2010–2019
மார்மன் புஸ்தகத்தின் வல்லமை மூலம் கண்டுபிடிக்கப்பட்டோர்
அக்டோபர் 2019 பொது மாநாடு


2:3

மார்மன் புஸ்தகத்தின் வல்லமை மூலம் கண்டுபிடிக்கப்பட்டோர்

மார்மன் புஸ்தகத்திலுள்ள சத்தியங்களின் வல்லமையால், அனைவரும் அனுபவித்து கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

அவர்களுடைய வீடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், மனமாறியோரை நான் அடிக்கடி கேட்க விரும்பிய கேள்விகளில் ஒன்று, அவர்களும் அவர்களது குடும்பங்களும் எப்படி சபையைப்பற்றி கற்றார்கள் மற்றும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அந்த நேரத்தில் அவர் ஆர்வமிக்க அங்கத்தினரா அல்லது பல ஆண்டுகளுக்கு சபைக்குச் செல்லாதவரா என்பது பொருட்டல்ல. பதில் எப்போதும் ஒன்றுதான், புன்னகையுடனும், அவர்களது முகரூபம் பிரகாசித்தும், அவர்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டார்கள் எனும் கதையை சொல்லத் தொடங்குகிறார்கள். உண்மையாகவே, மனமாற்றத்தின் கதை, எப்போதுமே நாம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டோம் எனும் கதையாகவே இருக்கிறது.

இயேசு கிறிஸ்து தாமே காணமற்போனவைகளின் கர்த்தர். அவர் காணாமற்போனவைகள் மீது கரிசனம் கொண்டிருக்கிறார். அதனால்தான், லூக்கா 15ம் அதிகாரத்தில் நாம் காண்கிற மூன்று உவமைகளை அவர் போதித்தார், காணாமல் போன ஆடு, காணாமல் போன காசு, மற்றும் கடைசியாக கெட்ட குமாரன் பற்றிய உவமை. இக்கதைகள் அனைத்துக்கும் ஒரு பொது அளவீடு இருக்கிறது, அவர்கள் ஏன் காணாமற்போனார்கள் என்பது பொருட்டல்ல. அவர்கள் காணாமற்போய் விட்டார்கள் என அவர்கள் அறிந்திருந்தாலும் அது பொருட்டல்ல. ஒரு ஆனந்த உணர்வு மேலோங்கி ஆளுமை செய்கிறது, அது கூறுகிறது, “காணாமற்போன என்னுடைய ஆட்டைக் கண்டு பிடித்தேன், என்னோடு கூட சந்தோஷப்படுங்கள்.”1 இறுதியில் உண்மையாகவே அவனுக்கு ஒன்றும் இழப்பில்லை.2

எனக்கு மிக அருமையான காரியங்களில் ஒன்றான—நான் எவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டேன், என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு 15 வயதாவதற்கு சற்று முன், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அவருடனும் அவருடைய குடும்பத்தினருடனும் சிறிது நேரம் செலவிட வருமாறு என் மாமா மானுவல் பஸ்டோஸால் அழைக்கப்பட்டேன். சிறிது ஆங்கிலம் கற்க இது எனக்கு பெரிய சந்தர்ப்பமாக இருக்கும். என் மாமா அநேக ஆண்டுகளுக்கு முன்பே சபைக்கு மனமாறினார், அவருக்கு மிகுந்த ஊழிய ஆவி இருந்தது. அதனால்தான் ஒருவேளை என் அம்மா எனக்குத் தெரியாமல் அவருடன் பேசி, ஒரு நிபந்தனையின் பேரில் அவர் அந்த அழைப்புக்கு சம்மதிப்பதாக சொன்னார், அது என்னை சபை அங்கத்தினராக்க அறிவுறுத்த முயற்சி செய்யக்கூடாது என்பதே. நாங்கள் கத்தோலிக்கர்கள், பல தலைமுறைகளாக, மாறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. என் மாமா முற்றிலும் சம்மதித்தார், சபை பற்றி எளிய கேள்விகளுக்குக்கூட அவர் பதிலளிக்க விரும்பவில்லை என்பது வரை அவர் தன் வாக்கைக் காப்பாற்றிக் கொண்டார்.

உண்மையாகவே, அவர்கள் யார் என்பதை என் மாமாவும் அவரது இனிய மனைவி மார்ஜோரியும் தவிர்க்க முடியவில்லை.3

எனக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது, அதில் பெரிய நூலகம் போல புத்தகங்கள் இருந்தன. இந்த நூலகத்தில் பல்வேறு மொழிகளில் மார்மன் புஸ்தகத்தின் 200 பிரதிகள், ஸ்பானிஷில் 20, இருந்தன.

ஒரு நாள் ஆர்வமிகுதியால், நான் ஸ்பானிஷ் மார்மன் புஸ்தக பிரதியை எடுத்தேன்.

