2010–2019
இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்
ஏப்ரல் 2019 பொது மாநாடு


2:3

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்

இயேசு கிறிஸ்துவை நாம் நோக்கிப்பார்க்குமி்போது, நமது உடன்படிக்கைகளின்படி வாழ அவர் நமக்கு உதவுவார் மற்றும் இஸ்ரவேலின் மூப்பர்களாக நமது அழைப்பை பெரிதாக்குவார்.

கப்பர்நகூமுக்கு அருகில் தெருவில் இயேசு நடந்துகொண்டிருந்தபோது,1 அவரைச் சுற்றிலும் ஒரு பெரிய கூட்டம் இருக்கவே, பன்னிரு ஆண்டுகளாக கடுமையான நிலையில் பாதிக்கப்ட்டிருந்த பெண் அவரது வஸ்திரத்தின் விளிம்பைத் தொட்டாள். அவள் உடனே குணமாக்கப்பட்டாள்.2

“வல்லமை அவரிலிருந்து போனதை“ 3இயேசு உணர்ந்ததாக வேதங்கள் கூறுகின்றன,“ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி“4, “இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.“5 “அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லை என்று கண்டு,“ 6 “அவர் முன்பாக வந்து விழுந்து உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள்.“7

இயேசு அவளுக்குச் சொன்னாள், “மகளே திடன் கொள், உன்விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ.“8

இயேசு கிறிஸ்து அப்பெண்ணை இரட்சித்தார். அவள் சரீர பிரகாரமாக குணமாக்கப்பட்டாள், ஆனால் இயேசு அவளைப் பார்க்க திரும்பியபோது, அவள் அவரில் தன் விசுவாசத்தை தெரிவித்தாள், அவர் அவளது இருதயத்தை குணமாக்கினார்.9 அவர் அவளோடு அன்பாக பேசினார், தன் அங்கீகாரத்தை உறுதியளித்தார், அவரது சமாதானத்துடன் அவளை ஆசீர்வதித்தார்.10

சகோதரரே, பரிசுத்த ஆசாரியத்துவம் தரித்தவர்களாய், நாம் இரட்சிக்கும் பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம். கடந்த ஆண்டில் இந்த பணியின் தலைமையை, கர்த்தர் இஸ்ரவேலின் மூப்பர்கள் தோளில் நேரடியாக வைத்துள்ளார்.11 கர்த்தரிடமிருந்து ஒரு உணர்த்தபட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளோம். சகோதரிகளுடன் பணியாற்றி, பரிசுத்தமான வழியில் நாம் ஊழியம் செய்ய வேண்டும். திரையின் இருமருங்கிலும் இஸ்ரவேலின் கூடுகையை துரிதப்படுத்த வேண்டும். நமது வீடுகளை விசுவாசம் மற்றும் சுவிசேஷம் கற்றலின் புகலிடமாக ஆயத்தப்படுத்த வேண்டும். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு உலகை ஆயத்தம் செய்ய வேண்டும்.12

எல்லா காரியங்களிலும் போலவே இரட்சகர் நமக்கு வழிகாட்டியிருக்கிறார். அவர் தன் பிதாவைப் பார்த்து சேவை செய்ததுபோல நாம் இயேசு கிறிஸ்துவைப் பார்த்து சேவை செய்ய வேண்டும்.13 இவ்விதமாக இரட்சகர் தீர்க்கதரிசி ஜோசப்புக்கு சொன்னார்:

“எல்லா சிந்தனையிலும் என்னை நோக்கிப் பார், சந்தேகிக்காதே, பயப்படாதே.

“என் விலாவை ஊடுருவிய காயங்களையும்,என் கைகளிலும் கால்களிலும் ஆணித்தழும்புகளையும் பார். விசுவாசமாயிரு, என் கட்டளைகளைக் கைக்கொள், நீ பரலோக இராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்வாய்.“14

அநித்தியத்துக்கு முந்திய ஜீவியத்தில் அவர் தன் பிதாவின் சித்தப்படி செய்வதாகவும், நமது இரடசகராகவும் மீட்பராகவும் இருக்கப்போவதாகவும் பிதாவுக்கு வாக்களித்தார். அப்போது அவரது பிதா கேட்டார்,“நான் யாரை அனுப்புவேன்?“15 இயேசு பதிலளித்தார்.

