“பெப்ருவரி 3–9. 2 நேபி 1–5: ‘நாங்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்துவந்தோம்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)
“பெப்ருவரி 3–9. 2 நேபி 1-5,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020
பெப்ருவரி 3–9
2 நேபி 1–5
“நாங்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்துவந்தோம்”
வேதங்கள் தனிப்பட்ட வெளிப்படுத்தலுக்கான கதவைத் திறக்கமுடியும் நீங்கள் 2 நேபி 1–5 ஐ வாசிக்கும்போது, உங்களுக்கு போதிக்க விரும்பும் விசேஷித்த ஒன்று கர்த்தரிடம் இருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்கக்கூடும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
உங்கள் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துகொண்டு இருந்தது என்பதை நீங்கள் அறிந்தால், நீங்கள் மிகவும் நேசிக்கிறவர்களிடத்தில் எந்த இறுதி செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புவீர்கள்? தீர்க்கதரிசி லேகி தனது வாழ்க்கையின் இறுதியை நெருங்கிக்கொண்டு இருப்பதை அறிந்தபோது, கடைசியாக ஒரு முறை தீர்க்கதரிசனம் உரைக்கவும் தாம் நேசித்த ஜனங்களுடன் அனுபவித்து மகிழ்ந்த சுவிசேஷ சத்தியங்களைப் பகிர்ந்துகொள்ளவும் அவன் தன் பிள்ளைகளை ஒன்று கூட்டினான். சுதந்திரம், கீழ்ப்படிதல், ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி, இயேசு கிறிஸ்துவின் மூலம் மீட்பு, மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றைப்பற்றி அவன் போதித்தான். அவனுடைய அனைத்துப் பிள்ளைகளும் அவரது இறுதி சாட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் இன்று அதை வாசிக்கும் லட்சக்கணக்கான ஜனங்களோடு, அவனுடைய சாட்சியில் காணப்படும் “மகிழ்ச்சியாய் வாழ்ந்துவருகிறதற்கான கொள்கைகளைக் கண்டு பிடித்து ஏற்றுக்கொண்டார்கள் (2 நேபி 5.27).
தனிப்பட்ட வேத தியானத்துக்கான ஆலோசனைகள்
நித்திய ஜீவனைத் தேர்ந்தெடுக்க நான் சுதந்திரவாளியாக இருக்கிறேன்.
மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன் கூறினார்: “அவர்களுக்கு அளித்துள்ள ஒழுக்க சுயாதீனத்துக்கு ஏற்ப தமது பிள்ளைகள் செயல்பட வேண்டும் என்று தேவன் உத்தேசிக்கிறார். … நமது சொந்த வாழ்க்கை நாடகத்தில் முக்கிய முடிவெடுக்கும் பங்கு நமக்கே உள்ளது என்பது அவரின் திட்டமும் அவரது சித்தமும் ஆகும்“ (“Free Forever, to Act for Themselves,” Ensign or Liahona, Nov. 2014, 16). சுயாதீனம் குறித்த தன் போதனைகளில், சுயாதீனத்தை சாத்தியமாக்கக் கூடியதும், நம்மை நமது தெய்வீக ஆற்றலை அடைய உதவி செய்வதுமான பின்வருபவைகளை உள்ளடக்கிய அத்தியாவசியமான நிபந்தனைகளை, லேகி அடையாளம் கண்டான்:
-
நன்மை தீமைபற்றிய அறிவு (2 நேபி 2:5)
-
மனுக்குலத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு நியாயப்பிரமாணம் (2 நேபி 2:5)
-
ஆசைகாட்டும் தேர்ந்தெடுப்புகளை எதிர்த்தல் (2 நேபி 2:11)
-
செயல்பட வல்லமை (2 நேபி 2:16)
நீங்கள் 2 நேபி 2,ஐ வாசிக்கும்போது சுயாதீனத்தின் இந்த ஒவ்வொரு நிபந்தனைகளையும் அவற்றின் ஒன்றுடன் ஒன்றுக்கான தொடர்பையும்பற்றியும் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? இந்த நிபந்தனைகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ தவறியிருந்தால் நம் சுயாதீனத்துக்கு என்ன நேரிடும்? லேகியின் வார்த்தைகளிலிருந்து சுயாதீனத்தைப்பற்றி வேறு என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
வீழ்ச்சியும், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியும் பரலோக பிதாவின் திட்டத்தின் முக்கிய பகுதிகள் ஆகும்.
