மேகத்தினூடேயும் சூரிய ஒளியினூடேயும் கர்த்தாவே என்னோடிரும்!
கிறிஸ்துவின் மகிழ்ச்சியில் நமது துயரங்கள் விழுங்கப்படும்படியாக, மேகத்தினூடேயும் சூரிய ஒளியினூடேயும் கர்த்தர் நம்மோடிருப்பாரென்று நான் சாட்சியளிக்கிறேன்.
“மேகத்தினூடேயும் சூரிய ஒளியினூடேயும் கர்த்தாவே என்னோடிரும்!”1 என்ற மன்றாட்டை நம்முடைய இனிய கீர்த்தனைகளில் ஒன்று வெளிப்படுத்துகிறது. ஒரு பெரிய புயலை அது நெருங்கிக்கொண்டிருந்தபோது, நான் ஒரு விமானத்தில் சென்றுகொண்டிருந்தேன். ஜன்னல் வழியே வெளியில் பார்த்தபோது, எங்களுக்குக் கீழே மேகங்களின் அடர்த்தியான போர்வையை என்னால் பார்க்கமுடிந்தது. அஸ்தமித்துக்கொண்டிருந்த சூரிய ஒளிக் கதிர்கள் மேகங்களில் பிரதிபலித்து, அதிகமாக அவைகளை பிரகாசிக்கச் செய்தது. விரைவிலேயே, கனமான மேகங்களுக்கிடையில் விமானம் கீழிறங்கி, நாங்கள் திடீரென சிறிது நேரத்திற்கு முன் கண்ட அதிகமான ஒளியிலிருந்து முற்றிலுமாக குருடாக்கப்பட்ட அடர்த்தியான இருளால் சூழப்பட்டோம்.2
தேவனின் வெளிச்சத்திலிருந்து நம்மைக் குருடாக்குகிற கருப்பு மேகங்கள் நம் வாழ்க்கையிலும் சூழலாம், அந்த ஒளி இனியும் நமக்காக இருக்கிறதா என்ற கேள்வி கேட்கவும் வைக்கிறது. அந்த மேகங்களில் சில, மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற மனவடிவங்கள், மற்றும் உணர்ச்சிபூர்வ உபத்திரவம். நம்மையும், மற்றவர்களையும், தேவனையும்கூட நாம் காண்கிற வழியை அவை மாற்ற முடியும். உலகத்தின் எல்லா மூலைகளிலுமுள்ள எல்லா வயதுகளிலுமுள்ள பெண்களையும், ஆண்களையும் அவை பாதிக்கும்.
அதைப்போன்றே, சேதப்படுத்துதல் என்பது, இந்த சவால்களை அனுபவித்திராத மற்றவர்களை பாதிக்கக்கூடிய சந்தேகத்தின் மேகத்தை உணர்விழக்கச் செய்வதாகும். சரீரத்தின் எந்த பகுதியையும்போல, மூளையும் நோய்க்கும், அதிர்ச்சிக்கும், இரசாயன ஏற்றத் தாழ்வுகளுக்கும் உட்பட்டது. நமது மனங்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும்போது, தேவனிடமிருந்தும், நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்தும், மருத்துவ மற்றும் ஆரோக்கிய வல்லுனர்களிடமிருந்தும் உதவியை நாடுவது பொருத்தமாயிருக்கும்.
“சகல மனிதர்களும், ஆண்களும் பெண்களும், தேவ சாயலில் படைக்கப்பட்டார்கள். ஒவ்வொருவரும் பரலோக பெற்றோரின் ஆவிக்குமாரன் அல்லது குமாரத்தி, அப்படியே ஒவ்வொருவருக்கும் தெய்வீக தன்மையும் இலக்கும் உண்டு.“3 நமது பரலோக பெற்றோர்களையும், நமது இரட்சகரையும்போல நமக்கு ஒரு மாமிச சரீரமுண்டு,4 உணர்வுகளையும் அனுபவிக்கிறோம்.5
எனக்கன்பான சகோதரிகளே, எப்போதாவது துக்கமாகவும் கவலையாகவும் உணருவது இயல்பானது. துக்கமும், பதட்டமும் இயற்கையான மனித உணர்வுகள்.6 எப்படியாயினும், நாம் தொடர்ந்து துக்கமாயிருந்தால், நமது பரலோக பிதா, அவருடைய குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் அன்பையும் செல்வாக்கையும் உணரும் நமது திறனை, நமது வேதனைகள் தடுக்கிறதாயிருந்தால், பின்பு நாம் மனச்சோர்வு, பதட்டம் அல்லது மற்றொரு உணர்ச்சி நிலையில் வேதனைப்பட்டுக்கொண்டிருப்போம்.
