2010–2019
கனி
அக்டோபர் 2019 பொது மாநாடு


கனி

உங்கள் கண்களையும், இருதயங்களையும், இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிலும், அவரால் மட்டுமே வருகிற நித்திய மகிழ்ச்சியிலும் மையங்கொள்ளச் செய்யவும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என நான் அறிவேன். இன்னும் ஒரே ஒரு செய்தியாளர், நாம் தலைவர் ரசல் எம். நெல்சன் பேசக் கேட்போம். நாம் நமது அன்புக்குரிய தீர்க்கதரிசிக்காக காத்திருக்கும்போது, சில நிமிடங்கள் உங்களை விழிப்புடன் வைத்திருப்பதாக நான் நம்பி, கவர்ச்சிகரமான தலைப்பை தேர்வு செய்திருக்கிறேன். எனது தலைப்பு கனி.

படம்
கனி

பெரி, வாழைப்பழம், வத்தக்கு, அல்லது மிக சுவையான அந்நிய தேச பழங்களான கிவானோ அல்லது மாதுளையின் நிறம், இயல்பு மற்றும் இனிமையுடன், கனி முற்காலத்திலிருந்தே விரும்பப்படுகிற சுவையாக இருந்திருக்கிறது.

அவரது பூலோக ஊழியத்தின்போது, இரட்சகர் நித்திய தகுதி வாய்ந்தவற்றோடு நல்ல கனியை ஒப்பிட்டார். அவர் சொன்னார், “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.”1 “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்.”2 “நித்திய ஜீவனுக்காக பலனை சேகரிக்க” அவர் நம்மை ஊக்குவித்தார்.3

மார்மன் புஸ்தகத்தில் நாம் நன்கு அறிந்த ஒரு தத்ரூபமான கனவில், தீர்க்கதரிசி லேகி, தன்னை “மந்தாரமான இருளுள்ள வனாந்தரத்தில்” கண்டான். அழுக்கான தண்ணீர், இருளின் மூடுபனி, விசித்திரமான சாலைகள், கைவிடப்பட்ட பாதைகள், “ஒருவரை மகிழ்விக்கக்கூடிய கனியுடன்,” அழகிய மரத்துக்கு வழிநடத்துகிற குறுகியதும் இடுக்கமுமான பாதை வழியே இருப்புக் கோலும்4 இருக்கிறது. கனவை நினைத்து, லேகி கூறுகிறான், “நான் அதிலிருந்த கனியைப் புசித்தேன். … நான் முன்னால் சுவைத்த எல்லாவற்றைக் காட்டிலும் அது மதுரமாய் இருந்தது. … அது என் ஆத்துமாவை மிகுந்த மகா மகிழ்ச்சியால் நிறைத்தது.“இந்தக் கனி” “மற்ற எந்தக் கனிகளையும் விட விரும்பத் தக்கதாய் இருந்தது.”5

படம்
சுவையான கனியுடன் ஜீவ விருட்சம்

மரம் மற்றும் கனியின் அர்த்தம்.

மிகவும் அருமையான கனியுடன் இருந்த அந்த மரம், எதை அடையாளப்படுத்துகிறது. அது “தேவனுடைய அன்பைக்” குறிக்கிறது6 மற்றும் நமது பரலோக பிதாவின் அதிசயமான மீட்பின் திட்டத்தை அறிவிக்கிறது. “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.”7

இந்த அருமையான கனி, இரட்சகரின் ஒப்பில்லா பாவநிவர்த்தியின் அற்புதமான ஆசீர்வாதங்களை அடையாளப்படுத்துகிறது. நமது அநித்தியத்தை தொடர்ந்து நாம் மீண்டும் வாழ்வது மட்டுமின்றி, ஆனால் இயேசு கிறிஸ்துவின் விசுவாசம், நமது மனந்திரும்புதல், கட்டளைகளைக் காத்துக்கொள்ளுதல், மூலம் நாம் நமது பாவங்களுக்காக மன்னிக்கப்படலாம், மற்றும் ஒருநாள் நமது பிதா மற்றும் குமாரனின் முன்பு, சுத்தமாயும் தூய்மையாயும் நிற்க முடியும்.

