2010–2019
இயேசு கிறிஸ்துவுக்கு அசையாத ஒப்புக்கொடுத்தல்
அக்டோபர் 2019 பொது மாநாடு


2:3

இயேசு கிறிஸ்துவுக்கு அசையாத ஒப்புக்கொடுத்தல்

நமது பழைய வழிகளை எட்டா தூரத்தில் விட்டுவிடவும், கிறிஸ்துவில் புதிய ஜீவியத்தை தொடங்கவும் தேவன் நம்மை அழைக்கிறார்.

கடந்த ஏப்ரலில் நான் கின்ஷாசா காங்கோ டெமாக்ரட்டிக் ரிப்பப்ளிக் ஆலயத்தை பிரதிஷ்டை செய்யும் சந்தர்ப்பம் பெற்றேன்.1 விசுவாசமிக்க காங்கோ ஜனத்தின் மகிழ்ச்சியை வார்த்தைகள் விவரிக்க முடியாது, அவர்களது நாட்டில் ஆலயத்தை பிரதிஷ்டை செய்யப்படுவதை பார்க்க உணர்த்தப்பட்டேன்.

காங்கோ நீர்வீழ்ச்சியின் ஓவியம்

கின்ஷாசா ஆலயத்தில் நுழைபவர்கள் காங்கோ நீர்வீழ்ச்சிஎனத் தலைப்பிடப்பட்ட அசல் ஓவியத்தைப் பார்க்கிறார்கள்.2 இயேசு கிறிஸ்துவில் தங்களை நங்கூரமிட தேவையான அசையாத ஒப்புக்கொடுத்தலையும், நமது பரலோக பிதாவின் திட்டத்தின் உடன்படிக்கையின் பாதையைப் பின்பற்ற விசேஷித்த விதமாக நமக்கு நினைவூட்டுகிறது. ஓவியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நீர்வீழ்ச்சி, காங்கோவில் முதல் மனமாறியவர்களிடையே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்த வழக்கத்துக்கு நம் கவனத்தை ஈர்க்கிறது.

சோங்கோ நீர்வீழ்ச்சியின் ஒவியம்

அவர்களது மனமாற்றத்துக்கு முன்பு, அவர்கள் பெயரில்லா கற்பனை பொருட்களை அவை அசாத்திமான வல்லமை பெற்றிருக்கின்றன என நம்பி ஆராதித்தனர்.3 மனமாற்றத்துக்குப் பின்பு சோங்கோ நீர்வீழ்ச்சி போன்ற காங்கோ நதியின் போக்கில் உள்ள எண்ணற்ற நீர்வீழ்ச்சிகளுக்கு யாத்திரை சென்றனர்.4 இந்த மனமாறியோர் அவர்களது பழைய பாரம்பரியங்களை விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதை தேவனுக்கும் பிறருக்கும் அடையாளமாக தாங்கள் முன்பு விக்கிரகமாக வைத்திருந்த பொருட்களை நீர்வீழ்ச்சியில் வீசினர். அவர்கள் அறிந்தே தங்கள் பொருட்களை அமைதியான, ஆழமற்ற தண்ணீரில் போடவில்லை, அவர்கள் அவற்றை மீட்க முடியாதவையாகிறவாறு, பெரிய நீர் வீழ்ச்சியின் இரைச்சலான தண்ணீரில் போட்டார்கள். இச்செயல்கள் இயேசு கிறிஸ்துவுக்கு அசையா ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாயிருந்தன.

பிற இடங்களிலும் காலங்களிலும் ஜனங்கள் இதுபோன்ற வழிகளில் இயேசு கிறிஸ்துவுக்கு தங்கள் ஒப்புக்கொடுத்தல்களை காட்டியிருக்கின்றனர்.5 அந்தி நேபி லேகியர் என அறியப்பட்ட மார்மன் புஸ்தக ஜனங்கள் “தங்கள் ஆயுதங்களை மீண்டும் ஒருபோதும் எடுக்க மாட்டோம் என்பதற்கு சாட்சியாக,” “பூமியின் ஆழத்திலே” அவற்றைப் புதைத்து, “தங்கள் கலக ஆயுதங்களை விட்டு விட்டனர்.” 6 அப்படிச் செய்து, தேவனின் போதனைகளைப் பின்பற்றவும், தங்கள் ஒப்புக்கொடுத்தலில் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை எனவும் வாக்குத்தத்தம் செய்தனர். இந்த ஒப்புக்கொடுத்தல் கர்த்தரிடத்தில் மனம்மாறுவதன் தொடக்கமாகவும், மீண்டும் ஒருபோதும் விலக மாட்டோம் என்பதாகவும் இருந்தது.7

