“ஜூன் 29–ஜூலை 5. ஆல்மா 23–29: ‘அவர்கள் ‘பின்வாங்கிப்போகாதிருந்தார்கள்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 2020
“ஜூன் 29–ஜூலை 5. ஆல்மா 23–29,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020
ஜூன் 29–ஜூலை 5
ஆல்மா 23–29
அவர்கள் “பின்வாங்கிப்போகாதிருந்தார்கள்”
ஆல்மா 23–29ஐ நீங்கள் படிக்கும்போது, உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்ன செய்திகளை நீங்கள் காண்கிறீர்கள்? உங்கள் சபை வகுப்புகளில் எதை உங்களால் பகிர்ந்துகொள்ளமுடியும்?
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
ஜனங்கள் உண்மையிலேயே மாறுகிறார்களா என சிலநேரங்களில் நீங்கள் வியப்படைகிறீர்களா? நீங்கள் செய்த மோசமான தேர்ந்தெடுப்புகளை அல்லது நீங்கள் வளரச்செய்த கெட்ட பழக்கங்கள் அல்லது நீங்கள் நேசிப்பவர்களைப்பற்றி இதைப்போன்ற கவலைகளை உங்களால் மேற்கொள்ள முடியமாவென்பதைப்பற்றி நீங்கள் கவலைப்படக்கூடும். அப்படியிருந்தால், அந்தி–நேபி–லேகியரின் கதை உங்களுக்குதவ முடியும். இந்த ஜனங்கள் நேபியர்களின் சூளுரைத்த எதிரிகளாயிருந்தனர். அவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அம்மோனும் அவனுடைய சகோதரரும் தீர்மானித்தபோது, நேபியர்கள் [அவர்களைப் பார்த்து] “பரிகாசமாக சிரித்தார்கள்.” லாமானியர்களை மனமாற்றுவதைவிட அவர்களைக் கொல்லுதல் மிக நம்பத்தக்க தீர்வுபோலத் தோன்றியது (ஆல்மா 26:23–25 பார்க்கவும்.)
ஆனால், கர்த்தருடைய மனமாற்றும் வல்லமையினால் லாமானியர்கள் மாறினார்கள். “கடினமாயும், கொடிய ஜனங்களுமாக” (ஆல்மா 17:14), ஒரு முறை அவர்கள் அறியப்பட்டு, “தேவனிடத்தில் அவர்கள் கொண்டிருந்த வைராக்கியத்தினிமித்தம் அவர்கள் பெயர்பெற்றார்கள்” (ஆல்மா 27:27). உண்மையில் அவர்கள் “பின்வாங்கிப்போகாதிருந்தார்கள்” (ஆல்மா 23:6).
கைவிடுவதற்கோ அல்லது “கலக … ஆயுதங்களை” (ஆல்மா 23:7) கீழே போடுவதற்கோ உங்களிடம் பொய்யான பாரம்பரியங்களிருக்கலாம். அல்லது உங்கள் சாட்சியில் நீங்கள் சிறிது அதிக வைராக்கியமுள்ளவராயிருக்கவும், விலகிச்செல்ல சிறிது குறைவான வாய்ப்புள்ளவராயிருக்கவும் அவசியப்படலாம். உங்களுக்கு என்ன மாற்றம் அவசியமென்பது முக்கியமல்ல, ஆல்மா 23–29 இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமையின் மூலமாக நீடித்திருக்கும் மாற்றம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அது உங்களுக்கு கொடுக்கமுடியும்.
தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்
தேவனுடைய பிள்ளைகள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளும்போது பெரிய ஆசீர்வாதங்கள் பின்தொடரும்.
அவனுடைய ஜனங்களுக்கு மத்தியில் தேவ வார்த்தைக்கு எந்த தடையுமிருக்கக் கூடாது (ஆல்மா 23:1–5 பார்க்கவும்), என லாமானியர்களின் இராஜா பிரகடனம் செய்தபோது அவர்களுக்காக மகத்தான ஆசீர்வாதங்களுக்கான கதவை அவன் திறந்தான். ஆல்மா 23–29ஐ நீங்கள் வாசிக்கும்போது இந்த ஆசீர்வாதங்களுக்காக தேடுங்கள். உங்கள் வாழ்க்கையில் அல்லது உங்களுடைய குடும்பத்தினர் வாழ்க்கையில் தேவ வார்த்தைக்கு தடையில்லை என நீங்கள் எவ்வாறு உறுதி செய்யமுடியும்?
இயேசு கிறிஸ்துவிடமும் அவருடைய சுவிசேஷத்திலும் என்னுடைய மனமாற்றம் என்னுடைய வாழ்க்கையை மாற்றுகிறது.
