என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஏப்ரல் 20–26. மோசியா 4–6: “பெரும் மாற்றம்”


ஏப்ரல் 20–26 மோசியா 4–6: “பெரும் மாற்றம்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஏப்ரல் 20–26 மோசியா 4–6,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

தன்னுடைய ஜனத்துக்கு பென்யமீன் இராஜா போதித்தல்

உங்கள் தேவனுடைய சேவையில்–வால்டர் ரானே

ஏப்ரல் 20–26

மோசியா 4–6

“பெரும் மாற்றம்”

மோசியா 4–6ஐ நீங்கள் வாசித்து தியானம் செய்யும்போது பரிசுத்த ஆவியின் உணர்த்துதலுக்காக கவனம் செலுத்தவும். என்ன நல்ல காரியங்களைச் செய்ய நீங்கள் உணர்த்தப்பட்டீர்கள்? (மோசியா 5:2 பார்க்கவும்).

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

யாரோ ஒருவர் பேசுவதைக் கேட்டு உங்கள் வாழ்க்கையில் மாறுவதற்கு நீங்கள் எப்போதாவது உணர்த்தப்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை, ஒரு சிறிது வித்தியாசமாக அல்லது மிக அதிக வித்தியாசமாக வாழ நீங்கள் கேட்டவை இருந்ததால் நீங்கள் தீர்மானித்தீர்கள். பென்யமீன் இராஜாவின் பிரசங்கம் அந்த வகையிலிருந்தது, அவன் போதித்த சத்தியங்கள் அவைகளைக் கேட்ட ஜனங்களிடத்தில் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது. “கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் இரத்தத்தின்” மூலமாக அந்த அற்புதமான ஆசீர்வாதங்கள் சாத்தியமாயிருந்தது என ஒரு தூதன் அவனுக்குப் போதித்ததை, பென்யமீன் இராஜா அவனுடைய ஜனங்களிடத்தில் பகிர்ந்துகொண்டான் (மோசியா 4:2). அவனுடைய செய்தி அவர்களைப்பற்றிய முழு பார்வையையும் மாற்றியது (மோசியா 4:2பார்க்கவும்), அவர்களுடைய விருப்பங்களை மாற்றியது (மோசியா 5:2 பார்க்கவும்), எப்போதும் அவருடைய சித்தத்தின்படி அவர்கள் செய்யும்படியாக தேவனிடத்தில் உடன்படிக்கை செய்ய அவர்களுக்கு உணர்த்தியது (மோசியா 5:5 பார்க்கவும்). இப்படியாகத்தான் பென்யமீன் இராஜாவின் வார்த்தைகள் அவனுடைய ஜனங்களை பாதித்தன. அவைகள் உங்களை எவ்வாறு பாதிக்கும்?

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

மோசியா 4

இயேசு கிறிஸ்துவின் மூலம் என்னுடைய பாவங்களுக்கான மீட்பை நான் பெறவும், தக்கவைக்கவும் முடியும்.

சுபாவ மனிதனை மேற்கொள்ளுவது எளிதானதல்ல. “கர்த்தராகிய கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக ஒரு பரிசுத்தவானாகுவதற்கு” பெரும் முயற்சி தேவையாயிருக்கிறது (மோசியா 3:19). சிலநேரங்களில் உங்கள் பாவங்களுக்காக நீங்கள் மன்னிக்கப்பட்டதாக உணர்ந்தாலும் அந்த உணர்வை காத்துக்கொள்ளுவதற்கும் நீதியின் பாதையில் நிலைத்திருக்கவும் நீங்கள் போராடக்கூடும். பாவங்களின் மீட்பை எவ்வாறு பெறுவது, மற்றும் தக்கவைத்துக்கொள்ளுவது என்ற இரண்டையும் மற்றும் ஒரு பரிசுத்தவானாக சீராக வாழ்வது என்பதையும் பென்யமீன் இராஜா அவனுடைய ஜனங்களுக்குப் போதித்தான். மோசியாவின் அதிகாரம் 4 ஐ நீங்கள் படிக்கும்போது இம்மாதிரியான கேள்விகளை உங்களிடமே நீங்கள் கேட்கக்கூடும்.

வசனங்கள் 1–12.பாவங்களை விட்டுவிடுவது பென்யமீன் இராஜாவின் ஜனங்களுக்கு என்ன ஆசீர்வாதங்களைக் கொண்டுவந்தது? தங்களுடைய பாவங்களுக்கான மீட்பை தக்கவைத்துக்கொள்ள அவர்களுக்குதவ பென்யமீன் இராஜா என்ன போதித்தான்? இரட்சிப்பை நாம் எவ்வாறு பெறுவதென்பதைப்பற்றி அவன் என்ன போதித்தான்? நாம் “எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டும்” என்பதைப்பற்றி பென்யமீன் இராஜா என்ன சொன்னான் என்பதைக் கவனிக்கவும்.(வசனம் 11). இந்தக் காரியங்களை நினைவில் வைத்திருக்க நீங்கள் என்ன செய்யவேண்டுமென உணருகிறீர்கள்?