“கர்த்தரிடத்தில் மனமாறுவதென்பது,”பழைய நம்பிக்கை முறையிலிருந்து மாறி, பரலோக பிதாவின் திட்டத்திலும், இயேசு கிறிஸ்துவிலும் அவரது பாவநிவர்த்தியிலும், விசுவாசத்தின் அடிப்படையில் ஒரு புதியதற்கு திரும்புவதாகும். மாற்றம் சுவிசேஷ போதனைகளின் புத்திக்கேற்ற ஏற்றுக்கொள்ளுதலை விட அதிகமானது. இது அடையாளத்தை வடிவமைத்து, வாழ்க்கையின் அர்த்தத்தின் புரிதலை மாற்றி, தேவனிடத்தில் மாறாத இசைவுக்கு வழிநடத்துகிறது. இரட்சகரில் நங்கூரமிடப்படுவதற்கு எதிரான தேவையானவற்றுக்கு எதிரான தனிப்பட்ட வாஞ்சைகளும், உடன்படிக்கையின் பாதையை பின்பற்றுதலும் மங்கிப்போகின்றன, பரலோக பிதாவின் சித்தத்துக்கு பணியும் தீர்மானத்தால் மாற்றப்படுகின்றன.

கர்த்தரிடத்தில் மனமாறுதல், தேவனிடத்தில் அசையா ஒப்புக்கொடுத்தலுடன் தொடங்கி, நாம் யார் என்கிற ஒப்புக்கொடுத்தலின் பாகமாவதுடன் தொடருகிறது. அப்படிப்பட்ட ஒப்புக்கொடுத்தலை உள்வாங்குவது, வாழ்நாள் வேலை மற்றும் பொறுமை தேவைப்படுகிற, தொடர்ந்த மனந்திரும்புதலுமாகும். விளைவாக, இந்த ஒப்புக் கொடுத்தல், நாம் யார் என்பதன் பகுதியாக மாறி, நமது சுயத்தின் உணர்வாக பதிந்து, நமது வாழ்க்கையில் எப்போதும் இருக்கிறது. நமது பெயரை நாம் ஒருபோதும் மறக்காமலிருப்பது போல, நாம் எதைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தாலும் அது பொருட்டின்றி, நமது இருதயங்களிலே பொறிக்கப்பட்ட ஒப்புக்கொடுத்தலை நாம் ஒருபோதும் மறப்பதில்லை.8

நமது பழைய வழிகளை எட்டா தூரத்தில் விட்டுவிடவும், கிறிஸ்துவில் புதிய ஜீவியத்தை தொடங்கவும் தேவன் நம்மை அழைக்கிறார். நாம் இரட்சகரில் விசுவாசத்தை வளர்க்கும்போது, இது நடக்கிறது, அது விசுவாசமிக்கவர்களின் சாட்சியைக் கேட்பதால் தொடங்குகிறது.9 அதன் பிறகு, அவரிடத்தில் மிக உறுதியாக நம்மை நங்கூரமிடுகிற வழிகளில் நாம் செயல்படும்போது அந்த விசுவாசம் ஆழமாகிறது.10

இப்போது, விஷக்காய்ச்சல் அல்லது சாதாரண தடுமனை நாம் கடத்துவதுபோல நாம் அதிகமான விசுவாசத்தை கடத்த முடியுமானால் அது அருமையாக இருக்கும். பின்னர் ஒரு சிறு “ஆவிக்குரிய” தும்மல் பிறரில் விசுவாசத்தைக் கட்டும். ஆனால் அது அவ்விதமாக இருப்பதில்லை. விசுவாசம் வளருகிற ஒரே வழி, ஒருவர் விசுவாசத்தோடு செயல்படுவதால்தான். இச்செயல்கள் பிறரால் விடுக்கப்படும் அழைப்புகளால் அடிக்கடி தூண்டப்படுகிறது, ஆனால் நாம் வேறொருவரின் விசுவாசத்தை “வளர்க்க” முடியாது, அல்லது நமது விசுவாசத்தை பெலப்படுத்த முற்றிலும் பிறரை சார்ந்திருக்கக் கூடாது. நமது விசுவாசம் வளரவேண்டுமானால், ஜெபித்தல், வேதங்களைைப் படித்தல், திருவிருந்தில் பங்கேற்றல், கட்டளைகளைக் கைக்கொள்ளல் மற்றும் பிறருக்கு சேவை செய்யும் விசுவாசத்தைக் கட்டும் செயல்களை நாம் தேர்வுசெய்ய வேண்டும்.

இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசம் வளரும்போது, உடன்படிக்கைகள் என அழைக்கப்படுகிற அவரிடம் வாக்குத்தத்தம் செய்ய தேவன் அழைக்கிறார். இந்த உடன்படிக்கைகள், வாக்குத்தத்தங்கள் அறியப்படுகிறபடி, நமது மனமாற்றத்தின் வெளிப்பாடுகள். உடன்படிக்கைகள் ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கு உறுதியான அஸ்திவாரத்தை உருவாக்குகின்றன. நாம் ஞானஸ்நானம் பெற தெரிந்துகொள்ளும்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ள தொடங்குகிறோம்,11 அவருடன் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள தெரிந்து கொள்கிறோம். அவரைப் போலாகவும், அவரது தன்மைகளை விருத்தி செய்யவும் வாக்களிக்கிறோம்.

உடன்படிக்கைகள் நம்மை இரட்சகரில் நங்கூரமிட வைக்கிறது, நமது பரலோக வீட்டுக்கு வழிநடத்துகிற பாதையில் நம்மை இழுக்கிறது. உடன்படிக்கைகளின் வல்லமை இருதயத்தின் பெலத்த மாற்றத்தை நிலைநிறுத்த நமக்கு உதவுகிறது, கர்த்தரிடத்தில் நமது மனமாற்றத்தை ஆழமாக்குகிறது, நமது முகரூபத்தில் கிறிஸ்துவின் சாயலை முழுவதுமாக பெறுகிறது.12 ஆனால் நமது உடன்படிக்கைகளுக்கு அரை இருதயத்தோடு ஒப்புக்கொடுத்தல், நமக்கு எதையும் உத்தரவாதப்படுத்தாது.13 நாம் சமப்படுத்தவும், அமர்ந்த தண்ணீரில் பழைய வழிகளை வீசவும், கலக ஆயுதங்களை கைப்பிடிகள் வெளியே தெரியும்படி புதைக்கவும் தூண்டப்படலாம். ஆனால் நமது உடன்படிக்கைகளுக்கு குழப்பமான ஒப்புக்கொடுத்தல், பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்தமாக்கும் வல்லமைக்கு வாசலைத் திறக்காது.

கின்ஷாசா ஆலயம்

நமது உடன்படிக்கைகளை காத்துக்கொள்ள நமது ஒப்புக்கொடுத்தல், நிபந்தனையுள்ளதாக இருக்கக்கூடாது, நமது வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடாது. நமது உறுதி கான்ஷாசா ஆலயத்தின் அருகில் ஓடுகிற சார்ந்திருக்கக் கூடிய காங்கோ நதி போலிருக்க வேண்டும். அந்நதி உலகின் பிற நதிகள் போலில்லாமல், வருடம் முழுவதும் தொடர்ந்து ஓடி,14 அட்லாண்டிக் கடலில் விநாடிக்கு 11 மில்லியன் காலன் (41.5 மில்லியன் லி.) நீரைக் கொட்டுகிறது.

நம்பத்தக்கவர்களாகவும் ஸ்திரமானவர்களாகவும் இருக்க தன் சீஷர்களை இரட்சகர் அழைத்தார். அவர் சொன்னார், “ஆகவே நான் உங்களுக்குப் போதிக்கிற மற்றும் கட்டளையிடுகிற காரியங்களை செய்யும்படிக்கு, இதை உங்கள் இருதயங்களில் வையுங்கள்.”15 நாம் நீடித்த மகிழ்ச்சி பெறும்படிக்கு, நமது உடன்படிக்கைகளை காத்துக்கொள்ளும் தீர்மானமான உறுதி தேவனின் வாக்குத்தத்தங்களை முழுமையாக பெற அனுமதிக்கிறது.16

அநேக விசுவாசமிக்க பரிசுத்தவான்கள் தேவனுடன் தங்கள் உடன்படிக்கைகளை காத்துக்கொள்ள தீர்மானித்தவர்கள் என காட்டியிருக்கின்றனர். அப்படிப்பட்ட மூவர் பற்றி நான் சொல்லுகிறேன், சகோதரர் பன்சா முசியோகோ, சகோதரி பன்சா ரெஜினா, சகோதரர் புயி கிட்டாபுங்கி.

