2010–2019
அறிவதும், நேசிப்பதும், வளர்வதும்
அக்டோபர் 2019 பொது மாநாடு


அறிவதும், நேசிப்பதும், வளர்வதும்

நாம் அவரைப்போல அதிகமாக ஆகும்படிக்கு, இந்த மாபெரும் ஊழியப்பணியில் நமது பங்கை புரிந்து கொள்வோமாக.

2016ல் ஆலய சதுக்கத்திலுள்ள டாபர்னக்கிள் சேரந்திசைக் குழு நெதர்லாந்துக்கும் பெல்ஜியத்துக்கும் வந்தது. அந்த மகிழ்ச்சிமிக்க நிகழ்ச்சியில் நானும் ஈடுபட்டிருந்ததால், அவர்களது நிகழ்ச்சியை ரசிக்கும் சந்தர்ப்பத்தை நானும் இருமுறை பெற்றேன்.

படம்
காங் இசைக்கருவி

அவர்கள் நிகழ்ச்சி நடத்தியபோது, அவ்வளவு பெரிய இசைக்குழுவை அழைத்துச் செல்வது எவ்வளவு கடினமான வேலை என நான் நினைத்தேன். ஒரு வயலின், ட்ரம்பட் அல்லது பிற உங்கள் அக்குளுக்குள் எளிதாக கொண்டு செல்லக்கூடியவற்றோடு ஒப்பிடும்போது, கடினமான அல்லது அதிக சரக்குக் கட்டணம் ஆகக்கூடிய பெரிய காங்க் எனது கவனத்தை ஈர்த்தது. ஆனால் அந்த காங்கின் உண்மையான பயன்பாட்டை பார்க்கும்போது அது சில சமயங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது, பிற சிறிய கருவிகளோ கச்சேரியில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. காங்கின் ஒலியில்லாமல் அந்நிகழ்ச்சி அப்படியிருக்கமுடியாது, ஆகவே கடல் கடந்து அநதப் பெரிய காங் கொண்டுவரப்பட முயற்சி செய்யப்பட வேண்டியிருந்தது என நான் நினைத்தேன்.

படம்
இசைக்குழுவுடன் காங் வாசிப்பவர்

அந்த காங் போல நிகழ்ச்சியில் சிறு பங்கு பெற மட்டுமே கூடும் என நாம் சில சமயங்களில் நினைக்கலாம். ஆனால் உங்கள் ஒலிதான் எல்லா வித்தியாசங்களையும் செய்கிறது என நான் சொல்கிறேன்.

எல்லா கருவிகளும் நமக்குத் தேவை. நம்மில் சிலர் எளிதாகக் கற்று பள்ளியில் நன்கு படிக்கிறோம், பிறர் கலைத்திறன் பெற்றிருக்கிறார்கள். சிலர் வடிவமைத்து, பொருட்கள் செய்கிறார்கள், அல்லது போஷித்து, பாதுகாத்து, பிறருக்கு போதிக்கிறார்கள். இந்த உலகத்துக்கு அழகும் அர்த்தமும் கொண்டுவர நாமனைவரும் தேவை.

செய்ய எதுவுமில்லை என உணர்பவர்களுக்கு அல்லது யாருக்கும் எந்த முக்கியத்துவமும் பயனும் தங்களால் இல்லை என நம்புபவர்களுக்கு, தாங்கள்தான் உலகத்தின் கூரையில் இருக்கிறோம் என நினைப்பவர்களுக்கு, அல்லது இடைப்பட்ட எவருக்கும் நான் இச்செய்தியைக் கொடுக்க விரும்புகிறேன்.

வாழ்க்கைப் பாதையில் நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் பாதையிலேயே இல்லை என நினைக்கும்படிக்கு அதிக பாரப்பட்டிருக்கலாம். நீங்கள் இருளிலிருந்து வெளிச்சதுக்கு வரவேண்டும் என நான் உங்களை வரவேற்க விரும்புகிறேன். சுவிசேஷ ஒளி இதமும் குணமாக்கலும் அளித்து, நீங்கள் உண்மையில் யார், வாழ்க்கையில் உங்கள் நோக்கம் என்ன என புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.

கைவிடப்பட்ட பாதைகளில் மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்க சிலர் அதில் திரிகிறார்கள்.

சீஷத்துவத்தின் பாதையில் நடக்கவும், அவரிடம் திரும்ப செல்லவும், அன்பு மிக்க பரலோக பிதாவால் நாம் வரவேற்கப்படுகிறோம். அவர் பரிபூரண அன்பினால் நம்மை நேசிக்கிறார்.1

வழி எது? ஒருவருக்கொருவர் ஊழியம் செய்து நாம் யார் என புரிந்து கொள்ள உதவுவதே அந்த வழியாகும்.