அந்த மரத்தின் கனியை புசிப்பது, நாம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் நியமங்களையும் உடன்படிக்கைகளையும் தழுவி, ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்று, உன்னதத்திலிருந்து வல்லமையுடன் தரிப்பிக்கப்பட கர்த்தரின் வீட்டில் நுழைவதை அடையாளப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்துவின் கிருபை மற்றும் நமது உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்ளுதல் மூலம், நித்தியம் முழுமைக்கும் நமது நீதியான குடும்பங்களுடன் வாழுகிற அளவிட முடியா வாக்குத்தத்தத்தைப் பெறுகிறோம்.8

கனியை தூதன் கனியை “ஆத்துமாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை” அளிக்கக்கூடியது என விவரித்ததில் வியப்பில்லை.9 உண்மையாகவே அப்படித்தான்.

உண்மையாக இருத்தலின் சவால்

நாமனைவரும் அறிந்தபடி, மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் அருமையான கனியை சுவைத்தபின்னும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பது எளிதாக நடப்பதில்லை. இந்த மாநாட்டில் அநேக முறைகள் சொல்லப்பட்டிருக்கிறபடி, இரட்சகரிடமிருந்தும் மற்றும் அவரைப் பின்பற்றியதால் நாம் அனுபவித்த மகிழ்ச்சியிலும் அழகிலும் இருந்து நமது இருதயங்களை புறம்பே இழுக்க முயல்கிறவற்றால் ,நாம் தொடர்ந்து கவனம் சிதறியும், ஏமாந்தும், குழம்பியும், கூக்குரலிலும், தூண்டப்பட்டும் சோதிக்கப்பட்டும் இருக்கிறோம்.

இச்சத்துருவினிமித்தம், லேகியின் சொப்பனமும் ஒரு எச்சரிக்கையை உள்ளடக்கியிருக்கிறது. நதியின் மறுபுறத்திலும், எல்லா வயதிலுமுள்ள ஜனங்கள் விரல்களால் சுட்டிக்காட்டியும், கேலிசெய்தும், இயேசு கிறிஸ்துவின் நீதியான பின்பற்றுபவர்களை தூஷிக்கிறவர்களைக் கொண்ட விசாலமான கட்டிடமும் இருக்கிறது.

அக்கடடிடத்திலிருப்பவர்கள் இயேசு கிறிஸ்துவிலும் அவரது சுவிசேஷத்திலும், அவர்களது விசுவாசத்தை அவமதிக்கவும் குறைக்கவும் நம்பி, கட்டளைகளைக் காத்துக்கொள்பவர்களை கேலிசெய்து சிரித்தனர். விசுவாசிகள் மீது ஏவப்பட்ட சந்தேகம் மற்றும் இழிவான வார்த்தை தாக்குதலினிமித்தம், கனியை சுவைத்தவர்கள் தாங்கள் தழுவியிருக்கிற சுவிசேஷம் பற்றி வெட்கமடைய தொடங்குகின்கிறனர். உலகத்தின் பொய்யான வசீகரங்கள் அவர்களை தீட்டுப்படுத்துகிறது, அவர்கள் மரத்திலிருந்தும் கனியிலிருந்தும் விலகுகிறார்கள், வேத வார்த்தைப்படி, “தவிர்க்கப்பட்ட பாதைகளில் விழுந்து விலகிப் போனார்கள்.” 10

இன்று நமது உலகத்தில், சத்துருவின் கட்டிடம் கட்டுபவர்கள் அதிக நேரம் வேலைசெய்கிறார்கள், அவசரமாக பெரிய விசாலமான கட்டிடத்தை நிரப்புகிறார்கள். சுட்டிக்காட்டுபவர்களும், தூஷிப்பவர்களும், தங்கள் இணையதள மெகாபோன்களில், இரவும் பகலும் இரைச்சலிடும்போது, நமது வீடுகளை மூட எதிர்பார்த்து, விரிந்த நதியைக் கடந்திருக்கிறது. 11

சாட்சிகளை இடையூறு செய்யவும், கர்த்தருடைய பணியை தாமதப்படுத்தவும் சத்துருவானவன் அவனுடைய முயற்சிகளை நான்குமடங்காக்குகிறான் என தலைவர் நெல்சன் விளக்கினார்.12 லேகியின் வார்த்தைகளை நினைவுகொள்ளுங்கள், “நாங்கள் அவர்கள் மேல் கவனம் செலுத்தவில்லை.”13

