2010–2019
சாட்சிகள், ஆரோனிய ஆசாரியத்துவ குழுமங்கள் மற்றும் இளம் பெண்கள் வகுப்புகள்
அக்டோபர் 2019 பொது மாநாடு


சாட்சிகள், ஆரோனிய ஆசாரியத்துவ குழுமங்கள் மற்றும் இளம் பெண்கள் வகுப்புகள்

இப்போது நாம் அறிவிக்கிற சரிசெய்தல்கள் தங்களுடைய பரிசுத்த தனிப்பட்ட திறன்களை மேம்படுத்த இளம் ஆண்களுக்கும், இளம் பெண்களுக்கும் உதவுவதின் நோக்கமாயிருக்கிறது.

அன்பான சகோதர சகோதரிகளே மீண்டும் பொது மாநாட்டில் உங்களுடனிருப்பது அற்புதம். இந்த வாரத்தின் ஆரம்பத்தில், ஞானஸ்நானத்திற்கும், முத்திரிக்கும் நியமங்களுக்கும் சாட்சிகளாக யாரிருப்பார்கள் என்பதைக்குறித்து செயல் திட்ட மாற்றங்களைப்பற்றி சபையின் அங்கத்தினர்களுக்கு அறிவிப்புகள் செய்யப்பட்டன. அந்த மூன்று குறிப்புகளையும் முன்னிலைப்படுத்த நான் விரும்புகிறேன்.

  1. மரித்துப்போன ஒரு நபருக்கு பதிலி ஞானஸ்நானத்திற்கு, வரையறுக்கப்பட்ட பயன்பாடு பரிந்துரையையும் சேர்த்து, தற்போதைய ஆலய பரிந்துரை தரித்திருக்கிற எவரும் சாட்சியாயிருக்கலாம்

  2. ஜீவிக்கிற, மற்றும் பதிலி முத்திரிக்கும் நியமங்களுக்கு தற்போதைய ஆலய பரிந்துரையுடன் தரிப்பிக்கப்பட்ட எந்த அங்கத்தினரும் சாட்சியாயிருக்கலாம்

  3. ஜீவிக்கிற நபருக்கு ஞானஸ்நானத்திற்கு சாட்சியாக சபையில் ஞானஸ்நானம் பெற்ற எந்த அங்கத்தினரும் இருக்கலாம். ஆலயத்திற்கு வெளியே நடக்கும் அனைத்து ஞானஸ்நானங்களுக்கும் இந்த மாற்றம் சம்பந்தப்பட்டிருக்கிறது.

இந்த கொள்கை சரிசெய்தல்கள் செயல்முறை. அடிப்படை கோட்பாடு மற்றும் உடன்படிக்கைகள் மாற்றப்படவில்லை. அனைத்து நியமங்களிலும் அவைகள் சமமான திறன்கொண்டவை. இந்த மாற்றங்கள், இந்த நியமங்களில் குடும்ப பங்கேற்புகளில் பெரிய அதிகரிப்புகளை உண்டாக்கவேண்டும்.

நமது இளைஞர்களுக்கும் அவர்களுடைய தலைவர்களுக்கும் சம்பந்தப்பட்ட சரிசெய்தல்களை அறிமுகப்படுத்த இந்த நேரத்தில் உங்களுடன் பேச நான் விரும்பினேன்.

இன்று பூமியில் மிகப் பெரிய காரணமான இஸ்ரவேலின் கூடிச் சேர்தலில் பங்கேற்க கர்த்தருடைய இளைஞர் பட்டாளத்தில் பதிவுசெய்ய பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் இளைஞர்களை நான் அழைத்ததை நீங்கள் நினைவுகூருவீர்கள்.1 இந்த அழைப்பை நமது இளைஞர்களுக்கு நான் வழங்கினேன் ஏனெனில் மற்றவர்களை அணுகுவதில், அவர்கள் நம்புவதை, ஒரு ஏற்கக்கூடிய பாணியில் பகிர்ந்துகொள்ளுவதில் அவர்கள் வழக்கத்திற்கு மாறாக வரம்பெற்றிருந்தனர். கூடிச்சேர்தலின் காரணம், கர்த்தருடைய இரண்டாம் வருகைக்காக உலகத்தையும் அதன் மக்களையும் ஆயத்தப்படுத்த உதவுதல் ஒரு அத்தியாவசியமான பங்காயிருக்கிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் கர்த்தருடைய இளைஞர் பட்டாளம் தேவனுடைய ஒரு அர்ப்பணிக்கப்பட்ட வேலைக்காரனான ஒரு ஆயரால் நடத்தப்படுகிறது அவருடைய தொகுதியில் இளம் ஆண்களையும், இளம் பெண்களையும் பராமரிப்பது அவருடைய முதலாவதும் மிக முக்கிய பொறுப்பாகவுமிருக்கிறது. ஆயரும் அவருடைய ஆலோசகர்களும் ஆரோனிய ஆசாரியத்துவ குழுமங்கள் மற்றும் தொகுதியில் இளம் பெண்கள் வகுப்பின் பணியை வழிகாட்டுகிறார்கள்.

இப்போது நாம் அறிவிக்கிற சரிசெய்தல்கள் தங்களுடைய பரிசுத்த தனிப்பட்ட திறன்களை மேம்படுத்த இளம் ஆண்களுக்கும், இளம் பெண்களுக்கும் உதவுவதின் நோக்கமாயிருக்கிறது. ஆரோனிய ஆசாரியத்துவத்தின் குழுமங்களையும் இளம் பெண்கள் வகுப்புகளையும் பெலப்படுத்தவும், வளர்ந்துவரும் தலைமுறைகளுக்கு அவர்கள் சேவை செய்துகொண்டிருக்கும் ஆயர்களுக்கும் பிற வயதுவந்த தலைவர்களுக்கும் ஆதரவளிக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.

இப்போது இளம் ஆண்களுக்கு சம்பந்தப்பட்ட சரிசெய்தல்களை மூப்பர் க்யொன்டின் எல்.குக் கலந்துரையாடுவார். இன்றிரவு, பொது மகளிர் கூட்டத்தில் இளம் பெண்களுக்கு சம்பந்தப்பட்ட சரிசெய்தல்களை இளம் பெண்கள் பொதுத் தலைவர் சகோதரி போனி ஹெச்.கோர்டன் கலந்துரையாடுவார்.

நமது இளைஞர்களை பெலப்படுத்த இந்த முயற்சிகளை பிரதான தலைமையும் பன்னிருவரும் ஒற்றுமையாக ஒப்புதல் அளித்தனர். நாங்கள் எவ்வளவு அவர்களை நேசிக்கிறோம், அவர்களுக்காக ஜெபிக்கிறோம். அவர்கள் “இஸ்ரவேலின் நம்பிக்கை, சீயோனின் சேனை, வாக்களிக்கப்பட்ட நாளின் பிள்ளைகள்.”2 நமது இளைஞர்களின்மீது நம்முடைய முற்றிலுமான நம்பிக்கையையும் அவர்கள்மீது நமது நன்றியுணர்வையும் நாம் தெரிவிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, “Hope of Israel” (worldwide devotional for youth, June 3, 2018), HopeofIsrael.ChurchofJesusChrist.org பார்க்கவும்.

  2. “Hope of Israel,” Hymns, no. 259.

அச்சிடவும்