என்னைப் பின்பற்றி வாருங்கள்
செப்டம்பர் 28–அக்டோபர் 11. 3 நேபி 17–19: “இதோ, என் சந்தோஷம் பூரணமாயிருக்கிறது”


“செப்டம்பர் 28– அக்டோபர் 11. 3 நேபி 17–19: ‘இதோ, என் சந்தோஷம் பூரணமாயிருக்கிறது’” என்னைப் பின்பற்றி வாருங்கள்--- தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“செப்டம்பர் 28–அக்டோபர் 11. 3 நேபி 17–19,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

இயேசு நேபியருக்கு தரிசனமாகுதல்

அவருடைய முகரூபத்தின் ஒளி அவர்கள் மேல் பிரகாசித்தது-காரி எல். காப்

செப்டம்பர் 28–அக்டோபர் 11

3 நேபி 17–19

“இதோ, என் சந்தோஷம் பூரணமாயிருக்கிறது”

3 நேபியிலுள்ள முந்திய அதிகாரங்கள் முக்கியமாக இரட்சகரின் வார்த்தைகளில் கவனம் செலுத்தியபோது, அதிகாரங்கள் 17–19 ஜனங்களுக்கு மத்தியில் அவரது ஊழியத்தையும் போதனைகளையும் விவரிக்கின்றன. இந்த அதிகாரங்களை நீங்கள் வாசிக்கும்போது, இரட்சகரைப்பற்றி ஆவியானவர் உங்களுக்கு என்ன போதிக்கிறார்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

தன் சுவிசேஷத்தைப் போதித்து, அவரது உயிர்த்தெழுந்த சரீரத்திலிருந்த தழும்புகளைப் பார்க்கவும் உணரவும் ஜனங்களுக்கு சந்தர்ப்பம் அளித்து, அவரே வாக்குத்தத்தம் செய்யப்பட்ட இரட்சகர் என சாட்சியளித்து, உதாரத்துவ ஸ்தலத்தில் ஊழியம் செய்து இயேசு கிறிஸ்து அந்த நாளைக் கழித்திருந்தார். இப்போது இது அவர் விட்டுச் செல்வதற்கான நேரம். அவர் தன் பிதாவினிடத்துக்குத் திரும்ப வேண்டும், மற்றும் அவர் போதித்தவற்றை சிந்திக்க ஜனங்களுக்கு நேரம் தேவை என அவர் அறிவார். ஆகவே மறுநாள் திரும்ப வருவதாக வாக்களித்து, திரளானோரை தங்கள் வீடுகளுக்கு அவர் அனுப்பினார். ஆனால் ஒருவரும் போகவில்லை. தாங்கள் உணர்ந்ததை அவர்கள் சொல்லவில்லை, ஆனால் இயேசு அதை உணர முடிந்தது: அவர் “தங்களோடு சற்று அதிகமாய்த் தங்குவார்” என அவர்கள் நம்பினர். (3 நேபி 17:5). செய்ய வேண்டிய பிற முக்கிய காரியங்கள் அவருக்கிருந்தன, ஆனால் மனதுருக்கம் தெரிவிக்கும் சந்தர்ப்பம் எப்போதும் வசதியான நேரத்தில் வருவதில்லை, ஆகவே சிறிது நீண்ட நேரம் இயேசு அவர்களோடு தங்கினார். அதை தொடர்ந்து வந்தது, ஒருவேளை வேதத்தில் பதிவுசெய்யப்பட்ட ஊழியம் செய்தலின் மிக மென்மையான எடுத்துக்காட்டாய் இருந்தது. அங்கிருந்தவர்களால், விவரிக்க முடியாதது என மட்டுமே சொல்ல முடிந்தது (3 நேபி 17:16–17 பார்க்கவும்). இயேசு தாமே இந்த எளிய வார்த்தைகளில், இந்த வழக்கமில்லாத ஆவியின் பொழிவை சுருக்கிச் சொன்னார்: “இதோ, என் சந்தோஷம் பூரணமாயிருக்கிறது” (3 நேபி 17:20).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்பிற்கான ஆலோசனைகள்

3 நேபி 17

ஊழியம் செய்தலுக்கு இரட்சகர் எனது பரிபூரண எடுத்துக்காட்டு.

