2010–2019
செய்தி, அர்த்தம் மற்றும் பல
அக்டோபர் 2019 பொது மாநாடு


2:3

செய்தி, அர்த்தம் மற்றும் பல

நமது நாட்களின் இடைவிடாத கூச்சலின், தம்பட்ட சத்தத்தின் வழியே நமது வாழ்க்கையின், நமது விசுவாசத்தின், நமது சேவையின் மையமாக கிறிஸ்துவைப் பார்க்க நாம் முயற்சிப்போமா.

சகோதர சகோதரிகளே, கடந்த ஏப்ரலில் அவனுடைய வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் பொது மாநாட்டைக் கவனித்துக்கொண்டிருந்த ஏழு மாதங்களேயான இவன் சாமி ஹோ சிங்.

சாமி ஹோ சிங் மாநாட்டைக் கவனித்துக்கொண்டிருக்கிறான்

தலைவர் ரசல் எம்.நெல்சனையும் பிற பொது அதிகாரிகளையும் ஆதரிக்க நேரம் அணுகியபோது சாமியின் கரங்கள் அவனுடைய பாட்டிலைப் பிடித்துக்கொண்டிருப்பதில் சுறுசுறுப்பாயிருந்தன. ஆகவே அவன் அடுத்த சிறந்த காரியத்தைச் செய்தான்.

ஆதரித்தலின்போது சாமி ஹோ சிங்

உங்களுடைய காலால் வாக்களிப்பதன் கருத்துக்கு ஒரு முற்றிலும் புதிய அர்த்தத்தை சாமி கொடுக்கிறான்.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அரையாண்டு மாநாட்டிற்கு வரவேற்கிறோம். ஆண்டிற்கு இருமுறை வருகிற இந்தக் கூட்டங்களின் அர்த்தம் குறித்த ஒரு விவாதத்திற்கு களம் அமைக்க, லூக்காவின் புதிய ஏற்பாடு விவரத்திலிருந்து இந்தக் காட்சியை நான் அழைக்கிறேன்.1

“பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.

“… ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு இதென்ன என்று விசாரித்தான்

“… நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள்.

“அப்பொழுது அவன், இயேசுவே, தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.”

அவனுடைய தைரியத்தில் திடுக்கிட்ட ஜனங்கள் அந்த மனிதனை அமைதிப்படுத்த முயன்றனர், ஆனால் “அவன் மிக அதிகமாய்க் கூப்பிட்டான்” என சொல்லுகிறது. அவனுடைய விடாமுயற்சியின் விளைவாக, அவன் பார்வையடையவும் குணமாக்கப்படவும், விசுவாசம் நிறைந்த அவனுடைய வேண்டுதலைக் கேட்ட இயேசுவிடம் அவன் கொண்டுவரப்பட்டான்.2

இதைப் படிக்கிற ஒவ்வொறு முறையும் இந்த தெளிவான சிறிய சித்திரத்தால் நான் அசைக்கப்படுகிறேன். அந்த மனிதனின் துன்பத்தை நாம் உணரலாம். இரட்சகரின் கவனத்திற்காக அவன் கூச்சலிட்டதை கிட்டத்தட்ட நாம் கேட்கலாம். அமைதியாயிருக்க அவன் மறுத்ததில் நாம் புன்னகைக்கிறோம், உண்மையில், எல்லோரும், அவனுடைய குரலின் சத்தத்தைக் குறைக்க கூறியபோது குரலை உயர்த்த அவன் தீர்மானித்தான். அதனிலும் அதற்குள்ளும் இது மிக தீர்மானிக்கப்பட்ட விசுவாசத்தின் இனிய கதை. ஆனால் எல்லா வேதத்திலுமிருப்பதைப்போல இதை நாம் அதிகமாக படிக்கும்போது அதனுள் அதிகமானவற்றை கண்டுபிடிக்கலாம்.