அம்மோனாலும் அவனுடைய சகோதரர்களாலும் சந்திக்கப்பட்ட லாமானியர்கள் மனமாற்றத்திற்கான நபர்களாயிருப்பதாகத் தோன்றவில்லை, அவர்களுடைய தகப்பன்மார்களின் பாரம்பரியத்தாலும் அவர்களுடைய சொந்த துன்மார்க்கத்தாலும் அவர்கள் சிக்க வைக்கப்பட்டார்கள். இருந்தும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அவர்களில் அநேகர் ஏற்றுக்கொண்டு, தங்களுடைய வாழ்க்கையில் அடிப்படை மாற்றங்களைச் செய்தனர். தங்களுடைய சொந்த மனமாற்றத்தின் ஒரு அடையாளமாக இந்த லாமானியர்கள் தங்களைத் தாங்களே அந்தி–நேபி–லேகியர் என அழைத்துக்கொண்டனர். (இந்த இடத்தில் “அந்தி” என்பதற்கு “அந்தி கிறிஸ்துவிலுள்ள” “அந்தி” என்ற அதே அர்த்தமில்லை)
இந்த லாமானியர்களின் மனமாற்றத்தைப்பற்றி சிந்தித்தல் “கர்த்தருக்குள்ளாக” (ஆல்மா 23:6) உங்களுடைய மனமாற்றத்தைப்பற்றி உங்களை சிந்திக்கவைக்கலாம். அந்தி–நேபி–லேகியரின் மனமாற்றம் அவர்களுடைய வாழ்க்கையை எவ்வாறு மாற்றியதென்பதை இந்த அதிகாரங்களை படிப்பதால் அடையாளம்காண முடியலாம். பின்வரும் வசனங்கள் உங்களைத் தொடங்க வைக்கலாம்.
அந்தி–நேபி–லேகியரின் மாற்றங்களை நீங்கள் சிந்திக்கும்போது, கர்த்தருக்குள்ளாக உங்களுடைய சொந்த மனமாற்றம் உங்களை எவ்வாறு மாற்றிக்கொண்டிருக்கிறதென்பதை கருத்தில்கொள்ளவும். உங்கள் வாழ்க்கையில் சுவிசேஷம் மிக அதிக வல்லமையைக் கொண்டிருக்கும்படியாக நீங்கள் இன்னமும் மாறுவதற்கு தேவையிருக்கிறதென்பதைப்பற்றி நீங்கள் என்ன உணருகிறீர்கள்?
தேவன் இரக்கமுள்ளவர்.
அம்மோன் மற்றும் அந்தி–நேபி–லேகியரின் பாவங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமென்கிறபோது, உங்கள் வாழ்க்கையை விட அவை எவையுமே முற்றிலும் வேறுபட்டவை, நாம் அனைவரும் தேவனின் இரக்கத்தையே சார்ந்திருக்கிறோம். அவருடைய இரக்கத்தைப் புரிந்துகொள்ள உங்களுக்குதவும்படியாக, ஆல்மா24:7–19 மற்றும் 26:17–22ல் நீங்கள் எதைக் காண்கிறீர்கள்? நீங்கள் படிக்கும்போது, இந்தக் காரியங்களைக் குறித்து நீங்கள் நினைக்கலாம்: மனந்திரும்ப நீங்கள் அழைக்கப்பட்ட வழிகள், மனந்திரும்புதலுடன் உங்கள் அனுபவம், மீண்டும் பாவம் செய்தலை நீங்கள் எவ்வாறு தவிர்க்க முயற்சித்தீர்கள், மனந்திரும்புதல் மூலமாக உங்களுக்கு வந்த ஆசீர்வாதங்கள். இந்த வழியில் நீங்கள் வசனங்களை வாசிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் தேவனின் இரக்கத்தைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
கர்த்தருக்கு சேவை செய்தல் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது.
அவர்களுடைய வித்தியாசமான அனுபவங்களிலும், தங்களுடைய ஊழிய பிரயாசங்களைப்பற்றி அம்மோனும் ஆல்மாவும் ஒத்த உணர்வுகளைத் தெரிவித்தார்கள். ஆல்மா 26 மற்றும் 29ஐ படிப்பதை கருத்தில்கொண்டு அவைகளை ஒப்பிடவும். என்ன ஒற்றுமைகளை நீங்கள் கவனித்தீர்கள்? எந்த வார்த்தைகளும் சொற்றொடர்களும் மீண்டும் மீண்டும் வருகிறது? உங்களுடைய சவால்களுக்கு மத்தியிலும் உண்மையான மகிழ்ச்சியை எவ்வாறு கண்டுபிடிக்கிறதென்பதைப்பற்றி அம்மோனிடமிருந்தும் ஆல்மாவிடமிருந்தும் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளமுடியும்? (ஆல்மா சந்தித்த சவால்களை மறுபரிசீலனைச் செய்ய ஆல்மா 5–16 அதிகாரத் தலைப்புகளைப் பார்க்கவும். அம்மோனும் அவனுடைய சகோதரர்களும் சந்தித்த சவால்களை மறுபரிசீலனைச் செய்யஆல்மா 17–28 அதிகாரத் தலைப்புகளைப் பார்க்கவும்.)
