2010–2019
நமது சிலுவையை எடுத்துக்கொள்வோம்
அக்டோபர் 2019 பொது மாநாடு


நமது சிலுவையை எடுத்துக்கொள்வோம்

நீங்களே உங்களுடைய சிலுவையை எடுத்துக்கொண்டு இரட்சகரைப் பின்பற்றுதல் என்பது, உலக பழக்கங்களில் ஈடுபடாது, கர்த்தருடைய பாதையில் விசுவாசத்துடன் தொடருவது என்பதே.

கடந்த இரண்டு நாட்களாக நமது தலைவர்களிடமிருந்து அற்புதமான போதனைகளை நாம் பெற்றோம். நமது வாழ்க்கையில் இந்த உணர்த்தப்பட்ட மற்றும் சரியான நேரத்திய போதனைகளை கடைபிடிக்க நாம் முயற்சித்தால் நமது சிலுவையை எடுத்துக்கொள்ளவும் நமது பாரங்களை இலகுவாக்கவும் அவருடைய கிருபையின் மூலமாக கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் உதவுவார்.1

எருசலேமில், மூப்பர்கள், பிரதான ஆசாரியர்கள் மற்றும் சதுசேயர்கள் கைகளில் அவர் எப்படி பாடுபடுவாரென்று சிசேரியா பிலிப்பியருகில் அவருடைய சீஷர்களுக்கு அவர் வெளிப்படுத்தினார். அவருடைய மரணத்தைக் குறித்தும் மகிமையான உயிர்த்தெழுதலைக் குறித்தும் குறிப்பாக அவர்களுக்கு அவர் போதித்தார்.2 காலத்தின் அந்த நிலையில், பூமியில் அவருடைய தெய்வீக ஊழியத்தைப்பற்றி அவருடைய சீஷர்கள் முற்றிலுமாகப் புரிந்துகொள்ளவில்லை. இரட்சகர் சொன்னதை பேதுரு கேட்டபோது அவன் அவரை தனியே அழைத்துக்கொண்டுபோய் அவரைக் கடிந்துகொண்டு “ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்கு சம்பவிப்பதில்லை”3என்றான்.

அவருடைய பணிக்கான அர்ப்பணிப்பில் சமர்ப்பிப்பும் பாடுகளும் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவருடைய சீஷர்களுக்கு உதவும்படியாக இரட்சகர் வலியுறுத்தி அறிவித்தார்

“ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

“தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.

“மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?”4

அவரைப் பின்பற்ற விரும்புகிற அனைவரும் அவர் செய்ததைப்போல பிதாவின் சித்தத்திற்கு முழுமையாக அர்ப்பணிப்பாயிருந்து தங்களையே வெறுத்து, தங்களுடைய விருப்பங்களையும், வேட்கைகளையும், ஆசைகளையும் கட்டுப்படுத்தி, தேவையானால் ஜீவனைக்கூட, எல்லாவற்றையும் தியாகம் செய்யவேண்டுமென்ற இந்த அறிவிப்பின் மூலமாக இரட்சகர் வலியுறுத்தினார்5 உண்மையில், ஒரு ஆத்துமாவின் இரட்சிப்பிற்காக ஒரு கிரயம் செலுத்தப்படவேண்டும். கர்த்தருக்காக தியாகமும் அர்ப்பணிப்பும் உண்மையில் எப்படி அர்த்தமாகுமென்று அவருடைய சீஷர்கள் நன்றாகப் புரிந்துகொள்ள உதவ, வேண்டுமென்றேயும் உருவகமாகவும் இயேசு சிலுவையின் அடையாளத்தை பயன்படுத்தினார். அவருடைய சீஷர்களுக்கும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் குடிகளுக்கும் மத்தியில் சிலுவையின் உருவம் நன்றாக அறியப்பட்டிருந்தது, ஏனெனில் அவர்களுடைய மரணதண்டனை நிறைவேற்றப்படுகிற இடத்திற்கு தங்களுடைய சிலுவையை அல்லது குறுக்குச் சட்டத்தை பகிரங்கமாக சுமந்துகொண்டுபோக ரோமர்கள் வஞ்சிக்கப்பட்டவர்களை கட்டாயப்படுத்தினர்.6