இயேசு பதிலளித்தார், “இதோ நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்.“16

“பிதாவே உமது சித்தம் செய்யப்படும், மகிமை என்றென்றைக்கும் உம்முடையதாகும்.“17

அவரது அநித்திய ஜீவியம் முழுவதும் இயேசு அந்த வாக்குத்தத்தத்தின்படி வாழ்ந்தார். தாழ்மையோடும், சாந்தத்தோடும், அன்போடும், தன் பிதாவின் கோட்பாடுகளைப் போதித்தார், அவருக்கு பிதா கொடுத்த வல்லமையோடும் அதிகாரத்தோடும் தம் பிதாவின் பணியைச் செய்தார்.18

இயேசு தன் பிதாவுக்கு தமது இருதயத்தைக் கொடுத்தார். அவர் சொன்னார்,

“நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன்.“19

“அவருக்குப் பிரியமானவைகளை நான் எப்போதும் செய்வேன்.“20

“என் சித்தத்தின்படியல்ல ... என்னை அனுப்பினவருடைய [பிதா] சித்தத்தின்படி செய்ய வந்தேன்.“21

தன் வேதனையில் கெத்சமனேவில் அவர் ஜெபித்தார், “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.“22

இஸ்ரவேலின் மூப்பர்களை“ எல்லா சிந்தனையிலும் என்னைப் பாருங்கள்,“ அவரது உயிர்த்தெழுந்த சரீரத்தில் “காயங்களைப் பாருங்கள்,“ என கர்த்தர் அழைத்தபோது, அது பாவத்திலிருந்தும் உலகத்திலிருந்தும் அவரிடத்துக்கு திரும்பவும், அவரை நேசிக்கவும் கீழ்ப்படியவும் ஒரு அழைப்பு ஆகும். அவரது வழியில் அவரது கோட்பாடுகளைப் போதிக்கவும், அவரது பணியைச் செய்யவும் ஒரு அழைப்பு. ஆகவே, இது முற்றிலும் அவரை நம்பவும், நமது சித்தத்தை அர்ப்பணித்து, நமது இருதயங்களை அவருக்குக் கொடுத்து, அவரது மீட்பின் வல்லமை மூலம் அவரைப் போலாக ஒரு அழைப்பு.23

சகோதரரே, நாம் இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்தால், தாழ்மையும், சாந்தமும், பணிவும், முழுமையாக அவரது அன்பும் நிறைந்த, அவரது இஸ்ரவேலின் மூப்பர்களாக இருக்க, அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.24 திரையின் இருமருங்கிலுமுள்ள நமது குடும்பங்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும், அவரது சுவிசேஷம் மற்றும் அவரது சபையின் சந்தோஷத்தையும், ஆசீர்வாதங்களையும் நாம் கொண்டு வருவோம்.

இத்தகைய ஆற்றல்மிக்க சீஷர்களாக ஆகுவதில் எதுவுமே எளிதாகவும் தானாக இயங்குவதாகவும் இல்லை என்ற இந்த வழியில் இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்க்க, தலைவர் ரசல் எம்.நெல்சன் நம்மை அழைக்கிறார். நமது கவனம் இரட்சகர் மற்றும் அவரது சுவிசேஷத்தில் நிலைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு சிந்தனையிலும் அவரை நோக்கிப் பார்க்க முயல்வது மனத்தளவில் கடினமானது. ஆனால் நாம் அதைச் செய்யும்போது நமது சந்தேகங்களும் பயங்களும் பறந்து போகும்”.25

அறையாணி என்பது பெரிய வார்த்தை. அதாவது உறுதியாக கட்டி, கவர்ந்து முழுவதும்26 நமது உடன்படிக்கைகளின்படி ஜீவித்து நாம் நமது கவனத்தை இயேசு கிறிஸ்துவிலும், அவரது சுவிசேஷத்திலும் நிலைக்கச் செய்கிறோம்.

