத் தியானித்து, நீங்கள் புரிந்துகொள்ளும்படியாக என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டு, நாளைக்கென்று உங்கள் மனங்களை ஆயத்தம்பண்ணுங்கள் நான் மறுபடியும் உங்களிடம் வருகிறேன்”2 என பின்னர் ஊக்குவித்தார்.

“உங்கள் வீடுகளுக்குப் போய், தியானியுங்கள்” என்பது, இந்த பரிசுத்த அமைப்பில் பேசப்பட்ட தீர்க்கதரிசிகளின், சபைத் தலைவர்களின் வார்த்தைகளை எடுத்துக்கொள்வது அடுத்த அடி. பிசாசானவன் “மனுபுத்திரர் இருதயங்களில் சினங்கொள்ளச்செய்து அவர்களை நன்மைக்கு விரோதமாய் கோபமடைய ஏவுவான்”3 என தீர்க்கதரிசனமுரைத்தபோது ஒரு நாளில் பூமியில் தேவராஜ்யத்திற்காக கிறிஸ்துவை மையமாக்கப்பட்ட வீடுகள் அரண்களாயிருக்கின்றன.

எதிரியை வெளியே வைக்க சரித்திரம் முழுவதிலும் ஜனங்கள் அரண்களைக் கட்டினார்கள். அச்சுறுத்துகிற படைகள் மற்றும் வருகிற தாக்குதல்களைப்பற்றி எச்சரிக்க தீர்க்கதரிசிகளைப்போல காவற்காரர்கள் இருக்கிற ஒரு பாதுகாப்பு கோபுரமும் வழக்கமாக அரண்களில் சேர்ந்திருக்கும்.

படம்
தாமஸ் ரஸ்பான்ட்

ஆரம்பகால யூட்டா முன்னோடிகளின் காலத்தில் யூட்டாவின் அழகிய வாஸாட்ச் மலைகளிலுள்ள ஹெப்பர் பள்ளத்தாக்கில் நுழைய சில முதல் குடியேறிகளில் என்னுடைய கொள்ளுத் தாத்தாவும் அவருடைய குடும்பமும் இருந்தார்கள்.

1859ல் தங்களுடைய பாதுகாப்பிற்காக கட்டப்பட்ட ஹெப்பர் அரணைக் கட்டுவதற்கு தாமஸ் உதவினார். அரணின் சுற்றளவாக அமைக்கப்பட்டதில் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாக காட்டன் மரத் துண்டுகள் வைக்கப்பட்டு அது ஒரு எளிய அமைப்பாயிருந்தது. அந்த பொது சுவரைப் பயன்படுத்தி அரணுக்கு உள்ளே மர அறைகள் கட்டப்பட்டன. வேர்களை கீழே போட்டு கர்த்தரை அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது அந்த முன்னோடி குடும்பங்களுக்கு அமைப்பு பாதுகாப்பைக் கொடுத்தது.

படம்
முன்னோடி அரண்

ஆகவே இது நம்முடனிருக்கிறது. உலகத்தின் தீமைகளுக்கு எதிராக நமது வீடுகள் அரண்களாயிருக்கின்றன. அவருடைய கட்டளைகளைப் பின்பற்ற கற்றுக்கொள்வதாலும் வேதங்களைப் படிப்பதாலும், ஒன்று சேர்ந்து ஜெபிப்பதாலும், உடன்படிக்கைப் பாதையில் நிலைத்திருக்க ஒருவருக்கொருவர் உதவுவதாலும் நமது வீடுகளில் நாம் கிறிஸ்துவண்டை வருகிறோம் என்னைப் பின்பற்றி வா பாடத்திட்டத்தின் மூலமாக வீட்டில் தனிப்பட்ட மற்றும் குடும்ப படிப்பின் புதிய வலியுறுத்தல் “நமது மனமாற்றத்தை ஆழப்படுத்தவும் இயேசு கிறிஸ்துவைப் போலாக நமக்குதவவும்”4 வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அப்படிச் செய்வதில் நமது இருதயங்களும் ஆத்துமாக்களும் தேவனுடன் இசைந்திருந்து பவுல் அழைக்கிற “புது சிருஷ்டியாக”5 நாம் மாறுவோம். சத்துருவின் திடீர் தாக்குதல்களை எதிர்கொள்ளவும் திசை திருப்பவும் அந்த வலிமை நமக்கு வேண்டும்.