அவரைப்பற்றி எழுதப்பட்ட எல்லாவற்றைப்பற்றியும்,7 அந்த நேரத்திலிருந்து அவர்களுக்கு என்ன தேவைப்படுமென்பதைப்பற்றியும் புரிந்துகொள்ளும்படியாக அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னரே அவர்களுடைய மனங்கள் திறக்கப்பட்டன.8

அதே விதமாக, நாமனைவரும், சகோதர சகோதரிகளே, நமது சிலுவைகளை நம்மீது எடுத்துக் கொண்டு, அவரைப் பின்பற்றுவதன் பொருத்தத்தை முற்றிலும் புரிந்து கொள்ளும்படியாகவும், நாம் நமது மனங்களையும் இருதயத்தையும் திறக்க வேண்டும். எல்லா அசுத்தங்களிலிருந்தும் எல்லா உலக இச்சைகளிலிருந்தும் தங்களை விலக்கிக் காத்துக்கொண்டு அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற இத்தகைய ஒரு வழியில் தங்களுடைய சிலுவையை தாங்களே எடுத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறார்கள் என வேதம் மூலமாக நாம் அறிந்துகொள்கிறோம்.9

தேவனுடைய சித்தத்திற்கு மாறான எல்லாவற்றையும் புறம்பே தள்ளவும், கொடுக்கவும் அவருடைய போதனைகளைப் பின்பற்ற முயற்சி எடுக்கவும் எடுக்கப்பட்ட நமது தீர்மானம், உபத்திரவம், நமது ஆத்துமாக்களின் பெலவீனம் அல்லது சமூக அழுத்தத்தின் மற்றும் அவருடைய போதனைகளுக்கு எதிரான உலக தத்துவங்கள் பேசப்படுகிற சமயத்திலும்கூட, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷப் பாதையில் நிலைத்திருக்க நமக்குதவும்.

உதாரணமாக, ஒரு நித்திய துணையை இன்னமும் கண்டுபிடிக்காத, தனிமையையும் நம்பிக்கையின்மையையும் உணர்கிற, அல்லது விவாகரத்து செய்யப்பட்டு புறக்கணிக்கப்பட்டவர்களாக மறக்கப்பட்டவர்களாக உணருகிறவர்களுக்கு உங்களுடைய சிலுவைகளை நீங்களே எடுத்துக்கொள்ளும் இரட்சகரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுதல் என்பதற்கு ஒரு விதமாக கண்ணியத்தை காத்துக்கொண்டு, இறுதியாக தேவனுடைய அன்பிலும் இரக்கத்திலும் நமது நம்பிக்கையை எடுத்துப்போகாத உலகத்தின் பழக்கங்களில் ஈடுபடாமல் கர்த்தருடைய பாதையில் விசுவாசத்துடன் தொடர்ந்து செல்வதாகும் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

ஒரே பாலின கவர்ச்சியை அனுபவித்துக்கொண்டிருக்கிற ஊக்கமிழந்தவர்களாக உதவியற்றவர்களாக உணருகிற உங்களுக்கும் இதே கொள்கைகள் பொருந்துகிறது. இந்தக் காரணத்திற்காக இனியும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் உங்களுக்கானதல்ல என உங்களில் சிலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். பிதாவாகிய தேவனிலும், அவருடைய சந்தோஷத்தின் திட்டத்திலும், இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய பாவநிவர்த்தியிலும், அவர்களுடைய அன்பான கட்டளைகளிலும் அவர்களுடைய அன்பான கற்பனைகளில் வாழுதலிலும் எப்போதுமே நம்பிக்கையிருக்கிறது என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். கட்டளைகளைக் கைக்கொள்ளுவதில் அசைக்கப்பட முடியாதவர்களாயும் நிலை நிற்கிறவர்களாயுமிருந்து10 நன்மையான பணிகளில் நிரம்பியிருந்தால், நாம் அவருடைய பிரசன்னத்திற்கு கொண்டுவரப்பட்டு நித்தியமான இரட்சிப்பைப் பெறும்படியாக அவருடைய பூரண ஞானத்திலும், வல்லமையிலும், நீதியிலும் இரக்கத்திலும் கர்த்தர் நம்மை அவரோடு முத்திரிப்பார்11.