வசனங்கள் 12–16.வசனம் 11ல் விவரிக்கப்பட்டிருக்கிற காரியங்களை நாம் செய்தால், இந்த வசனங்களின்படி நமது வாழ்க்கையில் என்ன நடக்கிறது? உங்கள் வாழ்க்கையில் இந்த மாற்றங்களை நீங்கள் அனுபவத்திருக்கிறீர்களா? மோசியா 3:19ல் விவரிக்கப்பட்டுள்ள மாற்றங்களுக்கு அவைகள் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது?

வசனங்கள் 16–30.நமது பாவங்களுக்கான மீட்பை தக்கவைத்துக்கொள்ள வறியோருடன் நாம் பகிர்ந்துகொள்ளுதல் எவ்வாறு நமக்குதவுகிறது? கிறிஸ்துவைப் போலிருக்க உங்களுடைய முயற்சிகளுக்கு வசனம் 27ஐ நீங்கள் எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?

David A. Bednar, “Always Retain a Remission of Your Sins,” Ensign or Liahona, May 2016, 59–62; Dale G. Renlund, “Preserving the Heart’s Mighty Change,” Ensign or Liahona, Nov. 2009, 97–99 ஐயும் பார்க்கவும்.

மோசியா 5:1–7

கர்த்தருடைய ஆவி என் இருதயத்தில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.

“என்னால் மாறமுடியாது. நான் அவ்விதமாகத்தான் இருக்கிறேன் ” எனச் சொல்வது ஜனங்களுக்கு அசாதாரணமானதல்ல. அதற்கு மாறாக, கர்த்தருடைய ஆவி எவ்வாறு நமது இருதயங்களை உண்மையாக மாற்றுகிறதென பென்யமீன் இராஜாவின் ஜனங்களின் அனுபவம் காட்டுகிறது. தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்: “ நாம் நமது நடத்தையை மாற்றலாம். நமது வாஞ்சைகள் மாறலாம். … குணமாக்குதல், சுத்திகரித்தல், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமையை சாத்தியமாக்குவதன் மூலமாக மட்டுமே உண்மையான மாற்றம்—நிரந்தர மாற்றம்—வரமுடியும். … இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மாற்றத்தின் ஒரு சுவிசேஷம்!” (“Decisions for Eternity” ,” Ensign or Liahona, Nov. 2013, 108).

பென்யமீனின் ஜனங்கள் அனுபவித்த மாற்றத்தைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் நடந்த அல்லது நடக்கமுடிகிற உண்மையான மனமாற்றத்திற்கு எவ்வாறு “பெரும் மாற்றம்” நடத்துகிறது என்பதைப்பற்றி சிந்தியுங்கள். உங்களுடைய இருதய மாற்றத்திற்கு நடத்திய ஒருசில “பெரும்” நேரங்களிருக்கிறதா அல்லது உங்கள் மனமாற்றம் மிக படிப்படியாக நடந்ததா?

எசேக்கியேல் 36:26–27; ஆல்மா 5:14; David A. Bednar, “Converted unto the Lord,” Ensign or Liahona, Nov. 2012, 106–9 ஐயும் பார்க்கவும்.

வியாதிப்பட்ட ஒரு ஸ்திரீயை கிறிஸ்து சுகப்படுத்துகிறார்

நமது இருதயங்களையும் நமது வாழ்க்கையையும் இரட்சகரால் மாற்றமுடியும். குணமாக்கும் கரங்கள்–ஆடம் அப்ரம்

மோசியா 5:5–15

நான் உடன்படிக்கைகளைச் செய்யும்போது கிறிஸ்துவின் நாமத்தை நான் என்மீது தரித்துக்கொள்ளுகிறேன்.

பென்யமீன் இராஜா அவனுடைய ஜனங்களுக்கு உரையாற்ற விரும்பியதற்கு, “இந்த ஜனங்களுக்கு ஒரு நாமத்தைத் தரிப்பது” ஒரு காரணமாயிருந்தது. சிலர் நேபியராயிருந்தனர், மற்றவர்கள் மூலேக்கின் சந்ததியாராயிருந்தனர், ஆனால் அவனுடைய மனதிலிருந்த நாமங்கள் இவைகளல்ல. தேவனிடத்தில் செய்த அவர்களுடைய கீழ்ப்படிதல் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக (மோசியா 1:11; 5:10) “கிறிஸ்துவின் நாமத்தை” தங்கள்மேல் தரித்துக்கொள்ள ஜனங்களை அவன் அழைத்தான். கிறிஸ்துவின் நாமத்தை உங்கள்மேல் தரித்துக்கொள்வதென்றால் என்ன அர்த்தமாகிறதென்பதைப்பற்றி மோசியா 5:7–9லிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