பன்சா குடும்பம்

1977ல், இப்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு என அறியப்படுகிற ஜைரே நாட்டில் கின்ஷாசாவில் பன்சாக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் தங்கள் ப்ராட்டஸ்டன்ட் சபை சமுதாயத்தில் மிகவும் மதிக்கப்பட்டார்கள். அவர்களது தாலந்தினிமித்தம், அவர்களது சபை அவர்களது இளம் குடும்பத்தை படிக்க சுவிட்சர்லாந்து போக ஏற்பாடு செய்தது, பல்கலைக் கழக உதவித்தொகை வழங்கியது.

ஜெனிவாவில் இருந்தபோது, கல்லூரி செல்லும் வழியில் சகோதரர் பன்சா அடிக்கடி “பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை” என்ற பெயருடன் ஒரு சிறு சபை கூடுமிடத்தை பார்த்தார். அவர் அதிசயித்தார், “இந்த பிற்காலத்தில் இயேசு கிறிஸ்து இப்போது பரிசுத்தவான்களைப் பெற்றிருக்கிறாரா?” முடிவாக அவர் சென்று பார்க்க முடிவு செய்தார்.

சகோதரர் மற்றும் சகோதரி பன்சாவும் கிளையில் இதமாக வரவேற்கப்பட்டார்கள். “தேவன் ஒரு ஆவியா, காற்றைப் போன்றவரா, அவருடைய சாயலில் அவர் நம்மை எப்படி சிருஷ்டித்தார்,” போன்ற தேவனுடைய தன்மை போன்று அவர்கள் கொண்டிருந்த நீண்ட நாள் கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை பன்சாக்கள் பெர்றார்கள். “அவர் எப்படி சிங்காசனத்தில் அமர முடியும்?” ஒரு சுருக்கமான பாடத்தில், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட கோட்பாட்டை ஊழியக்காரர்கள் விளக்கும்வரை அவர்கள் திருப்தியான பதில் பெறவில்லை. ஊழியக்காரர்கள் சென்ற பின்பு, பன்சாக்கள் ஒருவரையொருவர் பார்த்து, சொன்னார்கள், “நாம் கேட்ட இதுதான் சத்தியமில்லையா?” அவர்கள் தொடர்ந்து சபைக்கு வந்து, ஊழியக்காரர்களை சந்தித்தனர். மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் ஞானஸ்நானம் பெறுதல் பிற விளைவுகள் ஏற்படுத்தும் என அவர்களுக்குத் தெரியும். அவர்களது உதவித்தொகை பறிக்கப்படும், விசாக்கள் திரும்பப் பெறப்படும், அவர்களும் அவர்களது இரண்டு சிறு பிள்ளைகளும் ஸ்விட்சர்லாந்தை விட்டு போக வேண்டியிருக்கும். இருப்பினும், அவர்கள் அக்டோபர் 1979ல் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட முடிவு செய்தனர்.

ஞானஸ்நானத்துக்கு இருவாரங்களுக்குப் பிறகு சகோதரர் மற்றும் சகோதரி பன்சாக்கள் தங்கள் தேசத்தில் சபையின் முதல் மற்றும் இரண்டாம் அங்கத்தினர்களாக திரும்பினர். ஜெனிவா கிளையின் அங்கத்தினர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்து, சபைத் தலைவர்களுடன் தொடர்புகொள்ள உதவினர். ஜைரேவில் அவரது சபையை தேவன் ஸ்தாபிக்கிற வாக்குத்தத்தம் செய்யப்பட்ட நேரத்துக்காக விசுவாசத்துடன் காத்திருக்குமாறு பன்சாக்களை ஊக்குவித்தனர்.