பிற காரியங்களுக்கு மத்தியில் மோசமான பாவங்களைச் செய்தவர்களுக்கு இந்த இதே அழைப்பை ஏற்றுக்கொள்ளுதல் என்பது தேவனுக்கு முன்பாக தாழ்மைப்படுத்த, பொருத்தமான சபைத் தலைவர்களுடன் ஆலோசனை பெற, மனந்திரும்ப மற்றும் உங்கள் பாவங்களை விட்டுவிடுதல் என அர்த்தமாகும். ஓப்பியாய்ட்ஸ், போதைப்பொருட்கள், மது மற்றும் ஆபாசங்களையும் சேர்த்து பெலவீனப்படுத்தும் போதைக்கு எதிராக போராடிக்கொண்டிருப்பவர்களையும் இந்த நடைமுறை ஆசீர்வதிக்கும். இந்த நடவடிக்கைகளை எடுப்பது, குற்றஉணர்விலிருந்து, துக்கத்திலிருந்து, ஆவிக்குரிய சரீரத்துக்குரிய அடிமைத்தனத்திலிருந்து இறுதியாக உங்களை விடுவிக்கிற இரட்சகரிடத்தில் நெருக்கமாக உங்களைக் கொண்டுசேர்க்கிறது. கூடுதலாக, உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், திறமையான மற்றும் ஆலோசனை வல்லுனர்களின் ஆதரவையும் நீங்கள் நாடலாம்

தொடர்ந்த தோல்விகளுக்குப் பின்னர் தயவுசெய்து விட்டுவிடாதிருங்கள், பாவங்களை கைவிடுவதற்கும் போதைப் பழக்கத்தை விட்டுவிடுவதற்கும் உங்களால் முடியாது என்று கருதாதீர்கள். முயற்சி செய்வதை உங்களால் நிறுத்தமுடியாது அதன் பின்னர் பெலவீனத்திலும் பாவத்திலும் தொடருவீர்கள்! இரட்சகர் போதித்ததைப்போல பாத்திரத்தின் உட்பக்கத்தை சுத்தப்படுத்தவதற்கான உங்கள் விருப்பத்திற்கான முயற்சிகளைக் காட்டுவதன் மூலமாக எப்போதுமே உங்களின் சிறப்பானதைச் செய்ய முயற்சியுங்கள்.12 சிலநேரங்களில் சில சவால்களுக்கான தீர்வு சில மாதங்களுக்கு, மற்றும் தொடர்ந்த முயற்சியின் சில மாதங்களுக்குப் பின்னர் வரும். நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்த பின்னர், நாம் கிருபையால் இரட்சிக்கப்படுகிறோம்”13 என மார்மன் புஸ்தகத்தில் காணப்படுகிற வாக்குறுதி இந்த சூழ்நிலைகளுக்கு பொருந்தும். இரட்சகரின் கிருபையின் வரம் “நம்மால் செய்யமுடிந்த எல்லாவற்றிற்கும் ‘பின்னர்’ நேரத்தில் குறைக்கப்பட அவசியமில்லை” என்பதை தயவுசெய்து நினைவுகூருங்கள். “நம்முடைய சொந்த முயற்சிகளை நாம் செய்யும்போது அல்லது அந்த நேரத்திற்குப் பின்னர், முன்பே அவருடைய கிருபையை நாம் பெறலாம்.”14

நமது சவால்களை மேற்கொள்ள நாம் தொடர்ந்து முயற்சிக்கும்போது குணமாக்கப்படவும் அற்புதங்களைச் செய்வதுமான விசுவாசத்தின் வரத்துடன் தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.15 நம்மால் செய்வதற்கு நமக்கு திறனில்லாதபோது அவர் நமக்காகச் செய்வார்.

