உங்கள் மகத்தான சாகசம்
உங்கள் வசதிகளையும் பாதுகாப்புகளையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு சீஷத்துவத்தின் பயணத்தில் அவரோடு சேர ஒவ்வொருநாளும் இரட்சகர் உங்களை அழைக்கிறார்.
ஹாபிட்டுகள் பற்றி
அநேக ஆண்டுகளுக்கு முன்பு, “தரையின் குழியில் ஒரு ஹாபிட் வாழ்ந்து வந்தது” என்ற வாக்கியத்துடன் அன்பான பிள்ளைகளின் ஒரு கதை ஆரம்பிக்கிறது. 1
பில்போ பாகின்ஸின் கதை, சாகசம் மற்றும் ஒரு மிகப்பெரிய வெகுமதியின் வாக்குறுதியின் அற்புதமான வாய்ப்பாகிய, மிக விசேஷ சந்தர்ப்பம் கொடுக்கப்பட்ட மிகச் சாதாரணமான, விசேஷமில்லாத ஹாபிட்டைப் பற்றியது.
பிரச்சினை என்னவென்றால் மிக சுய மரியாதையுள்ள ஹாபிட்டுகள் சாகசங்களுடன் எதையும் செய்ய விரும்புவதில்லை. அவர்களுடைய வாழ்க்கை எல்லாம் வசதியைப்பற்றியதே. அவர்களுக்கு கிடைக்கும்போதெல்லாம் ஒரு நாளில் ஆறு வேளை சாப்பிடுவதை அவர்கள் ரசித்தார்கள், விருந்தாளிகளுடன் கதைகளை பரிமாற்றம் செய்துகொண்டு, பாடிக்கொண்டு, இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு, தோட்டங்களில் தங்களுடைய நாட்களை செலவழித்துக்கொண்டிருந்து, வாழ்க்கையின் எளிய சந்தோஷங்களில் திளைத்துக்கொண்டிருந்தார்கள்.
ஆயினும், ஒரு மகத்தான சாகச வாய்ப்பு பில்போவுக்கு வழங்கப்பட்டபோது ஏதோ ஒன்று அதனுடைய இருதயத்தில் எழுகிறது. பயணம் சவாலாயிருக்குமென்று ஆரம்பத்திலிருந்து அவன் புரிந்திருக்கிறான். ஆபத்தாயிருக்குமென்றும். அவன் திரும்பமாட்டானென்றும் ஒரு சாத்தியமிருந்தது.
இருப்பினும் சாகசத்திற்கான அழைப்பு அவனுடைய இருதயத்தின் ஆழத்திற்கு சென்றடைந்தது. ஆகவே, இந்த பிரசித்தமற்ற ஹாபிட் வசதியை பின்னுக்குத் தள்ளி, “அங்கே போய் மீண்டும் திரும்பிவர.”2 எல்லா வழிகளிலும் அவனைக் கொண்டுபோகிற ஒரு மகத்தான சாகசத்தின் சாலையில் புறப்படுகிறான்.
உங்களுடைய சாகசம்
ஒருவேளை இக்கதை அநேகரால் பேசப்படுவதற்கு ஒரு காரணம், இது நம்முடைய கதையாகவும் இருப்பதால்தான்.
நீண்ட, நீண்ட காலத்திற்கு முன்பு, நாம் பிறப்பதற்கு முன்பும் நேரத்தாலும் நினைவிலிருந்து மேகமூட்டத்தாலும் மங்கிய ஒரு காலத்தில் ஒரு சாகசத்தை மேற்கொள்ள நாமும்கூட அழைக்கப்பட்டோம். இது நமது பரலோக பிதாவான தேவனால் முன்மொழியப்பட்டது. இந்த சாகசத்தை ஏற்றுக்கொள்வதென்பது வசதியையும் அவருடைய உடனடி பிரசன்னத்தின் பாதுகாப்பையும் விட்டுவிடுதல் என்பதாகும். அறியாத ஆபத்துடனும் சோதனையுடனும் நிரப்பப்பட்ட ஒரு பயணத்திற்காக பூமிக்கு வருதல் என இது இருக்கலாம்.
இது எளிதாயிருக்காது என நாம் அறிவோம்.
