2010–2019
அவருடைய நாமத்தைக் கனம்பண்ணுதல்
அக்டோபர் 2019 பொது மாநாடு


அவருடைய நாமத்தைக் கனம்பண்ணுதல்

அப்படியாக, உடன்படிக்கை அடையாளத்துடனும், சொந்தத்துடனும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாம் அழைக்கப்படுகிறோம்,

ஒரு குழந்தை பிறப்பிற்காக உற்சாகமாக காத்திருக்கும் பெற்றோரைப்போல, அவர்களுடைய பிறந்த குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அவர்களிருக்கிறது. ஒருவேளை நீங்கள் பிறந்தபோது, தலைமுறைகளாக உங்கள் குடும்பத்தில் கடந்து வந்த ஒரு பெயரை நீங்கள் பெற்றிருக்கலாம். அல்லது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் அந்த ஆண்டில் அல்லது நீங்கள் பிறந்த பகுதியில் பிரசித்தமாயிருக்கலாம்.

தீர்க்கதரிசி ஏலமனும் அவனுடைய மனைவியும் அவர்களுடைய ஆண் குழந்தைகளான நேபிக்கும் லேகிக்கும் அர்த்தமுள்ள குடும்பப் பெயர்களைக் கொடுத்தார்கள். ஏலமன் பின்னர் தன்னுடைய குமாரர்களுக்குக் கூறினான்:

“நம்முடைய முதற்பெற்றோரின் நாமங்களை உங்களுக்குச் சூட்டியிருக்கிறேன் … நீங்கள் உங்கள் நாமங்களை நினைக்கும்போது, அவர்களை நீங்கள் நினைக்கவேண்டும், அவர்களை நீங்கள் நினைவுகூரும்போதும், அவர்களுடைய கிரியைகளை நீங்கள் நினைவுகூர்ந்து, அவர்கள் நல்லோர் என்று சொல்லப்பட்டிருப்பதையும் எழுதப்பட்டிருப்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”

“ஆதலால், என் குமாரரே, நீங்கள் நன்மையானதையே செய்யவேண்டுமென்று விரும்புகிறேன்.”1

நேபி மற்றும் லேகியின் பெயர்கள் அவர்களுடைய முன்னோர்களின் நற்கிரியைகளை அவர்கள் நினைவுகூரவும், அப்படியே நன்மையானதைச் செய்ய அவர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்குதவியது.

சகோதரிகளே, நாம் எங்கு வாழுகிறோம், என்ன மொழி பேசுகிறோம், அல்லது நமக்கு 8 வயதோ அல்லது 108 வயதோ அவற்றைப் பொருட்படுத்தாது, இந்த இதே நோக்கங்களைக் கொண்டிருக்கிற ஒரு விசேஷித்த பெயரை நாம் அனைவரும் பகிர்ந்துகொள்கிறோம்.

“ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே … ஏனெனில் நாமனைவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றே”2

பிற்காலப் பரிசுத்தவன்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்களாக, “ஞானஸ்நானத்தின் நியமத்தால் கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ள நமது வாஞ்சையை முதலில் நாம் உறுதிமொழி எடுத்தோம்”3 இந்த உடன்படிக்கையின் மூலமாக, எப்போதும் அவரை நினைவுகூரவும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவும், மற்றவர்களுக்கு சேவை செய்யவும் நாம் வாக்களிக்கிறோம். இந்த உடன்படிக்கையைக் கைக்கொள்ள நமது வாஞ்சை, நாம் திருவிருந்தில் பங்கேற்கும்போது, ஒவ்வொரு ஓய்வுநாளிலும் புதுப்பிக்கப்படுகிறது, புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடக்கிற ஆசீர்வாதத்துடன் மீண்டும் ஒரு முறை களிகூருகிறோம்”.4