“[தார்மீக, ஆவிக்குரிய வல்லமைக்கு] தேவனே ஆதாரம். அந்த வல்லமைக்கான நமது அணுகுதல், அவருடன் செய்யப்பட்ட நமது உடன்படிக்கைகளின் மூலமே” என மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சென் போதித்தார் (“The Power of Covenants,” Ensign or Liahona, May 2009, 20). மோசியா 5:5–15ஐ நீங்கள் வாசிக்கும்போது, தேவனோடு நீங்கள் செய்த உடன்படிக்கைகளை நீங்கள் கைக்கொள்ளும்போது உங்கள் வாழ்க்கையில் வரும் ஆசீர்வாதங்களைப் பட்டியலிடுங்கள். இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய பாவநிவர்த்தியின் மூலமாக உங்களுக்குள் செய்யப்பட்ட பெரும் மாற்றத்தைத் தக்கவைக்க, உங்களுடைய உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுவது எவ்வாறு உங்களுக்குதவுகிறது?

குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

மோசியா 4:9–12

உங்களுடைய குடும்பம் எவ்வாறு “தேவனில் மிக முழுமையாக நம்பிக்கை வைத்து” (மோசியா 4:9) “தேவனுடைய மகத்துவத்தை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளமுடியும்”?( மோசியா 4:11). ஒருவேளை குடும்ப அங்கத்தினர்கள் மோசியா 4:9–12ஐ வாசித்து, தேவனில் அவர்களுடைய விசுவாசத்தை வளர்க்க உதவக்கூடிய சொற்றொடர்களை அடையாளங்காணலாம். பின்னர் இந்த சொற்றொடர்களை அவர்கள் எழுதி நினைவூட்டல்களாக வீட்டைச் சுற்றி அவைகளை வைக்கலாம். “எப்போதும் களிகூரவும்” “[நமது] பாவங்களுக்கான மீட்பை தக்கவைக்கவும்” இந்தக் காரியங்களை நினைவில் வைத்திருப்பது எவ்வாறு உதவும்.? (மோசியா 4:12).

மோசியா 4:14–15

இந்த வசனங்களில் இருந்து இயேசு கிறிஸ்துவைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்?

மோசியா 04:16–26

என்ன அர்த்தத்தில் நாம் அனைவரும் பிச்சைக்காரர்களாயிருக்கிறோம்? இந்த வசனங்களின்படி தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் நாம் எவ்வாறு நடத்தவேண்டும்? (மோசியா 4:26 பார்க்கவும்). நமது உதவி யாருக்குத் தேவையாயிருக்கிறது?

மோசியா 4:27

உங்களுக்கிருக்கும் பெலத்தைவிட உங்களுடைய குடும்பம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறதா? அவர்கள் சிரத்தை உள்ளவர்களாயிருக்கிறார்கள், புத்திசாலியாகவும் இருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்ய அவர்களுடைய நடவடிக்கைகளை மதிப்பிட உங்கள் குடும்ப அங்கத்தினர்களை நீங்கள் அழைக்கலாம்.

மோசியா 5:5–15

கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது எடுத்துக்கொள்ளுதல், அவருடன் நமது உறவைப்பற்றி எதை ஆலோசனையளிக்கிறது? தங்களுக்குச் சொந்தமான பொருட்களி்ன்மேல் தங்களுடைய பெயர்களை ஜனங்கள் ஏன் சிலசமயங்களில் எழுதுகிறார்கள் என்பதைப்பற்றி பேசுவது உதவியாயிருக்கக்கூடும். நாம் இரட்சகருக்குச் “சொந்தமானவர்கள்” என்பதை நாம் எவ்வாறு காட்டமுடியும்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு. பார்க்கவும்

நமது கற்பித்தலை மேம்படுத்துதல்

அன்பான சூழ்நிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவரை குடும்ப அங்கத்தினர்கள் நடத்துகிற விதத்தில் உங்களுடைய குடும்பத்தின் உற்சாகம் ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தமுடியும். அனுபவங்களை, கேள்விகளை, சாட்சிகளைப் பகிர்ந்துகொள்ளுவதில் ஒவ்வொருவரும் பாதுகாப்பை உணரும்படியாக, ஒரு அன்பான, மரியாதையுள்ள வீட்டை நிர்வகிக்க தங்களுடைய பங்கைச் செய்ய குடும்ப அங்கத்தினர்கள் அனைவருக்கும் உதவுங்கள். (Teaching in the Savior’s Way, 15 பார்க்கவும்.)

ஒரு முற்றத்தில் பறவைகளுக்கு கிறிஸ்து போஷித்தல்

அவருடைய நிரந்தர கவனிப்பில்–க்ரெக் கே. ஓல்சன்