விசுவாசமுள்ளவராயிருங்கள், விசுவாசமில்லாதவராக அல்ல
உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு பரலோகத்துடன் இணைய ஒவ்வொரு நாளும் நாம் வேண்டுமென்றே நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
சிலகாலத்திற்கு முன்பு நான் விழிந்தெழுந்து வேதத்தை தியானிக்க ஆயத்தமானேன். நான் என் திறன் கைப்பேசியை எடுத்துக்கொண்டு Gospel Library செயலியை திறக்கும் எண்ணத்துடன் எனது படுக்கையருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்தேன். நான் என் கைப்பேசியை இயங்கச்செய்து, தியானிக்க ஆரம்பிக்கப் போகும்போது, இரவில் வந்த அடுத்தசெய்திளுக்கான ஒரு டஜன் அறிவிப்புகளையும், மின்அஞ்சல்களையும் நான் கண்டேன். “அந்த செய்திகளை மிகவிரைவில் பார்த்துவிட்டு, பின்னர் உடனேயே வேதத்தை தியானிக்கலாம்,” என நான் நினைத்தேன். பின்னர், இரண்டு மணி நேரமாக குறுஞ் செய்திகளையும், மின்அஞ்சல்களையும், செய்தி சுருக்கங்களையும், சமூக ஊடக பதிவுகளையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது என்ன நேரம் என நான் உணர்ந்தபோது, அந்த நாளுக்கு நான் விரைவாக ஆயத்தமானேன். அந்தக் காலையில் வேத படிப்பை நான் தவறவிட்டேன், அதன் விளைவாக நான் நம்பியிருந்த ஆவிக்குரிய ஊட்டம் எனக்குக் கிடைக்கவில்லை.
ஆவிக்குரிய ஊட்டம்
உங்களில் அநேகர் இதை தொடர்புபடுத்தமுடியும் என எனக்கு உறுதியாய் தெரியும். அநேக வழிகளில் நவீன தொழில்நுட்பங்கள் நம்மை ஆசீர்வதிக்கிறது. உலகத்தைச் சுற்றி தற்போதைய நிலவரங்களுடனும் மற்றும் செய்திகளுடனும், நண்பர்களுடன், குடும்பத்தினருடன் அவை நம்மை இணைக்கமுடியும். ஆயினும், பரலோகத்துடனான நமது மிக முக்கியமான தொடர்பிலிருந்து அவைகள் நம்மை திசைதிருப்பவும் முடியும்.
அதிகரிக்கிற நமது தீர்க்கதரிசியாகிய தலைவர் நெல்சன் சொன்னவற்றை நான் திரும்பச் சொல்கிறேன்: நாம் குழப்பமும் பிணக்கு அதிகரிக்கும் உலகத்தில் வாழ்கிறோம். நிரந்தரமாக கிடைக்கக்கூடிய சமூக ஊடகங்களும் இடைவிடாத செய்திகளுடன் 24 மணிநேர செய்தி சுழற்சியும் நம்மை தாக்குகிறது. எண்ணற்ற குரல்களிலிருந்தும், உண்மையை தாக்குகிற மனிதர்களின் தத்துவங்களிலுமிருந்து பிரிக்கவேண்டும் என்ற நம்பிக்கை நமக்கிருந்தால், வெளிப்படுத்தலைப் பெற நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
“வருங்காலத்தில், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலில்லாமல், வழிகாட்டுதல் இல்லாமல், ஆறுதலளிப்பில்லாமல், நிரந்தர செல்வாக்கில்லாமல் ஆவிக்குரிய விதமாக பிழைத்திருப்பது சாத்தியமில்லை”1 என தலைவர் ரசல் எம்.நெல்சன் தொடர்ந்து எச்சரித்தார்.