நாம் பயப்படத்தேவையில்லை என்றாலும், நாம் கவனமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் சிறு காரியங்கள், நமது ஆவிக்குரிய சமநிலையை பாதிக்கலாம். மரத்தின் அருமையான மரத்திலிருந்து வருகிற இன்மையான, பரிசுத்த, ஆத்ம திருப்தியளிக்கிற ஆசீர்வாதங்களிலிருந்து உங்கள் கேள்விகளும், பிறரின் அவமரியாதைகளும், விசுவாசமற்ற நண்பர்களும், அல்லது துரதிருஷ்மடமான தவறுகளும் ஏமாற்றங்களும் திருப்ப தயவுசெய்து அனுமதிக்காதீர்கள். உங்கள் கண்களையும், இருதயங்களையும், இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிலும், அவரால் மட்டுமே வருகிற நித்திய மகிழ்ச்சியிலும் மையங்கொள்ளச் செய்யவும்.

ஜேசன் ஹாலின் விசுவாசம்

ஜூனில் காத்தியும் நானும் ஜேசன் ஹாலின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டோம். அவர் மரித்தபோது அவருக்கு 48 வயது, மூப்பர்கள் குழும தலைவராக சேவையாற்றினார்.

தன் வாழ்க்கையை மாற்றிய நிகழ்ச்சி பற்றிய ஜேசனின் வார்த்தைகள்:

“[15 வயதில்] வாகன விபத்தில் சிக்கினேன். … என் கழுத்து முறிக்கப்பட்டு, மார்பிலிருந்து முடக்கமானேன். என் கால்களின் முழுகட்டுப்பாட்டையும், கரங்களின் பாதி கட்டுப்பாட்டையும் இழந்தேன். அதற்கு மேல் என்னால் நடக்கவோ, நிற்கவோ, … சாப்பிடவோ முடியவில்லை. நான் க,ஷ்டப்பட்டு சுவாசிக்க அல்லது பேச முடிந்தது.”14

“‘அன்பு பரலோக பிதாவே,’ நான் கெஞ்சினேன், ‘எனக்கு கைகள் மட்டும் இருந்தால், என்னால் சமாளிக்க முடியும் என அறிகிறேன். தயவுசெய்து பிதாவே, தயவுசெய்து. …

“… ‘என் கால்களை வைத்துக்கொள்ளும் பிதாவே, என் கைகளின் உபயோத்துக்காக மட்டும் ஜெபிக்கிறேன்.’”15

ஜேசன் ஒருபோதும் தன் கையின் பயன்பாட்டைப் பெறவில்லை. விசாலமான கட்டிடத்திலிருந்து குரல்களை நீங்கள் கேட்க முடிகிறதா? “ஜேசன் ஹால் தேவன் உங்கள் ஜெபங்களைக் கேட்கவில்லை. தேவன் நேசிக்கிற தேவனாயிருந்தால், அவர் உங்களை எப்படி இவ்வாறு விட முடியும்? ஏன் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்துள்ளீர்கள்?” ஜேசன் ஹால் அவர்களது குரல்களைக் கேட்டார், ஆனால் செவிசாய்க்கவில்லை. மாறாக அவர் மரத்தின் கனியை ருசித்தார். இயேசு கிறிஸ்துவில் அவரது விசுவாசம் அசைக்க முடியாததாக இருந்தது. அவர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று, கோலட் கோல்மனை ஆலயத்தில் திருமணம் செய்தார், என் அன்பு உயிர் என அவளை விவரித்தார்.16 திருமணம் செய்து 16 வருடங்களுக்குப்பிறகு, மற்றொரு அதிசயமாக அவர்களது அருமை மகன் கோல்மன் பிறந்தான்.

படம்
ஜேசன் மற்றும் கோலட் ஹால்
படம்
ஹால் குடும்பம்

அவர்கள் தங்கள் விசுவாசத்தை எப்படி வளர்த்தார்கள்? கோலட் விளக்கினாள்: “நாங்கள் தேவ திட்டத்தை நம்பினோம். அது எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. [வருங்காலத்தில்] ஜேசன் குணமடைவார் என நாங்கள் அறிவோம். … தேவன் நமக்கு ஒரு இரட்சகரைக் கொடுத்தார், அவரது பாவ நிவாரண பலி நாம் கைவிட விரும்பும்போது, நாம் முன்னோக்கிப் பார்க்க நமக்கு சாத்தியப்படுத்துகிறது என நாம் அறிவோம்.”17

படம்
கோல்மன் ஹால்

ஜேசனின் இறுதி நிகழ்ச்சியில் பேசிய 10 வயது கோல்மன், “பரலோக பிதா நமக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறார், பூமி வியப்புக்குரியதாக இருக்கும், நாம் குடும்பங்களாக வாழலாம். … ஆனால் … நாங்கள் கடினமானவற்றைக் கடந்து செல்ல வேண்டும், நாம் தவறுகள் செய்வோம்,” என தன் அப்பா கற்பித்ததாக சொன்னான்.