நாம் நமது உடன்படிக்கையின்படி வாழும்போது, நாம் சொல்லும் மற்றும் செய்யும் அனைத்திலும் செல்வாக்கு பெறுகிறது. முற்றிலும் எளிமையான, இயேசு கிறிஸ்துவில் கவனம் செலுத்துகிற அன்றாட விசுவாச செயல்கள், அவரது நாமத்தில் இருதயத்திலிருந்து ஜெபம், அவரது வார்த்தையை ருசித்தல், நமது பாவங்களிலிருந்து மனந்திரும்ப அவரிடத்தில் திரும்புதல், அவரது கட்டளைகளைக் காத்துக் கொள்ளுதல், திருவிருந்தில் பங்கேற்று அவரது ஓய்வுநாளை ஆசரித்தல், நம்மால் இயன்ற போதெல்லாம் அவரது பரிசுத்த ஆலயத்தில் ஆராதித்தல், தேவனின் பிள்ளைகளுக்கு சேவை செய்ய அவரது பரிசுத்த ஆசாரியத்துவத்தை பிரயோகித்து நாம் உடன்படிக்கை வாழ்வு வாழ்கிறோம்.27

உடன்படிக்கைக்கு அர்ப்பணிப்புடைய இச்செயல்கள், இரட்சகரின் மீட்பின் வல்லமைக்கும், பரிசுத்த ஆவியின் தூய்மையாக்கும் செல்வாக்குக்கும் நமது இருதயங்களையும் மனங்களையும் திறக்கின்றன. வரிக்கு வரியாக இரட்சகர் நமது தன்மையையே மாற்றுகிறார், நமது இருதயங்களில் நமது உடன்படிக்கைகள் அவரிடத்தில் ஆழமாக மனமாற்றப்பட்டவர்களாக ஆகிறோம்.28

நமது பரலோக பிதாவுக்கு நாம் செய்யும் வாக்குத்தத்தங்கள்பாறை போன்ற ஒப்புக்கொடுத்தல்களாக, நமது ஆழமான வாஞ்சைகளாக ஆகின்றன. நமக்கு பரலோக பிதாவின் வாக்குத்தத்தங்கள் நம்மை நன்றியுணர்வாலும் சந்தோஷத்தாலும் நிரப்புகின்றன.29 நமது உடன்படிக்கைகள் நாம் பின்பற்றுகிற விதிகளாவது நின்று, நமக்கு உணர்த்தி வழிநடத்துகிற பிடித்த கொள்கைகளாக ஆகின்றன. நமது கவனத்தை இயேசு கிறிஸ்து மீது நிலைக்கச் செய்கிறது.30

இந்த அர்ப்பணிப்பின் செயல்கள் இளைஞருக்கும் முதியவருக்கும் கிடைக்கின்றன. பரிசுத்த ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்திருக்கிற வாலிபரே, இன்றிரவில் நான் சொன்ன யாவும் உங்களுக்கும் பொருந்தும். உங்களுக்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு வாரமும் மில்லியன் கணக்கான பரிசுத்தவான்களுக்கு கிடைக்கிற பரிசுத்த நியமங்களையும் உடன்படிக்கைகளையும் செய்கிறீர்கள். நீங்கள் திருவிருந்தை ஆயத்தப்படுத்தி, ஆசீர்வதித்து பரிமாறும்போது, ஊழியம் செய்யும்போது, ஆலயத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும்போது, ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு நண்பனை அழைக்கும்போது, அல்லது உங்கள் குழும அங்கத்தினரை மீட்கும்போது, நீங்கள் இரட்சிப்பின் பணியை செய்கிறீர்கள். நீங்களும் தினமும் இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து, உங்கள் உடன்படிக்கையின்படி வாழ முடியும். நீங்கள் செய்தால், இப்போதும் வருகிற நாளிலும் கர்த்தரின் நம்பிக்கையான ஊழியக்காரர்களாக, இஸ்ரவேலின் பராக்கிரமமான மூப்பர்களாக இருப்பீர்கள். இருப்பீர்கள்