விசுவாசத்தில் பிறந்த அர்ப்பணிப்புடன் இயேசு கிறிஸ்துவில் நாம் வாழும்போது, சத்தியத்திற்கு நம்மை வழிநடத்துகிற, கர்த்தருடைய ஆசீர்வாதங்களுக்கு தகுதியுள்ளவர்களாக வாழுவதற்கு நம்மை உணர்த்துகிற, தேவன் ஜீவிக்கிறார் நம்மை நேசிக்கிறார் என சாட்சியை தாங்குகிற பரிசுத்த ஆவியின் சமாதான பிரசன்னத்தை நாம் உணருவோம். இவை எல்லாம் நமது வீடுகளின் அரணுக்குள் இருக்கிறது. ஆனால், நமது வீடுகள் மட்டுமே, சுவர்களுக்குள் நம் ஒவ்வொருவருக்குள்ள ஆவிக்குரிய வலிமையைப்போல ஆற்றலுள்ளது.

“வருங்காலத்தில், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலில்லாமல், வழிகாட்டுதில்லாமல், ஆறுதலளிப்பில்லாமல், நிரந்தர செல்வாக்கில்லாமல் ஆவிக்குரியதில் பிழைத்திருப்பது சாத்தியமில்லை”6 என தலைவர் ரசல் எம்.நெல்சன் போதித்தார். இந்த நாட்களில் கர்த்தருடைய ஜீவிக்கிற தீர்க்கதரிசி, ஞானதிருஷ்டக்காரர், வெளிப்படுத்துபவர், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என்ற அரணின் கோபுரத்தில் காவற்காரராக இருக்கும்போது எதிரியின் முன்னேற்றத்தை அவர் பார்க்கிறார்.

சகோதர சகோதரிகளே, மனிதர்களின் ஆத்துமாக்களுக்காக சாத்தானுடன் நாம் யுத்தம் செய்துகொண்டிருக்கிறோம் நமது பூமியின் முந்தைய வாழ்க்கையில் யுத்தக் கோடுகள் வரையப்பட்டன. சாத்தானும் பரலோகத்திலுள்ள நமது பிதாவின் பிள்ளைகளின் மூன்றாவதானவர்கள், மேன்மையடைதலின் அவருடைய வாக்குத்தத்தத்திலிருந்து விலகிப்போனார்கள். அந்த நேரத்திலிருந்து சத்துருவின் கூட்டாளிகள், பிதாவின் திட்டத்தை தேர்ந்தெடுத்த விசுவாசிகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

அவனுடைய நாட்கள் எண்ணப்பட்டிருக்கிறதென்றும், அந்த நேரம் குறைந்துகொண்டே போகிறதென்றும் சாத்தான் அறிகிறான். வஞ்சகமும் தந்திரமுமாக அவன் இருக்கிறதில் அவன் வெற்றியடையமாட்டான். எப்படியாயினும், நம் ஒவ்வொருவர் ஆத்துமாக்களுக்கான அவனுடைய யுத்தம் உச்சமடைந்தது.

நமது பாதுகாப்புக்காக, நமது ஆத்துமாக்களுக்கான பாதுகாவலுக்கு தீமையின் ஒன்றால் ஊடுருவ முடியாத ஒரு அரணனான ஆவிக்குரிய ஒரு அரணை நாம் கட்டவேண்டும்.

நமது பாதுகாப்பு குறையும்போது, ஒரு ஏமாற்றத்தை எதிர்கொள்ளும்போது, அல்லது நம்பிக்கையை இழக்கும்போது நமது மனங்களிலும் இருதயங்களிலும் நுழைந்து விடுகிற சாத்தான் ஒரு நுட்பமான சர்ப்பம். புகழ்ச்சியின், தொல்லையின்மையின், வசதியின், அல்லது நாம் தாழ்ந்திருக்கும்போது தற்காலிகமான ஒரு உயர்வின் ஒரு வாக்குறுதியால், அவன் நம்மை வஞ்சிக்கிறான். பெருமையை, அன்பற்றதை, நேர்மையின்மையை, ஒழுக்கக்கேடை, சிலநேரத்தில் “உணர்வில்லாதவர்களாய்”7 நாமிருக்க அவன் நியாயப்படுத்துகிறான். ஆவி நம்மை விட்டுப் போகலாம். “இவ்வாறாக பிசாசு அவர்களின் ஆத்துமாக்களை ஏமாற்றி பத்திரமாக பாதாளத்திற்குள் அவர்களை நடத்திச் செல்வான்.”8

மாறாக, இம்மாதிரியான வார்த்தைகளுடன் தேவனுக்கு துதியுடன் நாம் பாடும்போது மிகவும் வலிமை வாய்ந்ததாக நாம் வழக்கமாக ஆவியை உணருவோம்.

