2010–2019
நமது விசுவாசத்தின் சோதனைக்குப்பிறகு
அக்டோபர் 2019 பொது மாநாடு


நமது விசுவாசத்தின் சோதனைக்குப்பிறகு

நாம் தேவனின் குரலையும், அவரது உடன்படிக்கையின் பாதையையும் பின்பற்றும்போது, நமது பாடுகள் அனைத்திலும் நம்மை பெலப்படுத்துவார்.

நான் குழந்தையாக இருந்தபோது, நாங்கள் ஆலயத்தில் முத்திரிக்கப்படும்படிக்கு, ஒரு அன்பான சபை அங்கத்தினர் ப்ராங்க் டால்லி, போர்ட்டோ ரிக்கோவிலிருந்து சால்ட் லேக் சிட்டிக்கு தன் சொந்த விமானத்தில் செல்ல எங்கள் குடும்பத்தை அனுமதித்தார். ஆனால் உடனே தடைகள் தோன்றத் தொடங்கின. எனது சகோதரிகளில் ஒருத்தி, மரிவிட் சுகமில்லாமல் போனாள். சரியாகாமல், என்ன செய்வது என என் பெற்றோர் ஜெபித்தனர், இருப்பினும் பிரயாணத்தைச் செய்யுமாறு தூண்டப்படுவதாகவே அவர்கள் உணர்ந்தனர். ஆலயத்துக்குச் செல்ல கர்த்தரின் தூண்டுதல்களை அவர்கள் விசுவாசத்துடன் பின்பற்றும்போது, எங்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்படும் என நம்பினர், நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கிற தடைகள் பொருட்டின்றி, நாம் விசுவாசத்தோடு நடக்கும்போது, இயேசு கிறிஸ்து முன்னோக்கி செல்ல வழியை ஆயத்தப்படுத்துவார் என நாம் நம்பலாம். தம்முடன் அவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகளுக்குத்தக்க விசுவாசத்தோடு வாழ்பவர்கள், அவரது நேரத்தில் அவரது அனைத்து வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்களையும் பெறுவார்கள். மூப்பர் ஹாலண்ட் சொன்னார், “சில ஆசீர்வாதங்கள் உடனே வருகின்றன. சில மெதுவாக. சில பரலோகம் வரை வருவதில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தழுவிக் கொள்வோருக்கு அவை வருகின்றன.”1

மரோனி விளக்கினான், காணாதிருக்கிறவைகள் நம்பப்படுவதே விசுவாசம், நீங்கள் காணாததினிமித்தம் வாக்குவாதம் பண்ணாதிருங்கள். உங்களுடைய விசுவாசம் பரீட்சிக்கப்படும் வரைக்கும், நீங்கள் சாட்சியைப் பெறுவதில்லை.2

நமது கேள்விகள், நமது வழியில் வருகிற சோதனைகளைச் சிறந்த முறையில் சந்திக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதாக இருக்க வேண்டும்.

சபைத்தலைவராக தன் முதல் பொது குறிப்புகளில், தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “ஒரு புதிய தலைமையாக முடிவை மனதில் வைத்து நாங்கள் தொடங்க விரும்புகிறோம். இக்காரணத்துக்காகவே நாங்கள் ஒரு ஆலயத்திலிருந்து பேசுகிறோம். நாம் ஒவ்வொருவரும் அடைய முயல்கிற முடிவு, கர்த்தரின் வீட்டில் வல்லமையோடு முத்திரிக்கப்படவும், குடும்பங்களாக முத்திரிக்கப்படவும், நித்திய ஜீவனாகிய தேவனின் மிகப் பெரிய வரத்துக்கு நம்மை தகுதிப்படுத்துகிற, ஆலயத்தில் செய்யப்படுகிற உடன்படிக்கைகளுக்கு விசுவாசமாக இருப்பதுவுமே. ஆலய நியமங்களும் நீங்கள் அங்கு செய்கிற உடன்படிக்கைகளும், உங்கள் வாழ்க்கையையும், உங்கள் திருமணத்தையும் குடும்பத்தையும், சத்துருவின் தாக்குதல்களை எதிர்க்கிற உங்கள் திறமைகளையும் பெலப்படுத்த, முக்கியமானவைகளாக இருக்கின்றன். உங்கள் ஆலய ஆராதனையும், உங்கள் முன்னோருக்காக நீங்கள் செய்கிற சேவையும் உங்களை அதிக தனிப்பட்ட வெளிப்படுத்தலுடனும், சமாதானத்துடனும் உங்களை ஆசீர்வதித்து, உடன்படிக்கையின் பாதையில் இருக்க உங்கள் ஒப்புக்கொடுத்தலை பலப்படுத்தும்.”3