சகோதரரே, இவை யாவும் பயங்கரமானதாகத் தோன்றலாம் என நான் அறிவேன். ஆனால் தயவுசெய்து இரட்சகரின் இந்த வார்த்தைகளை நினைவுகொள்ளுங்கள்: நான் தனித்திரேன், பிதா என்னுடனே கூட இருக்கிறார்.31 ஆகவே நமக்கும் அப்படியே ஆகும். நாம் தனியாக இல்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், நமது பரலோக பிதாவும் நம்மை நேசிக்கிறார்கள், அவர்கள் நம்மோடு இருக்கிறார்கள்.32 இயேசு தன் பிதாவை நோக்கிப் பார்த்து, மகத்தான பாவ நிவாரண பலியை நிறைவேற்றினதால், அவர் நமக்கு உதவுவார் என உறுதியாக இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கலாம்.

நம்மில் ஒருவரும் பரிபூரணமானவர்கள் இல்லை. சில சமயங்களில் நாம் மாட்டிக் கொள்கிறோம். நாம் வழிவிலகுகிறோம் அல்லது அதைரியமடைகிறோம். நாம் தடுமாறுகிறோம். ஆனால் மனந்திரும்பிய இருதயத்தோடு இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்தால், அவர் நம்மை கைதூக்கி விடுவார், பாவத்திலிருந்து நம்மை கழுவுவார், மன்னிப்பார், நமது இருதயங்களை குணமாக்குவார். அவர் பொறுமையுள்ளவர், தயவுள்ளவர். அவரது மீட்கும் அன்பு ஒருபோதும் முடிவதில்லை, தோற்பதில்லை.33 நமது உடன்படிக்கைகளின்படி வாழ அவர் நமக்கு உதவுவார் மற்றும் இஸ்ரவேலின் மூப்பர்களாக நமது அழைப்பை சிறப்பாக்குவோம்.

அவரது நோக்கங்களை நிறைவேற்ற தேவையான அனைத்துடனும் பரலோகத்திலுள்ளவைகளுடனும், பூமியிலுள்ளவைகளுடனும், ஜீவனோடும் ஒளியோடும், ஆவியோடும் வல்லமையோடும், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் பிதாவின் சித்தப்படி அனுப்பப்பட்ட எல்லாவற்றுடனும் பிதா நம்மை ஆசீர்வதிப்பார்.34

தெய்வீக ஒளியும், வல்லமையும் நமது வாழ்க்கையில் வழிந்தோடும்போது, மூன்று அற்புதமான காரியங்கள் நிகழ்கின்றன.

முதலாவதாக நாம் பார்க்கலாம். வெளிப்படுத்தல் மூலமாக அந்த ஸ்திரீயை இயேசு பார்த்தது போல, இருதயத்தின் மேற்புறத்துக்கு அப்பால் பார்க்கத் தொடங்குகிறோம்.35 நாம் இயேசு பார்த்ததுபோல பார்க்கும்போது, அவரது அன்புடன் நாம் சேவை செய்பவர்களை நேசிக்க அவர் ஆசீர்வதிக்கிறார். அவரது உதவியுடன் நாம் சேவை செய்பவர்கள் இரட்சகரைப் பார்ப்பார்கள், அவரது அன்பை உணர்வார்கள். 36

இரண்டாவதாக நம்மிடம் ஆசாரியத்துவ வல்லமை உண்டு. ஆசீர்வதிக்கவும், வழிநடத்தவும், பாதுகாக்கவும், பெலப்படுத்தவும், பிறரைக் குணப்படுத்தவும், நாம் நேசிப்பவர்களுக்கு அற்புதங்கல் நடக்கவும், நமது திருமணங்களையும், குடும்பங்களையும் காத்துக் கொள்ளவும், இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே செயல்பட நமக்கு அதிகாரமும் வல்லமையும் உண்டு.37

