2010–2019
தேவனுடன் பங்காளியாயிருக்கும் உடன்படிக்கை பெண்கள்
அக்டோபர் 2019 பொது மாநாடு


தேவனுடன் பங்காளியாயிருக்கும் உடன்படிக்கை பெண்கள்

தேவனுடன் பங்காளியாக உடன்படிக்கை பெண்களாவது, எவ்வளவு மகத்தானது மற்றும் தேவனின் நல்ல குமாரத்திகள் எப்போதும் தாய்களாக இருந்து, வழிநடத்தி, ஊழியம் செய்திருக்கிறார்கள்.

தேவனின் உடன்படிக்கை குமாரத்திகளாகிய உங்களுக்கு உரையாற்ற கிடைத்த ஆசீர்வாதத்திற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிற மகத்தான பணியில் உங்களை ஊக்குவிப்பதே இன்றிரவு என்னுடைய நோக்கம். ஆம், எனது குரலைக் கேட்டுக்கொண்டிருக்கிற தேவனின் எல்லா குமாரத்தியும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பு ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

அநித்தியத்தில் ஒரு இடத்தில் நீங்கள் வைக்கப்பட்டபோது, துல்லியமாக உங்களை அறிந்திருக்கிற, அவருடைய குமாரத்தியாக உங்களை நேசிக்கிற ஒரு தேவனால் உங்களுக்காக தீர்மானிக்கப்பட்ட இடத்திலும் நேரத்திலும் உங்களுடைய அழைப்பு ஆரம்பமானது. ஆவி உலகத்தில், அவர் உங்களை அறிந்திருக்கிறார், உங்களுக்கு போதித்திருக்கிறார், ஞானஸ்நானத் தொட்டிக்கு அழைக்கப்பட்டவராக, உலக வரலாற்றில் அரிதான வாய்ப்பு உங்களுக்கிருக்கிற இடத்தில் வைக்கப்பட்டீர்கள். அங்கே, இயேசு கிறிஸ்துவின் அழைக்கப்பட்ட ஒரு ஊழியக்காரரால் பேசப்பட்ட இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். “இயேசு கிறிஸ்துவினால் ஆணையிடப்பட்டவனாய் நான் உனக்கு பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். ஆமென்.”1

தண்ணீரிலிருந்து நீங்கள் வெளியே வரும்போது சேவை செய்ய மற்றொரு அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். தேவனின் புதிய உடன்படிக்கையின் ஒரு குமாரத்தியாக, நீங்கள் ஒரு வாக்குறுதியைக் கொடுத்து திடப்படுத்தப்பட்ட ஒரு அங்கத்தினராக பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் ஒரு பணியைப் பெற்றீர்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தை உங்கள்மீது எடுத்துக்கொள்ளவும், அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவும், அவருக்கு சேவை செய்யவும் தேவனோடு நீங்கள் உடன்படிக்கை செய்தீர்கள்.

இந்த உடன்படிக்கைகளைச் செய்கிற ஒவ்வொருவருக்கும், கர்த்தர் அழைக்கிற அவன் அல்லது அவள் செய்ய கர்த்தர் அழைக்கிற சேவை அந்த நபருக்கு பரிபூரணமாக பொருத்தமாயிருக்கும். உடன்படிக்கையின் குமாரத்திகளும் தேவனின் குமாரர்களும், எப்படியாயினும், ஒரு முக்கியமான மகிழ்ச்சியான அழைப்பை எல்லோரும் பகிர்ந்துகொள்கிறார்கள். இது அவருக்காக மற்றவர்களுக்கு சேவை செய்யவே.

சகோதரிகளிடம் பேசும்போது, அவரது பணியில் அவரோடு இணைய உங்களுக்கு கர்த்தருடைய அழைப்பின் ஒரு அற்புதமான தொகுப்பை தலைவர் ரசல் எம். நெல்சன் கொடுத்தார். கர்த்தர் சொன்னார் “என்னுடைய கிரியையும் மகிமையும் மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவருவதற்கே.’ (மோசே 1:39.) ஆகவே, அவருடைய அர்ப்பணிப்புள்ள குமாரத்தி-சீஷை உண்மையாக சொல்லலாம், ‘என்னுடைய கிரியையும் மகிமையும் எனக்கன்பானவர்கள் அந்த பரலோக இலக்கை அடைய உதவுவதே.’