என்னுடைய மகள் ஒருமுறை எழுதினாள், “எல்லா நேரங்களிலும் நான் மிகவும் துக்கமாயிருந்த ஒரு நேரமிருந்தது. துக்கம் வெட்கப்பட வேண்டிய ஒன்று, அது பெலவீனத்தின் ஒரு அடையாளம் என நான் எப்போதுமே நினைப்பேன். ஆகவே என் துக்கத்தை நான் என்னுள்ளே வைத்துக்கொண்டேன். … முற்றிலும் தகுியில்லாதவளாக நான் உணர்ந்தேன்.”7
ஒரு சிநேகிதி இதை இந்த விதமாக விளக்கினாள்: “அவநம்பிக்கை, இருள், தனிமை மற்றும் பயத்துடன், நான் உடைந்து போனவள் அல்லது குறைவுள்ளவள் என்ற நினைப்பின் உணர்வுகளுடன் நான் சிறுபிள்ளையாயிருந்ததிலிருந்து தொடர்ந்து போராடினேன். என்னுடைய வேதனையை மறைக்க, எல்லாவற்றையும் நான் செய்தேன், நான் விருத்தியடைந்தும், வலுவாகவும் இருக்கிறேன் என்ற தோற்றத்தை ஒருபோதும் கொடுப்பதில் தவறவில்லை.”8
எனக்கன்பான நண்பர்களே, இது நம்மில் எவருக்கும் நடக்கலாம், குறிப்பாக சந்தோஷத் திட்டத்தை நம்புபவர்களாக நாம் இருக்கும்போது, நாம் இப்போதே பரிபூரணராயிருக்கவேண்டும் என சிந்தித்து நமக்கு மேலேயே நாம் தேவையற்ற பாரங்களை வைக்கிறோம். இத்தகைய சிந்தனைகள் தாங்க முடியாததாக இருக்கலாம். நமது அநித்திய வாழ்க்கை முழுவதிலும் அதற்கு அப்பாலும் இடம்பெறுகிற, பூரணப்படுதலை அடைதல் ஒரு நடைமுறை, இயேசு கிறிஸ்துவின் கிருபையால் மட்டுமே அது நடைபெறும்.9
மாறாக, நாம் பூரணல்லர் என்பதை ஒப்புக்கொண்டு நமது உணர்வுபூர்வ சவால்களைப்பற்றி நினைக்கும்போது, அவர்களுடைய போராட்டங்களைப் பகிர்ந்துகொள்ள மற்றவர்களுக்கு நாம் அனுமதியளிக்கிறோம். நம்பிக்கையிருக்கிறது என நாம் ஒன்றுசேர்ந்து அறிகிறோம், நாம் தனியாக கஷ்டப்படவேண்டியதில்லை.10
இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக, நாம் “ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமக்கவும்,” “துக்கப்படுகிறவர்களோடு துக்கப்படவும்” நாம் விருப்பமுள்ளவர்களாயிருக்கிறோமென தேவனோடு நாம் ஒரு உடன்படிக்கையை செய்திருக்கிறோம்.11 உணர்வு பூர்வமான நோய்களைப்பற்றி அறிதலும் இந்த போராட்டங்களை சமாளிக்க உதவக்கூடிய ஆதாரங்களை கண்டுபிடித்தலும், முடிவாக, பிரதான குணமாக்குபவரான கிறிஸ்துவண்டை நம்மையும் மற்றவர்களையும் கொண்டுவருதலும் இதில் அடங்கலாம்.12 அவர்களுடைய வேதனை உண்மையானது என மதிப்பிட்டு மற்றவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை எவ்வாறு புரிந்துகொள்வதென்பதை நாம் அறியாவிட்டாலும்கூட, புரிந்துகொள்ளுதலுக்கும் குணப்படுத்துதலுக்கும் இது ஒரு முக்கியமான முதல் படியாயிருக்கும்.13
சில நபர்களில் மனச்சோர்வு அல்லது பதட்டத்தின் காரணம் கண்டுபிடிக்கப்படலாம். பிற சமயங்களில் பிரித்தறிவது கடினமாக இருக்கலாம்.14 உணவு, தூக்கம், உடற்பயிற்சிகள் மூலம் சரிசெய்தலின் மூலமாக சிலசமயங்களில் மேம்படுத்த முடிகிற, மனஅழுத்தம்15 அல்லது அதிக சோர்வினால்16 நமது மூளை கஷ்டப்படலாம். பிற சமயங்களில் பயிற்சிபெற்ற வல்லுனர்களின் நடத்துதலின் கீழ் சிகிச்சை அல்லது மருந்துகளும் தேவைப்படலாம்.