நமது தேவன் ஒரு பராக்கிரம அரண்

வலிமையின் கோபுரம் தவறிக்கொண்டிருக்கிறது.

நமது தேவன் ஒரு பராக்கிரம உதவியாளர்.

வாழ்க்கையின் பிற தீமைகள் வியாபித்திருக்கின்றன.9

ஆவிக்குரிய வலிமையின் ஒரு அரணை நாம் கட்டும்போது, சத்துருவின் முன்னேற்றத்தை நாம் தடுக்க முடிந்து, அவனுக்கு நம் முதுகைக் காட்டி, ஆவியின் சமாதானத்தை உணருவோம். வனாந்தரத்தில் சோதிக்கப்பட்டபோது “அப்பாலே போ சாத்தானே”10 என்று சொன்ன நம்முடைய கர்த்தரும் இரட்சகருமானவரின் எடுத்துக்காட்டை நாம் பின்பற்ற முடியும். அதை எப்படிச் செய்வதென்ற வாழ்க்கையின் அனுபவங்களால் நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஏமாற்றுகிற, இரத்தப்பசியுள்ள, அதிகாரப் பசியுள்ள அமலிக்கியாவிடமிருந்து வந்த தாக்குதல்களை எதிர்கொள்ள தலைவன் மரோனி நெப்பியர்களை ஆயத்தப்படுத்தியபோது மார்மன் புஸ்தகத்தில் இத்தகைய நோக்கம் மிக நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. “தேவனாகிய கர்த்தருக்கேதுவாய் அவர்கள் ஜீவிக்கும்படியும், கிறிஸ்துவர்களின் நம்பிக்கை என்று அவர்களின் சத்துருக்களால் அழைக்கப்படுகிறதை அவர்கள் காக்கும்படியும்”11 நெப்பியர்களை பாதுகாக்க மரோனி அரண்களைக் கட்டினான். “கிறிஸ்துவின் விசுவாசத்தில் மரோனி உறுதியாயிருந்தான்”12 மேலும்,தேவனுடைய கற்பனைகளைக்கைக்கொள்ளுவதிலும், அக்கிரமத்தை எதிர்ப்பதிலும் ஜனங்கள் உண்மையுள்ளவர்களாய் இருந்தனர்.”13

லாமானியர்கள் போருக்கு வந்தபோது நெப்பியர்களின் ஆயத்தத்தைப் பார்த்து அவர்கள் ஆச்சரியமடைந்தனர், அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். “தங்களைத் தங்களுடைய விரோதிகளின் கைகளுக்குத் தப்புவிக்கப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரின் இணையற்ற வல்லமைக்காக”14 நெப்பியர்கள் ஸ்தோத்தரித்தார்கள். வெளியே பாதுகாவலுக்காக அரண்களைக் கட்டினார்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மீது அவர்கள் விசுவாசத்தை தங்கள் ஆத்துமாவுக்குள் ஆழமாக அவர்கள் கட்டினார்கள்.

“இந்தப் பெரிய கிரியை நிறைவேற தேவனுடைய கரங்களில் நாம் கருவிகளாக்கப்படும்படியாக பிரச்சினையின் காலங்களில் என்ன சிலவழிகளில் நம்மை நாம் பெலப்படுத்த முடியும்”?15 வேதங்களில் நாம் தேடுவோம்.

நாம் கீழ்ப்படிதலுள்ளவர்களாயிருக்கிறோம். “பதிவேடுகளைத் தேடி, அவைகளை வனாந்தரத்திற்குள் கொண்டுவர”16 அவனுடைய குமாரர்களை மீண்டும் எருசலேமுக்கு அனுப்பும்படி தகப்பனாகிய லேகிக்கு கர்த்தர் கட்டளையிட்டார். லேகி கேள்வி கேட்கவில்லை, ஏன் அல்லது எப்படி என அவன் ஆச்சரியப்படவில்லை. நான் போய் கர்த்தர் கட்டளையிட்ட காரியங்களைச் செய்வேன்”17 என நெப்பி பதிலளித்தான்.

