“பிற்சேர்க்கைகள் D: ஆரோனிய ஆசாரியத்துவ குழுமங்கள் மற்றும் இளம் பெண்கள் வகுப்புகள்—கூட்ட நிகழ்ச்சி நிரல்” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“பிற்சேர்க்கை D,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
பிற்சேர்க்கை D
ஆரோனிய ஆசாரியத்துவ குழுமங்கள் மற்றும் இளம் பெண்கள் வகுப்புகளுக்காக—கூட்ட நிகழ்ச்சி நிரல்
கூட்ட தேதி:
நடத்துதல் (வகுப்பு உறுப்பினர் அல்லது குழும தலைவர்):
ஆரம்பம்
பாடல் (விருப்பத்தேர்வு):
ஜெபம்:
இளம் பெண்கள் தலைப்பு அல்லது ஆரோனிய ஆசாரியத்துவ குழுமம் தலைப்பு ஆகியவற்றை திரும்பச் சொல்லவும்.
ஒன்றுகூடி ஆலோசியுங்கள்
கூட்டத்தை நடத்தும் நபரின் தலைமையில், வகுப்பு அல்லது குழுமமானது தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதல் பணியில் தங்களின் பொறுப்புகளைப் பற்றி 5 முதல் 10 நிமிடங்கள் ஆலோசிக்க செலவிடுகிறது. தலைமைக் கூட்டம் அல்லது தொகுதி இளைஞர் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவைகளைப் பின்தொடர, வகுப்பு அல்லது குழுமத் தலைவருக்கு இது ஒரு வாய்ப்பாகும்.
நடத்தும் நபர் பின்வரும் கேள்விகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பயன்படுத்தலாம்:
சுவிசேஷத்தின்படி வாழுதல்
-
என்ன சமீபத்திய அனுபவங்கள் இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிசேஷத்தைப் பற்றிய நமது சாட்சிகளை பலப்படுத்தியுள்ளன?
-
இரட்சகரிடம் நெருங்கி வர நாம் என்ன செய்கிறோம்? அவரைப் போல அதிகமாக இருக்க நாம் என்ன செய்ய முடியும்?
-
நம் வாழ்வில் கர்த்தரின் வழிகாட்டுதலை நாம் எப்படி உணர்ந்திருக்கிறோம்?
தேவையிலிருப்போரைக் கவனித்தல்
-
யாருக்கு உதவ அல்லது சேவை செய்ய வழிகாட்டப்பட்டதாக உணர்ந்தோம்? தேவைப்படும் ஒருவருக்கு உதவ ஆயத்திடமிருந்து நாம் என்ன பணிகளைப் பெற்றுள்ளோம்?
-
நமது வகுப்பு அல்லது குழு உறுப்பினர்கள் என்ன சவால்களை எதிர்கொள்கிறார்கள்? நாம் கடந்து செல்லும் விஷயங்களில் ஒருவருக்கொருவர் எவ்வாறு ஆதரவாக இருக்க முடியும்?
-
யாராவது சமீபத்தில் நமது தொகுதிக்கு குடிபெயர்ந்தார்களா அல்லது சபையில் சேர்ந்தார்களா? அவர்களை வரவேற்க நாம் எப்படி உதவலாம்?
அனைவரையும் சுவிசேஷத்தைப் பெற அழைத்தல்
-
தேவனுடைய அன்பை மற்றவர்கள் உணர நாம் என்ன செய்யலாம்?
-
கலந்துகொள்ள நண்பர்களை அழைக்கும் வகையில் என்னென்ன நிகழ்ச்சிகள் வரவிருக்கின்றன?
-
தொகுதி இளைஞர் ஆலோசனைக்குழு கூட்டங்களில் சுவிசேஷத்தைப் பகிரும் என்ன திட்டங்கள் விவாதிக்கப்பட்டன? நமது வகுப்பு அல்லது குழுமம் எவ்வாறு ஈடுபடலாம்?
நித்தியத்திற்காக குடும்பங்களை ஒன்றிணைத்தல்
-
தாத்தா பாட்டி மற்றும் உறவினர்கள் உட்பட குடும்ப உறுப்பினர்களுடன் நாம் சிறப்பாக தொடர்பு கொள்ள சில வழிகள் யாவை?
-
ஆலய நியமங்கள் தேவைப்படும் நம் முன்னோர்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க என்ன செய்கிறோம்? மற்றவர்கள் தங்கள் முன்னோர்களின் பெயர்களைக் கண்டறிய உதவ நாம் என்ன செய்யலாம்?
-
தனித்தனியாகவும் வகுப்பாகவும் அல்லது குழுமமாகவும் நாம் எவ்வாறு ஆலயப் பணிகளில் அதிகமாக பங்கேற்க முடியும்?
ஒன்றாகக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு வயது வந்தவர்களின் தலைவர் அல்லது குழும அல்லது வகுப்பின் உறுப்பினர் இந்த வார என்னைப் பின்பற்றி வாருங்கள் பற்றிய அறிவுரைகளை வழிநடத்துகிறார். அவர்கள் என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக விலுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்துகிறார். இந்த சின்னத்துடன் கூடிய படிப்பு ஆலோசனை வேத பாடவகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் குறிப்பாக இளைஞர்களுக்கு பொருத்தமானது. இருப்பினும், எந்த படிப்பு ஆலோசனைகளும் பயன்படுத்தப்படலாம். பொதுவாக கூட்டத்தின் இந்தப் பகுதிக்கு சுமார் 35 முதல் 40 நிமிடங்கள் ஆகும்.
நிறைவு
கூட்டத்தை நடத்துபவர்:
-
போதிக்கப்பட்ட கொள்கைகளுக்கு சாட்சியமளிக்கிறார்.
-
ஒரு குழுவாக அல்லது தனித்தனியாக அவர்கள் கற்றுக்கொண்டவற்றில் வகுப்பு அல்லது குழுமம் எவ்வாறு செயல்படும் என்பதைப் பற்றி விவாதிக்கிறது.
ஜெபம்: