சுவிசேஷத்தைப் பகிர்வதில் மகிழ்ச்சி காணுதல்
நமது வாழ்க்கையையும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கையையும் ஆசீர்வதிக்க, அவரிடம் நாம் திரும்புவதற்காக காத்திருக்கிற பரலோக பிதா நமக்கு உண்டு.
எனது பிரபல ஆரம்ப வகுப்பு பாடல் இந்த வார்த்தைகளோடு தொடங்குகிறது.
நான் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைக்கு சொந்தம்.
நான் யார் என அறிவேன்.
நான் தேவ திட்டத்தை அறிவேன்.
நான் விசுவாசத்தோடு அவரை பின் தொடர்வேன்.
நான் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன்.1
நாம் நம்புகிற சத்தியங்கள் பற்றிய எவ்வளவு எளிய அழகான வாசகம்.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்களாக நாம் யாரென அறிகிறோம். “தேவன் நமது ஆவிகளின் பிதா என நாம் அறிவோம். நாம் அவரது பிள்ளைகள் … மற்றும் அவர் நம்மை நேசிக்கிறார். நாம் பூமிக்கு வருவதற்கு முன் அவருடன் பரலோகத்தில் வாழ்ந்தோம்.”
நாம் தேவனின் திட்டத்தை அறிவோம். அவர் இதை வழங்கிபோது நாம் அங்கிருந்தோம். நமது பரலோக பிதாவின் முழு நோக்கமும்—அவரது பணியும் மகிமையும்—அவரது அனைத்து ஆசீர்வாதங்களையும் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்க சாத்தியமாக்குவதே. அவரது நோக்கத்தை நிறைவேற்ற அவர் ஒரு பரிபூரண திட்டத்தை அளித்தார். நாம் பூமிக்கு வருவதற்கு முன்பே, நாம் இந்த மகிழ்ச்சியின் … மீட்பின் … மற்றும் இரட்சிப்பின் திட்டத்தை நாம் புரிந்து ஏற்றுக் கொண்டோம்.
“தேவனின் திட்டத்துக்கு இயேசு கிறிஸ்து மையமாக இருக்கிறார். அவரது பாவநிவர்த்தி மூலம், இயேசு கிறிஸ்து தன் பிதாவின் நோக்கத்தை நிறைவேற்றி, நாம் அழியாமையும் மேன்மையடைதலும் அனுபவிக்க, நம் ஒவ்வொருவருக்கும் அதை சாத்தியப்படுத்தினார். சாத்தான் அல்லது பிசாசு தேவனின் திட்டத்துக்கு விரோதி,” அவன் ஆரம்பத்திலிருந்தே அப்படி இருந்திருக்கிறான்.
“சுயாதீனம் அல்லது தெரிந்துகொள்ளும் திறன், அவரது பிள்ளைகளுக்கு தேவனின் மிகப்பெரிய வரமாகும். … இயேசு கிறிஸ்துவையா அல்லது சாத்தானையா பின்பற்றுவது என நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.”2
இந்த எளிய சத்தியங்களை நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
எளிதாக ஒரு உரையாடலுக்கு தயாராயிருந்தும், ஒரு சந்தர்ப்பத்தை அடையாளம் கண்டும், அப்படிப்பட்ட எளிய சத்தியங்களை என் அம்மா பகிர்ந்ததை உங்களுக்கு நான் சொல்கிறேன்.
அனேக ஆண்டுகளுக்கு முன்பு, என் சகோதரனை சந்திக்க என் அம்மா அர்ஜெண்டினாவுக்கு திரும்பி சென்றார். என் அம்மா ஒருபோதும் விமான பயணத்தை விரும்பவில்லை, ஆகவே என் மகன் ஒருவனிடம் தனக்கு ஆறுதலுக்காகவும், பாதுகாப்புக்காகவும் ஆசீர்வாதம் கொடுக்குமாறு கேட்டார். பெலப்படுத்தவும், சுவிசேஷத்தை கற்க விரும்புகிற அனேகரின் இருதயங்களை தொடவும், பரிசுத்த ஆவியின் விசேஷித்த வழிநடத்தலுக்காகவும் அவனது பாட்டியை ஆசீர்வதிக்குமாறு அவன் தூண்டப்பட்டான்.
சால்ட் லேக் விமான நிலையத்தில், தன் குடும்பத்தினருடன், பனிச்சறுக்கு பயணத்திலிருந்து திரும்பிவந்த ஒரு ஏழு வயது சிறுமியை என் அம்மாவும் சகோதரனும் சந்தித்தனர். என் அம்மாவுடனும் சகோதரனுடனும், அவள் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்ததை கவனித்து அவளது பெற்றோர் அவர்களுடன் சேர முடிவுசெய்தனர். அவர்கள் தங்களையும் தங்கள் மகளையும், எட்வர்டோ மற்றும் மரியா சுசனா மற்றும் கியடா போல் என அறிமுகம் செய்தனர். இந்த அருமையான குடும்பத்துடன் இதமான தொடர்பு வந்தது.
இரண்டு குடும்பங்களும் ஒன்றாக அதே விமானத்தில் அர்ஜெண்டினாவின் போனஸ் அயர்ஸுக்கு பயணம் செய்வதில் மகிழ்ந்தனர். அவர்களது உரையாடல் தொடர்ந்தபோது, அக்கணம் வரை அவர்கள் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை பற்றி கேள்விப்படவில்லை என்பதை என் அம்மா கவனித்தார்.
சூசனா கேட்ட முதல் கேள்விகளில் ஒன்று, “உச்சியில் தங்க சிலையுடன் இருக்கும் அந்த அழகிய அருங்காட்சியகம் பற்றி எனக்கு சொல்வீர்களா?”
அந்த அழகிய மாளிகை அருங்காட்சியகம் இல்லை, ஆனால், ஒரு நாளில் அவருடன் வாழ திரும்பச் செல்லும்படியாக, நாங்கள் உடன்படிக்கைகள் செய்கிற கர்த்தரின் ஆலயம் என என் அம்மா விளக்கினார். அவர்களது சால்ட் லேக் பயணத்துக்கு முன்பு, தன் ஆவியை எதாவது பெலப்படுத்த வேண்டும் என அவள் ஜெபித்திருந்ததாக சூசனா என் அம்மாவிடம் அறிக்கையிட்டாள்.
பயணத்தின்போது, என் அம்மா தன் எளிய ஆனால் பலமான சாட்சியை அவளுக்கு பகிர்ந்து, சூசன்னாவை தன் ஊரில், ஊழியக்காரர்களை கண்டுபிடிக்குமாறு சொன்னார். சூசன்னா என் அம்மாவிடம் கேட்டாள், “நான் அவர்களை எப்படி கண்டுபிடிப்பேன்?”
என் அம்மா பதிலளித்தார், “நீங்கள் அவர்களை தவிர்க்க முடியாது, அவர்கள் வெள்ளை சட்டையுடன் டை அணிந்த இரு இளைஞர்கள் அல்லது அழகாக உடை உடுத்தியுள்ள இரு இளம் பெண்கள். அவர்கள் எப்போதும் அவர்கள் பெயரும், ‘பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை’ என தெரிவிக்கும் பெயருள்ள டாகை அணிகிறார்கள்.’”
குடும்பங்கள் தொலைபேசி எண்களை பரிமாறி, போனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் விடைபெற்றுக் கொண்டார்கள். அப்போதிலிருந்து நல்ல சிநேகிதியான சூசன்னா, விமான நிலையத்தில் என் அம்மாவைப் பிரிவதால் மிகவும் சோகமடைந்ததாக பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறாள். அவள் சொன்னாள், “உன் அம்மா பிரகாசித்தார். என்னால் அதை விளக்க முடியவில்லை, ஆனால் நான் பிரிய விரும்பாத, ஒரு பிரகாசம் அவரிடம் இருந்தது.”
சூசன்னா தன் ஊருக்கு சென்ற உடனே, அவர்களது வீட்டுக்கு இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த தன் அம்மாவிடம் இந்த அனுபவத்தை பகிர, அவளும் அவளது மகளான கியாடாவும் சென்றனர். அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, என் அம்மா விவரித்தது போலவே, உடையணிந்த இரண்டு இளைஞர்கள் தெருவில் நடப்பதை சூசன்னா பார்க்க நேரிட்டது. அவள் தன் காரை நடுத்தெருவில் நிறுத்தி, இறங்கி அந்த இரு இளைஞர்களையும் கேட்டாள், “நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சபையைச் சேர்ந்தவர்களா?”
அவர்கள் சொன்னார்கள், “ஆம்.”
“ஊழியக்காரர்களா?” அவள் கேட்டாள்.
அவர்கள் இருவரும் பதிலளித்தார்கள், “ஆம், நாங்கள் தான்!”
பின்பு அவள் சொன்னாள், “என் காரில் ஏறுங்கள், நீங்கள் எனக்கு போதிக்க வீட்டுக்கு வருகிறீர்கள்.”
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மரியா சூசன்னா ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டாள். அவளது மகள் கியாடாவும் அவளுக்கு ஒன்பது வயதானபோது ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டாள். என்னவானாலும் பரவாயில்லை, நாங்கள் மிகவும் நேசிக்கிற எட்வர்டோவுக்கு இன்னும் போதித்துக் கொண்டிருக்கிறோம்.
அப்போதிலிருந்து, நான் சந்தித்த மிகப்பெரிய ஊழியக்காரர்களில் ஒருத்தியாக சூசன்னா ஆகியிருக்கிறாள். அவள் மோசியாவின் குமாரர்கள் போல கிறிஸ்துவுக்கு அநேக ஆத்துமாக்களைக் கொண்டு வருகிறாள்.
எங்களுடைய ஒரு உரையாடலில் நான் அவளைக் கேட்டேன், “உன் இரகசியம் என்ன? நீ எப்படி சுவிசேஷத்தைப் பிறருடன் பகிர்கிறாய்?”
அவள் சொன்னாள், அது மிக எளிது. ஒவ்வொரு நாளும் நான் வீட்டை விட்டுச் செல்லும்போது, தங்கள் வாழ்க்கையில் சுவிசேஷம் தேவைப்படுகிற ஒருவரிடம் என்னை வழிநடத்துமாறு பரலோக பிதாவிடம் கேட்டு நான் ஜெபிக்கிறேன். நான் சில சமயங்களில், அவர்களுக்கு கொடுக்க ஒரு மார்மன் புஸ்தகத்தை அல்லது கைப்பிரதிகளை ஊழியக்காரர்களிடமிருந்து எடுத்துச் செல்கிறேன், நான் அவர்களிடம் பேசத் தொடங்கும்போது, அவர்கள் சபை குறித்து கேள்விப்பட்டிருக்கிறார்களா என எளிதாக கேட்கிறேன்.”
சூசன்னா மேலும் சொன்னாள், “பிற நேரங்களில் நான் தொடர் வண்டிக்காக காத்திருக்கும்போது, புன்னகைக்கிறேன். ஒருநாள் ஒரு மனிதன் என்னைப் பார்த்து கேட்டான், ‘நீ எதற்காக சிரிக்கிறாய்?’ அவன் என்னைத் தவறாக புரிந்து கொண்டான்.
“நான் பதிலளித்தேன், ‘நான் மகிழ்ச்சியாக இருப்பதால் நான் புன்னகைக்கிறேன்!’
“பின் அவன் சொன்னான், ‘எதற்காக நீ இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்?’
“நான் பதிலளித்தேன், ‘நான் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினராக இருக்கிறேன், அது என்னை மகிழ்ச்சியாக்குகிறது. அது பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?’”
அவன் இல்லை என சொன்னபோது, அவள் ஒரு கைப்பிரதியைக் கொடுத்து, வருகிற ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு வர அவனை அழைத்தாள். தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமை, அவனை வாசலில் நின்று வரவேற்றாள்.
தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதித்தார்:
“சுவிசேஷத்தைப் பகிர உதவ, அனைத்து அங்கத்தினர்களும் செய்யக்கூடிய மூன்று காரியங்கள் உண்டு. …
“முதலாவது நாமனைவரும் இரட்சிக்கும் பணியில், இந்த முக்கிய பணியில் உதவ வாஞ்சைக்காக ஜெபிக்கலாம். …
“இரண்டாவதாக, நாம் கட்டளைகளைக் கைக்கொள்ளலாம். … விசுமாசமிக்க அங்கத்தினர்கள் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப் பகிரும் மாபெரும் பணியில் பங்கேற்பதை அவர்கள் நாடும்போது, அவர்களை வழிநடத்த அவர்களோடு இருக்கும்படியாக, பரிசுத்த ஆவியை எப்போதும் பெற்றிருப்பார்கள்.
“மூன்றாவதாக, பிறருடன் சுவிசேஷத்தைப் பகிர நாம் என்ன செய்ய முடியும் எனும் உணர்த்துதலுக்காக நாம் ஜெபிக்க முடியும் … நீங்கள் பெறுகிற உணர்த்துதலின்படி செயல்பட ஒப்புக்கொடுத்தலுடன் ஜெபியுங்கள்.”3
சகோதர, சகோதரிகளே, பிள்ளைகளே, இளைஞர்களே, நாமும் என் சிநேகிதி சூசன்னா போல இருந்து, பிறருடன் சுவிசேஷத்தைப் பகிரலாமா? ஞாயிற்றுக் கிழமையில் நம்முடன் சபைக்கு வர, நம்முடைய விசுவாசத்திலில்லாத ஒரு நண்பரை நாம் அழைக்க முடியுமா? அல்லது ஒரு உறவினர் அல்லது நண்பருடன் மார்மன் புஸ்தக பிரதியை பகிரலாமா? வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள் இந்த வாரத்தில் நாம் படிக்கும்போது, நாம் கற்றவற்றை பிறருடன் பகிர அல்லது குடும்ப தேடுதலில் தங்கள் முன்னோரைத் தேட பிறருக்கு உதவலாமா? நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து போல அதிகமாக இருக்கமுடியுமா, நமது வாழ்க்கையில் எது மகிழ்ச்சி கொண்டு வருகிறது என பகிரமுடியுமா? இக்கேள்விகள் அனைத்துக்கும் பதில் ஆம் என்பதே! நாம் இதைச் செய்ய முடியும்.
இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்கள் “மனுஷரின் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக அவரது திராட்சைத் தோட்டத்தில் பிரயாசப்பட,” அனுப்பப்பட்டுள்ளனர் என நாம் வேதத்தில் வாசிக்கிறோம். கோட்பாடும் உடன்படிக்கைைகளும் 138 “இரட்சிப்பின் பணியில் அங்கத்தினர் ஊழியப்பணி, மனம்மாறியோர் தக்கவைத்தல், ஆர்வம் குறைந்த அங்கத்தினர்களை ஆர்வமூட்டுதல், ஆலய மற்றும் குடும்ப வரலாற்றுப்பணி மற்றும் சுவிசேஷம் போதித்தல் அடங்கும்.”4
என் அன்பு நண்பர்களே, இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்க்க கர்த்தருக்கு நாம் தேவை. கோ.உ.ல் அவர் சொல்லியிருக்கிறார், “நீங்கள் என்ன சொல்ல வேண்டும் என முன்னமேயே சிந்திக்காதீர், ஆனால் தொடர்ந்து உங்கள் மனங்களில் ஜீவ வார்த்தைகளை பொக்கிஷப்படுத்துங்கள். ஒவ்வொரு மனுஷனுக்கும் கொடுக்கப்பட வேண்டிய பங்கு உங்களுக்குக் கொடுக்கப்படும்.”5
கூடுதலாக, அவர் நமக்கு வாக்களித்திருக்கிறார்:
“இந்த ஜனத்துக்கு மனந்திரும்புதலைக் கூக்குரலிட்டு, உங்கள் வாழ்நாள் முழுவதும் பிரயாசப்பட்டால், என்னிடம் ஒரு ஆத்துமாவை கொண்டு வந்தாலும், என் பிதாவின் இராஜ்யத்தில் உங்கள் மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கும்!
“இப்போதும், என் பிதாவின் இராஜ்யத்தில் நீங்கள் கொண்டு வந்த ஒரு ஆத்துமாவினிமித்தம் மகிழ்ச்சி அதிகமாயிருந்தால், என்னிடத்தில் அநேக ஆத்துமாக்களை நீங்கள் கொண்டு வந்தால் உங்கள் சந்தோஷம் எவ்வளவு பெரிதாயிருக்கும்!”6
நான் தொடங்கிய ஆரம்ப வகுப்பு பாடல் இந்த ஆழமான வாசகத்துடன் முடிகிறது:
நான் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசிக்கிறேன்.
அவரது நாமத்தை நான் கனம் பண்ணுவேன்.
நான் சரியானதைச் செய்வேன்.
அவரது ஒளியைப் பின்பற்றுவேன்.
அவரது சத்தியத்தை நான் அறிவிப்பேன்.7
இந்த வார்த்தைகள் உண்மையானவை, நமக்கு ஒரு அன்பான பரலோக பிதா இருக்கிறார், நம் வாழ்வையும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் வாழ்வையும் ஆசீர்வதிக்க அவர் காத்திருக்கிறார். நமது சகோதரர்களையும் சகோதரிகளையும் கிறிஸ்துவிடம் கொண்டுவரும் வாஞ்சைபெற வேண்டுமென்பதே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனது ஜெபமாகும், ஆமென்.