அவனைச் சுற்றியுள்ள மக்களின் ஆவிக்குரிய உணர்வால் இந்த மனிதனின் நல்லுணர்வு அவனுக்கிருந்தது என்ற ஒரு சிந்தனை, சமீபத்தில் என்னைத் தாக்கியது. இந்தக் கதையின் முற்றிலுமான முக்கியத்துவம், “இந்தக் குழப்பத்திற்கு அர்த்தமென்ன?” என்று கேட்ட அநாதமயமான ஒரு சில பெண்கள்மீதும் ஆண்கள்மீதும் இணைக்கப்பட்டிருக்கின்றன, இந்த ஆரவாரத்திற்கு கிறிஸ்துவை காரணமாக காட்சி அடையாளம்காண நீங்கள் விரும்பினால், அவரே “பொருள் ஆளுமையாயிருந்தார்”. இந்த சிறிய பரிமாற்றத்தில் நம் அனைவருக்கும் ஒரு பாடமிருக்கிறது. விசுவாசம் மற்றும் திடநம்பிக்கையின் காரியங்களில் உண்மையில் கொஞ்சமிருப்பவர்களுக்கு நேராக உங்கள் விசாரிப்பை வழிகாட்ட இது உதவுகிறது! “குருடனுக்கு குருடன் வழிகாட்டக்கூடுமோ?” என ஒருசமயம் இயேசு கேட்டார். “இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?”3

விசுவாசத்திற்கான இத்தகைய ஒரு தாகம், இந்த மாநாடுகளின் நமது நோக்கமாயிருக்கிறது, இன்று நம்முடன் சேர்ந்துகொள்வதில் இந்த தேடுதல் ஒரு பரவலாக பகிரப்படுகிற முயற்சி என நீங்கள் உணருவீர்கள் உங்களைச் சுற்றிப் பாருங்கள். இங்கே இந்த அடிப்படையில் எல்லா திசைகளிலிருந்தும் வருகிற எல்லா அளவுகளிலும் குடும்பங்களை நீங்கள் காண்பீர்கள். பழைய நண்பர்கள் ஒன்றிணைதலில் ஆனந்தமாக தழுவிக்கொள்கிறார்கள், ஒரு அற்புதமான தேர்ந்திசைக் குழுவினர் உற்சாகமூட்டுகிறார்கள், எதிர்ப்பாளர்கள் தங்களுடைய சிறிய பெட்டிகளிலிருந்து கூச்சலிடுகிறார்கள். முந்திய நாளின் ஊழியக்காரர்கள் தங்கள் பழைய கூட்டாளிகளைத் தேடுகிறார்கள், சமீபத்தில் ஊழியத்திலிருந்து திரும்பிய ஊழியக்காரர்கள் முற்றிலும் புதிய துணைகளைத் தேடுகிறார்கள் (நான் என்ன சொல்கிறேன் என உங்களுக்குத் தெரியுமானால்!) புகைப்படங்கள்? பரலோகம் நமக்குதவுகிறது! ஒவ்வொரு கையும் கைப்பேசியுடனிருக்க “ஒவ்வொரு அங்கத்தினரும் ஒரு ஊழியக்காரர்” என்பதிலிருந்து “ஒவ்வொரு அங்கத்தினரும் ஒரு புகைப்படக்காரர்” என்பதாக நாம் உருமாறினோம். இந்த எல்லா மகிழ்ச்சியான குழப்பத்திற்கு மத்தியில், “இதற்கெல்லாம் அர்த்தம் என்னவென?” ஒருவர் நியாயமாகக் கேட்கலாம்.

நமது புதிய ஏற்பாடு கதையைப்போல, இந்த மாநாடு பாரம்பரியம் நமக்கு வழங்கக்கூடிய எல்லாவற்றையும் மீறி, பார்வையுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அதை அடையாளம் காண்பார்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவை மையமாக நாம் காணாதவரை இது சிறியதாயிருக்கும் அல்லது ஒன்றுமில்லாததாயிருக்கும். நாம் தேடுகிற பார்வையை பிடித்துக்கொள்ள, அவர் வாக்களிக்கிற குணப்படுத்தல், நாம் எப்படியோ அறிகிற முக்கியத்துவம் இங்கேயிருக்கிறது, அது இருப்பதைப்போல மகிழ்ச்சியாயிருந்து குழப்பத்தினூடே நாம் போய் நமது கவனத்தை அவர்மேல் வைக்கவேண்டும். உரையாற்றுபவர் ஒவ்வொருவரின் ஜெபம், பாடுகிற அனைவரின் நம்பிக்கை, விருந்தாளிகள் ஒவ்வொருவருடைய பயபக்தி, அவருடைய சபையாயிருக்கிற ஜீவிக்கிற கிறிஸ்துவின், தேவஆட்டுக்குட்டியின், சமாதான பிரபுவின் ஆவிகளை வரவேற்பதில் அனைவரும் அர்ப்பணிக்கப்பட்டவர்கள்.