மார்மன் புஸ்தகம் ஸ்பானிஷ் மொழியில்

அது வான நீல நிறமுடைய மென்மையான அட்டையுடைய முன்பக்கத்தில் மரோனி தூதன் படத்துடன் கூடிய பிரதிகளில் ஒன்று. நான் அதைத் திறந்தபோது, முதல் பக்கத்தில், பின்வருவன எழுதப்பட்டிருந்தன: “இக்காரியங்களை நீங்கள் பெறும்போது, இவை உண்மையா என கிறிஸ்துவின் நாமத்தில், நித்திய பிதாவாகிய தேவனைக் கேட்குமாறு நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். நீங்கள் உண்மையான இருதயத்தோடும், நோக்கத்தோடும் கிறிஸ்துவில் விசுவாசம்கொண்டு கேட்டால், பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவர் உங்களுக்கு சத்தியத்தை தெரிவிப்பார்.”

பின்பு அது கூறியது, “பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே நீங்கள் சகலவற்றின் சத்தியத்தையும் அறிந்துகொள்வீர்கள்”4

இந்த வசனங்கள் என் மனதிலும், இருதயத்திலும் ஏற்படுத்திய தாக்கத்தை விளக்குவது கடினம். உண்மையாகவே, நான் “சத்தியத்துக்காக” தேடவில்லை. தன் வாழ்க்கையை மகிழ்ச்சியான, இந்த புதிய கலாச்சாரத்தை ருசிக்கிற நான் ஒரு பதின்ம வயதினன்.

இருப்பினும் அந்த வாக்குத்தத்தத்தை மனதில் கொண்டு, நான் இரகசியமாக அப்புஸ்தகத்தை வாசிக்க தொடங்கினேன். நான் மேலும் வாசிக்கத்தொடங்கியபோது, இதிலிருந்து நான் எதையாவது அறிய வேண்டுமானால், நான் ஜெபிக்க தொடங்க வேண்டும் என புரிந்து கொண்டேன். மார்மன் புஸ்தகத்தை வாசிப்பது மட்டுமல்லாமல் அது பற்றி ஜெபிக்கவும் நீங்கள் தீர்மானிக்கும்போது என்ன நடக்கிறது என நம் அனைவருக்கும் தெரியும். நல்லது, அதுதான் எனக்கு நடந்தது. அது விசேஷமான, தனித்துவமான ஒன்று, ஆம், உலகெங்குமுள்ள மில்லியன் கணக்கானோருக்கு நடந்திருக்கிற அதே நடந்திருக்கிறது. மார்மன் புஸ்தகம் உண்மையானது என பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நான் அறிந்தேன்.

பின்னர் என்ன நடந்தது எனவும் நான் ஞானஸ்நானத்துக்கு ஆயத்தமாக இருக்கிறேன் எனவும் என் மாமாவிடம் சென்று விளக்கினேன். தன் அதிர்ச்சியை என் மாமாவால் தாங்க முடியவில்லை. அவர் தன் காரில் ஏறி, விமான நிலையத்துக்கு சென்று நான் வீட்டுக்குச் செல்ல விமான சீட்டுடன், என் அம்மாவுக்கு “இது பற்றி நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என ஒரு குறிப்புடன், திரும்ப வந்தார்

ஒரு விதத்தில் அது சரி. மார்மன் புஸ்தகத்தின் வல்லமையால் நான் நேரடியாக கண்டுபிடிக்கப்பட்டேன்.

உலகெங்கிலும் அற்புதமான ஊழியக்காரர்களால் அனேகர் கண்டுபிடிக்கப்படலாம், ஒவ்வொருவரும் ஒரு அற்புதமான வழியில். அல்லது தேவன் தங்கள் வழியில் வேண்டுமென்றே வைத்த நண்பர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் இந்த தலைமுறையிலிருந்து அல்லது அவர்களது முன்னோர்களில் ஒருவர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்.5 எப்படியிருந்தாலும், உண்மையான தனிப்பட்ட முன்னேற்றத்துக்காக, உடனே அல்லது பின்னால், மார்மன் புஸ்தகத்திலுள்ள சத்தியங்களின் வல்லமையால், அவர்கள் எல்லாரும் அனுபவிக்க வேண்டும், கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதே சமயத்தில், அவரது கட்டளைகளைக் கைக்கொள்ள முயல்வோம் என தேவனுக்கு தீவிரமான ஒப்புக்கொடுத்தல் செய்ய அவர்கள் தனிப்பட்ட முறையில் தீர்மானிக்க வேண்டும்.

