இரண்டாவது மகத்தான கற்பனை
நமது சகோதர சகோதரிகளுக்கு நாம் உதவும்போது நமது மிகப்பெரிய சந்தோஷம் வருகிறது.
எனக்கன்பான சகோதர சகோதரிகளே, திரையின் இரு பக்கங்களிலும இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்கவும், உங்கள் குடும்பங்களைப் பெலப்படுத்தவும், தேவையிலுள்ளவர்களின் வாழ்க்கையை ஆசீர்வதிக்கவும், நீங்கள் செய்கிற எல்லாவற்றிற்கும் உங்களுக்கு நன்றி. இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுபவர்களாக வாழுவதற்காக உங்களுக்கு நன்றி.1 தேவனை நேசிக்கவும், உங்கள் அண்டைவீட்டாரை நேசிக்கவும் அவருடைய இரண்டு மகத்தான கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய உங்களுக்குத் தெரியும் அதை நீங்கள் நேசிக்கிறீர்கள்.2
கடந்த ஆறு மாதங்களில், சகோதரி நெல்சனும் நானும் மத்திய மற்றும் தென் அமெரிக்கா, பசிபிக் தீவுகள், ஐக்கிய நாடுகளின் வெவ்வேறு பட்டணங்களுக்கு பயணப்பட்டபோது, ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்களை நாங்கள் சந்தித்தோம். நாங்கள் பயணப்படுகையில் உங்களுடைய விசுவாசத்தை வளர்ப்பது எங்கள் நம்பிக்கையாயிருந்தது. இருந்தும், நாங்கள் சந்திக்கிற அங்கத்தினர்களாலும் நண்பர்களாலும் எப்போதுமே எங்களுடைய விசுவாசம் பெலப்படுத்தப்பட்டே நாங்கள் திரும்புகிறோம். எங்களுடைய சமீபத்திய அனுபவங்களிலிருந்து மூன்று அர்த்தமுள்ள நேரங்களை நான் பகிர்ந்துகொள்ளட்டுமா?
மே மாதத்தில், சகோதரி நெல்சனும் நானும் மூப்பர் காரிட் டபுள்யு. மற்றும் சகோதரி சூசன் காங்குடன் தென் பசிபிக்குக்கு பயணப்பட்டோம். ஆக்லான்ட், நியுசிலாந்திலிருந்தபோது,, கிறைஸ்ட்சர்ச், நியுசிலாந்திலுள்ள இரண்டு மசூதிகளிலுள்ள இமாம்களை சந்திக்க நாங்கள் கௌரவிக்கப்பட்டோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு பயங்கரமான வன்முறையின் செயலால் குற்றமற்ற தொழுகைசெய்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
மற்றொரு மதத்தைச் சார்ந்த இந்த சகோதரர்களுக்கு எங்கள் அனுதாபத்தை தெரிவித்து, மதசுதந்தரத்திற்கு எங்களுடைய பரஸ்பர ஒப்புக்கொடுத்தலையும் மறுஉறுதி செய்தோம்.
எங்கள் தன்னார்வ உழைப்பையும் கொடுத்து, மசூதிகளை திரும்பக்கட்ட மிதமான நிதிஉதவியையும் நாங்கள் வழங்கினோம். இந்த முஸ்லீம் தலைவர்களுடனான எங்கள் சந்திப்பு சகோதரத்துவத்தின் மென்மையான வெளிப்பாடாயிருந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் மூப்பர் க்வெண்டின் எல். மற்றும் சகோதரி மேரி குக்கும், நானும் பியுனஸ், அயர்ஸ், அர்ஜென்டினாவில் தனிநபர்களைச் சந்தித்தோம். அவர்களில் அநேகர் நம் மதத்தைச் சாராதவர்கள், நமது பிற்காலப் பரிசுத்தவானின் அறக்கட்டளைகள் மூலமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட சக்கரநாற்காலிகளால் அவர்களுடைய வாழ்க்கை மாறியது. தங்களுடைய புதிதாகக் காணப்பட்ட இயக்கத்திற்காக, மகிழ்ச்சி நிறைந்த நன்றியுணர்வை அவர்கள் வெளிப்படுத்தியபோது நாங்கள் உணர்த்தப்பட்டோம்.
இங்கே சால்ட் லேக் சிட்டியில் ஒரு சிலவாரங்களுக்கு முன்பு ஒரு மூன்றாவது அருமையான தருணம் ஏற்பட்டது. மேரி என நான் அழைக்கிற 14 வயதான ஒரு இளம்பெண்ணிடமிருந்து என்னுடைய பிறந்த நாளில் நான் பெற்ற ஒரு தனித்துவமான கடிதத்திலிருந்து அது வந்தது.
அவளுக்கும் எனக்கும் பொதுவாக இருந்த காரியங்களைப்பற்றி அவள் எழுதியிருந்தாள்: “உங்களுக்கு 10 பிள்ளைகள். எங்களுக்கு 10 பிள்ளைகள். நீங்கள் மான்டரின் பேசுகிறீர்கள். என்னையும் சேர்த்து எங்கள் குடும்பத்தில் ஏழு பிள்ளைகள் சீனாவிலிருந்து தத்தெடுக்கப்பட்டோம், ஆகவே மான்டரின் எங்கள் தாய்மொழி. நீங்கள் ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர். என்னுடைய சகோதரி இரண்டு திறந்த இருதய அறுவை சிகிச்சை பெற்றாள். உங்களுக்கு இரண்டு மணிநேர சபை பிடிக்கும். எங்களுக்கு இரண்டுமணிநேர சபை பிடிக்கும். உங்களிடம் சரியான சுருதியுள்ளது. என்னுடைய சகோதனுக்கு சரியான சுருதியிருக்கிறது. என்னைப்போல அவன் ஒரு குருடன்.”
அவளுடைய அதிக உற்சாகத்தை வெளிப்படுத்தியதற்காக மட்டுமல்ல, அவளுடைய தாய் தகப்பனின் அர்ப்பணிப்புக்காக, மேரியின் வார்த்தைகள் என்னை ஆழமாகத் தொட்டது .
இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிற பிறரைப்போல, பிற்காலப் பரிசுத்தவான்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கும், உயர்த்துவதற்கும், நேசிப்பதற்கும் வழிகளைத் தேடுகிறார்கள். கர்த்தருடைய ஜனங்களென அழைக்கப்பட விருப்பமுள்ள அவர்கள் “ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமக்கவும் , … துயரப்படுவோரோடு துயரப்படவும் … ஆறுதலற்று நிற்போருக்கு ஆறுதலளிக்கவும் மனமுடையவர்களாய் இருக்கிறார்கள்”.3
முதல் மற்றும் இரண்டாவது மகத்தான கற்பனைகளின்படி வாழ உண்மையில் அவர்கள் நாடுகிறார்கள். நமது முழு இருதயத்தோடு தேவனை நாம் நேசிக்கும்போது ஒரு அழகான நல்லொழுக்க சுழற்சியில் மற்றவர்களின் நல்வாழ்விற்காக நமது இருதயங்களை அவர் திருப்புகிறார்.
ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு நாளும் பூமிமுழுவதும் பிற்காலப் பரிசுத்தவான்கள் வழங்குகிற சேவையின் அளவைக் கணக்கிடுதல் சாத்தியமற்றதாயிருக்கிறது, ஆனால், ஒரு உதவிக்கரம் தேவையாயிருக்கிற ஆண்களையும் பெண்களையும், சிறுவர்களையும் சிறுமிகளையும் ஆசீர்வதிக்க ஒரு ஸ்தாபனமாகச் செய்கிற நன்மையைக் கணக்கிடுதல் சாத்தியமாய் இருக்கிறது.
சபையின் மனிதாபிமான அணுகுமுறை 1984ல் தொடக்கப்பட்டது. பின்னர் கிழக்கு ஆப்ரிக்காவில் பேரழிவான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி சேகரிக்க சபைமுழுவதுக்குமான உபவாசம் நடந்தது. அந்த ஒரே உபவாச நாளில் சபை அங்கத்தினர்கள் 6.4 மில்லியன் டாலர்களை நிதியாக வழங்கினர்.