ஒரு மாமிச சரீரத்தையும் மற்றும் அநித்தியத்தின் தீவிரமான சந்தோஷங்களையும் துக்கங்களையும் அனுபவிப்பதையும் சேர்த்து விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை அடைவோமென்றும் நாம் அறிவோம். முயற்சிக்கவும், தேடவும், போராடவும் நாம் கற்றுக்கொள்வோம். தேவனைப்பற்றியும் நம்மைப்பற்றியுமுள்ள உண்மைகளை நாம் கண்டுபிடிப்போம்.
உண்மையாகவே, வழியில் நாம் அநேக தவறுகளைச் செய்வோமென நிச்சயமாக நாம் அறிவோம். ஆனால் நமக்கும் ஒரு வாக்குறுதி இருந்தது, இயேசு கிறிஸ்துவின் மகத்தான தியாகத்தால், நமது மீறுதல்களிலிருந்து நாம் கழுவப்பட முடியும், நமது ஆவிகளில் சீராக்கி சுத்திகரிக்கப்பட்டு ஒரு நாளில் உயிர்த்தெழுந்து நாம் நேசிப்பவர்களுடன் மீண்டும் இணைய முடியும்.
தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறாரென்று நாம் கற்றோம். அவர் நமக்காக ஜீவனைக் கொடுத்தார், நாம் வெற்றிபெற அவர் விரும்புகிறார். ஆகவே, நமக்காக அவர் ஒரு இரட்சகரை ஆயத்தப்படுத்தினார். “இருப்பினும்”, “நீயே அதைத் தெரிந்துகொள்ளலாம்; ஏனெனில் அது உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” 3 என பரலோகத்திலுள்ள நமது பிதா சொன்னார்
அதிக எண்ணிக்கையில் ஆவிக்குரிய நமது சகோதரர்களும் சகோதரிகளும் இதற்கு எதிராக தீர்மானித்ததால், தேவனுடைய பிள்ளைகளை கவலைப்படுத்திய, அச்சுறுத்திய, நித்திய சாகசத்தின் பகுதிகள் அங்கிருந்திருக்கலாம்.4
தார்மீக சுயாதீனத்தின் வரம் மற்றும் வல்லமையால், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய, நித்தியமாக மாறுவதும் ஆபத்திற்கு தகுதியுள்ளது என நாம் தீர்மானித்தோம்.5
ஆகவே வாக்குறுதிகள்மீதும், தேவன் மற்றும், அவருடைய நேச குமாரனின் வல்லமை மீதும் நம்பிக்கை வைத்து, நாம் சவாலை ஏற்றோம்.
நான் அதைச் செய்தேன்.
அப்படியேதான் நீங்கள் செய்தீர்கள்.
வுதல் வாழ்விட பாதுகாப்பை விட்டுவிட்டு “அங்கே போய் மீண்டும் திரும்பிவரும்” நமது சொந்த மகத்தான சாகசத்திற்கு புறப்பட நாம் ஒப்புக்கொண்டோம்.
சாகசத்திற்கான அழைப்பு
இருந்தும் அநித்திய வாழ்க்கையில் நம்மை திசை திருப்ப ஒரு வழியிருக்கிறது, இல்லையா? வசதிக்கு முன்னுரிமையளித்து வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் எளிதாக்கி, நமது பெரிய தேடலின் பார்வையை இழக்க நாம் முனைகிறோம்.
இன்னும், ஒரு உயர்ந்த, உன்னதமான நோக்கத்திற்காக ஏங்குகிற, மறுக்க முடியாத ஏதோ ஒன்று, நமது இருதயங்களின் ஆழத்தில் அங்கே எஞ்சியிருக்கிறது. ஏன் ஜனங்கள் சுவிசேஷத்திற்கும் இயேசு கிறிஸ்துவின் சபைக்கும் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு இந்த ஏக்கம் ஒரு காரணம். ஒரு அர்த்தத்தில் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் என்பது நீண்ட காலத்திற்கு முன்பு நாம் ஏற்றுக்கொண்ட சாகசத்திற்கான அழைப்பின் ஒரு புதுப்பித்தல். உங்கள் வசதிகளையும் பாதுகாப்புகளையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு சீஷத்துவத்தின் பயணத்தில் அவரோடு சேர ஒவ்வொருநாளும் இரட்சகர் உங்களை அழைக்கிறார்.