கூடுதலாக, கசப்பு, கோபம், எரிச்சலடைதல் அல்லது தகாதது என்று நீங்கள் உணருகிற ஒன்றிற்காக துக்கத்தில் பிணைக்கப்பட்டதாக உணருகிறவர்களுக்கு, ஒருவன் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இரட்சகரைப் பின்பற்றுதல் என்பது இந்த உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த மனநிலையிலிருந்து அவர் நம்மை விடுவிக்கப்படும்படியாகவும் சமாதானத்தைக் காணும்படியாகவும் கர்த்தரிடத்தில் திரும்புவதாகும். துரதிருஷ்டவசமாக, எதிர்மறையான உணர்வுகளையும் உணர்ச்சிகளையும், பற்றிப் பிடித்துக்கொண்டிருந்தால், நமது வாழ்க்கையில் கர்த்தருடைய ஆவியின் செல்வாக்கில்லாமல் வாழுவதாக நாம் நம்மைக் காண்போம். பிறருக்காக நாம் மனந்திரும்ப முடியாது, ஆனால் நம்மை காயப்படுத்தியவர்களால் அகதிகளாக பிடிக்கப்படுவதை மறுத்து, நாம் அவர்களை மன்னிக்கலாம்.16

நமது கல்லான இருதயங்களை புது இருதயங்களாக மாற்றியமைக்க நமக்குதவ நமது இரட்சகரை அழைப்பதால் இந்த சூழ்நிலைகளிலிருந்து வெளியே வர ஒரு வழி இருக்கிறதென வேதம் போதிக்கிறது.17 இது நடப்பதற்கு, நமது பெலவீனங்களுடன் நாம் கர்த்தரிடத்தில் வந்து,18 குறிப்பாக ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் திருவிருந்தில் நாம் பங்கேற்கும்போது அந்த பரிசுத்த நேரத்தில் அவருடைய உதவிக்காகவும் மன்னிப்புக்காவும் 19 மன்றாடவேண்டும். அவருடைய உதவியையும் நாட நாம் தேர்ந்தெடுப்போமாக, நமது காயங்கள் குணமாக ஆரம்பிக்கும்படியாக நம்மைக் காயப்படுத்தியவர்களை மன்னிப்பதனால் ஒரு முக்கியமான கடினமான அடியை எடுத்து வைப்போமாக. இப்படி நீங்கள் செய்வதில், கர்த்தருடன் ஒரு சமாதானத்திலிருந்து வருகிற முழு நிவாரணமாக உங்கள் இரவிருக்கும்.

இந்த சூழ்நிலைகளில் மிகவும் பொருத்தமாயிருந்த தீர்க்கதரிசனங்கள் அடங்கியிருந்த ஒரு கடிதத்தை, 1839ல் லிபர்டி சிறைச்சாலையில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் சபை அங்கத்தினர்களுக்கு எழுதினார். “சகல சிங்காசனங்களும், கர்த்தத்துவங்களும், துரைத்தனங்களும், அதிகாரங்களும் வெளிப்படுத்தப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக பராக்கிரமத்துடன் நிலைத்திருந்த அனைவர் மேலும் அருளப்படும்”20 என அவர் எழுதினார். ஆகவே, இரட்சகரின் நாமத்தை தங்கள்மேல் எடுத்துக்கொண்ட, என் அன்பு சகோதர சகோதரிகளே, அவருடைய வாக்குத்தத்தங்களில் நம்பிக்கை வைத்து, முடிவுபரியந்தம் நிலைநிற்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்,21முடிவற்ற மகிழ்ச்சியுள்ள நிலையிலே தேவனோடு வாசம் செய்வார்கள்.22