கடும் பனிப்பொழிவால் ஒரு மான் மந்தையின் இயற்கையான வாழ்விடத்திற்கு வெளியே சிக்கிக்கொண்டு பட்டினி சாத்தியமாவதை எதிர்கொண்டன என அநேக ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் பாய்ட் கே.பேக்கர் கூறினார். மான்களை காப்பாற்றும் ஒரு முயற்சியில் வழக்கமாக மான்கள் சாப்பிடாத ஆனால் குறைந்தளவில் குளிர்காலத்தில் மான்களைக் காப்பாற்றுமென நினைத்து, லாரி நிறைய வைக்கோலை அடைத்து அந்த பகுதியில் சில நன்கறிந்த மக்கள் போட்டார்கள். துரதிருஷ்டவசமாக, பின்னர் அவற்றில் அதிக மான்கள் இறந்துபோனதாகக் காணப்பட்டது. அவைகள் வைக்கோலை தின்றன, ஆனால் அது அவைகளைப் போஷிக்கவில்லை, அவைகளின் வயிறு நிறைந்து பட்டினியால் இறந்துபோயின.2
தகவல் காலத்தில், நம்மை வெகுவாகத் தாக்குகிற அநேக செய்திகள் மானுக்கு உணவளிக்க ஆவிக்குரிய சமமான வைக்கோலைக் கொடுப்பதாயிருக்கிறது, நாள் முழுவதும் நாம் அதை சாப்பிடலாம் ஆனால் அது நமக்கு ஊட்டமாயிருக்காது.
உண்மையான ஆவிக்குரிய போஷிப்பை எங்கே நாம் கண்டுபிடிக்கலாம்? பெரும்பாலும் இது சமூக ஊடகத்தில் பிரபலமானதல்ல. “நாம் எப்போதும் இருப்புக்கோலை இறுக்கமாகப் பிடித்து, [நமது]உடன்படிக்கைப் பாதையில் முன்னேறிச் சென்று” ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கும்போது நாம் அதைக் கண்டுபிடிப்போம்.3 உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு பரலோகத்துடன் இணைய ஒவ்வொரு நாளும் நாம் வேண்டுமென்றே நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும் என இதற்கு அர்த்தம்.
உலகத்தின் கர்வமாக இருந்த மகாவிசாலமான கட்டிடத்தின் செல்வாக்கினால் கனியை புசித்த மக்கள் பின்னர் அதை கைவிட்டார்கள் என அவனுடைய சொப்பனத்தில் லேகி கண்டான் 4 ஒரு பிற்காலப் பரிசுத்தவான் வீட்டில் வளர்க்கப்பட்டு, சரியான சபைக்கூட்டங்களில் எல்லாம் கலந்துகொண்டு, ஆலயத்தின் நியமங்களில் பங்கெடுத்து பின்னர் “தவிர்க்கப்பட்ட பாதையில் விழுந்து காணாமற்போவது இளைஞர்களுக்கு சாத்தியமாயிருக்கிறது.”5 இது ஏன் நடைபெறுகிறது? அநேக சந்தர்ப்பங்களில் ஆவிக்குரிய இயக்கங்கள அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது நடப்பதால், அவர்கள் உண்மையில் மனமாற்றமடையவில்லை. அவர்களுக்கு உணவளிக்கப்பட்டது ஆனால் போஷிக்கப்படவில்லை.