பலர் ஆதாம் ஏவாளின் வீழ்ச்சியை ஒரு சோக நிகழ்வாகப் பார்க்கிறார்கள். இருப்பினும், வீழ்ச்சியைப்பற்றிய லேகியின் போதனைகள் நமது நித்திய முன்னேற்றத்துக்கான பிதாவின் திட்டத்தில் அது ஏன் ஒரு அத்தியாவசிய பகுதி என்று வெளிப்படுத்துகிறது. நீங்கள் இந்த வசனங்களை வாசிக்கும்போது, வீழ்ச்சி, பரலோக பிதாவின் பிள்ளைகளாகிய நமது முன்னேற்றத்துக்காக நடக்க வேண்டிய தேவையாக ஏன் இருந்தது என்பதைத் தேடுங்கள். இரட்சகரின் பாவநிவாரண பலி எவ்வாறு வீழ்ச்சியில் இருந்து நம்மை மீட்டது?
மோசே 5:9–12; 6:51–62;“ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி,“ சுவிசேஷத் தலைப்புகள், topics.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.
சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்ய ஜோசப் ஸ்மித் முன்நியமிக்கப்பட்டார்.
2 நேபி 3 ன் இறுதிப் பகுதி தன்னுடைய பெயரையுடைய ஒரு எதிர்கால ஞானதிருஷ்டிக்காரரைப்பற்றிய எகிப்தின் யோசேப்பால் கொடுக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தைக் கொண்டுள்ளது (வசனங்கள் 14–15பார்க்கவும்)—ஜோசப் ஸ்மித். மேலும் அதில் ஜோசப் ஸ்மித்தின் ஊழியத்தைப்பற்றி சொல்வதற்கு அதிகம் உள்ளது. வசனங்கள் 6–24 ஒரு “தெரிந்து கொள்ளப்பட்ட ஞானதிருஷ்டிகாரராகிய” ஜோசப் ஸ்மித், தேவனின் ஜனங்களை ஆசீர்வதிக்க என்ன செய்வார் என்பதைப்பற்றி என்ன சொல்கின்றன? ஜோசப் ஸ்மித்தின் பணி எவ்வாறு உங்களுக்கு “பெரு மதிப்புள்ளதாக” இருந்திருக்கிறது?
மார்மன் புஸ்தகத்தில் அடங்கியிருந்த ஜோசப்பின் விதையைப்பற்றிய எழுத்துக்களை வெளிக்கொண்டு வருவதே ஜோசப் ஸ்மித்தின் ஊழியத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். மார்மன் புஸ்தகத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி இந்த அத்தியாயத்தில் இருந்து என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, ஆதியாகமம் 50:24–38ஐயும் பார்க்கவும் (வேதாகமப் பிற்சேர்க்கையில்).
எனது பலவீனத்தில் நான் தேவனிடத்தில் திரும்ப முடியும்.
நேபி சமீபத்தில் தன்னுடைய தகப்பனை இழந்திருந்தான். தன்னுடைய குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு இப்போது அவன் மேல் வந்தது. அவன் சோதனைகளால் சூழப்பட்டதாகவும் உணர்ந்தான், மேலும் அவன் தனது பாவங்களினிமித்தம் ஊக்கமிழந்தான். உங்கள் சூழ்நிலைகள் நேபியை விட வேறுபட்டதாக இருந்தாலும் கூட, நேபி 4:15–35ல் பதிவு செய்யப்பட்டுள்ள அவனுடைய சில சிந்தனைகள் மற்றும் எண்ணங்களோடு நீங்கள் தொடர்புபடுத்தலாம். நேபியின் உபத்திரவங்களின்போது அவனுக்கு உதவிசெய்தது என்ன? தன் சவால்களுக்கு நேபியின் பிரதிக்கிரியை நீங்கள் உங்கள் போராட்டங்களை எதிர்கொள்ள எவ்விதம் உதவ முடியும்?