மூன்றாவது இயேசு கிறிஸ்து நம்முடன் நடக்கிறார். நாம் போகுமிடங்களுக்கு அவர் வருகிறார். நாம் கற்பிக்கும்போது அவர் கற்பிக்கிறார். நாம் ஆருதலளிக்கும்போது, அவர் ஆறுதலளிக்கிறார். நாம் ஆசீர்வதிக்கும்போது அவர் ஆசீர்வதிக்கிறார்.38

சகோதரரே, களிகூர நமக்கு காரணமில்லையா? நமக்கு உண்டு. நாம் தேவனின் பரிசுத்த ஆசாரியத்துவத்தை தரித்திருக்கிறோம். நாம் இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கும்போது, நமது உடன்படிக்கையின்படி வாழ்கிறோம், நமது கவனத்தை அவர் மீது வைக்கிறோம், நமது சகோதரிகளுடன் இணைந்து பரிசுத்தமான விதத்தில் ஊழியம் செய்கிறோம், திரையின் இரு பக்கத்திலுமுள்ள சிதறுண்ட இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்கிறோம், நமது குடும்பங்களை பெலப்படுத்தி முத்திரிக்கிறோம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக உலகத்தை ஆயத்தப்படுத்துகிறோம். அது நடக்கும். அவ்வாறே நான் சாட்சியளிக்கிறேன்.

நாம் அனைவரும், ஒவ்வொருவரும், ஒவ்வொரு சிந்தனையிலும், இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்போம் என என் இருதயத்திலிருந்து ஜெபத்துடன் முடிக்கிறேன். சந்தேகப்படாதீர்கள். பயப்படாதீர்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. {James E. Talmage places Jesus “in the vicinity of Capernaum” when this healing occurred (see Jesus the Christ [1916], 313).

  2. லூக்கா 8:43–44 பார்க்கவும்; மற்றும் மத்தேயு 9:20-21; மாற்கு 5:25-29 ஐயும் பார்க்கவும்.

  3. லூக்கா 8:46.

  4. மாற்கு 5:30.

  5. மாற்கு 5:32.

  6. லூக்கா 8:47.

  7. மாற்கு 5:33.

  8. லூக்கா 8:48.

  9. சரீர பிரகார குணமாக்குதலைவிட அந்த ஸ்திரீக்கு மிகப் பெரிய மதிப்பு, அவளது இருதயத்தின் வாஞ்சைக்கு இரட்சகர் கொடுத்த உறுதி மற்றும் அவர் அவளது விசுவாசத்தை ஏற்றுக் கொண்டது ( இயேசு கிறிஸ்து, 318 பார்க்கவும்)என ஜேம்ஸ் ஈ. டால்மேஜ் எழுதினார். இயேசு அவளை சரீர பிரகாரமாயும், ஆவிக்குரிய பிரகாரமாயும் குணமாக்கி, இரட்சிப்பின் பாதையை அவளுக்குத் திறந்தார்.

  10. அந்த குணமாக்குதல் நடந்தபோது, இயேசுவுடன் ஜெப ஆலயத் தலைவனான யவீரு இருந்தான் என்பது அறியப்படலாம். யவீருவின் மகளை மரித்தோரிலிருந்து அவர் உயிரோடெழுப்பிய யவீருவின் வீட்டுக்கு செல்லும் வழியில் இயேசு இருந்தார். அவளது வியாதியினிமித்தம் இயேசு குணமாக்கிய அந்தப் பெண், ஜெப ஆலயத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கலாம். இயேசு அவளைக் குணமாக்கியபோது, யவீரு உள்ளிட்ட அங்கிருந்த அனைவரிடமும், அவள் ஒரு அன்பு மகள், விசுவாசமிக்க பெண், சரீரத்திலும் ஆவியிலும் குணமடைந்த பெண் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