போனஸ் அயர்ஸுக்குத் திரும்பியபின், நான் உண்மையாகவே ஞானஸ்நானம் பெற விரும்புகிறேன் என என் அம்மா உணர்ந்தார். நான் ஒருவித கலக ஆவியுடையவனாதலால், என்னை எதிர்ப்பதற்குப் பதிலாக அவர் மிக ஞானமாக என் பக்கமிருந்தார். அதை அறியாமலேயே, அவரே என் ஞானஸ்நான நேர்முகத்தை செய்தார். உண்மையில், நமது ஊழியக்காரர்கள் நடத்துகிறதைவிட ஆழமானதாக இருந்தது என நான் நம்புகிறேன். அவர் என்னிடம் சொன்னார், “நீ ஞானஸ்நானம் பெற விரும்பினால், நான் உன்னை ஆதரிப்பேன். ஆனால் முதலில் நான் உன்னிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன், நீ நன்றாக யோசித்து நேர்மையாக பதில் சொல். ஒவ்வொரு ஞாயிறும் நிச்சயமாக சபைக்குச் செல்ல ஒப்புக்கொடுக்கிறாயா?”

நான் சொன்னேன், “ஆம், உண்மையாக, நான் அதைச் செய்யப் போகிறேன்.”

“சபை எவ்வளவு நேரம் இருக்கும் என எந்த அபிப்பிராயமும் இருக்கிறதா?”

“ஆம், தெரியும்,” நான் சொன்னேன்.

அவர் பதிலளித்தார், “நல்லது நீ ஞானஸ்நானம் பெற்றால், நீ செல்வதை நான் உறுதி செய்வேன்.” நான் உண்மையாகவே ஒருபோதும் சாராயம் குடிக்கவோ அல்லது புகை பிடிக்கவோ மாட்டேனா என பின்பு என்னிடம் கேட்டார்.

நான் பதிலளித்தேன், “ஆம், நான் அதையும் பின்பற்றப் போகிறேன்.”

அதற்கு அவர் சொன்னார், “நீ ஞானஸ்நானம் பெற்றால், அப்படியே இருப்பதை நான் உறுதி செய்வேன்.” கிட்டத்தட்ட ஒவ்வொரு கட்டளைக்கும் அவ்விதமாக தொடர்ந்தார்.

வருத்தப்பட வேண்டாம், நான் அதையெல்லாம் சமாளிப்பேன் என என் அம்மாவை அழைத்து என் மாமா சொல்லியிருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, உருகுவே, மாண்டிவிடியோ ஊழியத்தில் சேவை செய்ய நான் அழைப்பு பெற்றபோது, நான் இதை எல்லாம் எப்போது முடிக்கப் போகிறேன் என அம்மா என் மாமாவிடம் கேட்க அழைத்திருக்கிறார். உண்மை என்னவெனில், நான் ஞானஸ்நானம் பெற்றதிலிருந்து, என் அம்மா ஒரு மகிழ்ச்சியான தாயாக இருந்திருக்கிறார்.

“ஒருவன் இதன் கொள்கைகளை பின்பற்றினால் தேவனுக்கு அருகில் செல்வான்”6, என்ற வாக்குத்தத்தத்தை நானே அனுபவித்து, மனமாற்ற முறையில் மார்மன் புஸ்தகம் முக்கியமானது என நான் அறிந்தேன்.

நேபி இவ்விதமாக மார்மன் புஸ்தகத்தின் மைய நோக்கத்தை விளக்கினான்:

“ஏனெனில் எங்கள் பிள்ளைகளும் எங்கள் சகோதரரும், கிறிஸ்துவில் விசுவாசிக்கவும், தேவனோடு கூட ஒப்புரவாகவும், வேண்டும் என்று அவர்களுக்கு உணர்த்துவதற்கு எழுதவே நாங்கள் கருத்துடன் பிரயாசப்படுகிறோம். …

“எங்கள் பிள்ளைகள் தங்களின் பாவங்களின் மன்னிப்புக்காக எதனைக் கண்ணோக்க வேண்டும், என்று அறியும் பொருட்டாக, நாங்கள் கிறிஸ்துவை பற்றிப் பேசுகிறோம், கிறிஸ்துவில் களிகூர்கிறோம், கிறிஸ்துவைப் பற்றி போதிக்கிறோம், கிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கிறோம்.”7

மார்மன் புஸ்தகம் முழுவதும் அதே பரிசுத்த நோக்கத்துக்காகவே வரையப்பட்டுளளது.