எனக்கு ஊழியம் செய்தல், தெய்வீக அன்பை பிரயோகித்தலாகும்.2 அந்த விதமாக மனந்திரும்ப, கொடுப்பவரும் பெறுபவரும் ஒரு வாஞ்சை பெறும் சூழ்நிலையை நாம் உருவாக்குகிறோம். வேறு வார்த்தைகளிலெனில், நாம் வழியை மாற்றி நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து போலாக நெருக்கமாக வருகிறோம்.

உதாரணமாக நமது துணைவருக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ அவர்கள் எதில் முன்னேற வேண்டும் என தொடர்ந்து சொல்ல வேண்டியதில்லை. அதை அவர்கள் ஏற்கனவே அறிவார்கள். தங்கள் வாழ்க்கையில் தேவையான மாற்றங்களை செய்யவும், நல்ல ஜனமாக மாறவும், அவர்கள் வலிமை பெறும்படிக்கு, அன்பின் சூழ்நிலையை உருவாக்குவதுதான்.

இந்த விதத்தில் மனந்திரும்புதல் சுத்திகரிக்கும் அன்றாட முறையாகிறது, அதில் கெட்ட நடத்தைக்காக மன்னிப்புக் கோருவதும் அடங்கும். நான் நியாயந்தீர்க்க விரைந்தும், செவிகொடுக்க மெதுவாயும் இருந்த சூழ்நிலைகளை நினைக்கிறேன், இன்னும் அனுபவிக்கிறேன். நாளின் என் தனிப்பட்ட ஜெபத்தில், நாளின் கடைசியில் மனந்திரும்பவும், நல்லவனாகவும் அன்பான ஆலோசனையை பரலோகத்திலிருந்து உணர்ந்தேன். முதலில் என் பெற்றோராலும், சகோதரனாலும், சகோதரிகளாலும், பின்னர் என் மனைவியாலும், பிள்ளைகளாலும், நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட அன்பான சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

நாம் எதில் சிறப்பாகச் செய்ய முடியும் என நாம் அனைவரும் அறிவோம். ஒருவருக்கொருவர், திரும்ப திரும்ப நினைவூட்டத் தேவையில்லை. ஆனால் ஒருவரையொருவர் நேசிக்கவும் ஊழியம் செய்யவும் தேவை இருக்கிறது, அப்படிச் செய்வதால் மாறும் சாத்தியமுள்ள சூழ்நிலையைக் கொடுங்கள்.

இதே சூழ்நிலையில்தான் நாம் யார் எனவும், இரட்சகரின் இரண்டாம் வருகைக்கு முன் உலக சரித்திரத்தின் கடைசி அத்தியாயத்தில் நமது பங்கு எதுவாக இருக்கும் எனவும் நாம் கற்கிறோம்.

உங்கள் பங்கு பற்றி நீங்கள் ஆச்சரியப்பட்டால், நீங்கள் தனிமையாக இருந்து, என்ன பங்காற்றுவது என தெரிவிக்க பரலோக பிதாவைக் கேட்க ஒரு இடத்தைக் கண்டு பிடிக்க நான் உங்களை அழைக்கிறேன். நாம் உடன்படிக்கை மற்றும் ஊழியம் செய்யும் பாதையில் நமது பாதங்களை தெளிவாகவும் உறுதியாகவும் வைக்கும்போது பதில் ஒருவேளை மெதுவாக வரலாம்.

அவர் வார்த்தைப் போர்கள் மற்றும் குழப்பமான அபிப்பிராயங்கள் மத்தியில் ஜோசப் ஸ்மித் எதிர்கொண்ட, அதே கஷ்டங்களை நாம் அனுபவிக்கிறோம். அவரது சொந்த விவரத்தை நாம் வாசிக்கும்போது, அவர் அடிக்கடி தனக்குள்ளே சொல்லிக்கொண்டார், “எது செய்யப்பட வேண்டும்? இந்தக் குழுக்களில் யார் சரி, அல்லது அவர்கள் அனைவரும் தவறானவர்களா? அவர்களில் ஒருவர் சரியானவராயிருந்தால், அது யார், அதை நான் எப்படிஅறிவேன்?”3

யாக்கோபுவின் நிருபத்தில் அவர் கண்ட அறிவின்படி, அது கூறியது, “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன்.”4 ஜோசப் ஸ்மித் பிறகு ‘தேவனிடத்தில் கேட்கும்’”5 தீர்மானத்துக்கு வந்தார்.

“தன் வாழ்க்கையில் அவர் இப்படிப்பட்ட முயற்சியை முதல் முறை செய்தார், அந்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் இதுவரை அவர் ஒருபோதும் வாய் திறந்து ஜெபிக்க முயற்சி செய்யவில்லை,” என நாம் மேலும் வாசிக்கிறோம்.6

மேலும் நாம் ஒருபோதும் செய்யாத, நமது சிருஷ்டிகரை அழைக்கும் முதல் முறை நமக்கு இதுவாக இருக்கலாம்.