  11. D. Todd Christofferson, “The Elders Quorum,” (Ensign or Liahona, May 2018, 55–58) ஒரு தொகுதியில் ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் உருவாக்க அனுசரிப்பைப்பற்றி கலந்துரையாடலுக்காக பார்க்கவும். ஊழியம் செய்யும் வலைத்தளத்தில், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதியில், இவ்விதமாக அந்த மாற்றத்தின் நோக்கம் விவரிக்கப்பட்டிருக்கிறது. “ஒரு தொகுதியில் ஒரு மெல்கிசேதேக்கு குழுமம் வைத்திருப்பது இரட்சிப்பின் பணியின் தன்மைகள் எல்லாவற்றையும் எட்ட, முன்பு பிரதான ஆசாரியத்துவ குழும தலைவரால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆலய மற்றும் குடும்ப வரலாற்று பணி உள்ளிட்டவற்றில் ஆசாரியத்துவம் தரித்தவர்களை ஒன்றுபடுத்துவது“ (“”This Is Ministering: Frequently Asked Questions,” 8,ministering. ChurchofJesusChrist.org).

    பின்வந்த அனுசரிப்புகள் தொகுதி ஊழியத் தலைவரையும், குடும்ப வரலாற்றுப் பணி தலைவரையும் மூப்பர்கள் குழும தலைமையின் வழிநடத்துதலின் கீழ் வைத்துள்ளது. குடும்பங்களுக்கு ஊழியம் செய்தல் ஏற்கனவே அவர்கள் வழிகாட்டுதலின் தலைமையின் கீழ் இருக்கும்போது இந்த அனுசரிப்புகள், ஒத்தாசைச் சங்கத்தால் உதவப்பட்டு, மூப்பர்கள் குழுமத்தின் தலைமை இரட்சிப்பின் பணியில் வைத்துள்ளது. உண்மையாகவே, தொகுதியில் இரட்சிப்பின் பணியின் திறவுகோல்களை ஆயர் தரித்திருக்கிறார். தன் சொந்த குடும்பத்தோடு அதிக நேரம் செலவு செய்யவும், இளைஞர்களை பெலப்படுத்தவும், இஸ்ரவேலில் நியாயாதிபதியாக சேவை செய்யவும் அப்பணிக்கு பொறுப்பையும் அதிகாரத்தையும், அவர் மூப்பர்கள் குழுமத்துக்கு வழங்குகிறார்.

  12. Russell M. Nelson, “Let Us All Press On,” Liahona, May 2018, 118–19; Russell M. Nelson, “Becoming Exemplary Latter-day Saints,” Liahona, Nov. 2018, 113–14; Quentin L. Cook, “Deep and Lasting Conversion to Heavenly Father and the Lord Jesus Christ,” Liahona, Nov. 2018, 8–12. பார்க்கவும்.

  13. பிதா இயேசு கிறிஸ்துவை உலகத்துக்கு அனுப்பினார்(யோவான் 17:18 பார்க்கவும்).

  14. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:36-37.

  15. ஆபிரகாம் 3:27.

  16. ஆபிரகாம் 3:27.

  17. மோசே 4:2.

  18. அவரது பிதாவின் பணியைச் செய்து, தன் பிதாவின் கோட்பாட்டைப் போதித்ததைப்பற்றி இயேசு சொன்ன எண்ணற்ற குறிப்புகள் வேதங்களில் பதிவுகள் உள்ளன. For example, John 5:19 (Jesus does what He sees the Father do); John 5:36 (the Father gave His Son work to do); John 8:26 (Jesus taught what He had received from His Father); John 14:28 (Jesus declared, “My Father is greater than I”); 3 Nephi 11:32 (His doctrine is the doctrine His Father gave Him) பார்க்கவும்.

  19. யோவான் 14:31.

  20. யோவான் 8:29

  21. யோவான் 6:38; மற்றும் யோவான் 5:30 ஐயும் பார்க்கவும்.

  22. லூக்கா 22:42.

  23. இந்த பாகத்தில் பார் என்ற வார்த்தை, கர்த்தரின் அழைப்புக்குத் தொடர்புடைய அர்த்தம் உடையது. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:36-37) அல்லது திரும்ப); ஒருவரின் கவனத்தைத் திருப்ப; சார்ந்திருக்க; தேட; நம்பிக்கையோடு காத்திருக்க; ஒரு முடிவாக மனதில் வைத்திருக்க; எதிர்பார்க்க (merriam-webster.com, “look” பார்க்கவும்).

