2010–2019
நமது சரீரங்கள் மீது கட்டுப்பாட்டை நமது ஆவிக்குக் கொடுத்தல்
அக்டோபர் 2019 பொது மாநாடு


2:3

நமது சரீரங்கள் மீது கட்டுப்பாட்டை நமது ஆவிக்குக் கொடுத்தல்

நாம் இந்த வாழ்க்கையில் கற்கக்கூடிய மிக முக்கியமான ஒன்று, நித்திய ஆவிக்குரிய தன்மையை எப்படி வலியுறுத்துவது மற்றும் நமது தீய ஆசைகளை கட்டுப்படுத்துவது.

என் அன்பு சகோதர சகோதரிகளே, கடந்த ஆண்டு அக்டோபர் பொதுமாநாடு நெருங்கியபோது, அக்டோபர் 3, 1918ல், தலைவர் ஜோசப் எப். ஸ்மித்துக்கு கொடுக்கப்பட்ட ஆவி உலகம் பற்றிய தரிசனத்தின் 100வது வருடம் பற்றி முக்கியமாக பேச நான் எனது மாநாட்டு செய்தியை ஆயத்தம் செய்தேன்.

மொழிபெயர்ப்புக்காக என் செய்தியை நான் சமர்ப்பித்த சில நாட்களில், என் அன்பு நித்திய தோழி பார்பரா, தன் பூலோக சோதனைக்காலத்தை முடித்து, ஆவிஉலகுக்கு கடந்து போனாள்.

நாட்கள் வாரங்களாகி, பின்பு மாதங்களாகி, இப்போது பார்பரா கடந்து சென்று ஓராண்டு ஆகிறது, நான் இந்த வசனத்தை, முற்றிலும் பாராட்டுகிறேன். “மரிக்கிறவர்களின் இழப்புக்காக நீங்கள் அழும்படிக்கு, நீங்கள் ஒன்றாக அன்புடன் வாழ்வீர்கள்.”1 நானும் பார்பராவும் 67 வருடங்கள் “ஒன்றாக அன்புடன் வாழ” ஆசீர்வதிக்கப்பட்டோம். ஆனால் நாம் நேசிக்கிறவர்களின் இழப்புக்காக அழுவதென்றால் என்ன என மிகவும் உண்மையான விதமாக நான் கற்றுவிட்டேன். நான் அவளை நேசிக்கிறேன், தேடுகிறேன்.

அவர்கள் போகும்வரை நமக்காக பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை முழுமையாக பாராட்ட நம்மில் அதிகமானோர் தவறிவிடுகிறோம் என நினைக்கிறேன். பார்பரா எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தாள் என நான் அறிவேன், ஆனால் அவளது நேரத்தை தொடர்ந்து குடும்பமும், சபையும், சமூகமும் கேட்டது என நான் முழுமையாக அறியவில்லை. எங்கள் குடும்பத்தை நடக்க வைத்த, அநேக வருடங்களாக ஆயிரக்கணக்கான நேரங்களில், தொடர்ந்து ஒதுக்கப்பட்ட முயற்சிகள் இருந்தன. இவை அனைத்திலும், அவள் குரலை உயர்த்தியதையோ, அல்லது ஒரு அன்பற்ற வார்த்தை பேசியதையோ குடும்பத்தில் யாரும் கேட்டதில்லை.

கடந்த ஆண்டில் வெள்ளம் போன்ற நினைவுகள் என்னை கடந்து சென்றிருக்கின்றன. ஏழுபிள்ளைகளுக்கு, அம்மாவாக இருக்க சரீரபூர்வமாக கஷ்டமான தேர்வை அவள் செய்ததைப் பற்றி நான் நினைக்கிறேன். வீட்டை நடத்தும் ஒரே தொழிலையே அவள் எப்போதும் விரும்பினாள், அவள் எல்லாவகையிலும் பரிபூரண மேதையாக இருந்தாள்.