பிறக்கும்போது நமக்குக் கொடுக்கப்படும் பெயர் நமது தனிப்பட்ட அடையாளத்தைப் பிரதிபலிக்கிறது, நமது பூலோக குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக நமக்குக் கொடுக்கப்படுகிறது. எப்படியாயினும், ஞானஸ்நானத்தில் நாம் “மீண்டும் பிறக்கும்போது,” நாம் யாரென்ற நமது புரிந்துகொள்ளுதல் விரிவாக்கப்பட்டது. “நீங்கள் செய்திருக்கும் உடன்படிக்கையினிமித்தம் கிறிஸ்துவின் பிள்ளைகள் என அழைக்கப்படுவீர்கள், ஏனெனில் இதோ, அவருடைய நாமத்தின் மீதான விசுவாசத்தினால் உங்கள் இருதயங்களில் மாற்றத்தைப் பெற்றீர்கள் என்று நீங்கள் சொன்னதிற்கேற்ப உங்களை அவர் ஆவியிலே ஜென்மித்தார்,”5

அப்படியாக, உடன்படிக்கை அடையாளத்துடனும், சொந்தத்துடனும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் நாம் அழைக்கப்படுகிறோம். “சர்வவல்ல கர்த்தராகிய கிறிஸ்துவின் நாமத்தினாலும், அவர் மூலமுமேயன்றி மனுப்புத்திரருள் இரட்சிப்பு வர மற்ற எந்த நாமமோ, வழியோ, மார்க்கமோ கொடுக்கப்படவில்லை.”6

அவருடைய பிறப்பிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே கிறிஸ்துவின் பெயர் அறியப்பட்டிருந்தது. பென்மீன் இராஜாவுக்கு ஒரு தூதன் தீர்க்கதரிசனமுரைத்தான்,“அவர் தேவனுடைய குமாரனென்றும், இயேசு கிறிஸ்துவென்றும் அழைக்கப்படுவார். … அவருடைய தாய் மரியாள் என்று அழைக்கப்படுவாள்.”7 “தங்களுடைய பாவங்களின் மன்னிப்புக்காக”8 எதனைக் கண்நோக்கவேண்டும்”9 என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படியாக, ஆதாம் ஏவாள் நாட்களிலிருந்து நமது இன்றைய நாள்வரை பூமியில் சுவிசேஷம் இருக்கும்போதெல்லாம், அவருடைய கிரியையான மீட்கும் அன்பும் தேவனின் பிள்ளைகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

“சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்க்க உதவுவதில் வருங்காலத்தை வடிவமைக்க” கடந்த ஆண்டு, தலைவர் ரசல் எம். நெல்சன் சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். மார்மன் புஸ்தகத்தைப் படிக்கவும் “இரட்சகரைக்குறித்து பேசுகிற அல்லது குறிப்பிடுகிற ஒவ்வொரு வசனத்தையும் அடையாளப்படுத்தவும்” நம்மை அவர் அழைத்தார். “கிறிஸ்துவைப்பற்றி பேசவும், கிறிஸ்துவில் களிகூரவும், குடும்பங்களுடனும் நண்பர்களுடனும் கிறிஸ்துவைப்பற்றி பிரசங்கிக்கவும் நாம் எண்ணத்துடனிருக்க” அவர் கேட்டுக்கொண்டார். ஒருவேளை, நீங்களும் அவர்களும் இரட்சகருக்கு நெருக்கமாக ஈர்க்கப்படுவீர்கள் என்ற அவரது வாக்குத்தத்தத்தின் கனிகளை நீங்கள் அடையாளம் காண தொடங்கியிருக்கிறீர்கள். மாற்றங்களும் அற்புதங்களும் நடக்கத் தொடங்கும்.10