துக்கமாக, உதவியற்றவர்களாக, நம்பிக்கையற்றவர்களாக, சிலசமயங்களில் பெலவீனர்களாகக்கூட நம்மை உணர வைக்கிற பாதகமான சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்கிறோம். “நான் ஏன் இந்த சூழ்நிலைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்?” அல்லது “ஏன் என்னுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை? என்று கர்த்தரை கேள்வி கேட்க இந்த உணர்வுகளில் சில நம்மை நடத்தலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, என்னுடைய சிலுவையை எடுக்கவும் இரட்சகரைப் பின்பற்றவும் என்னுடைய சக்திக்குட்பட்டு நான் எல்லாவற்றையும் செய்கிறேன்!”

எனக்கன்பான நண்பர்களே, நம்மீதே நம் சிலுவையை எடுத்துக்கொள்வதில் தாழ்மையாயிருப்பதுவும் தேவனிலும் அவருடைய முடிவற்ற ஞானத்திலும் நம்பிக்கை வைப்பதுவும் அடங்கியிருக்கிறது. நம் ஒவ்வொருவரைப்பற்றியும் நமது தேவைகளைப்பற்றியும் அவர் அறிந்திருக்கிறார் என்பதை நாம் அங்கீகரிக்கவேண்டும். கர்த்தருடைய நேரம் நம்முடைய நேரத்தைவிட வித்தியாசமானது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதும் அத்தியாவசியமானது. சிலநேரங்களில் நாம் ஒரு ஆசீர்வாதத்தை நாடி அதை நிறைவேற்ற கர்த்தருக்கு ஒரு நேர வரம்பை அமைக்கிறோம். நமது விருப்பங்களுக்கான பதில்களுக்காக காலக்கெடுவை அவர்மீது விதிப்பதால் அவரிடம் நம் நம்பகத்தன்மையை திறம்படுத்தமுடியாது. இதை நாம் செய்யும்போது பழங்காலத்திலிருந்து சந்தேகம் நிறைந்த, நம்பியவர்களுக்கு மத்தியில் பெரிய கலகம் உண்டாக்கி, லாமானியனான சாமுவேலினால் பேசப்பட்ட வார்த்தைகள் நிறைவேறும் காலம் கடந்து போயிற்று என்று தங்கள் சகோதர சகோதரிகளை கேலி பேசிய நேபியர்களை நாம் ஒத்திருக்கிறோம்23 அவர் சகலவற்றையும் அறிந்திருக்கிறார், நம் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறார் என்பதால், அமைதியாயிருக்க போதுமானபடி நாம் கர்த்தரை நம்பவேண்டும், அவரே தேவனென்று அறியவேண்டும் 24

படம்
மூப்பர் சோயர்ஸ் சகோதரி காலமாஸ்ஸிக்கு ஊழியம் செய்தல்.

பெலவீனமாக்கும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு விதவை சகோதரியான பிராங்கோ காலமஸ்ஸிக்கு ஊழியம் செய்ய சமீபத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் சேர அவளுடைய குடும்பத்தில் சகோதரி காலமஸ்ஸி முதல் அங்கத்தினராயிருந்தார். அவருடைய கணவர் ஞானஸ்நானம் பெறாதிருந்தாலும் ஊழியக்காரர்களை சந்திக்க அவர் சம்மதித்து அடிக்கடி சபைக் கூட்டங்களில் பங்கேற்றார். இந்த சூழ்நிலைகளிருந்த போதிலும், சகோதரி காலமஸ்ஸி விசுவாசமுள்ளவளாயிருந்து தனது நான்கு பிள்ளைகளையும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் வளர்த்து வந்தாள். அவளுடைய கணவர் மரித்து ஒரு ஆண்டுக்குப் பின்னர், சகோதரி காலமாஸ்ஸி அவளுடைய பிள்ளைகளை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றாள், அவர்கள் பரிசுத்த நியமங்களில் பங்கேற்று ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து முத்திரிக்கப்பட்டார்கள். இந்த நியமங்களோடு சம்பந்தப்பட்ட வாக்குத்தத்தங்கள் அதிக நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் அவளுக்குக் கொண்டுவந்து வாழ்க்கையில் தொடர்ந்து எடுத்துச் செல்ல அவளுக்குதவியது.