மாறாக, பிரகாசமான, வலுவான, உண்மையான இளம் பிற்காலப் பரிசுத்தவான்கள் அநேகரை நான் சந்தித்திருக்கிறேன். நீங்கள் தேவனின் குமாரர்களாகவும், குமாரத்திகளாகவுமிருக்கிறீர்கள், நீங்கள் செய்யவேண்டிய வேலை அவரிடமுள்ளது என நீங்கள் அறிவீர்கள். உங்கள் முழுஇருதயத்தோடும், ஊக்கத்தோடும், மனதோடும், பலத்தோடும் தேவனை நீங்கள் நேசிக்கிறீர்கள்”.6 உங்கள் உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுகிறீர்கள், வீட்டில் ஆரம்பித்து மற்றவர்களுக்கு சேவை செய்கிறீர்கள். விசுவாசத்தை கையாண்டு, மனந்திருந்தி, ஒவ்வொரு நாளும் முன்னேறுகிறீர்கள், இது நீடித்த மகிழ்ச்சியை உங்களுக்குக் கொண்டுவருகிறது. நீங்கள் ஆலய ஆசீர்வாதங்களுக்காகவும் இரட்சகரை உண்மையாகப் பின்பற்றுபவர்களாக பிற சந்தர்ப்பங்களுக்காகவும் நீங்கள் ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவண்டை வரவும் அவருடைய பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் அனைவரையும் அழைத்து, இரண்டாம் வருகைக்காக உலகத்தை ஆயத்தப்படுத்த நீங்கள் உதவிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பரலோகத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
ஆம், நீங்கள் சவால்களை எதிர்கொள்கிறீர்கள். ஆனால் எல்லா தலைமுறைகளும் இதுபோலவே எதிர்கொள்கிறார்கள். இவைகள் நமது நாட்கள், நாம் விசுவாசமுள்ளவர்களாயிருக்கவேண்டும், விசுவாசமில்லாதவராக அல்ல. நமது சவால்களைப்பற்றி கர்த்தர் அறிந்திருக்கிறார், தலைவர் நெல்சனின் தலைமையின் மூலமாக அவைகளை எதிர்கொள்ள நம்மை அவர் ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். நமது கட்டிடங்களில் நாம் செய்கிறவைகளால் ஆதரிக்கப்பட்ட, ஒரு வீட்டை மையப்படுத்திய சபைக்கான7 தீர்க்கதரிசியின் சமீபத்திய அழைப்பு, ஆவிக்குரிய ஊட்டச் சத்தின்மையின் இந்த நாளில் நாம் பிழைத்திருக்கவும், செழிப்பாக வளரவும் நமக்குதவ வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வீட்டை மையமாகக்கொண்ட
வீட்டை மையமாகக்கொண்ட சபையாயிருப்பது என்பதற்கு அர்த்தமென்ன? உலகமுழுவதிலும் வீடுகள் மிக வித்தியாசமாகக் காணப்படலாம். அநேக தலைமுறைகளாக சபையிலிருக்கிற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவராய் நீங்களிருக்கலாம். அல்லது உங்கள் குடும்பத்தில் நீங்கள் மட்டுமே சபையின் அங்கத்தினராயிருக்கலாம். நீங்கள் திருமணமானவராக அல்லது திருமணமாகாதவராக, வீட்டில் பிள்ளைகளுடனோ பிள்ளைகளில்லாமலோ நீங்கள் இருக்கலாம்.
உங்களுடைய சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது, சுவிசேஷக் கற்றுக்கொள்ளுதலிலும், வாழுதலிலும் உங்கள் வீட்டை மையமாக்கலாம். உங்களுடைய மனமாற்றத்திற்கும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் தனிப்பட்ட பொறுப்பை எடுத்தல் என்பது அதன் அர்த்தமாகிறது. “உங்கள் வீட்டை விசுவாசத்தின் சரணாலயமாக மாற்றியமைக்க” தலைவர் நெல்சனின் ஆலோசனையை பின்பற்றுதல்8 என்பது அதன் அர்த்தம்.
ஆவிக்குரிய போஷிப்பு அவசியமானதல்ல அல்லது மிக தந்திரமாக அது காத்திருக்கலாம் என சத்துரு உங்களை சம்மதிக்க வைக்க கட்டாயப்படுத்துவான். அவன் திசைதிருப்புதலுக்கு தலைவனாகவும், காலம் கடத்துவதற்கு ஆதாரமாகவுமாயிருக்கிறான். அவசரமாகத் தோன்றுகிற, ஆனால் உண்மையில் அவை அதிக முக்கியமில்லாதிருக்கிறவற்றில் உங்கள் கவனத்தைக் கொண்டுவர அவன் முயற்சிப்பான். “அநேகக் காரியங்களைக் குறித்து மிகக் கவலைப்படுபவராக” உங்களை மாற்றி “தேவையான ஒன்றை உங்களை புறக்கணிக்க வைப்பான்”.9
ஆவிக்குரிய நிரந்தர போஷிப்பு, நேசமான உறவுகள், ஆரோக்கியமான வேடிக்கை நிகழ்ச்சிகளுள்ள ஒரு வீட்டில் தங்களுடைய குடும்பத்தை வளர்த்த என்னுடைய “நற்கீர்த்தி பெற்ற”10 பெற்றோருக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். என்னுடைய இளமையில் அவர்கள் எனக்குக் கொடுத்த போதனைகள் என்னை நல்ல இடத்தில் வைத்தது. பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுடன் வலுவான உறவுகளை வளருங்கள். உங்களுடைய குறைவான அல்ல அதிகமான நேரம் அவர்களுக்குத் தேவை.