நெப்பியின் வாஞ்சையான கீழ்ப்படிதலுடன் நாம் செயல்படுவோமா அல்லது விசுவாசக் குறைவால் இறுதியாக கர்த்தரிடமிருந்து தங்களை தூர விலக்கிக்கொண்ட நெப்பியின் சகோதரர்கள் செய்ததைப்போல தேவனின் கட்டளைகளை கேள்வி கேட்க அதிகமாய் சாய்ந்திருக்கிறோமா. கீழ்ப்படிதல் என்பது கர்த்தர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிற “இருதயத்தின் பரிசுத்தத்தோடு”18 பயிற்சி செய்யப்படுவது.

வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர்களை நடத்த யோசுவா ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தபோது “பலங்கொண்டு திடமனதாயிரு, திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்”19 என அவனுக்குச் சொன்ன கர்த்தரை நாம் நம்புகிறோம். யோசுவா அந்த வார்த்தைகளை நம்பி “உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள் நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்”20என ஜனங்களுக்கு ஆலோசனையளித்தான். யோர்தான் தண்ணீர்களை கர்த்தர் பிரித்தார், இஸ்ரவேலர்களின் 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைந்தது முடிவுக்கு வந்தது.

மார்மன் புஸ்தகத்தில் தீர்க்கதரிசி அபிநாதி செய்ததைப்போல சத்தியத்திற்காக நாம் நிற்கிறோம். சிறை பிடிக்கப்பட்டு, இராஜா நோவா மற்றும் அவனுடைய துன்மார்க்க ஆசாரியர்கள் முன்பு கொண்டுவரப்பட்ட அபிநாதி பத்து கற்பனைகளைப் போதித்து, கிறிஸ்து, “மனுபுத்திரர் மத்தியிலே வந்து தம் ஜனத்தை மீட்பார்”21 என ஆற்றலுடன் பிரசங்கித்தான். அவனுக்குள்ளிருந்த ஆழமான விசுவாசத்துடன், பின்னர் அவன் “தேவனே என் ஆத்துமாவை ஏற்றுக்கொள்ளும்,”22 என பிரகடனப்படுத்தி “அக்கினியாலான மரணத்தினால் துன்பப்பட்டான்.”23

படம்
ரோம் இத்தாலி ஆலயம்

திருவிருந்தில் பங்கேற்பதாலும், ஆலயத்தில் தொழுதுகொள்வதாலும் நமது உடன்படிக்கைகளை நாம் செய்து, புதுப்பித்துக்கொள்கிறோம் “அவருடைய ஆவி எப்போதும் நம்முடனிருக்க”24 என்ற வாக்களிப்பை நாம் பெற்றுக்கொள்கிற நமது ஞாயிறு தொழுகையில் திருவிருந்து ஒரு மையமானதாயிருக்கிறது. அந்த பரிசுத்த நியமத்துடன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது எடுத்துக்கொள்ள, அவரைப் பின்பற்ற, அவர் செய்ததைப்போல இந்த தெய்வீகப் பணியில் நமது பொறுப்பகளை தோள்கொடுக்க நம்மை நாமே ஒப்புவிக்கிறோம். ஆலயத்தில் “உலகத்தின் காரியங்களை நாம் ஒதுக்கிவிட்டு”25 கர்த்தருடைய பிரசன்னத்தையும் அவருடைய எல்லையை கடந்த சமாதானத்தையும் உணரலாம். நமது முன்னோர்களிடத்தில், நமது குடும்பங்களிடத்தில், பிதாவின் பிரசன்னத்தில் நித்திய ஜீவனிடத்தில் நாம் கவனம் செலுத்தலாம். “இந்த ஆலயத்திலிருந்து வெளியாகிற நல்லவை கணிப்பதற்கரிய மகத்தானது”26 என தலைவர் நெல்சன் ரோமில் உரைத்ததில் ஆச்சரியமில்லை.

நாம் செய்கிற எல்லாவற்றிலும் நமக்கு நாணயமிருக்கவேண்டும். எது சரி, எது தவறு என நாம் தொடர்ந்து தீர்மானிக்காமலிருக்கும்படியாக பகுத்தறிதலையும் ஒழுக்த்தையும் நாம் வள்ர்க்கவேண்டும். “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள், ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித்திரிகிறான்”27 என எச்சரித்த ஆரம்பகால சபை அப்போஸ்தலனாயிருந்த பேதுருவின் எச்சரிக்கையை நாம் இருதயத்திற்குள் எடுத்துக்கொள்ளவேண்டும்.