  24. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:41-42 பார்க்கவும். வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கிறிஸ்து போன்ற தன்மைகள், இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தாலும், கிருபையாலும் வருகிற ஆவியின் வரங்கள். இஸ்ரவேலின் மூப்பர்களை அவரது மூப்பர்களாக அவை ஆக்குகின்றன.

  25. Russell M. Nelson, “Drawing the Power of Jesus Christ into Our Lives,” Liahona, May 2017, 41.

  26. merriam-webster.com, “rivet.” பார்க்கவும்.

  27. உடன்படிக்கையின் வாழ்க்கை என்ற கருத்து பற்றிய கலந்துரையாடலுக்கு Donald L. Hallstrom, ““Living a Covenant Life,Ensign, June 2013, 46–49 பார்க்கவும். இச்செய்தி பி.ஒய்.யு ஐடகோ வில் மே 2011ல் கொடுக்கப்பட்ட நீண்ட செய்தியின் தழுவுதல். For the longer version, see Donald L. Hallstrom, “A Covenant Life” (Brigham Young University–Idaho devotional, May 10, 2011), byui.edu.

  28. எரேமியா 31:31–33 பார்க்கவும், அதில் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டாரோடு அவர்களது இருதயத்தில் எழுதப்பட்ட புதிய உடன்படிக்கையை செய்வேன் என அறிவித்தார். நமது இருதயங்களில் எழுதப்பட்ட உடன்படிக்கையின் பிம்பம் அல்லது நமது இருதயங்களில் உயிரோடு இருக்கும் உடன்படிக்கைகள் பவுலின் எழுத்துக்களிலும் காணப்படுகின்றன. (2 கொரிந்தியர் 3:3; எபிரேயர் 8:10 பார்க்கவும்). மனமாற்றம் மற்றும் இருதயம் பற்றிய கலந்துரையாடலுக்கு David A. Bednar, “Converted unto the Lord,” Liahona, Nov. 2012, 106–9. பார்க்கவும்.

  29. அப்பத்தின் திருவிருந்து ஜெபம், நமது பரலோக பிதாவுடன் நமது உடன்படிக்கையின் தனமையை அழகாக தெரிவிக்கிறது. பிதாவின் இரட்சிப்பின் திட்டத்தில், நாம் நமது பரலோக பிதாவுடன் உடன்படிக்கை செய்கிறோம். ஆனால் உடன்படிக்கையின் நோக்கங்கள் நிறைவேறுகின்றன மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமே வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களுக்கு நாம் தகுதி பெறுகிறோம். அவரே பரிந்து பேசுபவர். நாம் நம்மோடு எப்போதும் அவரது ஆவியை (பரிசுத்த ஆவியை) வைத்திருக்கும் படியாக, அவரை எப்போதும் நினைத்திருக்கவும், அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ள சித்தமாயிருக்கிறோம் என திருவிருந்து நியமத்தில் நாம் சாட்சியளிக்கிறோம் (புதிதாக அவரோடு உடன்படிக்கை செய்ததன் விளைவாக).

    பிதாவின் வாக்குத்தத்தங்களிலுள்ள வரங்கள் இயேசு கிறிஸ்துவின் மீட்கும் மற்றும் பெலப்படுத்தும் வல்லமையிலிருந்து வருகிறது. உதாரணமாக, இயேசு கிறிஸ்துவே எல்லா சந்தோஷத்தின் ஆதாரம் என தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்திருக்கிறார் (“Joy and Spiritual Survival,” Ensign or Liahona, Nov. 2016, 82 பார்க்கவும்). இவ்வாறாக, இயேசு கிறிஸ்துவில் நமது கவனத்தை நிலையாகவைப்பது, நமது சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், நமது வாழ்க்கையில் சந்தோஷம் கொண்டு வருகிறது.

  30. “கீழ்ப்படிதல் தூண்டுதலாவது நிற்கும்போது, நமது தேடுதலாகும்போது, அக்கணத்திலேயே தேவன் நம்மை வல்லமையால் தரிப்பிப்பார்,“ என அவர் சொன்னபோது, தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன் மனோபாவத்திலும் அறிமுகத்திலும் இந்த மாற்றத்தின் தாக்கத்தை புரிந்தார் (in Donald L. Staheli, “Obedience—Life’s Great Challenge,” Ensign, May 1998, 82).