ஒருவருடைய சிலஸ்டியில் திறனை அடைய மற்றொரு மனிதருக்கு உதவுதல் பெண்ணின் தெய்வீக ஊழியத்தின் பகுதி. தாயாக, ஆசிரியராக, அல்லது போஷிக்கும் பரிசுத்தவானாக, அவளுடைய நம்பிக்கையின் வடிவத்திற்கு ஜீவனுள்ள களிமண்ணை அவள் வார்க்கிறாள். தேவனோடு பங்காளியாக அவளுடைய தெய்வீக ஊழியமென்பது ஆவிகள் ஜீவிக்கவும் ஆத்துமாக்கள் உயர்த்தப்படவும் உதவுவதே. இது அவளுடைய சிருஷ்டிப்பின் அளவு. இது மேம்படுத்துவது, திருத்துவது மற்றும் உயர்த்துவது”.2

தாயாக, தலைவராக, அல்லது ஊழியம்செய்யும் சகோதரியாக அழைப்புகளின் சேவையில் உங்களுடைய தனிப்பட்ட ஊழியம் எப்போது அல்லது எவ்வளவு நீண்ட நேரம் சேவையில் கவனம் செலுத்தப்படும் என உங்களால் அறியமுடியாது. கர்த்தர் தம் அன்பினால் நமது பணிகளில் நேரம், காலம், வரிசையின் தேர்ந்தெடுப்புகளை, நம்மிடம் விடுவதில்லை. இருந்தும், தேவனின் எல்லா குமாரத்திக்கும், இந்த வாழ்க்கையில் அல்லது வரப்போகிற வாழ்க்கையில் இந்த எல்லா பணிகளும் வருமென்று வேதத்திலிருந்தும், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளிடமிருந்தும் நாம் அறிகிறோம். இவைகளெல்லாம், “தேவனுடைய வரங்கள் அனைத்திலும் மிகப்பெரியதான”3 அன்பான குடும்பங்களின் நித்திய ஜீவனுக்கான ஆயத்தம்.

முடிவை மனதில் வைத்து இப்போது ஆயத்தப்பட எல்லா முயற்சிகளையும் செய்ய நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருப்பீர்கள். இந்த பணிகள் ஒவ்வொன்றுக்கும் அதே ஆயத்தம் தேவையாயிருப்பதால் அந்த பணி எளிதாக்கப்பட்டது.

ஒரு ஊழியம் செய்கிற சகோதரியாயிருக்கும் பணியுடன் ஆரம்பிப்போமாக. தகப்பன் மரித்துப்போன ஒரு குடும்பத்தில் 10 வயது மகளாக, அல்லது நெருப்பினால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட பட்டணத்திற்கு ஒத்தாசைச் சங்கத் தலைவராக, அல்லது ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையிலிருந்து நீங்கள் குணமாகிக்கொண்டு வருவதானால், அந்த பணிப்பு உங்களுக்கிருந்தால் அவருடைய ஊழியம் செய்யும் குமாரத்தியாக இருக்க கர்த்தரிடமிருந்து வந்த உங்கள் அழைப்பை நிறைவேற்ற உங்களுக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது.

அவை மிக வித்தியாசமான ஊழிய பணிளாக இருப்பதாகத் தோன்றுகிறது. இருந்தும், ஒரு வழியை அவர் ஆயத்தம் செய்யாமல், கர்த்தர் எந்த கட்டளையையும், அவருக்காக போய் செய்ய ஒரு விருப்பத்தையும் கொடுப்பதில்லையாதலால் ஒரு ஆற்றலுள்ள, அன்பான இருதயமுள்ள, பயமில்லாத விசுவாசத்தின் ஆயத்தம் எல்லாம் அவைகளுக்குத் தேவையாயிருக்கிறது.4

அவள் ஆயத்தமாயிருந்ததால், அந்த 10 வயது குமாரத்தி அவளுடைய விதவையான தாயின் கழுத்தைச் சுற்றி கைகளைப்போட்டு அவளுடைய குடும்பத்திற்கு எப்படி உதவுவதென்று அறிய ஜெபிக்கிறாள். அவள் அதைக் கைக்கொள்கிறாள்.

அவளுடைய பகுதியில் எதிர்பாராத நெருப்புக்கு முன்னர், ஊழியம் செய்ய ஒத்தாசைச் சங்கத் தலைவி ஆயத்தமானாள். அவள் கேள்விப்பட்டு, ஜனங்களை நேசித்தாள். அவருக்கான சிறிய சேவையில் கர்த்தர் அவளுக்குதவ அவளுடைய ஜெபத்திற்கு பதில்களைப் பெற்றதிலிருந்து சில ஆண்டுகளில் இயேசு கிறிஸ்துவில் அவளுடைய விசுவாசம் வளர்ந்தது. அவளுடைய நீண்ட ஆயத்தத்தினால், அவள் தயாராயிருந்து ஜனங்களுக்கும் துயரத்திலிருந்த குடும்பங்களுக்கும் ஊழியம் செய்ய அவளுடைய சகோதரிகளை ஒருங்கிணைக்க ஆர்வமாயிருந்தாள்.

ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையிலிருந்து குணமாகிவருகிற ஒரு சகோதரி அவளுடைய சக நோயாளிகளுக்கு ஊழியம் செய்ய ஆயத்தமானாள். அவன் அல்லது அவள் ஒரு பக்கத்து வீட்டார் அல்லது நண்பரைப்போல ஒவ்வொரு அந்நியருக்கும் கர்த்தருக்காக ஊழியத்தைச் செய்ய அவள் வாழ்நாளை செலவழித்தாள். மருத்துவமனையில் ஊழியம்செய்ய அழைப்பை தனது இருதயத்தில் அவள் உணர்ந்தபோது, மிக சீக்கிரத்தில் அவள் குணமடையமாட்டாள் என்று நம்ப ஆரம்பித்த அத்தகைய அன்புடன் மிக தைரியமாகவும், மற்றவர்களுக்கு அவள் சேவை செய்தாள்.

நீங்கள் ஊழியம் செய்ய ஆயத்தப்படுகிற அதே வழியில், அது வரும்போது கர்த்தருக்காக ஒரு தலைவராயிருக்க உங்கள் அழைப்புக்காக நீங்கள் ஆயத்தப்படவேண்டும். ஜனங்களை நடத்தவும் பயமில்லாமல் அவருடைய வார்த்தைகளைப் போதிக்கவும் வேரூன்றியிருக்கிற வேதத்தில் உங்களுடைய ஆழமான அன்பில் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் அதற்குத் தேவையாயிருக்கும். பின்னர், பரிசுத்த ஆவி உங்களின் நிரந்தர துணையாயிருக்க நீங்கள் ஆயத்தப்படுவீர்கள். இளம் பெண்கள் தலைமையில் ஆலோசகராக இருக்கிறவர் தனது குரலில் பீதியுடன் “சகோதரி ஆல்வரஸ் இன்று சுகவீனமாயிருக்கிறார்” என்று சொல்லும்போது “நான் போவேன்” என்று சொல்ல நீங்கள் ஆர்வமாயிருப்பீர்கள். “அவளுடைய வகுப்பை யார் கற்றுக்கொடுப்பார்கள்?”

ஒரு தாயாக ஒரு பணிக்கு உங்களை கர்த்தர் அழைக்கும்போது அந்த அற்புதமான நாளுக்காக அதே அதிக ஆயத்தம் தேவைப்படுகிறது. ஆனால், ஆரம்பத்தில் உங்களுக்கு அவசியமானதைவிட அதிக அன்பின் இருதயமும் தேவைப்படுகிறது. உங்களுடைய இருதயத்தில் முன்பு எப்போதும் இருந்ததற்கும் அப்பால் இயேசு கிறிஸ்துவில் அதற்கு விசுவாசம் தேவைப்படும். சாத்தியமென நீங்கள் உணர்ந்ததற்கும் அப்பால் பரிசுத்த ஆவியின் செல்வாக்குக்காகவும், வழிநடத்துதலுக்காகவும், ஆறுதலுக்காகவும், ஜெபிக்கும் ஆற்றலுக்கும் அது தேவைப்படும்.

எந்த வயதிலுமுள்ள ஒரு மனிதன், தாய்மார்களுக்கு என்ன தேவையென எப்படிஅறிந்துகொள்வான் என நீங்கள் நியாயமான வகையில் கேட்கலாம். அது ஒரு மதிப்புள்ள கேள்வி. ஆண்களால் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியாது, ஆனால், தேவனிடமிருந்து வருகிற வெளிப்படுத்தலால் சில பாடங்களை நாங்கள் கற்றுக்கொள்ளமுடியும். நாம் கவனித்ததை புரிந்துகொள்ள நமக்குதவ பரிசுத்த ஆவியை நாட நாம் ஒரு சந்தர்ப்பத்தை எடுக்கும்போது, கவனிப்பால் நாம் அதிகமானவற்றையும் கற்றுக்கொள்ள முடியும்.