அடிக்கடி எங்கள் பிள்ளைகளையும், என்னையும் எப்படி கவனித்தாள் என வியந்திருக்கிறேன். உணவு தயாரிப்பது மட்டுமே அபார வேலை, ஒவ்வொரு வாரமும், எங்கள் குடும்பம் உருவாக்கிய மலைபோன்ற அழுக்குத் துணி துவைத்தல், பிள்ளைகளுக்கு காலணிகளை பராமரித்து, பொருத்தமான உடைகளை பராமரிப்தை சொல்ல வேண்டியதில்லை. எங்களுக்கு முக்கியமான பிற எண்ணற்ற பிரச்சினைகளை நாங்களனைவரும் அவளிடம் கொண்டு சென்றோம். அவைகள் எங்களுக்கு முக்கியமானதால், அவை அவளுக்கும் முக்கியமானது. அவள் மனைவியாக, தாயாக, சிநேகிதியாக, அண்டை வீட்டாராக, தேவ குமாரத்தியாக, ஒரே வார்த்தையில் சொன்னால், மகத்துவமானவள்.

இப்போது அவள் கடந்து சென்றுவிட்டாள், அவளது வாழ்வின் கடைசி மாதங்களில், நான் வீட்டுக்கு வந்தபோது, அவளருகில் இருந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். சில அவளுக்குப் பிடித்த பாடல்களின் முடிவுகளை நான் அவளது கையை பிடித்துக்கொண்டு பார்த்தோம், திரும்ப திரும்ப பார்த்தோம், ஏனெனில் முந்தய மாலைதான் அதைப் பார்த்தோம் என நினைவுகொள்ள ஆல்க்கெமியர் அவளை அனுமதிக்கவில்லை. கையைப்பிடித்திருந்த அந்த சிறப்பு நேர நினைவுகள், இப்போது எனக்கு மிக அருமையானவை.

சகோதர சகோதரிகளே, அன்புடன் உங்கள் குடும்பத்தினரின் கண்களைப் பார்ப்பதைத் தவறவிடாதீர்கள். பிள்ளைகளே, பெற்றோரே, ஒவ்வொருவரிடமும் சென்று, உங்கள் அன்பையும் பாராட்டையும் தெரிவியுங்கள். என்னைப்போலவே, உங்களில் சிலர், அப்படிப்பட்ட முக்கிய தொடர்புக்கான நேரம் கடந்துவிட்டது என காண ஒருநாள் எழுந்திருப்பீர்கள். நன்றியுணர்வு, நல்ல நினைவுகள், சேவை மற்றும் அதிக அன்போடு நிரம்பிய இருதயங்களுடன் ஒவ்வொரு நாளையும் வாழுங்கள்.

கடந்த ஆண்டின்போது, முன்பு எப்போதையும் விட நமது பரலோக பிதாவின் திட்டம் பற்றி மிக ஆழமாக சிந்தித்திருக்கிறேன். தன் குமாரனாகிய கொரியாந்தனுக்கு போதிக்கும்போது, ஆல்மா இதை, “மகா மகிழ்ச்சியின் திட்டம்” என குறிப்பிட்டான், 2

திட்டம் பற்றி நான் நினைக்கும்போது, என் மனதில் வந்துகொண்டிருக்கிற வார்த்தை “மறு சந்திப்பு.” நமது அன்பான பரலோக பிதாவால் வடிவமைக்கப்பட்ட, குடும்ப சந்திப்பின் சாத்தியத்தை மாபெரும் மகிமையை மையமாகக் கொண்ட, தேவனின் குடும்பத்தில், தலைமுறை தலைமுறையாக, கணவர்களையும் மனைவிகளையும், பெற்றோரையும் பிள்ளைகளையும் நித்தியமாக மறுபடியும் இணைக்கிற திட்டம் இது.

நான் மீண்டும் பார்பராவுடன் இருப்பேன் என்ற அந்த நினைப்பு எனக்கு ஆறுதலும் உறுதியும் கொடுக்கிறது. அவளது வாழ்வின் கடைசியில் அவளது சரீரமும் மனமும் பாடுபட்டாலும், அவளது ஆவி, பெலமாயும், உத்தமமாயும், தூய்மையாயும் இருந்தது. முழு நம்பிக்கையுடன், சமாதானமான உறுதியுடன், “தேவனுடைய இன்பமான நியாய விசாரணைக் கூண்டின்”3 முன் நிற்கும் நாள் வரும்போது, எல்லாவற்றிலும் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள். ஆனால் இன்னும் இருதினங்களில், 91 வயதாகிற நான் இங்கிருக்கிறேன், நான் இன்னும் வியக்கிறேன், “நான் ஆயத்தமாயிருக்கிறேனா? மீண்டும் அவளது கரத்தை பிடிக்கும்படியாக தேவையான எல்லாவற்றையும் செய்கிறேனா?”