நமது அரண்களை சிரத்தையுடன் நாம் பெலப்படுத்துகிறபோது, நமது ஆத்துமாக்கள் அவருடைய பாதுகாப்பிலிருப்பதுடன், இயேசு கிறிஸ்துவைப் போலவும், அவருடைய உண்மையான சீஷர்களைப்போலவும் நாம் மாறுகிறோம்.

இயேசு கிறிஸ்துவில் உங்களுடைய சாட்சி உங்களுடைய தனிப்பட்ட அரணும் உங்களுடைய ஆத்துமாவுக்கு பாதுகாவலாகவுமிருக்கிறது. என்னுடைய தாத்தாவும் அவருடைய சகமனிதர்களும் ஹெப்பர் அரணைக் கட்டியபோது, அரண் “இசைவாய் இணைக்கப்படும்வரை”28 அவர்கள் ஒரு மரத்தடியை ஒரு நேரத்தில் வைத்து அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.. ஆகவே இது சாட்சியுடனிருந்தது. “உள்ளத்தில் உண்மையிருக்க”29 போதித்து நமது சொந்த ஆவியிடம் அவர் பேசும்போது பரிசுத்த ஆவியிடமிருந்து ஒன்றன் பின் ஒன்றாக ஒரு சாட்சியை நாம் பெறுகிறோம். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி நாம் வாழும்போது, இரட்சகரின் பாவநிவர்த்தியின்மீது நாம் இழுக்கப்பட்டு, விசுவாசத்துடன் முன்னேறிச்செல்லும்போது, சத்துருவின் தந்திரங்களுக்கு எதிராக நாம் பாதுகாக்கப்படுவோம். நமது சாட்சிகள் பரலோகங்களுடன் நம்மை இணைத்து, “சகல காரியங்களின் சத்தியத்துடன்”30 நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். முன்னோடிகள் ஒரு அரணால் பாதுகாக்கப்பட்டதைப்போல, இரட்சகருடைய அன்பின் கரங்களில் நாம் பாதுகாப்பாக சுற்றி வளைக்கப்படுகிறோம்.

“ஆதலால், தேவனில் விசுவாசிக்கிறவன் எவனும், தேவனுடைய வலது பாரிசத்தில் ஒரு மேன்மையான உலகத்தை நிச்சயமாய் நம்பியிருப்பான், அந்த நம்பிக்கையோ விசுவாசத்தினால் வந்து மனுஷ ஆத்துமாக்களுக்கு ஒரு நங்கூரம் ஆகிறது. அது அவர்களை உறுதியுள்ளவர்களாகவும், அசைவில்லாதவர்களாயும், நற்கிரியைகளில் எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருக்கப்பண்ணி, தேவனை மகிமைப்படுத்தும்படியாய் அவர்களை நடத்திச் செல்கிறது”31 என தீர்க்கதரிசி ஏத்தேர் போதித்தான்.

எனக்கன்பான சகோதர சகோதரிகளே, கர்த்தரிலும் அவருடைய சுவிசேஷத்திலும் நம்பி்க்கையுடன் முன்செல்ல என்னுடைய ஆசீர்வாதங்களுடன் உங்களை நான் வழியனுப்புகிறேன். கால் இடறுகிற அவர்களை உங்கள் கரங்களால் சுற்றி அணைத்து உங்களுக்குள்ளிருக்கும் ஆவியின் பெலத்துடன் ஆவிக்குரியஅரணுக்கு திரும்ப அன்புடன் அவர்களை நடத்துங்கள். நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் “இயேசுவைப் போலிருக்க”32 நாடி, தீமையையும் சோதனைகளையும் தடுங்கள், இருதயத்தில் நேர்மையாயிருங்கள், நிமிர்ந்து நின்று தூய்மையாயிருங்கள், இரக்கத்தையும் தயாளத்தையும் காட்டி, ஒரு உண்மையான சீஷனாக பக்தியுடன் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் அன்பு செலுத்துங்கள்.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் நமது சாட்சிகள், நமது வீடுகள், நமது குடும்பங்கள், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் நமது உறுப்பினர் தகுதி, தீமை ஒன்றின் வல்லமையிலிருந்து நம்மைச் சுற்றி நம்மை பாதுகாக்கும் நமது தனிப்பட்ட பாதுகாப்பின் அரண்களாக இருக்கலாம் இதைக்குறித்து, நமது கர்த்தரும் இரட்சகரும், இயேசு கிறிஸ்துவுமானவரின் நாமத்தில் என்னுடைய புனிதமான சாட்சியைப் பகருகிறேன்.

அச்சிடவும்