நாம் தேவனின் குரலையும், அவரது உடன்படிக்கையின் பாதையையும் பின்பற்றும்போது, நமது பாடுகள் அனைத்திலும் நம்மை பெலப்படுத்துவார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடும்ப ஆலயப் பயணம் கடினமாக இருந்தது, ஆனால் நாங்கள் யூட்டாவிலுள்ள சால்ட் லேக் ஆலயத்தை நெருங்கிய உடனே, என் அம்மா முழு சந்தோஷத்துடன் சொன்னார், “நாம் சரியாகப் போகிறோம், கர்த்தர் நம்மைப் பாதுகாப்பார்.” நாங்கள் குடும்பமாக முத்திரிக்கப்பட்டோம், என் சகோதரி குணமடைந்தாள். என் பெற்றோரின் விசுவாசத்தின் சோதனைக்குப் பிறகும், என் பெற்றோர் கர்த்தரின் தூண்டுதல்களைப் பின்பற்றிய பிறகும் மட்டுமே இது நடந்தது.

என் பெற்றோரின் இந்த உதாரணம், இன்றும் எங்கள் வாழ்க்கையில் செல்வாக்கு பெற்றிருக்கிறது. சுவிசேஷக் கோட்பாட்டின் ஏன் என்பதை எங்கள் பெற்றோர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்ததால், அந்த பாரம்பரியம் வளர்ந்தது, சுவிசேஷம் கொண்டுவருகிற அர்த்தத்தையும், நோக்கத்தையும், ஆசீர்வாதங்களையும் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவியது. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஏன் என்பதைப் புரிந்துகொள்ளுதல், நமது விசுவாச சோதனைகளை எதிர்கொள்ள நமக்கு உதவ முடியும்.

முடிவாக, தேவன் வரவேற்கிற மற்றும் நாம் செய்யுமாறு கட்டளையிடுகிற அனைத்தும் நம்மீது அவரது அன்பு, அவரது பிள்ளைகளுக்காக அவர் வைத்துள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும் நமக்கு கொடுப்பதற்கும்தான். நமது பிள்ளைகள் தாங்களாகவே சுவிசேஷத்தை நேசிக்க கற்பார்கள் என நாம் யூகிக்க முடியாது, பெற்றோராக அவர்களுக்கு கற்பிப்பது நமது பொறுப்பு. அவர்களது சுயாதீனத்தை ஞானமாக எப்படி பயன்படுத்துவது என நமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும்போது, நமது நீதியான உதாரணம் அவர்கள் தங்கள் சொந்த தேர்வுகளைச் செய்யும்போது அவர்களை உணர்த்த முடியும். அவர்களது விசுவாசமிக்க ஜீவியம், சுவிசேஷ சத்தியங்களை அவர்களே அறிய அவர்களது பிள்ளைகளுக்கு உதவும்.

இளைஞர்களே, வாலிபப் பெண்களே, தீர்க்கதரிசி இன்று உங்களிடம் பேசுவதைக் கேளுங்கள். தெய்வீக சத்தியங்களைக் கற்பதை நாடுங்கள், நீங்களே சுவிசேஷத்தைப் புரிந்துகொள்வதை நாடுங்கள். தலைவர் நெல்சன் அண்மையில் ஆலோசனையளித்தார், “நீங்கள் எந்த ஞானத்தில் குறைவுள்ளவர்கள்? … தீர்க்கதரிசி ஜோசப்பின் உதாரணத்தைப் பின்பற்றுங்கள். ஒரு அமைதியான இடத்தைக் கண்டு பிடியுங்கள். … தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். பரலோக பிதாவிடம் உங்கள் இருதயத்தை ஊற்றுங்கள். பதில்களுக்காக அவரிடம் திரும்புங்கள்.”4 ஜெபத்தின் மூலம் உங்கள் பரலோக பிதாவிடமிருந்து வழிநடத்துதலை நீங்கள் நாடும்போது, ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் ஆலோசனையைக் கேட்பதாலும், நீதியான பெற்றோரின் உதாரணத்தைப் பார்க்கும்போதும், நீங்களும் உங்கள் குடும்ப விசுவாசத்தின் பெலத்த இணைப்பாகலாம்.

உடன்படிக்கை பாதையை விட்டு விலகிய பிள்ளைகளுடைய பெற்றோருக்கு, மெதுவாக திரும்பிச் செல்லுங்கள். சுவிசேஷ சத்தியங்களை அவர்கள் புரிந்துகொள்ள உதவுங்கள். இப்போதே தொடங்குங்கள், இது ஒருபோதும் தாமதமாகவில்லை.