மிக எளிய வாழ்க்கையின் அடிப்படை நிச்சயம், நாம் அனைவரும் மரிக்கவிருக்கிறோம். நாம் முதியோராக அல்லது இளமையாக, எளிதாக அல்லது கடினமாக, பணக்காரராக அல்லது தரித்திரராக, நேசிக்கப்பட்டு அல்லது தனிமையாக, மரித்தாலும் ஒருவரும் மரணத்துக்குத் தப்புவதில்லை.

சில வருடங்களுக்கு முன், குறிப்பாக இந்த அர்த்தமுடைய ஒன்றை தலைவர் ஹிங்க்லி சொன்னார்: “நாம் சரியாக திருமணம் செய்து, சரியாக வாழ்ந்தால், மரணத்தின் நிச்சயம் மற்றும் காலம் செல்வது பொருட்டின்றி, நமது உறவு தொடரும், என்ற அறிவிலிருந்து வருகிற வாக்குறுதி எவ்வளவு இனிமையானது, சமாதானம் எவ்வளவு ஆறுதலளிக்கிறது.”4

நான் நிச்சயமாக சரியாக திருமணம் செய்தேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தலைவர் ஹிங்க்லி சொன்னபடி, அது போதாது. நான் சரியாகவும் வாழ வேண்டும்.5

இன்று விசேஷமாக நீங்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவு செய்தால், அங்கு தேவன் மற்றும் அவரது பிள்ளைகளுக்காக அவரது திட்டம் பற்றிய உண்மையான சத்தியங்கள் அல்லது பொய்யான கொள்கைகளை எந்த குரலும் அறிவிக்கும்போது, சரியாக வாழ்வது கொஞ்சம் குழப்பமான கொள்கையாக இருக்கலாம். நன்றி கூறத்தக்கதாக, நாம் மரிக்கும்போது, நன்றாக ஆயத்தப்படும்படிக்கு, எப்படி வாழ்வது என அறிய சபையார், நித்திய சத்திய உண்மையான சுவிசேஷ கொள்கைகளைப் பெற்றிருக்கின்றனர்.

நான் பிறப்பதற்கு சில மாதங்கள் முன்பு, என் அப்போஸ்தலரான தாத்தா, மூப்பர் மெல்வின் ஜே. பல்லார்ட் சரியாக வாழ்வதென்றால் என்ன என்பதன் சாராம்சத்தை அறிய அநேக ஜனங்களுக்கு ஒரு செய்தி கொடுத்தார். ஆத்துமாவின் போராட்டம் என்ற தலைப்பிடப்பட்ட அவரது செய்தி, நமது மாம்ச சரீரம் மற்றும் நமது நித்திய ஆவிகளுக்கிடையே நடந்து கொண்டிருக்கிற யுத்தம் பற்றி இருந்தது.

அவர் சொன்னார், “எப்போதும் எந்த ஆணும் அல்லது பெண்ணும் எப்போதும் செய்கிற யுத்தம் தன்னுடனேயே, இச்சைகளுடனும், தாகங்களுடனும், மாம்ச ஆசைகளுடனும்தான்.” சாத்தான் “நமது ஆத்துமாக்களின் விரோதி,” என விளக்கினார்.6 “ஆகவே நமது பிரதான யுத்தம், நமது தெய்வீக மற்றும் ஆவிக்குரிய தன்மைக்கும், மாம்ச சுபாவ மனுஷனுக்கும் இடையேதான்.” சகோதர சகோதரிகளே, காரியங்களை உங்களுக்கு போதிக்கிற, பரிசுத்த ஆவியானவரின் செல்வாக்கு மற்றும் ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள் மூலம் நாம் ஆவிக்குரிய உதவி பெறலாம்.7 ஆசாரியத்துவ வல்லமை மற்றும் ஆசீர்வாதங்கள் மூலமும் உதவி வரலாம்.

இப்போது நான் கேட்கிறேன், “உங்கள் ஒவ்வொருவரின் யுத்தம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது?”