பின்னர், அந்த ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தப்படலாமென்பதை மதிப்பிட மூப்பர் எம். ரசல் பாலர்ட்டும் சகோதரர் க்லென் எல். பேசும் எத்தியோப்பியாவுக்கு புறப்பட்டனர். பிற்காலப் பரிசுத்தவான்களின் அறக்கட்டளை என பின்னர் அழைக்கப்பட்ட இந்த முயற்சி ஆரம்பமாயிருக்க நிருபிக்கப்பட்டது.
அந்த நேரத்திலிருந்து பிற்காலப் பரிசுத்தவான்களின் அறக்கட்டளை இரண்டு பில்லியன் டாலர்களுக்கும் மேலாக உலகமுழுவதிலுமுள்ள தேவையிலிருப்போருக்கு வழங்கியிருக்கிறது. தங்களுடைய சபைத் தொடர்பு, குடியுரிமை, இனம், பாலின ஒருங்கிணைப்பு, பாலினம், அல்லது அரசியல் கட்டாயம் எதையும் பொருட்படுத்தாது பெறுபவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது.
இது மட்டும் இல்லை. கர்த்தருடைய சபையிலுள்ள துயரத்திலிருக்கிற அங்கத்தினர்களுக்குதவ உபவாசத்தின் பழங்கால சட்டத்தை பின்பற்றுவதை நாம் நேசிக்கிறோம், அதன்படி வாழுகிறோம். 4 பசியிலிருக்கும் மற்றவர்களுக்குதவ நாம் பசியுடனிருக்கிறோம். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாள் நாம் உணவருந்தாமலிருந்து அந்த உணவின் விலையை (அதிகமாகவும்) தேவையிலிருப்போருக்குதவ, நிதியளிக்கிறோம்.
1986ல் மேற்கு ஆப்ரிக்காவுக்கு என்னுடைய முதல் பயணத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். எங்கள் கூட்டங்களுக்கு பரிசுத்தவான்கள், அதிக எண்ணிக்கையில் வந்தார்கள். பொருள் உடமைகளில் அவர்களிடம் குறைவாகவே இருந்தாலும் களங்கமற்ற வெள்ளை உடையணிந்தே அநேகர் வந்திருந்தனர்.
மிகக் குறைவாக வைத்திருப்பவர்களிடம் அவர் எவ்வாறு கவனிருக்கிறார் என பிணையத் தலைவரிடம் நான் கேட்டேன். அவர்களுடைய ஆயர்களுக்கு அவர்களுடைய ஜனங்களைப்பற்றி நன்றாகத் தெரியும் என அவர் பதிலளித்தார். ஒரு நாளில் இரண்டு நேர உணவு அங்கத்தினர்கள் கொடுக்க முடியுமானால் எந்த உதவியும் தேவையில்லை. ஆனால், அவர்களுக்கு ஒரு உணவு மட்டும் அல்லது அதற்கும் குறைவாயிருந்தால், குடும்பத்தின் உதவியிருந்தாலும் உபவாசக் காணிக்கையிலிருந்து நிதியின் மூலமாக ஆயர்கள் உணவளிக்கிறார்கள், பின்னர் அவர் இந்த விசேஷமான உண்மையைச் சொன்னார், அவர்களுடைய உபவாசக் காணிக்கைகள் வழக்கமாக அவர்களுடைய செலவுகளைவிட அதிகமாயிருக்கிறது. பின்னர், தங்களுடைய தேவைகளையும் தாண்டுகிற வேறெங்கும் இருக்கிற ஜனங்களுக்கு கூடுதலான உபவாசக் காணிக்கைகள் அனுப்பப்படுகிறது. சட்டத்தின் வல்லமையைப்பற்றியும் உபவாசத்தின் ஆவிபற்றியும் ஒரு பெரிய பாடத்தை, அந்த திடகாத்திரமான ஆப்பிரிக்காவின் பரிசுத்தவான்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தனர்.