கோல்மன் தொடர்ந்தான், “பரலோக பிதா தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பினார். அவரது பணி பரிபூரணமாக்குவது. ஜனங்களை குணமாக்க. அவர்களை நேசிக்க. பின்பு நமது அனைத்து வேதனை, துக்கங்கள் மற்றும் பாடுகளுக்காக பாடுபடுவது. பின்பு அவர் நமக்காக மரித்தார். அவர் இதைச் செய்ததால், நாம் இப்போது என்ன நினைக்கிறோம் என இயேசு அறிகிறார்.

கோல்மன் தொடர்ந்தான், “இயேசு மரித்த மூன்று நாட்களுக்குப் பின் அவரது பரிபூரண சரீரத்துடன் அவர் மீண்டும் உயிரோடு வந்தார். இது எனக்கு முக்கியம், ஏனெனில் என் அப்பாவின் சரீரம் பரிபூரணமாயிருக்கும், நாங்கள் குடும்பமாக ஒன்றாயிருப்போம்.”

படம்
ஹால் குடும்பம்

கோல்மன் பின்னும் பேசினான், “நான் குழந்தையாக இருந்தபோது ஒவ்வொரு இரவிலும் என் அப்பா என்னிடம் சொன்னார், ‘அப்பா உன்னை நேசிக்கிறார், பரலோக பிதா உன்னை நேசிக்கிறார், நீ ஒரு நல்ல பையன்.’18

இயேசு கிறிஸ்துவினிமித்தம் மகிழ்ச்சி வருகிறது

ஹால் குடும்பம் ஏன் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள் என தலைவர் ரசல் எம். நெல்சன் விவரித்தார். அவர் சொன்னார்,

நாம் அடைகிற மகிழ்ச்சி, நமது வாழ்க்கை சூழ்நிலைகளைப் பொருத்தது அல்ல, எல்லாம் நமது வாழ்க்கையின் முக்கியத்துவத்தைப் பொருத்ததே.

நமது வாழ்க்கையின் முக்கியத்துவம் தேவனின் இரட்சிப்பின் திட்டம், இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிசேஷத்தின் மீது இருப்பதால், நமது வாழ்க்கையில் என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்கவில்லை என்பது பொருட்டின்றி நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம். அவரிடத்திலிருந்தும் அவராலும் மகிழ்ச்சி வருகிறது. அவரே அனைத்து சந்தோஷத்தின் ஆதாரம். …

“நாம் உலகத்தைப் பார்த்தால் … நாம் ஒருபோதும் சந்தோஷத்தை அறிய மாட்டோம். … இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்டபடி, நீதியான வாழ்க்கை விரும்பி வாழ முயலும்போது, வருகிற அது ஒரு வரம்.”19

நீங்கள் திரும்ப வரும்போது ஒரு வாக்குத்தத்தம்

சில காலத்துக்கு, மரத்தின் கனியில்லாமல் நீங்கள் இருந்தால், இரட்சகரின் கரங்கள் உங்களை நோக்கி நீட்டப்பட்டிருக்கின்றன, என தயவு செய்து அறியுங்கள்.. அவர் அன்போடு அழைக்கிறார், “மனந்திரும்பி என்னிடத்தில் வாருங்கள்.”20 அவரது கனி ஏராளமானது, எல்லாக் காலத்திலும் கிடைக்கும். அதை பணத்தால் வாங்க முடியாது, நேர்மையாக வாஞ்சிக்கிற எவருக்கும் கனி மறுக்கப்படுவதில்லை.21

மரத்திடம் திரும்ப வந்து மீண்டும் கனியைப் புசிக்க விரும்பும் யாரானாலும் உங்கள் பரலோக பிதாவிடம் ஜெபித்துத் தொடங்குங்கள். இயேசு கிறிஸ்துவிலும் அவரது பாவ நிவாரண பலியின் வல்லமையிலும் நம்புங்கள். ஒவ்வொரு சிந்தனையிலும் 22நீங்கள் இரட்சகரை நோக்கிப் பார்க்கும்போது, உங்கள் சுவைக்கு இனிமையாகவும், உங்கள் ஆத்துமாவுக்கு மகிழ்ச்சியாகவும் தேவ வரங்கள் அனைத்திலும் மகத்தானதாகவும் மரத்தின் கனி மீண்டும் உங்களுடையதாக இருக்கும்.23