நீதியாக வாழ்வதன் நமது உதாரணம் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். தலைவர் நெல்சன் சொன்னார், “பிற்காலப் பரிசுத்தவான்களாக, நமது கூடுமிடங்களில் நடக்கிற, வீட்டில் நடப்பதால் ஆதரிக்கப்படுகிற, ஒன்று சபை என நாம் நினைக்க பழக்கப்பட்டு விட்டோம். இந்த மாதிரிக்கு நமக்கு ஒரு அனுசரிப்பு தேவை. இது வீட்டை மையமாகக்கொண்டு, நமது கிளைகளிலும், தொகுதிகளிலும், பிணையக் கட்டிடங்களிலும் நடப்பனவற்றால் ஆதரிக்கப்படுவதற்கான நேரம் இது.”5

வேதம் போதிக்கிறது, “பிள்ளையானவன் நடக்க வேண்டிய விதத்திலே அவனை நடத்து, அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான்.”6

அவர்கள் சொல்கிறார்கள், “இப்போதும், நீதியானதைச் செய்யும்படி, ஜனங்களை வழிநடத்துகிற தன்மை, வார்த்தையை பிரசங்கிப்பதில் இருந்தாலும், பட்டயத்தைக் காட்டிலும் ஜனங்களுக்கு ஏற்பட்ட யாதொன்றைக் காட்டிலும், அது ஜனங்களின் மனதில் ஒரு வல்லமையான பயனை உண்டாக்குவதாலும், தேவ வார்த்தையின் வல்லமையை அவர்கள் பிரயோகிக்க வேண்டியது அவசியமென ஆல்மா நினைத்தான்.”7

தன் மகன் அதிகமாக மிட்டாய் சாப்பிடுவதால் விரக்தியடைந்த ஒரு பெண்ணின் கதை இந்தியாவில் இருக்கிறது. அவள் எவ்வளவு அதட்டினாலும், அவன் தன் இனிப்பு பற்களை திருப்திப்படுத்திக் கொண்டிருந்தான். முற்றிலும் விரக்தியடைந்து அவள், அவள் மதித்த ஒரு ஞானியிடம் தன் மகனை கூட்டிச் செல்ல அவள் முடிவு செய்தாள்.

மிகவும் மரியாதையாக அவரை அணுகி அவள் சொன்னாள், “ஐயா, என் மகன் அதிகமாக மிட்டாய் சாப்பிடுகிறான். அதை தின்பதை நிறுத்துமாறு தயவுசெய்து அவனுக்கு புத்திமதி சொல்வீர்களா?”

அவர் கவனமாக அப்பெண் சொல்வதைக் கேட்டுவிட்டு, அவளது மகனிடம் திரும்பி சொன்னார், “வீட்டுக்குப் போய்விட்டு, இரண்டு வாரங்களில் திரும்ப வா.”

அவள் தன் மகனைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்குச் சென்று, அதிக மிட்டாய் தின்பதை நிறுத்துமாறு சிறுவனிடம் அவர் ஏன் சொல்லவில்லை என வியந்தாள்.

இரண்டு வாரங்களுக்குப்பிறகு அவர்கள் திரும்ப வந்தனர். அவர் அந்த பையனை நேராக பார்த்து சொன்னார், “சிறுவனே நீ அதிக மிட்டாய் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். அது உன் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.”

சிறுவன் தலையை ஆட்டி சரியென வாக்களித்தான்.

சிறுவனின் தாய் கேட்டாள், “இரண்டு வாரங்களுக்கு முன் நீங்கள் ஏன் அவனுக்கு சொல்லவில்லை?”

ஞானி புன்னகைத்தார். “இரண்டு வாரங்களுக்கு முன்பு நானே மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.”

தன் சொந்த ஆலோசனையை தாமே பின்பற்றினால், அவரது ஆலோசனை வல்லமை பெற்றிருக்கும் என்று அப்படிப்பட்ட உத்தமத்தோடு அந்த மனிதர் வாழ்ந்தார்.

நம்மை உடன்படிக்கையின் பாதையில் அவர்கள் பார்க்கும்போது, நமது பிள்ளைகள் மீது நாம் செலுத்தும் செல்வாக்கு மிக வல்லமையானதாக இருக்கும். அப்படிப்பட்ட நீதிக்கு மார்மன் புஸ்தக தீர்க்கதரிசி யாக்கோபு ஒரு உதாரணம். தன் தகப்பனின் ஆலோசனையின் தாக்கத்தைப்பற்றி அவனது மகன் ஏனோஸ் எழுதினான்.