ஆனால், அவரைக் காண நாம் ஒரு மாநாட்டிலிருக்க வேண்டியதில்லை. முதல் முறையாக மார்மன் புஸ்தகத்தை ஒரு பிள்ளை படித்து, அபிநாதியின் தைரியத்தில் அல்லது 2000 இளம் போர்வீரர்களின் அணிவகுப்பில் ஈர்க்கப்பட்ட பிள்ளையிடம் ஒவ்வொரு பக்கத்திலும் பேருருவமாக நின்றுகொண்டிருக்கிற, அதிலுள்ள விசுவாசத்தை மேம்படுத்தும் பிற நபர்கள் அனைவருக்கும் இணைப்பை வழங்குகிற இயேசுவே இந்த அற்புதமான காலக்கிரமத்தில் மையமானவராக இருக்கிறாரென நாம் சேர்க்கலாம்,

அதைப்போன்று, நமது விசுவாசத்தைப்பற்றி ஒரு நண்பர் அறிந்துகொள்ளும்போது, தனித்துவமான சில கூறுகளாலும், உணவு கட்டுப்பாடு, சுயசார்பு பொருட்கள், முன்னோடிகளின் மலைஏற்றங்கள், எண்ணியல் குடும்ப மரங்கள், கரியில் வேகவைக்கப்பட்ட நேர்த்தியான நடுத்தர அரிதான மாட்டிறைச்சி பரிமாறப்படுதல், சந்தேகத்துக்கு இடமின்றி சிலர் எதிர்பார்க்கிற கூறப்படாத ஏராளமான பிணைய மையங்கள் போன்ற முன்பின் தெரியாத நமது மத நடைமுறையின் சொல்அகராதியாலும் அவன் அல்லது அவள் சிறிது மூழ்கடிக்கப்படலாம். ஆகவே, நமது புதிய நண்பர்களின் அனுபவத்தைப்போல, பரலோக பெற்றோரின் அன்பு, தெய்வீக குமாரனின் பாவநிவர்த்தியின் வரம், பரிசுத்த ஆவியின் ஆறுதலளிக்கும் வழிநடத்துதல், இந்த சத்தியங்கள் எல்லாவற்றிற்கும் மிக அதிகமானதிற்கும் பிற்கால மறுஸ்தாபிதம் என்ற நித்திய சுவிசேஷத்தின் துடிக்கிற இருதயத்தின்மேல் சலசலப்பையும் சந்தடியையும் நாம் கடந்திருக்கவேண்டும் மற்றும் அவை அனைத்தின் அர்த்தத்திலும் கவனம் செலுத்தவேண்டும்

முதல் முறையாக பரிசுத்த ஆலயத்திற்கு போகிற அவன் அல்லது அவள் அந்த அனுபவத்தால் சற்றே திகைத்து நிற்பர். பரிசுத்த அடையாளங்களும், வெளிப்படுத்தப்பட்ட சடங்காச்சாரங்களும், சடங்கு ஆடைகளும், காட்சி சமர்ப்பிப்புகளும் ஒருபோதும் திசை திருப்பாது ஆனால் மாறாக அங்கே நாம் அனைவரும் தொழுதுகொள்கிற இரட்சகரை நோக்கி சுட்டிக்காட்டும். ஆலயம் அவருடைய வீடு, நமது மனங்களிலும் இருதயத்திலும் அவர் மிக உயரத்திலிருக்கவேண்டும் மேலும், முன் கதவின்மேலே பொறிக்கப்பட்டிருக்கிறதை நாம் படிக்கிற அந்த நேரத்திலிருந்து கட்டிடத்தில் நாம் செலவழிக்கிற கடைசி நேரம்வரை ஆலய நியமங்களை அது ஊடுருவியிருப்பதைப்போல கிறிஸ்துவின் கம்பீரமான கோட்பாடும் நமது இருப்பை ஊடுருவுகிறது, நாம் எதிர்கொள்கிற அதிசயம் எல்லாவற்றிற்கும் மத்தியில் அனைத்திற்கும் மேலாக ஆலயத்தில் இயேசுவுக்கான அர்த்தத்தை நாம் காணவேண்டும்.