படம்
லிஸ்பன் ஆலய பிரதிஷ்டையில் மூப்பர் ஆண்டர்செனும் போர்ச்சுக்கீசிய பரிசுத்தவான்களும்

இன்றிலிருந்து மூன்று வாரங்களுக்கு முன்பு, என் மனைவி கேதியும் நானும் லிஸ்பன் போர்ச்சுக்கல் ஆலய பிரதிஷ்டையில் பங்கேற்றபோது, முழுவதுமாக இரட்சகரின் கனி காட்டப்பட்ட மகிழ்ச்சியை நான் பார்த்தேன். மத சுதந்திரம் 1975ல் போர்ச்சுக்கல்லுக்கு கிடைத்தபோது, மறுஸ்தாபித சுவிசேஷ சத்தியங்கள் திறக்கப்பட்டன. அங்கு சபைகளும், கூடுமிடங்களும், ஆலயமும் 1000 மைல்கலுக்குள்(1600 கி. மீ) இல்லாதிருந்தபோது கனியை முதலில் ருசித்த அநேக பரிசுத்தவான்கள், இப்போது லிஸ்பன், போர்ச்சுகல்லில் அருமையான மரத்தின் கனி தாராளமாக இருக்கிறது என எங்களோடு களிகூர்ந்தனர். இரட்சகரில் தங்கள் இருதயங்களை பொருத்தி வைத்த இந்த பிற்காலப் பரிசுத்தவான்களை நான் மதிக்கிறேன், போற்றுகிறேன்.

இரட்சகர் சொன்னார், “ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.”24

உலகெங்கிலுமுள்ள சபையாருக்கு இக்காலையில் பேசும்போது தலைவர் மான்சன் சொன்னார், “என் அன்பு சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவதால் வருகிற கனிகளின் ஜீவிக்கும் உதாரணங்கள் நீங்கள். பின்பு அவர் சொன்னார், நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன்!”25

நாங்கள் உங்களை நேசிக்கிறோம் தலைவர் நெல்சன்.

நமது தலைவர் மீது இருக்கிற வெளிப்படுத்தும் வல்லமைக்கு நானே கண்கண்ட சாட்சி. அவர் தேவனின் தீர்க்கதரிசி. பூர்வகால லேகி போல, தலைவர் ரசல் எம். நெல்சன் தேவனின் குடும்பமாகிய, நம்மை வந்து மரத்தின் கனியைப் புசிக்குமாறு அழைக்கிறார். அவரது ஆலோசனையை பின்பற்ற தாழ்மையும் பலனும் நாம் பெறுவோமாக.

இயேசு கிறிஸ்து தேவ குமாரன் என நான் தாழ்மையாக சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் அன்பும், வல்லமையும், கிருபையும் நீடித்த தகுதியுடையவற்றைக் கொடுக்கும். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. மத்தேயு 07:16.

  2. மத்தேயு 07:17.

  3. யோவான் 04:36.

  4. முன் ஜனவரி 2007ல், ப்ரிகாம் யங் பல்கலைக்கழக ஆராதனை உரைக்காக, ஆயத்தம் செய்துகொண்டிருந்தபோது, மார்ச் 4, 2007ல் கொடுக்கப்படவிருக்கிற எழுபதின்மர் தலைமை அங்கத்தினராக நான் அதே பார்வையாளர்கள் முன், பெப்ருவரி 4, 2007 க்கு அவர் என்ன ஆயத்தம் செய்து கொண்டிருந்தார் என மூப்பர் டேவிட் ஏ. பெட்னாரிடம் நான் கேட்டேன். அவரது செய்தி இருப்புக்கோலை உறுதியாக பிடிப்பது என அவர் பதிலளித்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். என் செய்திக்காக நான் சரியாக தேர்வு செய்தது அது. எங்கள் பிரதியை ஒருவருக்கொருவர் பகிர்ந்தபோது, எங்கள் அணுகுமுறை வித்தியாசமானது என நாங்கள் உணர்ந்தோம். “ஜீவ தண்ணீரின் ஏரி” என தலைப்பிடப்பட்ட அவரது செய்தி, இருப்புக்கோல், அல்லது தேவ வார்த்தை, வேதத்தை உள்ளடக்குவதாக வலியுறுத்தியது. அவரது செய்தியில் அவர் கேட்டார், “இருப்புக்கோலை உறுதியாக பிடிக்க நமக்கு சாத்தியப்படுத்துகிற விதமாக நீங்கள் தினமும் வேதங்களை வாசித்து, படித்து, ஆராய்கிறீர்களா?”(speeches.byu.edu).