அரிக்கட்டுகளும் களஞ்சியங்களும் என்றால் என்ன?
அறுவடைக் காலத்தில் பெரும்பாலும் அரிக்கட்டுகள் என அழைக்கப்படுகிற கட்டுக்களாக தானியங்கள் சேகரிக்கப்பட்டு, சிலநேரங்களில் களஞ்சியங்கள் என அழைக்கப்படுகிற பண்டகசாலைகளில் வைக்கப்படுகின்றன. ஆல்மா26:5லிலுள்ள அடையாளங்களின் ஒரு சாத்தியமான விளக்கத்தை மூப்பர் டேவிட் எ. பெட்னார் பகிர்ந்துகொண்டார்: இந்த உவமையிலுள்ள அரிக்கட்டுகள் சபையில் புதிதாக ஞானஸ்நானம் பெற்ற அங்கத்தினர்களைப் பிரதிபலிக்கிறது. களஞ்சியங்கள் பரிசுத்த ஆலயங்களாயிருக்கின்றன” (“Honorably Hold a Name and Standing,” Ensign or Liahona, May 2009, 97). ஆலய உடன்படிக்கைகளின் முக்கியத்துவத்தைப்பற்றி ஆல்மா 26:5–7லிலுள்ள உவமை உங்களுக்கு என்ன போதிக்கிறதென்பதை கருத்தில்கொள்ளவும்.
குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.
ஆல்மா 24:6–19
அந்தி–நேபி–லேகியர் ஏன் தங்களுடைய ஆயுதங்களை “பூமியின் ஆழத்திலே” புதைத்தார்கள்? (ஆல்மா 24:16). அவர்கள் மேற்கொள்ள அல்லது கைவிட விரும்புகிற காரியங்களை காகிதத் துண்டுகளில் எழுத குடும்ப அங்கத்தினர்கள் மகிழலாம். பின்னர் அவர்கள் ஒரு குழியைத் தோண்டி அதில் காகிதங்களை புதைக்கலாம்.
ஆல்மா 24:7–12.
மனந்திரும்புதலின் அற்புதமான வரத்தை புரிந்துகொள்ள இந்த வசனங்களை படித்தல் உங்கள் குடும்பத்திற்கு உதவமுடியும். தங்களுடைய பாவங்களுக்காக மனந்திரும்ப அந்தி–நேபி–லேகியர் என்ன செய்தார்கள்? மனந்திரும்ப கர்த்தர் எவ்வாறு அவர்களுக்கு உதவினார்? இந்த எடுத்துக்காட்டிலிருந்து நம்மால் எதைக் கற்றுக்கொள்ள முடியும்?
ஆல்மா 24:20–27
மார்மனின் பிரகடனத்தின் சத்தியத்தை சாட்சியளிக்கிற எதை நாம் காண்கிறோம்: “இப்படியாக. கர்த்தர் தமது ஜனத்தின் இரட்சிப்புக்கென்று அநேக வழிகளில் கிரியை செய்வதைக் காண்கிறோம்”? (ஆல்மா 24:27).
ஆல்மா 26:2
ஆல்மா 6:2ல் அம்மோனின் கேள்விகளுக்கு உங்கள் குடும்பம் எவ்வாறு பதிலளிப்பார்கள்? ஒருவேளை ஒரு நீண்ட காகிதத்தில் அவர்களுடைய பதில்களின் பட்டியலை நீங்கள் உருவாக்கி அதை எல்லோரும் பார்க்கக்கூடிய இடத்தில் தொங்கவிடலாம். “நம்மீது தேவன் அருளியிருக்கிற” பிற ஆசீர்வாதங்களை அவர்கள் சிந்திக்கும்போது அதை அதில் சேர்த்துக்கொள்ள குடும்பத்தினரை ஊக்குவிக்கவும்.
ஆல்மா 29:9
தேவனுடைய கரங்களில் அம்மோனும் ஆல்மாவும் எவ்வாறு கருவிகளாயிருந்தனர்? உங்கள் வீட்டில் உபகரணங்கள் அல்லது கருவிகளைத் தேடி, அவைகள் ஒவ்வொன்றும் உங்கள் குடும்பத்திற்கு எவ்வாறு உதவிகரமாயிருக்கிறதென்பதைப்பற்றி கலந்துரையாடுவதைக் கருத்தில்கொள்ளவும். நாம் ஒவ்வொருவரும் ”தேவனுடைய கரங்களில் ஒரு கருவியாயிருக்க” முடியுமென்பதைப் புரிந்துகொள்ள இது எவ்வாறு நமக்குதவியாயிருக்க முடியும்?
பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு. பார்க்கவும்