“ஜூலை 13–19 ஆல்மா 32–35: ‘இந்த வார்த்தையை உங்கள் இருதயங்களில் வையுங்கள்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)
“ஜூலை 13–19. ஆல்மா 32–35,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020
ஜூலை 13–19
ஆல்மா 32–35
“இந்த வார்த்தையை உங்கள் இருதயங்களில் வையுங்கள்”
ஆல்மா 32– 35ஐ நீங்கள் படிக்கும்போது பெறுகிற ஆவிக்குரிய உணர்வுகளை பதிவு செய்யுங்கள். நீங்கள் கற்றுக்கொள்வதினிமித்தம் என்ன செய்ய உணர்த்தப்பட்டதாக உணருகிறீர்கள்?
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
வாரம் ஒருமுறை மட்டும் நிகழும் தன்னை மையப்படுத்தும் வழக்கமான செயலாக சோரமியருக்கு, ஜெபமிருந்தது. அனைவரும் பார்க்கும் இடத்தில் நின்றுகொண்டு, சுய திருப்தியாக்கும் வார்த்தைகளை வீணாக திரும்பத் திரும்ப சொல்வதை, அது கொண்டிருந்தது. சோரமியர் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் குறைந்திருந்து அவர் இருப்பதையே மறுதலித்தனர், வறியோரை துன்புறுத்தினர் என்பது ஒருவேளை மோசமானது (ஆல்மா 31:9–25 பார்க்கவும்). மாறாக, ஜெபமென்பது, பொது மேடையைவிட நமது இருதயத்தில் நடப்பதுடன் அதிக தொடர்புடையது என ஆல்மாவும் அமுலேக்கும் தைரியமாக போதித்தனர். மேலும் தேவையிலிருப்போரை நோக்கி அது மனதுருக்கத்துக்கு வழிநடத்தாவிட்டால், அது “வீணாய்ப் போகும், யாதொரு பலனையும் ஈயாது” (ஆல்மா 34:28). அவருடைய “அநாதியும் நித்தியமுமான பலி” மூலம் மீட்பு கொடுக்கிற இது இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தின் வெளிப்பாடு என்பது மிக முக்கியம், (ஆல்மா 34:10). அப்படிப்பட்ட விசுவாசம், தாழ்மையாலும், “விசுவாசிக்க வாஞ்சிப்பதாலும்” பிறக்கிறது என ஆல்மா விளக்கினான்.(ஆல்மா 32:27) இது ஒரு மரம் போல மெதுவாக வளர்கிறது, இதற்கு தொடர்ந்த போஷிப்பு தேவைப்படுகிறது. ஆல்மா 32–35 ஐ நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் உங்கள் சொந்த விசுவாசத்தையும் ஜெபத்தையும் கருத்தில் கொள்ளக்கூடும், சோரமியர் போன்ற மனோபாவம் நுழைவதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? “நித்திய ஜீவகாலமாய் வளர்கிற விருச்சமாய்” அது ஆகும்படிக்கு, நீங்கள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை எப்படி போஷிப்பீர்கள்?(ஆல்மா 32:41).
தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்
நான் தாழ்மையாயிருக்க தேர்ந்தெடுக்கலாம்.
ஏழையான சோரமியர் தாழ்மையாக இருந்தனர் மற்றும் “வசனத்தைக் கேட்க ஆயத்தமாய் இருப்பதையும்” ஆல்மா யூகித்தான்(ஆல்மா 32:6). ஆல்மா 32:1–16 நீங்கள் வாசிக்கும்போது, தேவ வார்த்தையை கேட்க நீங்கள் எப்படி ஆயத்தப்படலாம் என்பதைப்பற்றி சிந்தியுங்கள்.
எந்த அனுபவங்கள் உங்களை தாழ்மையடையச் செய்திருக்கிறது? அதிக தாழ்மையடைய நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? தாழ்மையாய் இருக்க கட்டாயப்படுத்தப்படுவதை விட தாழ்மையை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என இந்த வசனங்கள் உங்களுக்குப் போதிக்க முடியும். உதாரணமாக, “உலகத்திற்கேற்ற காரியங்களில் எளிமையாய்” இருப்பதற்கும், “இருதயத்தில் எளிமையாய்” இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?(வசனம் 3). “வசனத்தின் பேரில் [உங்களைத்] தாழ்த்துதல்” என்றால் என்ன?(வசனம் 14).