இந்த சாலையில் அநேக வளைவுகள் உண்டு. அங்கே குன்றுகளும், பள்ளத்தாக்குகளும், சுற்றுவழிகளுமிருக்கின்றன. அங்கே உருவக சிலந்திகள், பூதங்கள், ஒன்று அல்லது இரண்டு டிராகன்கள்கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் பாதையில் நிலைத்திருந்து, தேவனில் நம்பிக்கை வைத்தால் இறுதியாக உங்கள் மகிமையான இலக்கிற்கும் உங்களுடைய பரலோக வீட்டிற்கு மீண்டும் வரவும் வழியை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.
ஆகவே நீங்கள் எவ்வாறு ஆரம்பிப்பீர்கள்?
இது மிக எளிது.
தேவனிடத்தில் உங்கள் இருதயத்தை சாயுங்கள்.
முதலாவதாக, தேவனிடத்தில் உங்கள் இருதயத்தை சாய்க்க நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அவரைக் காண தினமும் முயற்சி செய்யுங்கள். அவரை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். பின்பு அந்த அன்பு நீங்கள் கற்கவும், புரிந்துகொள்ளவும், அவரது போதனைகளை பின்பற்றவும், அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவும் கற்க உங்களுக்கு உணர்த்தும். ஒரு குழந்தை புரிந்துகொள்ளக்கூடிய ஒரு தெளிவான எளிய வழியில் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆயினும், வாழ்நாள் முழுவதிலும் ஆராய்வதிலும் தியானிப்பதிலும் ஆயிரத்தில் ஒரு பகுதியைக்கூட நம்மால் புரிந்துகொள்ள முடியாத அத்தகைய ஆழ்ந்த ஆழமான சிக்கலான வாழ்க்கையின் மிக சிக்கலான கேள்விகளுக்கு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் பதில்கள் உண்டு.
உங்களுடைய திறமையில் உங்களுக்கு சந்தேகமிருப்பதால் இந்த சாகசத்தில் நீங்கள் தயங்கினால், சீஷத்துவமென்பது காரியங்களை மிகச்சரியாக செய்வதென்பதைப்பற்றியதல்ல, அது காரியங்களை வேண்டுமென்றே செய்வதைப்பற்றியது. உங்களுடைய திறமைகளைவிட மிக அதிகமாக, உண்மையில் நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என்பதை காட்டுகிற உங்களுடைய தேர்ந்தெடுப்புகளே.6
நீங்கள் தோற்றால், வகைவிடாமலிருக்க தேர்வு செய்யலாம், அல்லது உங்கள் தைரியத்தைக் கண்டுபிடித்து, முன்னேறிச்சென்று, எழுந்து நிற்கலாம். அதுவே பயணத்தின் பெரிய பரிட்சை.
நீங்கள் பரிபூரணரல்ல, சில நேரங்களில் நீங்கள் தோற்பீர்களென தேவன் அறிகிறார். நீங்கள் வெற்றியடையும் நேரத்தைவிட நீங்கள் போராடும்போது தேவன் உங்களை அதிகமாக நேசிக்கிறார்.
ஒரு அன்பான பெற்றோரைப்போல நீங்கள் வேண்டுமென்றே முயற்சி செய்யவேண்டுமென்று மட்டுமே அவர் விரும்புகிறார். சீஷத்துவமென்பது பியானாவை இசைக்க கற்றுக்கொள்வதைப்போன்றது. முதலில் நீங்கள் செய்யக்கூடியதெல்லாம் “சாப்ஸ்டிக்ஸ்” என்ற அரிதாக அடையாளம் காணக்கூடிய விளக்கக் காட்சியை விளையாடுவதே. ஆனால் நீங்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்தால் எளிய தாளங்கள் ஒருநாள் அற்புதமான சொனாட்டுகள், ராப்சோடிஸ் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு வழி வகுக்கும்.
இப்போது, இந்த வாழ்க்கையில் அந்த நாள் வராதிருக்கலாம், ஆனால் அது வரும். தேவன் கேட்பதெல்லாம் நீங்கள் உணர்வுபூர்வமாக முயற்சி செய்துகொண்டிருப்பதையே.
மற்றவர்களை அன்போடு அணுகுங்கள்.
அத்துடன் ஏறக்குறைய முரண்பாடான நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையைப்பற்றி ரசிக்கத்தக்க ஒன்றிருக்கிறது: உங்களுடைய சுவிசேஷ சாகசத்தில் முன்னேற உங்களுக்கிருக்கிற ஒரே வழி மற்றவர்கள் முன்னேற உதவுவதுவே.