    பின், மூப்பர் பெட்னாருனுடன் எனது உரையாடலுக்கு ஒரு வாரத்துக்குப் பின் தலைவர் பாய்ட் கே. பாக்கர் “லேகியின் சொப்பனமும் நீங்களும்” எனத் தலைப்பிடப்பட்ட பிஒய்யூ ஆராதனை உரையைக் கொடுத்தார். தலைவர் பாக்கர், இருப்புக்கோலை பரிசுத்த ஆவி மூலம் நமக்கு வருகிற வெளிப்படுத்தல் மற்றும் உணர்த்துதல் என வலியுறுத்தினார். அவர் சொன்னார், “நீங்கள் கோலைப் பிடித்தால், நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்தோடு, முன்னோக்கிய உங்கள் வழியை உணரலாம். … இருப்புக் கோலை பற்றிக்கொள்ளுங்கள், விட்டு விடாதீர்கள். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால், வாழ்க்கையில் உங்கள் வழியை நீங்கள் உணர முடியும்” (Jan. 16, 2007, speeches.byu.edu).

    மார்ச்சில் எனது பாடப்பொருள், “தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை உறுதியாகப் பிடியுங்கள்”,ல் இருப்புக்கோல் ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் குறிப்பதாக இருந்தது.(Mar. 4, 2007, speeches.byu.edu).

    இந்த மூன்று செய்திகளின் தொடர்பு ஒத்த நிகழ்வு அல்ல. இந்த மூன்று செய்திகளும், ஒரு பார்வையாளர்களுக்கு ஆயத்தப்படுத்தப்பட்டு, இருப்புக்கோல் அல்லது தேவ வார்த்தையின் மூன்று தன்மைகளை (1) வேதங்கள் அல்லது பூர்வகால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள், (2) ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள், (3) பரிசுத்த ஆவியின் வல்லமையை அடையாளம் கண்டதில் கர்த்தரின் கரம் கிரியை செய்தது. இது எனக்கு ஒரு முக்கிய கற்கும் அனுபவமாக இருந்தது.

  5. 1 நேபி 8:4-12 பார்க்கவும்.

  6. 1நேபி 11:25

  7. யோவான் 03:16.

  8. David A. Bednar, “Lehi’s Dream: Holding Fast to the Rod,” Liahona, Oct. 2011, 32–37 பார்க்கவும்.

  9. 1நேபி 11:23

  10. 1நேபி 08:28

  11. Boyd K. Packer, “Lehi’s Dream and You” (Brigham Young University devotional, Jan. 16, 2007), speeches.byu.edu பார்க்கவும்.

  12. Russell M. Nelson, “We Can Do Better and Be Better,” Liahona, May 2019, 68.

  13. 1 நேபி 08:33

  14. Stephen Jason Hall, “The Gift of Home,” New Era, Dec. 1994, 12.

  15. Stephen Jason Hall, “Helping Hands,” New Era, Oct. 1995, 46, 47.

  16. கோலட் ஹாலிடமிருந்து மூப்பர் ஆண்டர்சென்னுக்கு தனிப்பட்ட தொடர்பு.

  17. கோலட் ஹாலிடமிருந்து மூப்பர் ஆண்டர்சென்னுக்கு தனிப்பட்ட தொடர்பு.

  18. கோல்மன் ஹால் இறுதி அஞ்சலி செய்தி, கோலட் ஹாலால் மூப்பர் ஆண்டர்சென்னுக்கு பகிரப்பட்டது.

  19. Russell M. Nelson, “Joy and Spiritual Survival,” Liahona, Nov. 2016, 82, 84.

  20. 3 நேபி 21:6.

  21. 2 நேபி 26:25, 33 பார்க்கவும்.

  22. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 06:36.

  23. 1நேபி 15:36

  24. யோவான் 15:5.

  25. Russell M. Nelson, “The Second Great Commandment,” Liahona, Nov. 2019, 100.

அச்சிடவும்