சபையின் அங்கத்தினர்களாக எந்த வழியிலும் கஷ்டப்படுகிறவர்களிடம் ஒரு உறவை உணருகிறோம்.5 தேவனின் குமாரர்களாக, குமாரத்திகளாக நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக இருக்கிறோம். ஒரு பழைய ஏற்பாட்டின் எச்சரிக்கையை நாம் கேட்கிறோம், “சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையை தாரளமாகத் திறக்கவேண்டும்”6
மத்தேயு 25ல் பதிவு செய்யப்பட்டுள்ளதைப்போல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழ நாம் முயற்சிக்கவேண்டும்.
“பசியாயிருந்தேன், எனக்குப் போஜனம் கொடுத்தீர்கள், தாகமாயிருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள், அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள். . . .
“வஸ்திரமில்லாதிருந்தேன் எனக்கு வஸ்திரம் கொடுத்தீர்கள், வியாதியாயிருந்தேன் என்னை விசாரிக்க வந்தீர்கள். …
“… மிகவும் சிறியவராகிய என் சகோதரனான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்.”7
இரட்சகரின் இந்த போதனைகளை சபை எவ்வாறு பின்பற்றுகிறதென்பதற்கு ஒரு சில எடுத்துக்காட்டுகளை நான் எடுத்துரைக்கிறேன்.
பசியைப் போக்குவதற்கு உதவ, உலகமுழுவதிலும் 124 ஆயர்களின் பண்டகசாலைகளை சபை இயக்குகிறது. அவைகள் மூலமாக, ஒவ்வொரு ஆண்டும் தேவையிலிருக்கிற தனிப்பட்டவர்களுக்கு ஏறக்குறைய 400,000 உணவு அனுமதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உணவு பண்டகசாலைகள் இல்லாத இடங்களில், தங்களுடைய தேவையிலிருக்கும் அங்கத்தினர்களுக்கு உணவும் பிறபொருட்களை வழங்கவும் ஆயர்களும், கிளைத்தலைவர்களும் சபையின் உபவாச-காணிக்கை நிதிகளிலிருந்து பணம் எடுக்கிறார்கள்.
எனினும், பசி என்னும் சவால் சபையின் எல்லைகளுக்கு அப்பாலும் செல்கிறது. அது உலகமெங்கும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உலகத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள மக்களின் எண்ணிக்கை இப்போது 820 மில்லியனாக அல்லது ஏறக்குறைய பூமியின் குடிகளில் ஒன்பதில் ஒருவராக அதிகரித்திருக்கிறது என சமீபத்திய ஐக்கிய நாடுகளின் அறிக்கை குறிப்பிடுகிறது.8
என்ன ஒரு தெளிந்த புள்ளிவிவரம்! உங்களுடைய பங்களிப்புகளுக்காக நாங்கள் மிக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். உங்களுடைய இதயப்பூர்வமான தாராள மனப்பான்மைக்கு நன்றி, உலகமுழுவதிலும் மிக தேவையான உணவும், உடைகளும், தற்காலிக உறைவிடமும், சக்கர நாற்காலிகளும், மருந்துகளும், சுத்தமான தண்ணீரும் தேவையிலிருக்கிற மில்லியன் கணக்கானோர் பெறுவார்கள்.
உலகமுழுவதிலும் அதிக நோய்க்கு அசுத்தமான தண்ணீர் காரணமாயிருக்கிறது. இன்றுவரை, 76 நாடுகளில் நூற்றுக்கணக்கான சமுதாயங்களில் சுத்தமான தண்ணீர் வழங்குவதற்கு சபையின் மனிதாபிமான முயற்சி உதவியிருக்கிறது.
காங்கோவின் ஜனநாயக குடியரசில் லுபுடாவில் ஒரு திட்டம் ஒரு பெரிய எடுத்துக்காட்டு. 100,000 ஐ தாண்டிய ஜனத்தொகையுடன் பட்டணத்தில் ஓடுகிற தண்ணீரில்லை. பாதுகாப்பான தண்ணீர் வளங்களுக்காக குடிமக்கள் நீண்ட தூரம் நடக்கவேண்டியதிருந்தது. 18(29கி.மீ) மைல்கள் தொலைவில் ஒரு மலைநீருற்று கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் நகரவாசிகளால் அந்த தண்ணீரை வழக்கமான அடிப்படையில் அணுகமுடியவில்லை.