எங்களுக்கு திருமணமாகி 57 ஆண்டுகளாக, காத்லீன் ஜான்சன் ஐரிங்கை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான்கு பையன்களுக்கும் இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் அவள் தாய். இன்றுவரை, நேரடியான நூறு குடும்ப அங்கத்தினர்களுக்கும் கூடுதலாகவும், தனது தாயின் உள்ளத்திற்குள் தத்தெடுத்த நூற்றுக்கும் அதிகமானோருக்கும் தாயின் செல்வாக்காயிருக்கும் அழைப்பை அவள் ஏற்றுக்கொண்டாள்.

அவளுடைய தாய்மைக்கான ஊழியத்தையும் உள்ளடக்கி ஒரு பெண்ணின் தெய்வீக ஊழியம் பற்றிய தலைவர் நெல்சனின் துல்லியமான விளக்கத்தை நீங்கள் நினைவுகூருங்கள். “தாயாக, ஆசிரியராக அல்லது போஷிக்கும் பரிசுத்தவானாக அவளுடைய நம்பிக்கைகளின் வடிவத்திற்கு உயிருள்ள களிமண்ணை அவள் வார்க்கிறாள். தேவனோடு கூட்டாளியாக, அவளுடைய தெய்வீக ஊழியம், ஜீவிக்கிற ஆவிகளும் ஆத்துமாக்களும் உயர்த்தப்பட உதவுவதே. இது அவளுடைய சிருஷ்டிப்பின் அளவு.”5

கிட்டத்தட்ட நான் பகுத்தறிகிறபடி, நமது பிதாவின் குமாரத்திகளுக்குக் கொடுக்கப்பட்ட அந்த கட்டளையை என்னுடைய மனைவி காத்லீன் பின்பற்றுகிறாள். “தேவனோடு பங்காளியாக. … அவளுடைய நம்பிக்கைகளின் வடிவத்திற்கு ஜீவிக்கும் களிமண்ணை அவள் வார்க்கிறாள்” என்ற வார்த்தைகள் எனக்கு விசையாகத் தோன்றுகிறது. அவள் கட்டாயப்படுத்தவில்லை. அவள் வார்த்தாள். அவளுடைய நம்பிக்கைகளுக்கு அவளிடம் ஒரு வார்ப்பு இருந்தது, அதில் அவள் நேசித்த, தான் தாயாக இருந்தவர்களை வார்க்க அவள் முயற்சித்தாள். பல ஆண்டுகளாக ஜெபத்துடனான கவனிப்பில் நான் பார்க்கமுடிந்த, அவளுடைய வார்ப்பு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷமாயிருந்தது.

தேவனுடன் பங்காளியாயிருப்பதில் ஒரு உடன்படிக்கை பெண்ணாக மாறுதல், எப்போதும் தாய்பாசத்திலிருக்கிற, நடத்துகிற, ஊழியம் செய்கிற, அவர்களுக்காக அவர் ஆயத்தப்படுத்தியிருக்கிற எந்த வழியாயினும் இடமாயினும் சேவை செய்கிற தேவனுடைய பிள்ளைகளாக எவ்வளவு பெரியதும் நன்றாகவுமிருக்கிறது. உடன்படிக்கையைக் கைக்கொள்ளுகிற தேவனின் குமாரத்திகளாக அவரிடத்தில் திரும்பும்போது, உங்கள் பரலோக வீட்டிற்கு உங்களுடைய பயணத்தில் நீங்கள் சந்தோஷத்தைக் காண்பீர்களென நான் வாக்களிக்கிறேன்.

பிதாவாகிய தேவன் உங்களை அறிகிறார், உங்களை நேசிக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். அவர் உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிப்பார். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையை எல்லா விவரத்துடனும் அவருடைய நேச குமாரன் நடத்துகிறார். தலைவர் ரசல் எம்.நெல்சன், அவருடைய ஜீவிக்கிற தீர்க்கதரிசி. பல்மைரா, நியூயார்க்கில் மரங்களடங்கிய தோப்பில் பிதாவாகிய தேவனையும், இயேசு கிறிஸ்துவையும் ஜோசப் ஸ்மித் கண்டு அவர்களுடன் பேசினார். அது உண்மையென நான் அறிவேன். இயேசு கிறிஸ்து உங்கள் இரட்சகர், அவர் உங்களை நேசிக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். அவரது பாவநிவர்த்தி மூலம் உங்களுக்கு வரவிருக்கிற உயர்வான பரிசுத்த அழைப்புகளில் நீங்கள் பரிசுத்தப்படுத்தப்பட்டு உயர்த்தப்படுவீர்கள். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

அச்சிடவும்