இக்காரணத்துக்காகவே, அதை நேர்மையாகப் படிக்க ஒப்புக்கொடுக்கிற வாசகர், ஜெப ஆவியுடன் கிறிஸ்து பற்றி கற்பது மட்டுமல்ல, கிறிஸ்து விடமிருந்தும் கற்பார்—விசேஷமாக “வார்த்தையின் நற்பண்பை முயற்சிக்கும்”8 தீர்மானத்தை அவர்கள் செய்தால், அவர்கள் ஒருபோதும் வாசித்திராதவை பற்றி பிறர் சொன்னவை நிமித்தம், தவறான அவநம்பிக்கையினிமித்தம் அறியுமுன்னே மறுதலிக்காவிட்டால்.9

தலைவர் ரசல் எம். நெல்சன் நினைவுகூர்ந்தார், “நான் மார்மன் புஸ்தகம் பற்றி சிந்திக்கும்போது, நான் வார்த்தையின் வல்லமையைநினைக்கிறேன். மார்மன் புஸ்தக சத்தியங்கள் குணமாக்கவும், ஆறுதலளிக்கவும், புதுப்பிக்கவும், போஷிக்கவும், பெலப்படுத்தவும், தேற்றவும் நமது ஆத்துமாக்களுக்கு உற்சாகமளிக்கவும் வல்லமை பெற்றுள்ளது.”10

நம் ஒவ்வொருவருக்கும் இம்மாலையில் எனது அழைப்பு, நாம் எவ்வளவு நாள் சபையின் அங்கத்தினராக இருக்கிறோம் என்பது பொருட்டின்றி, மார்மன் புஸ்தகத்தின் சத்தியங்கள் பற்றிய வல்லமையை அனுமதிக்க, நம்மை கண்டுபிடிக்கவும் மீண்டும் தழுவிக் கொள்ளவும், கருத்தாய் தினமும் தனிப்பட்ட வெளிப்படுத்தல் நாடுவதற்குமே. நாம் அதை அனுமதித்தால் அது அவ்வாறே செய்யும்.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையை மார்மன் புஸ்தகம் பெற்றிருக்கிறது, தங்கள் ஆத்தும இரட்சிப்புக்காக, உண்மையான இருதயத்தோடு அறிவைத் தேடுகிற, யாருக்கும், மேலும் மேலும் அதன் சத்தியத்தை பரிசுத்த ஆவி உறுதிப்படுத்தும் என நான் பரிசுத்த சாட்சியளிக்கிறேன்.11 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. லூக்கா 15:6; மற்றும் வசனங்கள் 9,32 பார்க்கவும்.

  2. விரிவான விதத்தில், வேதங்கள் இஸ்ரவேலின் காணாமல் போன கோத்திரங்களை கூட்டிச் சேர்த்தல் பற்றி பேசுகிற தீர்க்கதரிசனங்களை வேதங்கள் கூறுகின்றன(Russell M. Nelson, “The Gathering of Scattered Israel,” Liahona, Nov. 2006, 79–82 பார்க்கவும்). அவர்கள் காணாமற்போனாலும், அவருக்கு அவர்கள் காணாமற்போகவில்லை(3 Nephi 17:4 பார்க்கவும்). மேலும், விசேஷமாக அவர்கள் தங்கள் கோத்திரபிதா ஆசீர்வாதங்களை பெறும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை அவர்கள் காணமற்போனதை அவர்கள் உணரவில்லை என்பது ரசிக்கத்தக்கது.

  3. பரிசுத்த அசிசியை மேற்கோள்காட்டி, மூப்பர் டியட்டர் எப். உக்டர்ப் சொன்னார், “எல்லா நேரங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், தேவைப்பட்டால் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்” (“Waiting on the Road to Damascus,” Liahona, May 2011, 77; see also William Fay and Linda Evans Shepherd, Share Jesus without Fear [1999], 22).

  4. மரோனி 10:4-5.

  5. என் மூதாதையரின் மனமாற்ற கதைதான் என் சொந்த கதையும். மூப்பர் வில்லியம் ஆர். வாக்கர் போதித்தார், “தங்கள் முற்பிதாக்களின் மனமாற்றக் கதைகளை ஒவ்வொரு பிற்காலப் பரிசுத்தவானும் அறிந்தால் அது அற்புதமாயிருக்கும்.” (“Live True to the Faith,” Liahona, May 2014, 97). நம் அனைவரும் ஒரு விதத்தில் நேரடியாகவோ அல்லது முன்னோர்கள் மூலமாகவோ கண்டுபிடிக்கப்பட்டதால், ஆரம்பத்திலிருந்து முடிவை அறிந்த நமது பரலோக பிதாவுக்கு நன்றி.(ஆபிரகாம் 2:8 பார்க்கவும்).

  6. மார்மன் புஸ்தக முன்னுரை மற்றும் ஆல்மா 31:5 பார்க்கவும்.

  7. 2 நேபி 25:23, 26.

  8. ஆல்மா 31:5.

  9. ஆல்மா 32:28 பார்க்கவும்.

  10. Russell M. Nelson, “The Book of Mormon: What Would Your Life Be Like without It?Liahona, Nov. 2017, 62.

  11. 3 நேபி 05:20 பார்க்கவும்.