மூப்பர் புயி

அதே சமயம், ஜைரேயிலிருந்து, மற்றொரு பரிமாற்ற மாணவர் சகோதரர் புயி, பெல்ஜியத்தில் படித்துக்கொண்டிருந்தார். அவர் ப்ரூசெல்ஸ் தொகுதியில் 1980ல் ஞானஸ்நானம் பெற்றார். அதன் பின்னர் விரைவில் அவர் இங்கிலாந்தில் ஒரு முழுநேர ஊழியம் செய்தார். தேவன் தன் அற்புதங்களை செய்தார். சகோதரர் புயி தன் நாட்டின் மூன்றாம் சபையின் அங்கத்தினராக ஜைரே திரும்பினார். பெற்றோரின் அனுமதியுடன் அவரது குடும்ப வீட்டில் சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பெப்ருவரி 1986ல் சபைக்கு அதிகார பூர்வ அரசு அனுமதி பெற விண்ணப்பம் செய்யப்பட்டது. ஜைரேவின் மூன்று பிரஜைகளின் கையொப்பம் தேவைப்பட்டது. மகிழ்ச்சி மிக்க கையொப்பமிட்ட மூவர், சகோதரர் பன்சா, சகோதரி பன்சா, மற்றும் சகோதரர் புயி.

சகோதரர் புயியும் பன்சாக்களும்

இந்த உறுதிமிக்க அங்கத்தினர்கள் சத்தியத்தைக் கேட்டபோது அறிந்தனர், இரட்சகரில் நங்கூரமிடவும், உடன்படிக்கையின் பாதையில் பின்தொடர அவர்களுக்கு உதவிய உடன்படிக்கையை ஞானஸ்நானத்தின்போது அவர்கள் செய்தனர். ஆனால் அவர்கள் உருவகமாக தங்கள் பழைய வழிகளை மீண்டும் மீட்கும் நோக்கமில்லாது, ஆர்ப்பரிக்கும் அருவியில் வீசினார்கள். உடன்படிக்கை பாதை ஒருபோதும் எளிதானதாயிருக்கவில்லை. அரசியல் குழப்பம், சபைத்தலைவர்களுடன் தடைபட்ட தொடர்புகள், பரிசுத்தவான்களின் சமுதாயத்தை கட்டுவதில் உள்ள சவால்கள், குறைவான ஒப்புக்கொடுத்தல் உடையவர்களை அதைரியப்படுத்தியிருக்கும். ஆனால் சகோதரர் மற்றும் சகோதரி பன்சாவும் சகோதரர் புயியும் தங்கள் விசுவாசத்தை பாதுகாத்தனர். ஜைரேவில் சபைக்கு அதிகார பூர்வ அங்கீகாரத்துக்கு வழிநடத்திய விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு 33 ஆண்டுகளுக்குப்பிறகு, கின்ஷாசா ஆலயப் பிரதிஷ்டையில் அவர்கள் இருந்தார்கள்.

சகோதரர் மற்றும் சகோதரி பன்சா

பன்சா குடும்பத்தினர் இன்று மாநாட்டு மையத்தில் இங்கு இருக்கின்றனர். அவர்களோடு அவர்களது இரு மகன்கள், ஜூனியர் மற்றும் பில், மருமகள்கள் ஆனி, யூயூ உடனிருக்கிறார்கள். 1986ஜூனியரும் பில்லும், சைரே சபையில் ஞானஸ்நானம் பெற்ற முதல் இருவர். சகோதரர் புயி கான்ஷாசாவில் தன் மனைவி மாகுய் மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் இந்நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சகோதரி மற்றும் சகோதரர் புயி

இந்த முன்னோடிகள் உடன்படிக்கைகளின் அர்த்தத்தை புரிந்து கொண்டனர், அதன் முலம் அவர்கள் “தங்களின் கர்த்தராகிய தேவன் பற்றிய அறிவுக்கு கொண்டுவரப்பட்டு, தங்களின் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவில் களிகூர்ந்தார்கள்.”17

அவர்களைப் பின்பற்றிய இந்த அநேக ஆயிர்க்கணக்கான காங்கோ பரிசுத்தவான்கள் மற்றும் உலகெங்கிலுமுள்ள பிற மில்லியன் கணக்கானோர் போல நாம் எப்படி இரட்சகரில் நங்கூரமிட்டு, விசுவாசத்தோடு இருக்கலாம்? எப்படி என நமக்கு இரட்சகர் போதித்தார். ஒவ்வொரு வாரமும் நாம் திருவிருந்தில் பங்கேற்று, நமது பரலோக பிதாவுடன் உடன்படிக்கை செய்கிறோம். அவரது நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ள சித்தமாயும், எப்போதும் அவரை நினைத்திருக்கவும், அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவும் வாக்களித்து இரட்சகரோடு நமது அடையாளத்தை இணைக்க நாம் வாக்களிக்கிறோம்.18 ஒவ்வொரு வாரமும் இந்த உடன்படிக்கைகளைச் செய்ய மனதளவில் ஆயத்தம் செய்தும், தகுதிப்படுத்துவதும், நம்மை இரட்சகரில் நங்கூரமிடச் செய்து, நமது ஒப்புக்கொடுத்தலை உள்வாங்க உதவிசெய்து, 19உடன்படிக்கையின் பாதையில் நம்மை வல்லமையாக இழுக்கிறது.