மற்றவர்களுக்குதவுவதுஎன்பது சீஷத்துவத்தின் பாதை. விசுவாசம், நம்பிக்கை, அன்பு, இரக்கம் மற்றும் சேவை சீஷர்களாக நம்மை சுத்திகரிக்கிறது.
ஏழைகளுக்கும் வறியோருக்கும் உதவ உங்கள் முயற்சிகள் மூலமாக துயரத்திலிருப்போரை அணுக உங்களுடைய குணம் பரிசுத்தமாக்கப்பட்டு வலுப்படுத்தப்படுகிறது, உங்களுடைய ஆவி விரிவாக்கப்பட்டு நீங்கள் சிறிது உயரமாக நடக்கிறீர்கள்.
ஆனால் இந்த அன்பு திரும்ப செலுத்துகிற எதிர்பார்ப்புடன் வரமுடியாது. அங்கீகாரம், அபிமானம் அல்லது சாதகத்தை எதிர்பார்க்கிற வகையான சேவையாக இது இருக்கமுடியாது.
இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் ஏதோ ஒன்று திரும்பக் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில்லாமல் தேவனையும் அவருடைய பிள்ளைகளையும் நேசிக்கிறார்கள். நம்மை ஏமாற்றமடையச் செய்கிறவர்களை, நம்மை விரும்பாதவர்களை நாம் நேசிக்கிறோம். நம்மை ஏளனம் செய்கிறவர்களை, தூஷிப்பவர்களை, காயப்படுத்த நாடுகிறவர்களை நாம் நேசிக்கிறோம்.
கிறிஸ்துவின் தூய அன்புடன் உங்களுடைய இருதயங்களை நீங்கள் நிரப்பும்போது கோபம், தீர்ப்பு மற்றும் வெட்கப்படுதலுக்கு உங்களிடம் இடமிருக்காது. நீங்கள் அவரை நேசிப்பதால், நீங்கள் தேவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறீர்கள். உங்களுடைய சிந்தனைகளிலும் செயல்களிலும், இந்த செயல்பாட்டில் நீங்கள் மெதுவாக கிறிஸ்துவைப் போலாகிறீர்கள்.7 இதைவிட எந்த சாகசம் பெரியதாயிருக்கக்கூடும்?
உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்
இயேசு கிறிஸ்துவின் நாம்த்தை எடுத்துக்கொண்டு நாம் யாராயிருக்கிறோம் என்பதைப்பற்றி வெட்கப்படாமலிருப்பது இந்த பயணத்தில் நாம் தேர்ச்சிபெற முயற்சிக்கிற மூன்றாவது காரியம்.
நமது விசுவாசத்தை நாம் மறைப்பதில்லை.
நாம் அதைப் புதைப்பதில்லை.
மாறாக, சாதாரணமான, இயற்கையான வழிகளில் நமது பயணத்தைப்பற்றி மற்றவர்களுடன் நாம் பேசுகிறோம். இதைத்தான் நண்பர்கள் செய்கிறார்கள், அவர்களுக்கு முக்கியமான காரியங்களைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். அவர்களுடைய இருதயத்திற்கு நெருக்கமான, அவர்களுக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிற காரியங்களைப்பற்றி பேசுகிறார்கள்.
அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் ஒரு அங்கத்தினராக உங்கள் கதைகளையும் அனுபவங்களையும் நீங்கள் கூறுகிறீர்கள்.
சிலசமயங்களில் உங்கள் கதை ஜனங்களைச் சிரிக்கச் செய்கிறது. சிலசமயங்களில் அவைகள் அவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. சிலசமயங்களில் பொறுமையில், மீண்டும் எழுதலில், தேவனிடத்தில் சிறிது நெருங்கிவர மற்றொரு மணிநேரத்தை, மற்றொரு நாளை எதிர்கொள்ள தைரியத்தில் தொடர அவைகள் ஜனங்களுக்கு உதவும்.
சமூக வலைத்தளங்களில், குழுக்களிலும், எல்லா இடங்களிலும் தனிப்பட்டவராக உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அவர்கள் உலகமுழுவதிலும் சென்று உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் கதையை பகிர்ந்துகொள்ளவேண்டுமென்பது அவருடைய சீஷர்களுக்கு இயேசு கூறிய கடைசி காரியங்களில் ஒன்று8 அந்த மகத்தான ஆணையை இன்று நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறோம்.