சுவிசேஷத்தின்படி வாழ்வதில் மகிழ்ச்சி காணப்படுகிறது.
மகிழ்ச்சியை நீங்கள் எவ்வாறு வரையறுப்பீர்கள்? நேபி தன் ஜனங்கள் “மகிழ்ச்சியாய்” வாழ்ந்ததாக எழுதினான் (2 நேபி 5:27). நேபியையும் அவனது ஜனத்தையும் மகிழ்ச்சிக்கு வழிநடத்திய தேர்ந்தெடுப்புகளையும் ஒருவருக்கொருவரையும், அவர்களுடைய குடும்பங்களையும் ஆதரித்த வழிகளையும், அவர்கள் தங்கள் சமுதாயத்தில் மதித்தவைகளையும், மற்றும் அதுபோன்றவற்றையும் நீங்கள் தேடலாம். நேபியின் ஜனங்கள் செய்ததுபோல, ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்க உங்களுக்கு உதவக்கூடிய எதை நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்?
குடும்ப வேத தியானம் மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவுவார். இங்கே சில ஆலோசனைகள்.
2 நேபி 1:13–25
இந்த வசனங்கள் அவன் அல்லது அவளான அவனுடைய பிள்ளைகளுக்காக ஒரு நீதியுள்ள பெற்றோரின் மாபெரும் ஆவல்களைப்பற்றி நமக்கு என்ன போதிக்கின்றன?
2 நேபி 3:6
வேத அகராதியில் “ஞானதிருஷ்டிக்காரர்“ சேர்ந்து வாசிக்கவும். ஜோசப் ஸ்மித் எவ்விதம் ஒரு ஞானதிருஷ்டிக்காரர்? ஜோசப் ஸ்மித் நிறைவுசெய்துள்ள பணிக்காக நாம் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்? ( 2 நேபி 3:6–24) பார்க்கவும்.
2 நேபி 4:20–25
நீங்கள் ஒன்றுசேர்ந்து 2 நேபி 4:20–25 ஐ வாசிக்கும்போது ஒவ்வொரு வசனத்துக்கும் இடையில் நிறுத்தி, நேபி விவரிப்பதை அவர்கள் எப்போது அனுபவித்தார்கள் அல்லது உணர்ந்தார்கள் என்று பகிர்ந்துகொள்ளும்படி , குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும். நமது குடும்பத்துக்கு தேவன் என்ன செய்திருக்கிறார்?
2 நேபி 5
“மகிழ்ச்சியாக” உங்கள் குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கிற சில வழிகள் யாவை? உங்கள் குடும்பம் 2 நேபி 5ஐ வாசிக்கும்போது, நேபியர்கள் கவனம் செலுத்திய காரியங்களை நீங்கள் விவாதிக்கலாம்: குடும்பம் (வசனம் 6), கட்டளைகள் (வசனம் 10), வேதங்கள் (வசனம் 12), கல்வி (வசனம் 15), ஆலயங்கள் (வசனம் 16), வேலை (வசனம் 17), மற்றும் சபை அழைப்புக்கள் (வசனம் 26). இந்த காரியங்களில் சிலவற்றைக் குறிக்கும் பொருள்களைக் கண்டுபிடிப்பது இதைச் செய்யும் ஒரு வழி மற்றும், நேபியர்களைப் போல, நாமும் அதே விஷயங்களை மதிப்பதை நாம் எவ்வாறு காட்டுவது என்பதைப்பற்றி பேசுவது.
பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், —ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.