“இதோ ஆனபடியால், என் தந்தை ஒரு நியாயவான் என்று ஏனோஸாகிய நான் அறிவேன். ஏனெனில் தன் பாஷையை எனக்கு போதித்து, கர்த்தருடைய போஷிப்பிலே என்னை எச்சரித்தார். அதனிமித்தம் என் தேவனின் நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. …

“… நித்திய ஜீவனையும் பரிசுத்தவான்களின் சந்தோஷம் பற்றியும் நான் அடிக்கடி கேட்ட என் தந்தை பேசிய வார்த்தைகள் என் இருதயத்திலே ஆழமாய்ப் பதிந்தன.”8

தங்கள் பிள்ளைகள் அர்ப்பணிப்புடன் சத்தமிடுமளவுக்கு, துடிப்பான வீரர்களின் அம்மாக்கள் சுவிசேஷத்தின்படி வாழ்ந்தனர். தலைவன் அறிவித்தான்,

“தாங்கள் சந்தேகப்படாமலிருந்தால் தேவன் தங்களை விடுவிப்பார் என்று அவர்கள் தங்கள் அன்னையரால் போதிக்கப்பட்டிருந்தார்கள்.

“அவர்கள் தங்கள் அன்னையரின் வார்த்தைகளை என்னிடம் சொல்லி, எங்கள் அன்னையர் அதை அறிந்திருந்தார்களா என நாங்கள் சந்தேகப்படுவதில்லை என்றார்கள்.”9

ஏனோஸும் துடிப்பான வீரர்களும் தங்கள் பெற்றோரின் விசுவாசத்தால் பெலப்பட்டிருந்தார்கள், அது அவர்களது விசுவாசத்தின் சோதனைகளை சந்திக்க அவர்களுக்கு உதவியது.

நாம் நமது நாளில் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம், நாம் அதைரியமடைந்ததாக அல்லது துயரப்பட்டதாக உணரும்போது, அது நம்மை உயர்த்துகிறது. நாம் நமது விசுவாச சோதனைகளினூடே முன்னேறிச்செல்லும்போது, கர்த்தரின் சொந்த நேரத்தில் நமது முயற்சிகள் கனி கொடுக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளோம்.

ஹெய்ட்டியின், போர்ட்டோ பிரின்ஸ் ஆலய பிரதிஷ்டைக்கு நானும் என் மனைவியும் பகுதித் தலைமை மற்றும் மூப்பர் டேவிட் ஏ. பெட்னாருடன் சென்றோம். எங்களுடன் வந்த எங்கள் மகன் ஜார்ஜ் அவனது அனுபவம் பற்றி சொன்னான், “அற்புதம் அப்பா! மூப்பர் பெட்னார் பிரதிஷ்டை ஜெபத்தை தொடங்கிய உடனே, அந்த அறை இதமான ஒளியால் நிரப்பப்பட்டதை என்னால் உணர முடிந்தது. அந்த ஜெபம் ஆலயம் பற்றிய என் புரிதலின் நோக்கத்துக்கு அதிகம் சேர்த்தது. உண்மையாகவே ஆலயம் கர்த்தரின் வீடு.”

மார்மன் புஸ்தகத்தில், நாம் தேவ சித்தத்தை அறிய விரும்பினால், அவர் நம்மை பெலப்படுத்துவார் என நேபி போதிக்கிறான். அவன் எழுதினான், “நேபியாகிய நான் மிகவும் இளைஞனாக இருந்தபடியால், தேவனுடைய இரகசியங்களை அறிந்துகொள்ள வாஞ்சையுடையவனாய் இருந்ததாலும், நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன். இதோ அவர் என்னைச் சந்தித்து, என் இருதயத்தை மிருதுவாக்கினபடியால், என் தந்தையால் பேசப்பட்ட எல்லா வார்த்தைகளையும் நான் விசுவாசித்தேன். ஆனபடியால் என் சகோதரரைப் போல நான் அவருக்கு எதிராகக் கலகஞ் செய்யவில்லை.”10

சகோகர சகோதரிகளே, ஆவியானவர் அவர்களுக்குக் கற்பிக்கும்படியாகவும், வாழ்நாள் முழுவதும் அவரைப் பின்பற்ற வாஞ்சை பெற அவர்களது இருதயங்களை மிருதுவாக்கும்படிக்கும் நமது பிள்ளைகளுக்கும், நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கும் உதவுவோமாக.

நான் என் பெற்றோரின் உதாரணத்தை பார்க்கும்போது, நமது பரலோக வீட்டுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசம் வழி காட்டும் என உணருகிறேன். நமது விசுவாத்தின் சோதனைக்குப்பிறகு அற்புதங்கள் வருகின்றன என நான் அறிவேன்.

இயேசு கிறிஸ்து மற்றும் அவரது பாவநிவாரண பலி பற்றி நான் சாட்சியளிக்கிறேன். அவரே நமது இரட்சகர் மற்றும் விடுவிப்பவர் என நான் அறிவேன். அவரும் நமது பரலோக பிதாவும் 1820 வசந்த காலத்தில், மறுஸ்தாபித தீர்க்கதரிசியாகிய இளம் ஜோசப் ஸ்மித்திடம் அக்காலையில் வந்தனர். தலைவர் ரசல் எம். நெல்சன் நமது நாளின் தீர்க்கதரிசி. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

அச்சிடவும்