நமது மனிதாபிமான ஊழியக்காரர்கள் இந்த சவாலைப்பற்றி அறிந்து, நகரத்திற்கு குழாய்மூலம் தண்ணீரைக்கொண்டுவர பொருட்களையும் பயிற்சிகளையும் வழங்கியதில் லூபுடா தலைவர்களுடன் அவர்கள் பணியாற்றினார்கள். பாறை மற்றும் காடு வழியே ஒரு மீட்டர் ஆழத்திற்கு சுரங்கப்பாதையை தோண்டுவதில் லுபுடா மக்கள்மூன்று ஆண்டுகளைச் செலவழித்தனர். ஒன்றுசேர்ந்து பணியாற்றியதில், சுத்தமான தண்ணீர் கிராம மக்கள் அனைவருக்கும் கிடைத்தபோது இறுதியில் அந்த மகிழ்ச்சியான நாள் வந்தடைந்தது.
உள்நாட்டு சண்டையோ, இயற்கையின் அழிவுகளோ, அல்லது மத துன்புறுத்தல்களோ இருந்தால் அகதிகளுக்கும் சபை உதவுகிறது.. 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.9
2018 ஆம் ஆண்டிலேயே, 56 நாடுகளிலுள்ள அகதிகளுக்கு அவசரகால பொருட்களை சபை வழங்கியது. கூடுதலாக, புதிய சமூகங்களுக்குள் அகதிகள் ஒருங்கிணைக்கப்படுவதற்கு உதவ அநேக சபை அங்கத்தினர்கள் தங்கள் நேரத்தை தன்னார்வமாய் கொடுத்தனர். புதிய வீடுகளை ஸ்தாபிக்க முயற்சித்துக்கொண்டிருந்தவர்களுக்கு உதவ அணுகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றிகூருகிறேன்.
தாராளமான நன்கொடைகள் மூலமாக, ஐக்கிய நாடுகளில் டெசரட் இன்டஸ்டிரிஸ் மையங்களுக்கு மில்லியன் பவுன்ட்ஸ் ஆடைகள் சேகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பிரித்தெடுக்கப்படுகிறது. தேவையிலிருக்கிற அங்கத்தினர்களுக்குதவ இந்த ஏராளமான சரக்குகளை உள்ளூர் ஆயர்கள் பயன்படுத்தும்போது, உலகமுழுவதிலும் பொருட்களை வினியோகிக்கிற பிற அறக்கட்டளை ஸ்தாபனங்களுக்கு பெரிய பகுதி நன்கொடையளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, 35 நாடுகளில் 300,000க்கும் அதிகமான மக்களுக்கு பார்வை பராமரிப்பையும், 39 நாடுகளில் ஆயிரக்கணக்கான தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பிறந்த குழந்தை பராமரிப்பையும், டஜன் கணக்கான நாடுகளில் வாழ்கிற 50,000 க்கும் அதிகமான மக்களுக்கு சக்கர நாற்காலிகளையும் சபை வழங்கியது.
சோகம் தாக்குகிறபோது முதல் பதிலளிப்பவர்களோடு இருந்து சபை நன்கு அறியப்பட்டிருக்கிறது. ஒரு சூறாவளி தாக்குவதற்கு முன்பே, பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள சபைத் தலைவர்களும், சிப்பந்திகளும் நிவாரணப் பொருட்களை எவ்வாறு வழங்குவார்களென்றும் பாதிக்கப்படப்போகிறவர்களுக்கு தன்னார்வ உதவியைக் கொடுக்க திட்டங்களையும் வரைபடமாக்கினார்கள்.
கடந்த ஆண்டில் மட்டும் சூறாவளிகள், நெருப்பு, வெள்ளங்கள், பூமிஅதிர்ச்சிகள் மற்றும் பிற பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குதவ, உலகமுழுவதிலும் 100க்கு மேல் பேரழிவு நிவாரண திட்டங்களை சபை மேற்கொண்டது சாத்தியமாகும்போதெல்லாம் மஞ்சள் நிற உதவிக்கரங்கள் உள்ளாடைகளை அணிந்திருக்கிற நமது சபை அங்கத்தினர்கள் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிக அளவில் அணிதிரளுகிறார்கள். இந்த வகையான சேவை, உங்களில் அநேகரால் கொடுக்கப்படிருக்கிறது ஊழியம் செய்தலின் முக்கிய சாராம்சம்.