படம்
ஆலயத்தில் காலமஸ்ஸி குடும்பம்

நோயின் முதல் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்த உடனே, அவளுடைய ஆயர் அவளுக்கு ஒரு ஆசீர்வாதத்தைக் கொடுத்தார். குணமாக்கப்பட அவளுடைய விசுவாசத்தையும், அப்படியே அவளுடைய நோயை முடிவுவரை தாங்க, அவளுடைய விசுவாசத்தையும் வெளிப்படுத்தி அந்த ஆசீர்வாதத்தின் விளைவைப் பொருட்டாக்காமல் கர்த்தருடைய சித்தத்தை ஏற்றுக்கொள்ள அவள் ஆயத்தமாயிருந்தாள்.

என்னுடைய சந்திப்பின்போது, சகோதரி காலமஸ்ஸியின் கரங்களைப் பிடித்துக்கொண்டு அவளுடைய கண்களுக்குள் நோக்கியபோது, தேவனுடைய திட்டத்திலும், பிதாவின் அன்பிலும் அவளுக்கான திட்டத்திலும் அவளுடைய துல்லியமான நம்பிக்கையின் பிரகாசத்தையும் பிரதிபலித்து, அவளுடைய முகத்திலிருந்து தேவதூதன் போன்ற ஒளி பிரகாசத்தை நான் கண்டேன்25 அவள் சவால்களை எதிர்கொண்டிருந்த போதிலும் அவளுடைய சிலுவையை எடுத்துக்கொண்டதால் அவளுடைய விசுவாசத்தில் முடிவுபரியந்தம் நிலைத்திருக்க அவளுடைய உறுதியான தீர்மானத்தை நான் உணர்ந்தேன். இந்த சகோதரியின் வாழ்க்கை கிறிஸ்துவுக்கு சாட்சி, அவளுடைய விசுவாசத்தின் அறிக்கை, அவருக்கு அவளுடைய அர்ப்பணிப்பு.

சகோதர சகோதரிகளே, நமது சிலுவைகளை நம்மீது எடுத்துக்கொண்டு ,இரட்சகரைப் பின்பற்றுவதற்கு அவருடைய உதாரணத்தைப் பின்பற்றவும் அவரைப்போலாக முயற்சிக்கவும்,26 வாழ்க்கையின் சூழ்நிலைகளை பொறுமையாக எதிர்கொள்ளவும், சுபாவ மனிதனின் இச்சைகளை மறுத்து வெறுத்து கர்த்தருக்காக காத்திருப்பது நமக்குத் தேவையாயிருக்கிறது என்று நான் உங்களுக்கு சாட்சியளிக்க விரும்புகிறேன். சங்கீதக்காரன் எழுதினான்:

“கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், திடமனதாயிருந்து கர்த்தருக்கே காத்திரு.”27

“அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.”28

நமது போதகரின் காலடிகளை பின்பற்றுவதாலும், நமது வாழ்க்கையின் இறுதியான குணமாக்குபவரான அவருக்காக காத்திருப்பதுவும் நமது ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலளித்து நமது பாரங்களை எளிதாகவும் இலகுவாகவுமாக்குகிறது என நான் உங்களுக்கு சாட்சியளிக்கிறேன்.29 இந்தக் காரியங்களைக்குறித்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

அச்சிடவும்