ஜோசப்பின் முயற்சியினிமித்தம், பரலோக பிதாவும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும், அவருக்குத் தோன்றி, அவரைப் பெயர் சொல்லி அழைத்து, அதன் விளைவாக நாம் யார், நாம் உண்மையாகவே மதிப்புடையவர்களா என தெளிவான புரிதல் பெற்றிருக்கிறோம்.

அவரது இளம், பதின்ம பருவத்தில், “அவரது நண்பர்களாக இருந்திருக்க வேண்டியவர்கள், அவரை அன்பாக நடத்தியிருக்க வேண்டியவர்கள் அவரை துன்புறுத்தினார்கள்” என மேலும் வாசிக்கிறோம்.7 நாம் சீஷத்துவ வாழ்க்கை வாழும்போது, இப்படிப்பட்ட எதிர்ப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

நீங்கள் இசைக்குழுவின் பாகமாக இருக்க முடியாமல் போனதாக தற்போது நீங்கள் உணர்ந்தால், மனந்திரும்புதலின் பாதை கடினமாக உங்களுக்குத் தோன்றினால், நாம் இதைக் காத்துக்கொண்டால் பாரம் நமது தோள்களிலிருந்து எடுக்கப்படும், மற்றும் மீண்டும் ஒளி வரும் என தயவு செய்து அறியுங்கள். நாம் அவரிடம் செல்லும்போது, பரலோக பிதா நம்மைவிட்டு ஒருபோதும் விலக மாட்டார். நாம் விழுந்து எழுந்திருக்க முடியும் மற்றும் நமது முழங்கால்களிலிருந்து அழுக்கை துடைக்க அவர் நமக்கு உதவுவார்.

நம்மில் சிலர் காயப்பட்டிருக்கிறோம், ஆனால் கர்த்தரின் முதலுதவிப்பெட்டி, நமது காயங்களை மூட போதுமான பெரிய கட்டும் துணிகள் வைத்திருக்கிறது.

ஆகவே அந்த அன்பு, நாம் தயாளம் அல்லது “கிறிஸ்துவின் பரிசுத்த அன்பு” என அழைக்கிற நிபந்தனையற்ற அன்பு 8பெற்றோர் ஊழியம் செய்கிற பிள்ளைகள், தங்கள் பெற்றோருக்கு ஊழியம் செய்கிற பிள்ளைகள் நமது வீடுகளில் தேவை. இருதயங்கள் மாற்றப்படும், அவரது சித்தத்தை செய்ய வாஞ்சைகள் பிறக்கும்.

இரட்சகர் திரும்பவும் வரும்போது, பரலோகத்தின் தூதர்களின் இசைக்குழுவுடன் மகிமையுடன் நாம் இசைக்கும்படியாக நமது இசைக்குழுக்களில் எல்லா இசைக் கருவிகளையும் சேர்க்க சாத்தியப்படுத்தும், பரலோக பிதாவின் பிள்ளைகளாகவும், அவரது சபையாராகவும் ஒருவருக்கொருவருடன் நமது செயல்களில் தேவைப்படுவது அந்த அன்பே.

நாம் நமது தினசரி வாழ்க்கையை வாழும்போது, நமது சுற்றுப்புறங்களை பிரகாசிக்கவும், வெளிச்சமாக்கவும் தேவைப்படுகிற அந்த அன்பே அது. ஜனங்கள் அந்த ஒளியைக் கண்டு அதனிடத்தில் வருவார்கள். அந்த விதமான ஊழியப்பணியே, “வந்து பார்க்கவும், வந்து உதவவும், வந்து தங்கவும் பிறரை இழுக்கும்.9 இந்த மாபெரும் பணியையும், இதில் நமது பங்கேற்பையும் பற்றி உங்கள் சாட்சியை நீங்கள் பெற்றபோது, “ஏனெனில் நான் ஒரு தரிசனத்தைப் பார்த்தேன், அதை நான் அறிந்தேன், தேவன் அதை அறிவார் என நான் அறிந்தேன், என்னால் அதை அனுமதிக்க முடியாது.”10

நான் யார் என நானறிவேன் மற்றும் நீங்கள் யார் எனவும் நானறிவேன் என நான் சாட்சியளிக்கிறேன். நாமனைவரும் நம்மை நேசிக்கிற பரலோக பிதாவின் பிள்ளைகள். நாம் தோற்கும்படியாக நம்மை இங்கு அனுப்பாமல் அவரிடம் மகிமையுடன் திரும்ப வரும்படிக்கே அனுப்பியிருக்கிறார். அவர் திரும்பவும் வரும்போது, நாம் அவரைப்போல அதிகமாக ஆக இந்த மாபெரும் ஊழியப்பணியில் நமது பங்கை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே எனது ஜெபமாகும்.

அச்சிடவும்