  31. யோவான் 16:32.

  32. பிதா மற்றும் குமாரனின் அக்கறை, ஆர்வம், அன்பு, மற்றும் நமது வாழ்க்கையில் ஈடுபாடு பற்றிய கலந்துரையாடலுக்கு, Jeffrey R. Holland, “The Grandeur of God,” Liahona, Nov. 2003, 70–73; Henry B. Eyring, “Walk with Me,” Liahona, May 2017, 82–85 பார்க்கவும். மத்தேயு 18:20; 28:20; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:32; 29:5; 38:7; 61:36; 84:88.

  33. ரோமர் 8:35–39; 1 கொரிந்தியர் 13:1–8; மரோனி 7:46–47 பார்க்கவும்.

  34. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:27. அவனுக்குக் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட நியமனத்திற்கு சம்பந்தப்பட்டதும் சூழப்பட்டதுமாக நியமிக்கப்பட்டு, இந்த வாக்களிப்புடன் அனுப்பப்பட்ட ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

    ஆகிலும் அவனே குறைந்தவனாகவும் அனைவருக்கும் வேலைக்காரனாகவும் இருக்க, இதுவே மிகப்பெரியதாக ஏற்படுத்தப்பட்டது

    ஆகவே அவரே அனைத்தின் உரிமையாளர், ஏனெனில் அனைத்தும் பரலோகத்திலுள்ளதும் பூமியிலுள்ளதும், ஜீவனும் ஒளியும், ஆவியும் வல்லமையும், அவருக்குக் கட்டுப்பட்டது. அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் பிதாவின் சித்தப்படி அனுப்பப்பட்டது.

    “ஆனால், அவன் சுத்திகரிக்கப்பட்டு, சகல பாவத்திலிருந்து கழுவப்படாவிட்டால், ஒருவனும் எல்லாவற்றின் உரிமையாளன் அல்ல.

    “நீ சகல பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு, கழுவப்பட்டால், நீ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதைக் கேட்டாலும் அது செய்யப்படும். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:26–29).

  35. 1 சாமுவேல்l 16:7; 1 கொரிந்தியர் 2:14 பார்க்கவும். உதாரணமாக இயேசுவைப்போல் பார்க்கும் இந்த ஆசீர்வாதத்துக்கு, குற்றம் செய்த இளைஞனின் ஆயராக தலைவர் ஹென்றி பி. ஐரிங்கின் அனுபவத்தைப் பார்க்கவும். அன்றைய ஆயரான ஐரிங்குக்கு கர்த்தர் சொன்னார், “நான் அவனைப் பார்ப்பது போல நீ அவனைப் பார்க்க வைக்கப் போகிறேன்“ (“Walk with Me,” 84). 84).

  36. பவுண்டிபுல் ஆலயத்தில் ஜனங்களுக்கு இரட்சகர் கொடுத்த வாக்குத்தத்தமும் பொறுப்பும் இதுவே. அவரிடத்தில் வர பிறருக்கு அவர்களது அழைப்பிலும், அவர்களது வாழ்க்கையில் அவர்களை ஒளியாக வைக்க, அவர்களில் அவரது ஒளியும் உதாரணமும் இருக்கும்படியாக வாழ அவர் அவர்களுக்கு கட்டளையிட்டார். மற்றவர்கள், கர்த்தருடைய வேலைக்காரர்களில் அவரைக் காணவும் அவரை உணரும்படியாகவும் அவரைப் பின்பற்றியவர்கள் அப்படியாக வாழ்ந்தார்கள், அப்படியாக அழைத்தார்கள். 3 நேபி 18: 24-25 பார்க்கவும்).

  37. Russell M. Nelson, “The Price of Priesthood Power,” Liahona, May 2016, 68. பார்க்கவும்.

  38. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:88 பார்க்கவும்.