அங்கு 2500 ஜனங்கள் இருந்தார்கள் என நாம் அறிகிறோம்(3 நேபி 17:25 பார்க்கவும்), அவர்கள் 3 நேபி 11–18ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, கிறிஸ்துவின் முதல் வருகையை அனுபவித்தனர். இருப்பினும் ஒவ்வொருவராக அவர்களுக்கு ஊழியம் செய்யும் ஒரு வழியை இரட்சகர் கண்டு பிடித்தார். இந்த அதிகாரத்தில் இரட்சகரின் எடுத்துக்காட்டிலிருந்து, ஊழியம் செய்வதைப்பற்றி நீங்கள் என்ன கற்கிறீர்கள்? என்ன தேவைகளுக்காக அவர் ஊழியம் செய்தார்? பிறருக்கு ஊழியம் செய்ய அவரது எடுத்துக்காட்டு எவ்வாறு உங்களுக்கு உதவ முடியும் என சிந்தியுங்கள்.

இயேசு நேபிய பிள்ளைகளை ஆசீர்வதித்தல்

உங்கள் சிறு பிள்ளைகளைப் பாருங்கள்–காரி எல். காப்

3 நேபி17:13–22; 18:15–25; 19:6–9, 15–36

எப்படி ஜெபிப்பது என இரட்சகர் நமக்கு போதித்தார்.

உங்களுக்காக இரட்சகர் ஜெபிப்பதைக் கேட்பது எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். உங்கள் சார்பில் அவர் என்ன சொல்லக்கூடும்? இந்த அதிகாரங்களிலுள்ள அவரது போதனைகளும் ஜெபங்களும் உங்களுக்கு ஒரு ஆலோசனையை வழங்கலாம். நீங்கள் படிக்கும்போது, உங்கள் ஜெபங்களை அதிக அர்த்தமுள்ளதாக்கக் கூடிய கிறிஸ்துவின் எடுத்துக்காட்டிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் ஜெபத்தினால் என்ன ஆசீர்வாதங்களைப் பார்த்திருக்கிறீர்கள்?

3 நேபி 18:1–12.

நான் திருவிருந்தில் பங்கேற்கும்போது, நான் ஆவிக்குரிய விதமாக நிரப்பப்பட முடியும்.

3 நேபி18:1–12 நீங்கள் வாசிக்கும்போது, திருவிருந்து எடுத்துக்கொள்வது, எப்படி ஆவிக்குரிய பிரகாரமாக “நிரப்பப்பட” உங்களுக்கு உதவ முடியும் என சிந்திக்கவும் (3 நேபி 18:3–5, 9; 3 நேபி 20:1–9 ஐயும் பார்க்கவும்). உதாரணமாக, நீங்கள் திருவிருந்து எடுக்கும்போது, “இரட்சகரைப்பற்றியும், எனக்காக அவரது பலியைப்பற்றியும் நான் எப்படி உணர்கிறேன்,” என்பது போன்ற தனிப்பட்ட நினைவைத் தூண்டக்கூடிய கேள்விகளின் பட்டியலை நீங்கள் எழுதலாம். “அவரது பலி எப்படி நமது அன்றாட வாழ்க்கையில் செல்வாக்கு ஏற்படுத்துகிறது?” அல்லது “ஒரு சீஷனாக நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன், மற்றும் நான் எதை விருத்தி செய்ய முடியும்?”

தலைவர் ஹென்றி பி. ஐரிங்கின் இந்த வார்த்தைகள் நீங்கள் ஆவிக்குரிய பிரகாரமாக நிரப்பப்பட திருவிருந்து உதவக்கூடிய ஒரு வழியை சிந்திக்க உங்களுக்கு உதவும்: “திருவிருந்து நியமத்தின்போது, நீங்கள் உங்கள் வாழ்க்கையைப்பற்றி சிந்திக்கும்போது, நீங்கள் தவறாக செய்தவற்றில் மட்டும் உங்கள் எண்ணங்கள் நிற்காமல், நீங்கள் சரியாக செய்தவற்றிலும், பரலோக பிதாவும் இரட்சகரும் உங்களைக் குறித்து மகிழ்ந்ததை நீங்கள் உணர்ந்த தருணங்களிலும் இருக்கும். திருவிருந்தின்போது, இவற்றைப் பார்க்க உங்களுக்கு உதவ தேவனைக் கேட்க நீங்கள் ஒரு கணம் எடுத்துக்கொள்ளலாம். … நான் இதைச் செய்தபோது, பரிபூரணத்திலிருந்து நான் தூரத்திலிருக்கும்போதும், நேற்றைவிட இன்று சிறப்பாக இருக்கிறேன் என ஆவியானவர் எனக்கு உறுதியளித்திருக்கிறார். இரட்சகரினிமித்தம் நாளை நான் இன்னும் சிறப்பாக இருக்க முடியும் என இது எனக்கு தன்னம்பிக்கையளிக்கிறது” (“Always Remember Him,” Ensign, Feb. 2018, 5).

3 நேபி 18:36–37; 19:6–22

இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் பரிசுத்த ஆவியின் வரத்தை நாடுகிறார்கள்.