சபையால் ஆதரிக்கப்பட்ட
நீங்கள் அதைச் செய்யும்போது, உங்களை ஆதரிக்க சபை இருக்கிறது. வீட்டில் நடைபெறுகிற ஆவிக்குரிய போஷிப்பை சபையில் நமது அனுபவங்கள் வலுப்படுத்தமுடியும். இந்த ஆண்டில் இதுவரை ஞாயிறு பள்ளியிலும் ஆரம்பவகுப்பிலும் இம்மாதிரியான சபை ஆதரவை நாம் கண்டிருக்கிறோம். ஆரோனிய ஆசாரியத்துவத்திலும், இளம்பெண்கள் கூட்டங்களிலும் இதை நாம் அதிகமாகக் காண்போம். இந்த ஜனுவரியில் ஆரம்பித்து இந்தக் கூட்டங்களுக்கான பாடத்திட்டம் சிறிது மாற்றப்படும். இது இன்னமும் சுவிசேஷத் தலைப்புகளுக்கு தொடர்புடையதில் கவனம் செலுத்தும் ஆனால் அந்த தலைப்பு என்னைப் பின்பற்றி வாருங்கள்-தனிப்பட்டவர்களுக்கும் குடும்பங்களுக்கும்—திட்டத்துடன் இணைக்கப்பட்டதாயிருக்கும். இது ஒரு சிறிய மாற்றம், ஆனால் இது இளைஞர்களின் ஆவிக்குரிய போஷிப்பில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
வேறு என்ன பிறவகையான ஆதரவை சபை வழங்குகிறது? சபையில் ஒவ்வொரு வாரமும் இரட்சகரிடத்தில் நம் ஒப்புக்கொடுத்தலை மீண்டும் ஏற்படுத்த நமக்குதவுகிற திருவிருந்தில் பங்கேற்கிறோம். அந்த அதே உடன்படிக்கைகளை செய்த பிற விசுவாசிகளுடன் சபையில் நாம் ஒன்றுகூடுகிறோம். இயேசு கிறிஸ்துவின் சகசீஷர்களுடன் அன்பான உறவுகளை நாம் மேம்படுத்துவது, நமது சொந்த வீட்டை மையமாகக்கொண்ட சீஷத்துவத்திற்கு ஒரு வல்லமையான ஆதரவாயிருக்கும்.
எனக்கு 14 வயதாயிருந்தபோது ஒரு புதிய இடத்திற்கு எனது குடும்பம் குடிபெயர்ந்தது. இது உங்களுக்கு ஒரு பெரிய சோகமானதாகத் தோன்றாமலிருக்கலாம், ஆனால் அந்த நேரத்தில் எனது மனதில் அது பேரழிவாயிருந்தது. எனக்குத் தெரியாத மக்களால் நான் சூழப்பட்டதாக அது இருந்தது. என்னுடைய தொகுதியில் பிற இளம் ஆண்கள் அனைவரும் நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியைவிட பிற பள்ளிக்கூடங்களில் படித்துக்கொண்டிருந்தார்கள். என்னுடைய 14 வயது மனதில், “எப்படி என் பெற்றோர் இதை எனக்குச் செய்யக்கூடும்?” என நான் நினைத்தேன். என்னுடைய வாழ்க்கை பாழாக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன்.