பகிர்ந்துகொள்ள நமக்கு என்ன ஒரு மகிமையான செய்தியிருக்கிறது: இயேசு கிறிஸ்துவினால் எல்லா ஆணும், பெண்ணும், பிள்ளையும் தங்களுடைய பரலோக வீட்டிற்கு பாதுகாப்பாய் திரும்பமுடிந்து அங்கே மகிமையிலும் நீதியிலும் வாசம் செய்யமுடியும்.
பகிர்ந்துகொள்ள மிக நல்ல செய்தி இருக்கிறது.
நமது நாளில் தேவன் மனுஷனுக்குத் தோன்றினார்! நாம் ஒரு ஜீவிக்கிற தீர்க்கதரிசியைப் பெற்றிருக்கிறோம்.
மறுஸ்தாபித சுவிசேஷத்தையும் இயேசு கிறிஸ்துவின் சபையைும் விற்பதற்கு தேவனுக்கு நீங்கள் தேவையில்லை என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
நீங்கள் அதை மரக்காலுக்குக் கீழே மறைக்கவேண்டாமென்றுமட்டும் அவர் எதிர்பார்க்கிறார்.
சபை அவர்களுக்கானதல்ல என ஜனங்கள் தீர்மானித்தால் அது அவர்களுடைய தீர்மானம்.
நீங்கள் தோற்றுப்போனீர்கள் என்று அதற்கு அர்த்தமாகாது. அவர்களைத் தொடர்ந்து அன்புடன் நடத்துங்கள். அவர்களை மீண்டும் நீங்கள் அழைக்கும்படியாக விலக்குகிறதா.
சாதாரண சமூக தொடர்புகளுக்கும் இரக்கமான துணிவான சீஷத்துவத்திற்குமிடையிலான வித்தியாசம்—அழைப்பு!
வாழ்க்கையில் அவர்களுடைய அந்தஸ்தைப் பொருட்படுத்தாது, அவர்களுடைய இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாது, அவர்களுடைய வாழ்க்கைத் தீர்மானங்களைப் பொருட்படுத்தாது, தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் நாம் நேசிக்கிறோம்.
நம்முடைய பங்காக “வந்து பாருங்கள்!” என்று நாம் சொல்வோம். சீஷத்துவப் பாதையில் நடப்பது எவ்வாறு உங்களுக்கு பலனளிப்பதாயும் மேம்படுத்தலாயுமிருக்குமென்று நீங்களே கண்டுபிடியுங்கள்.”
உலகத்தை ஒரு சிறந்த இடமாக்க நாம் முயற்சி செய்யும்போது வந்து உதவும்படி ஜனங்களை நாம் அழைக்கிறோம்.
“வந்து தங்குங்கள்”, என நாம் சொல்கிறோம். நாங்கள் உங்கள் சகோதர சகோதரிகளாயிருக்கிறோம். நாம் பரிபூரணர்களல்ல. நாம் தேவனில் நம்பிக்கை வைத்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள நாடுகிறோம்.
எங்களோடு சேர்ந்துகொள்ளுங்கள், நீங்கள் எங்களை சிறப்பாக்குவீர்கள். நடைமுறையில் அப்படியே நீங்கள் சிறப்பானவர்களாவீர்கள். இந்த சாகசத்தை நாம் ஒன்றுசேர்ந்து செய்வோம்.”
நான் எப்போது ஆரம்பிக்கவேண்டும்?
சாகசத்திற்கான அழைப்பு அவருக்குள் அசைந்ததாக நமது நண்பர் பில்போ பாகின்ஸ் உணர்ந்தபோது, இரவில் நன்றாக இளைப்பாறவும், ஒரு நல்ல காலை உணவை சுவைக்கவும், காலையில் முதல் வேலையாக புறப்பட்டுச் செல்லவும் அவர் தீர்மானித்தார்.
பில்போ விழித்தெழுந்தபோது, அவருடைய வீடு குழம்பிக்கிடந்ததை கவனித்து, அவருடைய உன்னதத் திட்டத்திலிருந்து ஏறக்குறைய திசைதிருப்பப்பட்டார்.
ஆனால் பின்னர் அவருடைய நண்பர் கான்டால்ப் வந்து, “நீங்கள் எப்போது வரப்போகிறார்கள்?”9 என்று கேட்டார். அவருடைய நண்பர்களோடு சேர்ந்துபோக என்ன செய்ய வேண்டுமென்பதை பில்போ தீர்மானிக்க வேண்டியதிருந்தது.