சீஷத்துவத்தின் வாழ்நாள் முறையில் ஒப்புக்கொடுக்க நான் உங்களை அழைக்கிறேன். உடன்படிக்கைகள் செய்து காத்துக்கொள்ளுங்கள். உங்கள் பழைய வழிகளை ஆழமான, சுழல் நீர் வீழ்ச்சியில் வீசுங்கள். கைப்பிடிகள் வெளியே நீட்டாமல், உங்கள் கலக ஆயுதங்களை முற்றிலும் புதையுங்கள். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியினிமித்தம், அவற்றை நம்பும்விதமாக மதிக்க உண்மையான நோக்கத்துடன் உடன்படிக்கைகள் செய்தல் உங்கள் வாழ்க்கையை என்றென்றுக்குமாய் மாற்றும். அவரை எப்போதும் நினைத்து, பின்பற்றி, நேசிக்கும்போது, நீங்கள் இரட்சகர்போல் அதிகமாக ஆவீர்கள். அவர் உறுதியான அஸ்திவாரம் என நான் சாட்சியளிக்கிறேன். அவர் நம்பத்தகுந்தவர், அவரது வாக்குத்தத்தங்கள் நிச்சயமானவை. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. தலைவர் ரசல் எம். நெல்சனால் பணிக்கப்பட்டபடி, ஏப்ரல் 14, 2019ல் குருத்தோலை ஞாயிறில் பிரதிஷ்டை நடந்தது.

  2. கீபு நீர்வீழ்ச்சி புகைப்படங்களைப் பயன்படுத்தி, ஓவியர் டேவிட் மெய்க்கே காங்கோ நீர்வீழ்ச்சியை தீட்டினார். கீபு நீர்வீழ்ச்சி கிட்டத்தட்ட 249 மைல்களில் (400 கிலோமீட்டர்கள்) லுபும்பாஷிக்கு வடக்கில், காங்கோ ஜனநாயக குடியரசுக்கு தென்கிழக்கு பகுதியில் உள்ளது.

  3. இப்பொருட்கள் கிக்காங்கோவில்இங்கிசி எனவும், ப்ரென்ச்சில்பெட்டிச்சிஸ் எனவும் அறியப்படுகின்றன. இந்த வார்த்தை ஆங்கிலத்தில் தாயத்து, மூட நம்பிக்கை கயிறுகள் என மொழிபெயர்க்கப்படுகிறது.

  4. நீர்வீழ்ச்சி புகைப்படங்களைப் பயன்படுத்தி, ஜோங்கோ நீர்வீழ்ச்சியை டேவிட் மெய்க்கி தீட்டினார். கிட்டத்தட்ட ஜோங்கோ நீர்வீழ்ச்சி காங்கோ ஜனநாயக குடியரசின் கின்ஷாசாவிலிருந்து, 81 மைல்களுக்கு (130 கிலோமீட்டர்கள்) அப்பால் இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியிலுள்ள ஆறு ஜாடி இங்கிஸ் அல்லது தாயத்துக்களின் ஆறு என அழைக்கப்படுகிறது. இப்பெயர் இவ்வுரையில் விவரிக்கப்பட்டுள்ள பழக்கத்தை குறிக்கிறது.

  5. கி.பி 1000ல் ஐஸ்லாந்து இனங்களின் தலைவர்கள் வருடாந்தர இருவார ஆல்ட்டிங் என்னும் எல்லாரையும் கட்டுப்படுத்தும் சட்டங்கள் இயற்றிய சாதாரண கூட்டத்தில் ஒன்றாக கூடினர். கிறிஸ்தவத்துக்கு மாற அல்லது தொடர்ந்து நோர்ஸ் தெய்வங்களை ஆராதிப்பது பற்றி ஒவ்வொருவருக்காகவும் தீர்மானிக்க தோர்கிர் என்ற பெயருள்ள ஒரு மனிதன் கேட்டுக்கொள்ளப்பட்டான். தன் கூடாரத்தில் தனிமையிலிருந்த மூன்று நாட்களுக்குப்பின், தோகிர் தன் முடிவை அறிவித்தான். இனங்கள் கிறிஸ்தவர்கள் ஆவது. தோர்கிர் தன் கிராமத்துக்கு திரும்பும்போது, அவன் தன் இஷ்ட நோர்ஸ் தெய்வங்களின் விக்கிரகங்களை, இப்போது கோடாபாஸ் அல்லது கடவுள்களின் நீர்வீழ்ச்சி என அறியப்படுகிறதில் போட்டான். இச்செயல் கிறிஸ்தவத்துக்கு தோர்கிரின் முழு மனமாற்றத்தை குறித்தது.