எனக்கன்பான சகோதர, சகோதரிகளே ,நான் விவரித்த நடவடிக்கைகள் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் வளர்ந்துவரும் நல்வாழ்வு திட்டம் மற்றும் மனிதாபிமான அணுகுதலில் ஒரு சிறிய பகுதியே.10 நீங்களே இவை அனைத்தையும் சாத்தியமாக்குகிறீர்கள். உங்களுடைய முன்மாதிரியான வாழ்க்கையாலும், உங்களுடைய தாராளமான இருதயங்களாலும், உங்களுடைய உதவும் கரங்களாலும் அநேக சமுதாயங்களும், அரசாங்கத் தலைவர்களும் உங்கள் முயற்சிகளைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்களென்பதில் வியப்பில்லை11
சபையின் தலைவரானதிலிருந்து, அவர்களுடைய மக்களுக்கு நமது மனிதாபிமான உதவிக்காக அநேக தலைவர்கள், பிரதம மந்திரிகள், தூதர்கள் உருக்கமாக எனக்கு நன்றி செலுத்துகிறார்கள் என்பதில் நான் ஆச்சரியப்படுகிறேன். உண்மையுள்ள, பங்களிக்கிற குடிமக்களாக நமது விசுவாசமிக்க அங்கத்தினர்கள் தங்களுடைய நாட்டுக்குக் கொண்டுவருகிற அவர்களின் பெலத்திற்காக அவர்கள் நன்றியுணர்வை தெரிவிக்கின்றனர்.
உலகத் தலைவர்கள் பிரதான தலைமையை சந்தித்து, தங்களுடைய தேசத்திலும் ஸ்தாபிக்கப்படவுள்ள சபைமீதுள்ள அவர்களுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தியதால் நான் ஆச்சரியப்பட்டேன். ஏன்? ஏனெனில், பிற்காலப் பரிசுத்தவான்கள் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் மற்றவர்களுக்கு வாழ்க்கையை சிறப்பாக்கி, பெலமான குடும்பங்களையும் சமுதாயங்களையும் கட்டுவதற்கு உதவுவார்கள் என அவர்கள் அறிவார்கள்.
வீடு என நாம் அழைக்கிறதைப் பொருட்படுத்தாமல், சபையின் அங்கத்தினர்கள் தேவனின் தகப்பனத்துவம் பற்றி ஆர்வத்தில் உணர்ச்சிவசப்படுவார்கள். அப்படியாக, நமது சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நாம் உதவுகிறபோது நாம் வாழுகிற இந்த அற்புதமான உலகத்தைப் பொருட்படுத்தாது நமது மிகப்பெரிய மகிழ்ச்சி வருகிறது.
மற்றவர்களுக்கு உதவி கொடுப்பதில், நாமே நமக்கு அக்கறை காட்டுவதைவிட முடிந்தவரை அல்லது அதிகமாக மற்றவர்களுக்கு அக்கறை காட்டுவதில் ஒரு நேர்மையான முயற்சியைச் செய்வது நமது மகிழ்ச்சி. விசேஷமாக, அது நமக்கு வசதியாயில்லாதபோதும் நமது வசதி மண்டலத்தைவிட்டு நம்மை வெளியே கொண்டுபோகும்போதும் என்பதை நான் சேர்க்கலாம்.. Lஅந்த இரண்டாவது மகத்தான கற்பனைபடி வாழுதல் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாய் மாற திறவுகோலாயிருக்கிறது.
எனக்கன்பான சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவதிலிருந்து வருகிற கனிகளின் ஜீவிக்கிற முன்உதாரணமாக நீங்கள் இருக்கிறீர்கள். நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்! நான் உங்களை நேசிக்கிறேன்!
தேவன் ஜீவிக்கிறாரென நான் அறிவேன். இயேசுவே கிறிஸ்து அதன் தெய்வீக நோக்கங்களை பூர்த்தி செய்ய இந்த பிற்காலங்களில் அவருடைய சபை மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது. அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.