நீங்கள் அண்மையில் சொன்ன ஜெபத்தைப்பற்றி சிந்திக்கவும். உங்கள் ஆழமான வாஞ்சைகளைப்பற்றி, உங்கள் ஜெபங்கள் உங்களுக்கு போதிப்பது என்ன? இரட்சகரின் சமூகத்தில் ஒரு நாளைக் கழித்தபின், திரளானோர் பரிசுத்த ஆவியானவரின் வரமாகிய “தாங்கள் மிகவும் வாஞ்சித்த காரியத்திற்காக ஜெபித்தார்கள்” (3 நேபி 19:9). இந்த பாகங்களை வாசித்தபின்பு, பரிசுத்த ஆவியின் தோழமைக்காக உங்கள் சொந்த வாஞ்சையைப்பற்றி சிந்தியுங்கள். பரிசுத்த ஆவியானவரின் தோழமையை நாடுவதைப்பற்றி நீங்கள் என்ன கற்கிறீர்கள்?

குடும்ப வேத படிப்பு

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

3 நேபி 17

குடும்பமாக இந்த அதிகாரத்தை நீங்கள் வாசிக்கும்போது, இந்த நிகழ்வுகளை அனுபவிப்பதாக கற்பனை செய்ய குடும்பத்தை அழைக்க அவ்வப்போது இடைவெளி விடுவதை கருத்தில் கொள்ளவும். உதாரணத்துக்கு,”குணமாக்கப்பட நீங்கள் இரட்சகரிடம் எந்த உபத்திரவங்களை கொண்டு வருவீர்கள்,” போன்ற கேள்விகளை நீங்கள் கேட்கலாம்? “உங்களுக்காக அவர் எதைக்குறித்து ஜெபிக்க வேண்டும் என விரும்புவீர்கள்?” அல்லது “நீங்கள் நேசிக்கும் யாரை அவர் ஆசீர்வதிக்க வேண்டும் என விரும்புவீர்கள்?” இந்த அதிகாரத்தை வாசிப்பது, உங்கள் குடும்ப அங்கத்தினர், ஒவ்வொருவருக்காக, இயேசு செய்ததைப்போல ஜெபிக்க உங்களுக்கு உணர்த்தலாம்.

3 நேபி 18:1–12.

திருவிருந்தில் “பங்கேற்று” நிரப்பப்படுதல் என்றால் என்ன, நாம் அதை எப்படி அனுபவிக்கிறோம்? திருவிருந்து நியமத்தை இயேசு நமக்கு ஏன் கொடுத்தார் என்பதைப்பற்றி வசனங்கள் 5–7லிருந்து நாம் என்ன கற்கிறோம்?

3 நேபி 18:17–21

ஜெபத்தின் நோக்கங்களைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? தனிநபர்களாகவும், குடும்பமாகவும், நமது ஜெபங்களின் ஆவிக்குரிய வல்லமையை நாம் எப்படி அதிகரிக்க முடியும்?

3 நேபி 18:25–13; 19:1–3

நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் கூட அனுபவிக்க வேண்டும் என நாம் விரும்புகிற சுவிசேஷத்தின் மூலம் நம் குடும்பம் என்ன அனுபவித்திருக்கிறது? இந்த வசனங்களில் காணப்படுகிற ஜனங்களின் எடுத்துக்காட்டை நாம் எவ்வாறு பின்பற்ற முடியும், சுவிசேஷத்தில் நாம் கண்டவற்றை அவர்கள் “உணர்ந்து காணும்படியாக” (3 நேபி 18:25), பிறரை கிறிஸ்துவிடம் கொண்டுவர “மிகவும் பிரயாசப்பட” முடியும்?(3 நேபி 19:3)

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், —ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உங்கள் படிப்பை ஆவியானவர் வழிநடத்துவாராக. ஒவ்வொரு நாளும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்களை நோக்கி பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துவார். நீங்கள் வழக்கமாக செய்வதைவிட வித்தியாசமான தலைப்பை வாசிக்க அல்லது படிக்க அவை ஆலோசனையளித்தாலும் கூட, அவரது தூண்டுதல்களுக்கு உணர்வுபூர்வமாயிருங்கள். உதாரணமாக, 3 நேபி18ல், திருவிருந்தைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் திட்டமிட்டதை விட அந்த தலைப்பில் அதிக நேரம் செலவிட ஆவி உங்களைத் தூண்டலாம்.

இயேசுவையும் நேபிய பிள்ளைகளையும் தூதர்கள் சூழ்தல்

அவர்கள் பரலோகங்கள் திறக்கக் கண்டார்கள்–வால்ட்டர் ரானே