  6. ஆல்மா 23:13; 24:17–18.

  7. ஆல்மா 23:6 பார்க்கவும்; David A. Bednar, “Converted unto the Lord,” Liahona, Nov. 2012, 106–9 பார்க்கவும்.

  8. எசேக்கியேல் 11:19–20; 2 கொரிந்தியர் 3:3 பார்க்கவும்.

  9. ரோமர் 10:14 பார்க்கவும்.

  10. Preach My Gospel: A Guide to Missionary Service, rev. ed. (2018), 203 பார்க்கவும்.

  11. Dallin H. Oaks, “Taking upon Us the Name of Jesus Christ,” Ensign, May 1985, 80–83 பார்க்கவும்.

  12. ஆல்மா 05:12-14 பார்க்கவும்.

  13. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 82:10 பார்க்கவும்.

  14. காங்கோ நதி உலகத்திலேயே மிக ஆழமான, இரண்டாவது மிக சக்தியுள்ள, ஒன்பதாவது நீள நதியாகும். அது பூமத்திய ரேகையை மும்முறை கடப்பதால், குறைந்தது நதியின் ஒரு பகுதி எப்போதும் மழைக்காலத்தில் இருந்து ஒழுங்கான நீரோட்டத்தை கொடுக்கிறது. ஒழுங்கான நீரோட்டம் என்பது நீரோட்டம் வருடம் முழுவதும் தொடர்ந்திருக்கும். பல வருடங்களில் இந்த விகிதம் மாறினாலும், விநாடிக்கு சராசரி 41000கன அடிகளாக இருக்கும்.

  15. Joseph Smith Translation, Luke 14:28–28 (in Luke 14:27, footnote b).

  16. 2 நேபி 9:18; Russell M. Nelson, “Joy and Spiritual Survival,” Liahona, Nov. 2016, 81–84 பார்க்கவும். தலைவர் நெல்சன் சொன்னார், “மகிழ்ச்சி விசுவாசிகளின் பரிசு (page 84).”

  17. ஆல்மா 37:9.

  18. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77 பார்க்கவும். 2019 ஜூன் ஊழிய தலைமை பயிலகத்தில், திருவிருந்துக்குப்பிறகு, தன் வழக்கமான செய்திக்கு முன்பு, தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னார், “இன்று நான் உடன்படிக்கை செய்தல் நான் ஆயத்தம் செய்துள்ள செய்தியை விட மிக மிக முக்கியமானது, என்ற எண்ணம் வந்திருக்கிறது. நான் திருவிருந்தில் பங்கேற்றபோது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தை என் மீது தரித்துக்கொள்ள சித்தமாயிருக்கிறேன் மற்றும் அவரது கட்டளைகளைக் கைக்கொள்ள நான் சித்தமாயிருக்கிறேன் என நான் உடன்படிக்கை செய்தேன். நாம் திருவிருந்தில் பங்கேற்பது, ஞானஸ்நானத்தின்போது செய்த உடன்படிக்கைகளை புதுப்பிக்க நாம் திருவிருந்தில் பங்கேற்கிறோம் என அடிக்கடி நான் கருத்துக்களை கேள்விப்படுகிறேன். அது உண்மையாயிருக்கும்போது, அது அதைவிட அதிகமானது. நான் ஒரு புதிய உடன்படிக்கை பண்ணினேன். நீங்கள் புதிய உடன்படிக்கைகள் செய்திருக்கிறீர்கள். … அதற்காக இப்போது, நாம் எப்போதும் அவரது ஆவியைக் கொண்டிருப்போம் என அவர் ஒரு வாக்கு கொடுக்கிறார். என்ன ஒரு ஆசீர்வாதம்!”

  19. 3 நேபிi 18:12 பார்க்கவும்.