ஆகவே, சாதாரணமான பிரசித்தமில்லாத ஹாபிட், அதன் தொப்பியை, கைத்தடியை, கைக்குட்டையை மறக்குமளவுக்கு சாகசத்தின் பாதைக்கு அதனது முன்புற கதவு வழியே வெளி்யேபாய்ந்து செல்வதைக் கண்டார். அதனது இரண்டாவது காலைஉணவைக்கூட முடிக்காமல் விட்டுச் சென்றார்.
ஒருவேளை இங்கே நமக்கு ஒரு பாடமிருக்கலாம்.
நீண்ட காலத்திற்கு முன்பு நமது நேசமுள்ள பரலோக பிதா நமக்காக ஆயத்தப்படுத்தின ஜீவிக்கிற பகிர்ந்துகொள்கிற மகத்தான சாகசத்தில் சேர தூண்டுதலை நீங்களும் நானும் உணர்ந்தால் சேவை மற்றும் சீஷத்துவத்தின் அவருடைய பாதையில் தேவ குமாரனும் நமது இரட்சகருமானவரைப் பின்பற்ற இன்றே அந்த நாள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
எல்லா காரியங்களும் சரியாக வரிசையில் நிற்கும்போது அந்த கணநேரத்திற்காக ஒரு வாழ்நாள் காத்திருக்கும் நேரத்தை நாம் செலவழிக்கலாம். தேவனைத் தேடுதலுக்கும், மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதற்கும், மற்றவர்களுடன் நமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுவதற்கும் முழுமையாக அர்ப்பணிப்பதற்கு இதுவே நேரம்.
தொப்பியை, கைத்தடியை, கைக்குட்டையை, குலைந்த வீட்டை உங்களுக்கு பின்னே விட்டுவிடுங்கள்.10
ஏற்கனவே அந்த பாதையில் நடந்துகொண்டிருக்கும் நம்மில் அநேகருக்கு, தைரியமாகவும், மனதுருக்கத்தை பிரயோகித்து, தன்னம்பிக்கையோடு தொடருங்கள்.
பாதையை விட்டுவிட்டவர்களே, தயவுசெய்து திரும்ப வாருங்கள், மீண்டும் எங்களுடன் இணையுங்கள், எங்களை பெலமுள்ளவர்களாக்குங்கள்.
இன்னமும் ஆரம்பிக்காதவர்களே, ஏன் தாமதம்? இந்த மகத்தான ஆவிக்குரிய பயணத்தின் அற்புதங்களை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், உங்களுடைய சொந்த மகத்தான சாகசத்தில் காலெடுத்து வையுங்கள். ஊழியக்காரர்களோடு பேசுங்கள். உங்கள் பிற்காலப் பரிசுத்தவான்களின் நண்பர்களோடு பேசுங்கள். இந்த அற்புதமான பணியைப்பற்றியும் ஒரு அதிசயத்தைப்பற்றியும் அவர்களுடன் பேசுங்கள்.11
ஆரம்பிக்க இதுவே நேரம்!
வாருங்கள், எங்களோடு இணையுங்கள்!
உங்கள் வாழ்க்கைக்கு அதிக அர்த்தமிருக்கலாம், உயர்ந்த நோக்கமிருக்கலாம், பெலமான குடும்ப கட்டுக்களிருக்கலாம், தேவனுடன் ஒரு நெருக்கமான இணைப்பு இருக்கலாம் என்று நீங்கள் உணர்ந்தால், தயவுசெய்து வாருங்கள் எங்களோடு இணையுங்கள்.
தங்களின் சிறந்த பதிப்புகளாக மாறுவதற்கு, வறியோருக்கு உதவிக்கொண்டிருக்கும், இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக்க முயற்சி செய்துகொண்டிருக்கும், ஒரு சமுதாயத்தின் ஜனங்களை நீங்கள் தேடினால் வாருங்கள் எங்களோடு இணையுங்கள்.
இந்த அற்புதமான, ஆச்சரியமான, சாகச பயணத்தைப்பற்றி என்னவென வந்து பாருங்கள்.
வழியிலே உங்களையே நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.
அர்த்தத்தை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.
தேவனை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.
உங்கள் வாழ்க்கையின் மகா சாகச மற்றும் மகிமையான பயணத்தை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.
இதைப்பற்றி மீட்பர் மற்றும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.