சிகிச்சையளிக்கப்படாத மன அல்லது உணர்வுபூர்வ நோய்கள் அதிகரித்த தனிமைக்கும், தவறான புரிந்துகொள்ளுதலுக்கும், உடைந்த உறவுகளுக்கும், சுய காயத்திற்கும் தற்கொலைக்கும் கூட வழிநடத்தலாம். அநேக ஆண்டுகளுக்கு முன்னர் என் தகப்பன் தற்கொலை செய்து மரித்ததால், இதை நான் நேரடியாக அறிவேன். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அவருடைய மரணம் அதிர்ச்சியாயும் உள்ளத்தை நொறுக்குவதாயுமிருந்தது. என்னுடைய துக்கத்திலிருந்து மீள எனக்கு பல ஆண்டுகளாயிற்று, உண்மையில் அதை ஊக்குவிப்பதைவிட மாறாக அதைத் தடுக்கவே பொருத்தமான வழிகளில் தற்கொலையைப்பற்றி பேசுவதற்கு நான் சமீபத்தில்தான் கற்றுக்கொண்டேன்.17 இப்போது எனது தகப்பனின் மரணத்தைப்பற்றி எனது பிள்ளைகளுடன் திறந்த மனதுடன் நான் பேசுகிறேன், திரையின் இரண்டு பக்கங்களிலும் இரட்சகரால் கொடுக்க முடிகிற குணமாக்குதலை நான் கண்டிருக்கிறேன்.18
துக்ககரமாக, ஒரு கற்பனையான உருவில் அவர்கள் பொருந்தமாட்டார்கள் என அவர்கள் உணருவதால், பெரும் மனசோர்வில் பாதிக்கப்பட்ட அனேகர் தங்களுடைய சக பரிசுத்தவான்களிடமிருந்து தங்களை தூரப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் நமக்கு சொந்தமானவர்கள் என அறியவும் உணரவும் அவர்களுக்கு நாம் உதவலாம். மனச்சோர்வு பெலவீனத்தின் விளைவல்ல என்றும் அல்லது வழக்கமாக அது பாவத்தின் விளைவில்லை என்றும் நாம் அறிந்துகொள்வது முக்கியம்.19 அது “இரகசியமாக வளர்கிறது, ஆனால் பச்சாபத்தில் சுருங்குகிறது”20 வெட்கத்தின் சுமை தூக்கப்பட்டு, குணமாக்குதலின் அற்புதங்கள் நடைபெறும்படியாக, தனிமை மற்றும் களங்கத்தின் மேகங்களை நாம் ஒன்றுசேர்ந்து உடைக்கலாம்.
அவருடைய பூலோக ஊழியத்தில், வியாதியஸ்தரையும் துயரப்பட்டவர்களையும் இயேசு கிறிஸ்து குணப்படுத்தினார், ஆனால் ஒவ்வொருவரும் அவரில் விசுவாசத்தை வைத்து அவருடைய குணமாக்குதலைப் பெறும்படியாக செயல்படவேண்டியிருந்தது. சிலர் வெகுதூரம் நடந்தனர், மற்றவர்கள் அவருடைய ஆடையைத் தொட தங்கள் கைகளை நீட்டினர், மற்றவர்கள் குணமாக்கப்பட அவரிடத்தில் தூக்கி வரப்பட வேண்டியிருந்தது.21 குணமாக்குதல் எனும்போது, நம் அனைவருக்கும் அவர் மிகவும் தேவையாயிருப்பதில்லையா? “நாம் அனைவரும் பிச்சைக்காரர்களில்லையா?”22
நாம் இரட்சகரின் பாதையைப் பின்பற்றுவோமாக, நமது மனதுருக்கத்தை அதிகரித்து, தீர்க்கும் நமது மனப்போக்கை மங்கச்செய்து மற்றவர்களின் ஆவிக்குரிய தன்மையை ஆராய்பவர்களாயிருப்பதை நிறுத்துவோமாக. அன்புடன் கேட்பது நாம் வழங்கக்கூடிய பெரிதான பரிசுகளில் ஒன்று, நம்முடைய அன்பின் மூலமாக மீண்டும் ஒரு முறை பரிசுத்த ஆவியை அவர்கள் உணர்ந்து, இயேசு கிறிஸ்துவிடமிருந்து பிரகாசிக்கிற ஒளியை காணும்படியாக நாம் நேசிப்பவர்களையும், நண்பர்களையும் மூச்சுத் திணறவைக்கும் அடர்த்தியான மேகங்களை தூக்கிச்செல்ல அல்லது விலக்க நம்மால் உதவமுடியும்.23
ஒரு “இருள் மூடுபனியால்” நீங்கள் தொடர்ந்து சூழப்பட்டிருந்தால்24 பரலோக பிதாவினிடத்தில் திரும்புங்கள். நீங்கள் அனுபவித்த எதுவும் நீங்கள் அவருடைய பிள்ளை என்பதையும் அவர் உங்களை நேசிக்கிறாரென்ற நித்திய சத்தியத்தையும் மாற்றமுடியாது.25 கிறிஸ்து உங்கள் இரட்சகர், மீட்பர், தேவன் உங்கள் பிதாவாயிருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருங்கள். அவர்கள் புரிந்திருக்கிறார்கள். கேட்டுக்கொண்டு, ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அவர்களை உங்களுக்கருகில் இருப்பதாக கற்பனை செய்யுங்கள்.26 “உங்கள் துயரங்களில் [அவர்கள்] உங்களை ஆறுதல்படுத்துவார்கள்.”27 உங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, கர்த்தருடைய பாவநிவர்த்தியின் கிருபையில் நம்பிக்கை வையுங்கள்.