நாம் ஒரு பெரிய கூட்டத்திலிருக்கிறோமோ அல்லது தேவனைத் தவிர யாருக்கும் தெரியாத நமது தனிமையான இடத்திலிருக்கிறோமோ, எப்போதும் இரட்சகரை நினைவுகூர நம்முடைய வாக்களிப்புகள், சத்தியத்துக்காகவும் நீதிக்காகவும் நிற்க நமக்கு பெலன் கொடுக்கிறது. நாம் அவரையும் நாம் தரித்துக்கொண்டிருக்கிற அவருடைய நாமத்தையும் நினைவுகூரும்போது சுயஇழிவின் ஒப்பிடுதல்கள் அல்லது ஆணவ தீர்ப்புகளுக்கு நம்மிடத்தில் இடமில்லை. இரட்சகர்மீது நம்முடைய கண்களைவைத்து, உண்மையில் நாம் யாரென்பதை—தேவனின் ஒரு நேசத்துக்குரிய பிள்ளை என நம்மையே நாம் பார்க்கிறோம்.

நமது உடன்படிக்கை நினைவுகூருதல் உலக கவலைகளை அமைதிப்படுத்தி, சுயசந்தேகத்தை தைரியமாக மாற்றி சோதனையின் காலங்களில் நம்பிக்கை கொடுக்கிறது.

உடன்படிக்கை பாதையில் நமது முன்னேற்றத்தினூடே நாம் தடுக்கி விழும்போது, அவருடைய நாமமும் நமக்கு நேரான அவருடைய அன்பான தயவும் மட்டுமே நம்மிடம் உள்ளது. “ஏனெனில் அவர் சகல வல்லமையையும், சகல ஞானத்தையும், சகல அறிவையும் பெற்றிருக்கிறார், அவர் சகலத்ததையும் அறிகிறார், மனந்திரும்பி தம்முடைய நாமத்தை விசுவாசிக்கிறவர்களுக்கு அவர் இரக்கமுள்ள ஜீவியாயிருக்கிறார்.”11 ஒரு நொறுங்கிய இருதயத்துடனும் நருங்குண்ட ஆவியோடும் “சிறப்பானதைச் செய்யவும் சிறப்பானவர்களாயிருக்கவும்”12 நாடுகிற அனைவருக்கும் நிச்சயமாக இயேசுவின் நாமத்தைவிட எந்த இனிய குரலுமில்லை.

தலைவர் நெல்சன் போதித்தார், “ஒரு அமைதியான, வசதியான கிறிஸ்தவனாயிருக்க முடிகிற நாள் போய்விட்டது. உங்கள் மதம், ஞாயிற்றுக்கிழமைகளில் வெறுமனே சபையைக் காட்டுவதற்கில்லை. ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து சனிக்கிழமை இரவுவரை ஒரு உண்மையான சீஷனாகக் காண்பிப்பதைப்பற்றியது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ‘பகுதிநேர’ சீஷர் என்று எதுவுமில்லை.”13

கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது எடுத்துக்கொள்ள நமது வாஞ்சை, முறையான வார்த்தைகளின் பரிமாற்றத்தைவிட அதிகமானது. இது செயலற்ற வாக்குறுதியோ அல்லது ஒரு கலாச்சார திட்டமிடுதலோ அல்ல. இது ஏட்டுரையின் சடங்கோ அல்லது நாம் அணிகிற பெயர் குறிச்சொல்லோ அல்ல. இது நாம் வெறுமனே அலமாரியில் வைக்கிற அல்லது சுவரில் தொங்கவிடுகிற ஒரு பழமொழி அல்ல. “தரித்திருக்கிற”14, நமது இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிற, “முகரூபங்களில் பொறிக்கப்பட்டிருக்கிற”15அது அவருடைய நாமம்.

நமது சிந்தனை, செயல்கள், மற்றவர்களுடன் உரையாடல்கள் மூலம் இரட்சகரின் பாவநிவர்த்தியின் பலி எப்போதும் நினைவுகூரப்படவேண்டும். நம்முடைய பெயர்களை அவர் நினைவுகூருவது மட்டுமல்ல, நம்மை எப்போதும் அவர் நினைவுகூருகிறார். இரட்சகர் அறிவித்தார்.