“Humility,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.
என் இருதயத்தில் அவரது வார்த்தையை ஊன்றி, போஷிப்பதால் நான் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை பிரயோகிக்கிறேன்.
ஆராதனையைப்பற்றிய சோரமியரின் கேள்விகளுக்கு பதிலாக விதையை ஊன்றுவதைப்பற்றி ஆல்மா பேசினான் என ஏன் நினைக்கிறீர்கள்? ஆல்மா பேசிய விதை எது?(ஆல்மா 32:28; 33:22–23 பார்க்கவும்). ஆல்மா 32:17–43 வாசிக்கும்போது, இயேசு கிறிஸ்து மற்றும் அவரது வார்த்தையில் விசுவாசத்தை எப்படி பிரயோகிப்பது என நீங்கள் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவக்கூடிய வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கவனிக்கவும். விசுவாசம் எது, விசுவாசம் இல்லாததெது என்பதைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்? பின்பு அதிகாரங்கள் 33–34 நீங்கள் வாசிக்கும்போது, நாம் எவ்வாறு வார்த்தையை ஊன்றுகிறோம் என்ற சோரமியரின் கேள்விக்கு பதிலைத் தேடவும்.(ஆல்மா 33:1).
ஆல்மா 32–34 ஐ படிக்க இன்னொரு விதம் இங்கிருக்கிறது. விதையின் வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளைக் குறிப்பிட படங்கள் வரையவும். பின் உங்கள் இருதயங்களில் வார்த்தையை எப்படி ஊன்றுவது மற்றும் போஷிப்பது என புரிந்துகொள்ள உதவுகிற ஆல்மா 32:28–43ன் வார்த்தைகளிலிருந்து ஒவ்வொரு படத்தையும் குறியிடவும்.
மத்தேயு 13:3–8, 18–23; எபிரெயர் 11; Neil L. Andersen, “Faith Is Not by Chance, but by Choice,” Ensign or Liahona, Nov. 2015, 65–68; “Faith in Jesus Christ,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்
எந்த நேரத்திலும் எங்கும் ஜெபத்தில் நான் தேவனை ஆராதிக்க முடியும்.
ஆராதனை மற்றும் ஜெபத்தைப்பற்றிய ஆல்மா மற்றும் அமுலேக்கின் ஆலோசனை சோரமியர் கொண்டிருந்த குறிப்பிட்ட தவறான புரிதல்களை சரிசெய்யவே.(ஆல்மா 31:13–23 பார்க்கவும்). ஆனால் அவர்கள் போதித்த சத்தியங்கள் நம்மில் எவருக்கும் ஜெபம் மற்றும் ஆராதனையைப்பற்றி புரிந்துகொள்ள உதவ முடியும். ஆல்மா 33:2–11 மற்றும் 34:17–29ல் நீங்கள் காண்கிற ஜெபத்தைப்பற்றிய சத்தியங்களின் பட்டியலை நீங்கள் உருவாக்க முடியும். அந்த பட்டியலை அடுத்து, இந்த சத்தியங்கள் சரிப்படுத்துகிற ஜெபத்தைப்பற்றிய சாத்தியமான தவறான எண்ணங்களை பட்டியலிடவும்(ஆல்மா 31:12–23 பார்க்கவும்). இந்த வசனங்களிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்பவை எவ்வாறு நீங்கள் ஜெபிக்கிற மற்றும் ஆராதிக்கிற விதத்தை பாதிக்கும்?
சீனஸும் சீனோக்கும் யார்?