ஆயினும், எங்களுடைய வாலிபர் நிகழ்ச்சிகள் மூலமாக, என்னுடைய குழுமத்தின் பிற அங்கத்தினர்களுடன் உறவுகளை வளர்க்க என்னால் முடிந்தது. கூடுதலாக, ஆயத்துவத்தின் அங்கத்தினர்களும், ஆரோனிய ஆசாரியத்துவத்தின் ஆலோசகர்களும் என்னுடைய வாழ்க்கையில் ஒரு விசேஷித்த ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். என்னுடைய விளையாட்டு நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்றனர். நான் இன்றுவரை வைத்திருக்கிற ஊக்குவிக்கும் குறிப்புகளை அவர்கள் எனக்கு எழுதினார்கள். நான் கல்லூரிக்கு போன பின்னரும், ஊழியத்திற்கு போன பின்னரும் அவர்கள் தொடர்ந்து என்னோடு தொடர்பில் இருந்தார்கள். நான் வீட்டிற்கு வந்தபோது அவர்களில் ஒருவர் விமானநிலையத்திற்கு வந்திருந்தார். இந்த நல்ல சகோதரர்களுக்காவும், அவர்களுடைய அன்பும் உயர்ந்த எதிர்பார்ப்புகளும் இணைந்த கலவைக்காகவும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாயிருப்பேன். அவர்கள் எனக்கு பரலோகத்தைச் சுட்டிக்காட்டினர், வாழ்க்கை பிரகாசமாகவும், சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் மாறியது.
அவர்கள் உடன்படிக்கை பாதையில் நடக்கும்போது அவர்கள் தனியாயில்லை என்றறிய, பெற்றோராக, தலைவர்களாக, நாம் எவ்வாறு இளைஞர்களுக்கு உதவமுடியும்? தனிப்பட்ட உறவுகளை வளர்ப்பதற்கும் அதிகமாக, இளைஞர்களின் பெலனுக்காக மாநாடுகள் மற்றும் வாலிபர் முகாம்களிலிருந்து வாராந்திர குழுமங்கள் அல்லது வகுப்பு நிகழ்ச்சிகள்வரை சிறிய மற்றும் பெரிய கூடிச்சேர்தல்களுக்கு நாம் அவர்களை அழைக்கிறோம். வலுவானவர்களாக முயற்சித்துக்கொண்டிருக்கும் மற்றவர்களுடன் கூடிச்சேர்வதிலிருந்து வருகிற பெலத்தை ஒருபோதும் குறைவாக மதிப்பிடாதீர்கள். ஆயர்களே, பிற தலைவர்களே, உங்கள் தொகுதியிலுள்ள பிள்ளைகளையும், வாலிபர்களையும் போஷிப்பதில் தயவுசெய்து கவனம் செலுத்துங்கள். குறைவாக அல்ல, அதிகமான உங்கள் நேரம் அவர்களுக்குத் தேவையாயிருக்கிறது.
நீங்கள் ஒரு தலைவராகவோ, ஒரு அண்டைவீட்டாராகவோ, ஒரு குழும அங்கத்தினராகவோ அல்லது ஒரு சக பரிசுத்தவானகவோ இருந்தாலும் ஒரு இளம் நபரின் வாழ்க்கையைத் தொட உங்களுக்கு சந்தர்ப்பமிருந்தால், பரலோகத்துடன் இணைக்கப்பட அவன் அல்லது அவளுக்கு உதவுங்கள். அந்த இளஞர்களுக்குத் தேவையாயிருக்கிற “சபை ஆதரவு” சரியாக உங்கள் செல்வாக்காயிருக்கலாம்.
சகோதர, சகோதரிகளே, இந்த சபைக்கு இயேசு கிறிஸ்து தலைவராயிருக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். நமது தலைவர்களுக்கு அவர் உணர்த்துகிறார், பிற்காலங்களில் பிழைத்திருக்கவும், செழித்து வளரவும் நமக்குத் தேவையாயிருக்கிற ஆவிக்குரிய போஷிப்புக்கு நம்மை வழிநடத்துகிறார். ஆந்த ஆவிக்குரிய போஷிப்பு விசுவாசமில்லாதவர்களாக அல்ல, விசுவாசமுள்ளவர்களாயிருக்க நமக்குதவும். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.