“ஒரு ஸ்தீரீ தன் பாலகனை மறப்பாளோ, அவள் தன் கர்ப்பத்தின் மகனின்மீது இரக்கம் கொள்ளாளோ? ஆம், அவர்கள் மறந்துபோனாலும், இஸ்ரவேலின் வீட்டாரே உன்னை நான் மறப்பதில்லை.

“இதோ, என் உள்ளங்கையிலே உன்னை வரைந்திருக்கிறேன்”.16

தலைவர் ஜார்ஜ் ஆல்பெர்ட் ஸ்மித் போதித்தார், “நீங்கள் தரித்திருக்கிற பெயர்களை கனம்பண்ணுங்கள், ஏனெனில் பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவிடத்தில் அறிக்கையளிக்க ஒரு சிலாக்கியமும் கடமையும் ஒருநாள் உங்களுக்கிருக்கும் … அந்த பெயர்களைக்கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள்”17

கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நேபி மற்றும் லேகியின் பெயர்களைப்போல, நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் என்று நம்மைப்பற்றி சொல்லப்படமுடியமா? எழுதப்படமுடியுமா? நாம் வாஞ்சையுடன் நம்மீது எடுத்துக்கொண்டோம் என்பதால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நாம் கனம்பண்ணுகிறோமா? அவருடைய அன்பான தயவு மற்றும் அவருடைய மீட்பின் வல்லமையினால் “ஒரு ஊழியராகவும், சாட்சியாகவும்”18 நாமிருக்கிறோமா?

சமீபத்தில் நான் மார்மன் புஸ்தகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். 2 நேபியின் கடைசி அதிகாரத்தில் இதற்கு முன்பு நான் ஒருபோதும் படித்திராத வழியில் நேபி சொல்லுகிற ஒன்றை நான் கேட்டேன். அவனுடைய பதிப்பில் முழுவதும் அவன் “மீட்பர்”, “இஸ்ரவேலின் பரிசுத்தர்”, “தேவ ஆட்டுக்குட்டி”, “மேசியா”பற்றி போதிக்கிறான், சாட்சியளிக்கிறான். ஆனால், அவனுடைய விவரத்தை அவன் முடிக்கும்போது இந்த வார்த்தைகளை அவன் சொல்வதை நான் கேட்டேன். நான் தெளிவானவைகளில் மகிமை பாராட்டுகிறேன், நான் சத்தியத்திலே மகிமை பாராட்டுகிறேன், என் இயேசு பாதாளத்திலிருந்து என் ஆத்துமாவை மீட்டுக்கொண்டதினிமித்தம் அவரில் மகிமை பாராட்டுகிறேன்” 19 இந்த வார்த்தைகளை நான் கேட்டபோது, என் இருதயம் களிகூர்ந்தது, நான் மீண்டும் மீண்டும் கேட்கவேண்டியதாயிற்று. என்னுடைய சொந்த பெயரை அடையாளம் கண்டு பதிலளிப்பதைப்போல அந்த வசனத்தை நான் அடையாளம் கண்டு பதிலளித்தேன்.

கர்த்தர் சொன்னார், “ஆம் என் நாமத்தினாலே அழைக்கப்பட வாஞ்சையாயிருக்கும் இந்த ஜனங்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் என் நாமத்தினாலே அழைக்கப்படுவார்கள், அவர்கள் என்னுடையவர்கள்.”20

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்களாக அன்புடனும், அர்ப்பணிப்புனும், நற்கிரியைகளினாலும் அவருடைய நாமத்தைக் கனம்பண்ணுவதில் “கிறிஸ்துவின் நாமத்தை சந்தோஷத்தோடே நம்மீது எடுத்துக்கொள்கிறோம்”21 அவரே “தேவ ஆட்டுக்குட்டி, ஆம், அவரே நித்திய பிதாவின் குமாரன்”22 என நான் சாட்சியளிக்கிறேன். அவருடைய பரிசுத்த குழந்தை, இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

அச்சிடவும்