இந்த சமீப மாதங்களில் சபையில் துணிவான முன் முயற்சிகளின், புதிய அறிவிப்புகளின் சுழற்சிகளை கருத்தில்கொள்ளுங்கள். நாம் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யும்போது, அல்லது நமது ஓய்வுநாள் அனுபவத்தை சீர்செய்யும்போது, அல்லது பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்குமான புதிய நிகழ்ச்சியை நாம் தழுவும்போது, முற்றிலும் வேறாகவும், நமது இரட்சிப்பின் கன்மலையின்மேல் மிக உறுதியாகக் கட்ட நமக்குதவ ஒன்றோடு ஒன்றாக தொடர்புடைய ஒரு முயற்சியாகவும் பார்ப்பதற்கு மாறாக சம்பந்தமில்லாத கூறுகளாக நாம் பார்த்தால், இந்த வெளிப்படுத்தப்பட்ட சரிசெய்தல்களுக்கான உண்மையான காரணத்தை நாம் தவறவிடுகிறோம்4 நிச்சயமாக, நிச்சயமாக, சபையின் வெளிப்படுத்தப்பட்ட பெயரை நாம் பயன்படுத்துவது என்கிற இதைத்தான் தலைவர் ரசல் எம்.நெல்சன் உத்தேசித்தார்.5 இயேசு, அவருடைய நாமம், அவருடைய எடுத்துக்காட்டு, அவருடைய தெய்வீகம் நமது தொழுகையில் மையமாக இருந்தால் ஒருசமயம் ஆல்மா போதித்த பெரிய சத்தியத்தை நாம் பெலப்படுத்துவோம். “வரப்போகிறவைகள் பலவுண்டு, இதை அவை அனைத்திற்கும் மேலான மேன்மையான காரியம் ஒன்று உண்டு, ஜீவிக்கிற மீட்பர் தன் ஜனத்தின் மத்தியிலே வருகிற காலம் தூரமாகயில்லை.”6

ஜோசப் ஸ்மித்தின் 19வது நூற்றாண்டின் எல்லைப்புற சூழல், போட்டியிடும் கிறிஸ்தவ சாட்சிகளின் கூட்டங்களுடன் ஒளிர்ந்தது.7 ஆனால், இந்த ஆர்வமிக்க மறுமலர்ச்சியாளர்களான அவர்கள் உருவாக்கின கொந்தளிப்பு, இளம் ஜோசப் மிக உண்மையுள்ளவராக நாடிய இரட்சகருக்கு தெளிவான முரண்பாடாக இருக்கிறது. “இருளும் குழப்பமும்”8 என அவர் அழைத்ததோடு போராடிக்கொண்டிருந்ததில் மரங்கள் நிறைந்த தோப்பில் தனிமையில் அவர் பின்வாங்கினார், இங்கே இந்தக் காலையில் நாம் குறிப்பிட்ட எதையும்விட சுவிசேஷத்திற்கு இரட்சகரின் நிச்சயத்திற்கு மிகஅதிகமான மகிமையின் சாட்சியை அவர் கண்டார், கேட்டார். கற்பனை செய்யமுடியாத, எதிர்பார்க்காத ஒரு காட்சியின் வரத்துடன் தரிசனத்தில் பிரபஞ்சத்தின் மகா தேவனாகிய அவருடைய பரலோக பிதாவையும் அவருடைய பரிபூரண ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் ஜோசப் கண்டார். பின்னர், இந்தக் காலையில் நாம் பாராட்டின எடுத்துக்காட்டை பிதா அமைத்தார். அவர் இயேசுவை சுட்டிக்காட்டி “இவர் என் நேசகுமாரன். அவர் கூறுவதைக் கேளுங்கள்!”9 என்றார். இயேசுவின் தெய்வீக அடையாளத்தை, இரட்சிப்பின் திட்டத்தில் அவருடைய முதன்மையை, தேவனின் கண்களுக்கு முன்பாக அவர் நின்றுகொண்டிருந்ததை எப்போதுமே அந்த குறுகிய ஏழு வார்த்தைகளின் அறிவிப்புகள் மீறமுடியாது.