தலைவர் டேவிட் ஓ. மெக்கே சொன்னார், “மனிதனின் பூலோக வாழ்க்கை, அவன் தன் மாம்ச தன்மைக்கு ஆறுதலும் அழகும் கொடுக்கிறவற்றுக்காக அல்லது, ஆவிக்குரிய குணங்களை பெறுவதை தன் வாழ்வின் நோக்கமாக ஆக்க, தன் முயற்சிகளையும், மனதையும், ஆத்துமாவையும் பயன்படுத்துவானா என்ற சோதனைதான்.”8

மாம்ச மற்றும் ஆவிக்குரிய தன்மைகளுக்கிடையேயான யுத்தம் புதியதல்ல. தன் ஜனங்களுக்கு தன் இறுதி பிரசங்கத்தில் பென்யமீன் இராஜா போதித்தான், “ஜென்மசுபாவ மனுஷன் தேவனுக்கு எதிரியாக இருக்கிறான். அவன் பரிசுத்த ஆவியின் ஏவுதலுக்கு உடன்பட்டு, சுபாவ மனுஷனை அகற்றி, கர்த்தராகிய கிறிஸ்துவின் பாவநிவர்த்தியால் பரிசுத்தவானாகாவிட்டால், அவன் ஆதாமின் வீழ்ச்சி தொடங்கி என்றென்றைக்கும் தேவனுக்கு சத்துருவாய் இருப்பான்.” 9

அப்போஸ்தலனாகிய பவுல் போதித்தான், “மாம்சத்துக்குரியவர்கள் மாம்ச காரியங்களை பார்க்கிறார்கள், ஆவிக்குரியவர்கள் ஆவியின் காரியங்களைப் பார்க்கிறார்கள்.

“ஏனெனில் மாம்ச சிந்தை மரணம், ஆவிக்குரிய சிந்தை ஜீவனும் சமாதானமும் ஆகும்.”10

நாம் இந்த வாழ்க்கையில் கற்கக்கூடிய மிக முக்கியமான ஒன்று, நித்திய ஆவிக்குரிய தன்மையை எப்படி வலியுறுத்துவது மற்றும் நமது தீய ஆசைகளை கட்டுப்படுத்துவது என எனக்கு தெளிவாக தெரிகிறது. இது அவ்வளவு கடினமாக இருக்கக் கூடாது. நமது மாம்ச சரீரத்தைவிட நீண்ட நாட்களாக இருந்திருக்கிற நமது ஆவி, அநித்திய இருப்பில், தீமைக்கு மேலாக நீதியை தேர்வு செய்வதில் ஏற்கனவே வெற்றிபெற்றிருக்கிறது. இந்த பூமி உண்டாக்கப்படுவதற்கு முன்பே, நம்மை நேசித்த மற்றும் இப்போதும் நம்மை தொடர்ந்து நேசிக்கிற பரலோக பெற்றோரின், குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் நாம் ஆவி உலகில் வாழந்தோம்.

ஆம், அந்த அநித்தியத்துக்கு முந்தய வசிப்பில், நாம் வாழ்க்கையை மாற்றும் தீர்மானங்களும் தேர்வுகளும் செய்ய வேண்டியிருந்தது. இந்த கோளத்தில் வாழ்ந்த அல்லது வாழப்போகிற ஒவ்வொருவரும், நமது இரட்சிப்புக்காக பரலோக பிதாவின் திட்டத்தை ஏற்பதைத் தெரிந்துகொள்ள ஒரு முக்கிய தீர்மானத்தை செய்தோம். ஒரு வெற்றிகரமான நித்திய தன்மை மற்றும் நித்திய இலக்கின் நிரூபிக்கப்பட்ட வரலாற்றுடன் நாம் பூமிக்கு வந்தோம்.

அது பற்றி ஒரு கணம் சிந்திப்போம். இதுவே உண்மையில் எப்போதுமிருந்திருக்கிற நீங்கள், நித்திய ஆவிக்குரிய வேர்களுடன் எல்லையற்ற சாத்தியங்கள் நிறைந்த எதிர்காலத்துடன், தேவனின் ஒரு குமாரன் அல்லது குமாரத்தி. நீங்கள் முதலாவது, முக்கியமான, எப்போதும்—ஆவிக்குரிய நபர். ஆகவே நமது மாம்ச தன்மையை ஆவிக்குரிய தன்மைக்கு மேலாக தெரிந்துகொள்ளும்போது, நமது உண்மையான, மெய்யான, அதிகாரபூர்வ, ஆவிக்குரியவர்கள் என்பதற்கு மாறாக, ஒன்றை நாம் தெரிந்து கொள்கிறோம்.