உங்கள் போராட்டங்கள் உங்களை வரையறுக்காது, ஆனால் அவைகள் உங்களைப் புதுப்பிக்கலாம்.28 “மாமிசத்தில் ஒரு முள்ளினால்”29 மற்றவர்களிடத்தில் அதிக இரக்கத்தை உணர உங்களுக்கு திறனிருக்கும். “பலவீனமானவர்களுக்கு உதவும்படி, தொங்கிய கைகளை நிமிர்த்தி, தளர்ந்த முழங்கால்களை பெலப்படுத்தும்படி,”30 பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டபடி உங்கள் கதையை பகிர்ந்துகொள்ளுங்கள்.
போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு தற்போது போராடிக்கொண்டிருக்கும் அல்லது ஆதரித்துக்கொண்டிருக்கும் நாம், அவருடைய ஆவி எப்போதும் நம்மோடிருக்கும்படியாக தேவனுடைய கட்டளைகளைப் பின்பற்ற விருப்பமுள்ளவர்களாயிருப்போமாக.31 ஆவிக்குரிய பெலத்தை நமக்குக் கொடுக்கும் “அற்பமும் சொற்பமுமான காரியங்களைச்”32 செய்வோமாக. தலைவர் ரசல் எம்.நெல்சன் சொன்னதைப்போல, “அதிகரிக்கப்பட்ட பரிசுத்தம், சரியான கீழ்ப்படிதல், நேர்மையான தேடுதல், மார்மன் புஸ்தகத்திலுள்ள கிறிஸ்துவின் வார்த்தைகளை தினமும் ருசித்தல், ஆலயத்திற்கும் குடும்ப வரலாற்றுப் பணிக்கும் வழக்கமான நேரம் ஒதுக்குதல் போல, வேறெதுவும் பரலோகங்களைத் திறப்பதில்லை.”33
நம்முடைய இரட்சகரான இயேசு கிறிஸ்து,“[நம்முடைய] பெலவீனங்களுக்குத்தக்கதாய், நம்முடைய மாம்சத்திற்கேற்ப, ஒத்தாசை புரிவதெப்படி என்று தாம் அறிந்துகொள்ளும்படிக்கும், தாம் உருக்கமான இரக்கத்தால் நிறைக்கப்படும்படிக்கும் [நம்முடைய] பெலவீனங்களைத் தம்மேல் [ஏற்றுக்கொள்வார்].”34 என்று நாமெல்லோரும் நினைவுகூருவோமாக. “இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயம் கட்டுதலையும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், அவர்களுக்கு சாம்பலுக்குப் பதிலாக சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்தத் தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுக்கவும்”35 அவர் வந்தார்.
“மேகத்தினூடேயும் சூரிய ஒளியினூடேயும்” கர்த்தர் நம்மோடிருப்பார்,“ கிறிஸ்துவின் சந்தோஷத்தினால் நமது உபத்திரவங்கள் விழுங்கப்படும்,36 நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றுக்கும் பிறகு, நாம் கிருபையால் இரட்சிக்கப்படுகிறோம்,37 என நான் சாட்சியளிக்கிறேன். “தன் செட்டைகளில் குணமாக்குதலுடன் இயேசு கிறிஸ்து பூமிக்கு திரும்பி வருவார்”38 என நான் சாட்சியளிக்கிறேன். முடிவாக, நமது கண்களிலிலிருந்து அவர் “கண்ணீர் யாவையும் துடைப்பார், இனி துக்கமில்லை.”39 “கிறிஸ்துவினடத்தில் வந்து அவரில் பூரணப்பட்டிருக்கிற”40அனைவருக்கும் சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை, ஏனெனில் கர்த்தர் நமது நித்திய ஒளியாயிருப்பார், நமது துக்கமான நாட்கள் முடிவடையும்.”41 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.