கிளர்ச்சியும் குழப்பமும் கூட்டங்களும் சச்சரவும்? நமது உலகத்தில் அவை எல்லாம் ஏராளமாயிருக்கின்றன. உண்மையில், சந்தேகிப்பவர்களும், விசுவாசிப்பவர்களும் இந்த தரிசனத்தைப்பற்றி இன்னமும் வாதம் செய்துகொண்டிருக்கிறார்கள், கிட்டத்தட்ட இன்று நான் குறிப்பிட்ட அனைவருமே. மிகப்பல கருத்துக்களுக்கு மத்தியில் அர்த்தத்தை மிகத் தெளிவாகக் கண்டுபிடிக்க நீங்கள் முயற்சித்துக்கொண்டிருந்தால் அதே இயேசுவை நோக்கி நான் சுட்டிக்காட்டி, பழங்காலத்து எரிகோ சாலையில் நமது குருடனான நண்பன் தன் பார்வையைப் பெற்றதற்கு 1800 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜோசப் ஸ்மித்தின் அனுபவம் அப்போஸ்தல சாட்சியாக வருகிறது. வாழ்க்கையில் நிச்சயமாக மிகப் பரபரப்பான காட்சியும் ஒலியும் என்பது இயேசு கடந்து போகமட்டுமில்லை,10 நம்மிடம் அவருடைய வருகையில் நமக்கருகில் நின்று, நம்மோடிருக்கிறார்.11 என இந்த இரண்டோடும் காலங்களினூடே மற்றவர்களின் சேனையோடும் நான் சாட்சியளிக்கிறேன்.

சகோதரிகளே, சகோதரர்களே, நமது நாட்களின் இடைவிடாத கூச்சலின், தம்பட்ட சத்தத்தின் வழியே நமது வாழ்க்கையின், நமது விசுவாசத்தின், நமது சேவையின் மையமாக கிறிஸ்துவைப் பார்க்க நாம் முயற்சிப்போமா. அங்குதான் உண்மையான அர்த்தம் உள்ளது. சிலநாட்களில் நமது பார்வை குறைந்துபோனால், நமது தன்னம்பிக்கை தேய்ந்துபோனால், அல்லது நமது நம்பிக்கை சோதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டால், பின்னர் நிச்சயமாக நாம் “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்”12 என சத்தமாகக் கூப்பிடுவோம். அவர் உங்களுக்கு செவிகொடுப்பார், “நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என சீக்கிரமே அல்லது பின்னர், சொல்வாரென அப்போஸ்தல உற்சாகத்துடனும், தீர்க்கதரிசன ஒப்புக்கொடுத்தலுடனும் நான் வாக்களிக்கிறேன்13 பொது மாநாட்டிற்கு வரவேற்கிறோம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. இது மத்தேயு 20:30–34,ல் பதிக்கப்பட்டுள்ள அதே சம்பவமாக இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம், அங்கே இரண்டு குருடர்கள் பதிலளித்துக்கொண்டிருக்கிறார்கள், அல்லது மாற்கு 10:46–52ல் பதிக்கப்பட்டதாயிருக்கலாம், அங்கே திமேயுவின் மகனாகிய பர்திமேயு குருடன் என அடையாளம்காணப்படுகிறான்.

  2. லூக்கா 18:35–43பார்க்கவும்; emphasis added.

  3. லூக்கா 06:39.

  4. 2 நேபி 09:45 பார்க்கவும்.

  5. Russell M. Nelson, “The Correct Name of the Church,” Liahona, Nov. 2018, 87–89 பார்க்கவும்.

  6. ஆல்மா 7:7.

  7. அந்த சிறிய சமூகத்தினர் மூலமாக வழக்கமாக பரவிய மத வைராக்கியத்தினால், பல்மைராவுக்கு அருகிலுள்ள நியுயார்க் பகுதி, “எரிந்த மாவட்டம்” என வழக்கமாக குறிப்பிடப்பட்டது.

  8. Joseph Smith—History 01:13.

  9. Joseph Smith—History 1:17.

  10. லூக்கா 18:37 பார்க்கவும்.

  11. யோவான் 14:23 பார்க்கவும்.

  12. மாற்கு 10:47.

  13. லூக்கா 18:42.