சீனஸும் சீனோக்கும் பழைய ஏற்பாட்டு காலத்தில் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சியளித்த தீர்க்கதரிசிகள், ஆனால் அவர்களது போதனைகள் பழைய ஏற்பாட்டில் காணப்படவில்லை. இந்த தீர்க்கதரிசிகளின் போதனைகள் நேபிக்கு கிடைத்தன, ஒருவேளை நேபி லாபானிடமிருந்து பெற்ற பித்தளைத் தகடுகளில் அவை சேர்க்கப்பட்டிருக்கலாம். 1 நேபி 19:10–12; யாக்கோபு 5:1; மற்றும் ஏலமன் 8:19–20லும் அவர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
“இந்த ஜீவியம் மனுஷனுக்கு, தேவனைச் சந்திக்க ஆயத்தப்படும் ஒரு காலமாயிருக்கிறது.”
ஆல்மா 34:30–41 நீங்கள் வாசிக்கும்போது, எப்படி இந்த ஜீவியத்தில் [உங்களுடைய] காலத்தை மேம்படுத்தலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவும் (வசனம் 33). மனந்திரும்புதலும் பொறுமையும் தேவனை சந்திக்க ஆயத்தப்பட உங்களுக்கு எப்படி உதவ முடியும்? நீங்கள் தள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிற, நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள் எவையாவது இருக்கின்றனவா? நீங்கள் பெறுகிற எந்த ஆவிக்குரிய உணர்த்துதல்படியும் செயல்பட உறுதியாயிருங்கள்.
ஆல்மா 12:24; Larry R. Lawrence, “What Lack I Yet? பார்க்கவும்” Ensign or Liahona, Nov. 2015, 33–35.
குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.
ஆல்மா 32:9–11; 33:2–11; 34:38–39
ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் ஆராதிக்கவும் ஜெபிக்கவும் நீங்கள் அனுமதிக்கப்பட்டால், அது எப்படியிருக்கும்? நீங்கள் ஒன்றுசேர்ந்து இந்த வசனங்களை வாசிக்கும்போது, அவர்கள் தினமும் எப்படி ஆராதிக்கலாம் மற்றும் அவர்களால் இயல்வதற்கு ஏன் நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள் என குடும்ப அங்கத்தினர்கள் கலந்துரையாடலாம்.
ஆல்மா 32:28–43
இக்குறிப்புடன் ஒரு மரத்தின் படம் வருகிறது, இந்த வசனங்களிலுள்ள வார்த்தைகளை விளக்க நீங்கள் இதை பயன்படுத்தக்கூடும். அல்லது உங்கள் குடும்பம் செடியின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளை காண ஒரு நடை செல்லலாம் மற்றும் ஆல்மா 32 லிருந்து வளரும் செடியுடன் நமது விசுவாசத்தை ஒப்பிடுகிற வசனங்களை வாசிக்கலாம். ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் ஒரு விதையை ஊன்றலாம் மற்றும் அது வளர உதவ நாம் செய்யக்கூடியவற்றை கலந்துரையாடலாம். வரும் வாரங்களில் நீங்கள் உங்கள் விதைகளை சோதித்து, நமது சாட்சிகளைத் தொடர்ந்து போஷிக்க வேண்டிய அவசியத்தை ஒருவருக்கொருவர் நினைவூட்டலாம்.
ஆல்மா 33:2–11; 34:17–29
நமது தனிப்பட்ட மற்றும் குடும்ப ஜெங்களை நாம் எப்படி மேம்படுத்தலாம் என்பதைப்பற்றி இந்த வசனங்கள் என்ன ஆலோசனையளிக்கின்றன?
ஆல்மா 34:31
நாம் மனந்திரும்பும்போது, நாம் “உடனேயே” மீட்பின் திட்டத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கத் தொடங்குகிறோம் என எந்த அனுபவங்கள் நமக்குக் காட்டியிருக்கின்றன?
ஆல்மா 34:33–35.
தள்ளிப்போடுதல் என்றால் என்ன என உங்கள் குடும்பத்தினர் அறிந்திருக்கிறார்களா? ஒருவர் தள்ளிப்போடுதலின் எடுத்துக்காட்டுகள் மற்றும் அதன் எதிர்மறை விளைவுகளை பகிரலாம். “[நமது] மனந்திரும்புதலின் நாளை தள்ளிப்போடுதல்” என்றால் என்ன?
பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு. பார்க்கவும்