இருப்பினும், மாம்சமும் உலக ஆசைகளும் நமது தீர்மானம் செய்தலை குழப்பமாக்குகின்றன என்பதில் கேள்வி இல்லை. அநித்தியத்துக்கு முந்தய ஆவி உலகத்துக்கும், இந்த அநித்திய உலகத்துக்கும் இடையே, மறதித்திறை இறக்கப்பட்டதுடன், ஒருவர் தேவனுடன் நமது உறவையும், நமது ஆவிக்குரிய தன்மையையும் பார்க்காதிருக்கலாம், நமது மாம்ச தன்மை நமக்கு இப்போது தேவைப்படுவதற்கு முன்னுரிமை கொடுக்கலாம். மாம்ச காரியங்களுக்கு மேலாக ஆவிக்குரிய காரியங்களை தெரிந்துகொள்ள கற்றல், இந்த பூலோக அனுபவம் ஏன் என்பது பரலோக பிதாவின் திட்டத்தின் பிரதான காரணங்களில் ஒன்று. மாம்சத்துக்கு இடங்கொடுத்து, நாம் செய்கிற தவறுகள் உள்ளிட்ட நமது பாவங்கள், தொடர்ந்த மனந்திரும்புதலால் ஜெயிக்கப்பட்டு, நாம் ஆவிக்குரியவிதமாய் பார்க்கும்படியாக, இதனால்தான் நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் திடமான, உறுதியான அஸ்திவாரத்தின் மீது திட்டம் கட்டப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் ஆவிக்குரிய கோட்பாட்டுடன் ஒத்துப்போக, நமது சரீர தாகங்களை கட்டுப்படுத்துவதற்கு இதுவே தருணம். அதனால்தான் நமது மனந்திரும்புதலின் நாளை நாம் தள்ளிப்போடக்கூடாது.11

மனந்திரும்புதல், ஆகவே நமது சுயத்துடன் நமது போரில் தவிர்க்க முடியாத ஆயுதமாகிறது. கடந்த பொது மாநாட்டில், தலைவர் ரசல் எம். நெல்சன் இந்த யுத்தத்தைக் குறிப்பிட்டு, நமக்கு நினைவூட்டினார், “நாம் மனந்திரும்ப தெரிந்துகொள்ளும்போது, நாம் மாற தெரிந்துகொள்கிறோம். நமது சிறந்த நிலமைக்குள் நம்மை மாற்ற, இரட்சகரை நாம் அனுமதிக்கிறோம். ஆவிக்குரியவிதமாக வளரவும், அவரது மீட்பின் சந்தோஷமான, சந்தோஷத்தைப் பெறவும் நாம் தேர்ந்தெடுக்கிறோம். நாம் மனந்திரும்ப தெரிந்துகொள்ளும்போது, அதிகமாக இயேசு கிறிஸ்துவைப் போலாக மாற நாம் தெரிந்தெடுக்கிறோம்!”12

ஒவ்வொரு இரவிலும், பரலோக பிதாவுடன் ஜெபத்தில் என் நாளை பரிசீலிக்கும்போது, நான் ஏதாவது தவறு செய்தால் நான் மன்னிக்கப்பட கேட்டு, நாளை சிறப்பாக இருக்க வாக்களிக்கிறேன். இந்த வழக்கமான அன்றாட மனந்திரும்புதல், எனக்கு யார் பொறுப்பு என என் ஆவிக்கு நினைவூட்ட உதவுகிறது என நான் நம்புகிறேன்.

மற்றொரு ஆதாரம், நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மற்றும் அன்பின் நினைவுகூரலாக திருவிருந்தில் பங்கேற்று நாம் அனைவரும் ஆவிக்குரிய விதமாக நம்மை புதுப்பித்துக் கொள்ளும் வாராந்தர சந்தர்ப்பம் நமக்கிருக்கிறது.

சகோதர சகோதரிகளே, நீங்கள் உங்கள் மாம்ச தன்மையை தோற்கடிப்பதில் எங்கிருக்கிறீர்கள் என சிந்திக்க சிறிது மெதுவாகச் செல்லவும், நேரம் வரும்போது உங்கள் தெய்வீக ஆவிக்குரிய தன்மைக்கு பெலனளித்து, உங்களது அன்புக்குரியோருடன் ஆவி உலகத்தில் மகிழ்ச்சியான மறுசந்திப்புக்கு கடந்து செல்ல, நான் உங்களை ஊக்குவிக்கிறேன். அது பற்றி நான் சாட்சியளித்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தாழ்மையாக ஜெபிக்கிறேன், ஆமென்.