“அக்டோபர் 19–25. 3 நேபி 27–4 நேபி, ‘இவர்களைக் காட்டிலும் மகிழ்ச்சியான ஜனம் இருந்திருக்க முடியாது’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)
“அக்டோபர் 19–25. 3 நேபி 27–4 நேபி,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020
அக்டோபர் 19–25
3 நேபி 27–4 நேபி
“இவர்களைக் காட்டிலும் மகிழ்ச்சியான ஜனம் இருந்திருக்க முடியாது“
அவர்கள் அனுபவித்தவற்றை எழுதுமாறு தன் சீஷர்களுக்கு கர்த்தர் கட்டளையிட்டார் (3 நேபி 27:23–24 பார்க்கவும்). நீங்கள் படிக்கும்போது உங்களுக்கிருந்த ஆவிக்குரிய அனுபவங்களை எழுதவும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
இயேசு கிறிஸ்துவின் போதனைகள் சிந்திக்க அழகிய தத்துவம் மட்டுமல்ல. அதைவிட அவைகள் அதிகமானவை, அவை நமது வாழ்க்கையை மாற்றுவதற்கானவை. 4 நேபி புஸ்தகம் இரட்சகரின் சுவிசேஷம் எவ்வாறு முற்றிலுமாக ஒரு ஜனத்தை மாற்ற முடியும் என விளக்குகிற அதிர்ச்சியான எடுத்துக்காட்டைக் கொடுக்கிறது. இயேசுவின் கொஞ்ச நாள் ஊழியத்தைத் தொடர்ந்து, நேபியருக்கும் லாமானியருக்குமிடையிலான நூற்றாண்டுகளாயிருந்த பிணக்கு முடிவுக்கு வந்தது. மறுப்புக்கும் பெருமைக்கும் பெயர் வாய்ந்த இரு தேசங்கள் “கிறிஸ்துவின் பிள்ளைகளாகி ஒன்றாயிருந்தார்கள்,” (4 நேபி 1:17), “அவர்களுக்குள் எல்லாவற்றையும் பொதுவாக வைக்கத்” தொடங்கினர் (4 நேபி 1:3). “ஜனங்களுடைய இருதயங்களில் தேவ அன்பு … வாசமாயிருந்தது,” “தேவ கரத்தால் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்கள் யாவருக்குள்ளும் இவர்களைக் காட்டிலும் மகிழ்ச்சியான ஜனம் இருந்திருக்க முடியாது” (4 நேபி 1:15–16). இவ்வாறுதான் இரட்சகரின் போதனைகள் நேபியர்களையும் லாமானியர்களையும் மாற்றின. அவை உங்களை எவ்வாறு மாற்றுகின்றன?
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
இயேசு கிறிஸ்துவின் சபை அவரது நாமத்தில் அழைக்கப்படுகிறது.
தேசம் முழுவதும் அவரது சபையை இரட்சகரின் சீஷர்கள் ஸ்தாபிக்கத் தொடங்கியபோது, சபையின் பெயர் எதுவாக இருக்க வேண்டும், என சிலருக்கு ஒரு கேள்வி எழுந்தது சிறிய காரியமாக தோன்றலாம் (3 நேபி 27:1–3 பார்க்கவும்). 3 நேபி 27:4–12ல் இரட்சகரின் பதிலிலிருந்து இந்த பெயரின் முக்கியத்துவத்தைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? 1838ல் தன் சபையின் இன்றைய பெயரை கர்த்தர் வெளிப்படுத்தினார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 115:4 பார்க்கவும்). அந்தப் பெயரிலுள்ள ஒவ்வொரு வார்த்தையைப்பற்றியும் சிந்திக்கவும். நாம் யார், நாம் எதை நம்புகிறோம், நாம் எப்படி செயல்பட வேண்டும் என அறிய இந்த வார்த்தைகள் நமக்கு எப்படி உதவுகின்றன?
Russell M. Nelson, “The Correct Name of the Church,” Ensign or Liahona, Nov. 2018, 87–80; M. Russell Ballard, “The Importance of a Name,” Ensign or Liahona, Nov. 2011, 79–82 ஐயும் பார்க்கவும்.
என் வாஞ்சைகளை நான் தூய்மைப்படுத்தும்போது, நான் ஒரு மிக விசுவாசமிக்க சீஷனாகிறேன்.
“நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென வாஞ்சிக்கிறீர்கள்” என அவர் தன் சீஷர்களைக் கேட்டதைப்போல, இரட்சகர் உங்களிடம் கேட்டிருந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? (3 நேபி 28:1). இரட்சகரின் சீஷர்களின் அனுபவத்தைப்பற்றி 3 நேபி 28:1–11ல், நீங்கள் வாசிக்கும்போது இதைப்பற்றி சிந்தியுங்கள். இந்தக் கேள்விக்கு அவர்களுடைய பதில்களிலிருந்து சீஷர்களின் இருதயங்களின் வாஞ்சைகளைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதித்தார்: “நமது நித்திய இலக்கை அடைய, ஒரு நித்தியமானவராக ஆக தேவையான குணங்களுக்காக நாம் வாஞ்சித்து உழைப்போம். … [இயேசு கிறிஸ்து] போலாக நாம் வாஞ்சிப்போம்” (“Desire,” Ensign or Liahona, May 2011, 44–45). உங்கள் இருதயங்களின் வாஞ்சைகளை அதிக நீதியானதாக ஆக்க, நீங்கள் என்ன செய்ய முடியும்? (மூன்று சீஷர்களின் “சரீரங்களில் மாற்றம் வர வேண்டியதைப்பற்றிய” அதிக தகவல்களுக்காக 3 நேபி 28:37 மற்றும் “Translated Beings,” Guide to the Scriptures, scriptures.ChurchofJesusChrist.org பார்க்கவும்.)
இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிசேஷத்துக்கு மனமாற்றம், ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் வழிநடத்துகிறது.
இரட்சகரின் வருகையைத் தொடர்ந்த வருடங்களில் வாழ்வது எது போலிருந்திருக்கும் என உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? கிட்டத்தட்ட நீண்ட 200 வருடங்களாக இந்த தெய்வீக சமாதானத்தை ஜனங்கள் எவ்வாறு பராமரித்தார்கள்? நீங்கள் 4 நேபி 1:1–18 படிக்கும்போது, இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கும்படியாக ஜனங்கள் செய்த தேர்ந்தெடுப்புகளை செய்ய அல்லது குறிப்பெடுப்பதைக் கருத்தில் கொள்ளவும்.
4 நேபியிலுள்ள ஜனங்கள் செய்ததுபோல உங்கள் குடும்பம், தொகுதி, அல்லது சமுதாயம் மிகுந்த ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ, உதவ நீங்கள் என்ன செய்ய முடியும் என சிந்திக்கவும். இந்த இலக்கை அடையும்படிக்கு, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் எந்த போதனைகளில் முழுமையாக வாழ முடியும்? இந்த போதனைகளைப் புரிந்துகொண்டு வாழ பிறருக்கு உதவ நீங்கள் என்ன செய்ய முடியும்?
துன்மார்க்கம் பிரிவினைக்கும் துக்கத்துக்கும் வழிநடத்துகிறது.
துக்ககரமாக, 4 நேபி (மோசே 7:18 ஐயும் பார்க்கவும்) விவரிக்கப்பட்டுள்ள சீயோன் சமூகம் கடைசியாக வெளிவந்தது. நீங்கள் 4 நேபி 1:19–49 வாசிக்கும்போது, இந்த சமூகம் பிரியச் செய்த மனநிலைகளையும் நடத்தைகளையும் தேடவும். உங்களில் இந்த மனநிலைகள் அல்லது நடத்தைகளின் அடையாளங்கள் எதையாவது பார்க்கிறீர்களா?
“Chapter 18: Beware of Pride” (Teachings of Presidents of the Church: Ezra Taft Benson [2014], 229–40) ஐயும் பார்க்கவும்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.
3 நேபி 27:13–21
அவர் “என் சுவிசேஷம்” என குறிப்பிட்டபோது, இரட்சகர் சொன்னதை நன்கு புரிந்துகொள்ள இந்த வசனங்கள் உதவக்கூடும். இந்த வசனங்களை வாசித்து கலந்துரையாடிய பிறகு, சுவிசேஷம் என்பது என்ன என சுருக்கிச் சொல்ல நீங்கள் ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரையும் கேட்கலாம்.
3 நேபி 27:23–26
தனியாக அல்லது குடும்பமாக நாம் “பார்த்த, கேட்டவற்றைப்” பதிவு செய்வதில் நாம் எவ்வாறிருக்கிறோம்? ஆவிக்குரிய காரியங்களைப்பற்றி ஒரு பதிவேட்டை பாதுகாப்பது ஏன் முக்கியமாக இருக்கிறது?
3 நேபி 27:30–31
இந்த வசனங்களில் இரட்சகர் விவரித்த சந்தோஷத்தை குடும்ப அங்கத்தினர்கள் புரிந்துகொள்ள உதவ, குடும்ப அங்கத்தினர்கள் ஒளிந்துகொண்டு, மற்றொரு குடும்ப அங்கத்தினர் கண்டுபிடிக்கும் விளையாட்டை நீங்கள் விளையாட முடியும். “அவர்களில் ஒருவரும் தொலைந்து போகாதபடி,” ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரையும் கண்டுபிடிப்பது எவ்வளவு முக்கியம் என்ற ஒரு கலந்துரையாடலுக்கு இது வழிநடத்தலாம். நமது குடும்ப அங்கத்தினர்கள் சுவிசேஷத்தில் நிலைத்திருக்க அல்லது அவர்கள் விலகியிருந்தால் திரும்ப வர நாம் எவ்விதம் உதவ முடியும்?
3 நேபி 28:17–18, 36-40
மூன்று நேபிய சீஷர்களுக்கு ஏற்பட்ட மாற்றத்தைப்பற்றி அவன் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளாதபோது, மார்மனின் எடுத்துக்காட்டிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்? சுவிசேஷக் கொள்கையைப்பற்றி எல்லாவற்றையும் நாம் புரிந்துகொள்ளாதபோது, நாம் என்ன செய்ய முடியும்? தலைவர் டியட்டர் எப். உக்டர்ப் போதித்தார், “தேவன் உங்களைக் கவனிக்கிறார். அவர் செவிகொடுப்பார், உங்கள் தனிப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார், அவரது சொந்த வழியில், அவரது சொந்த நேரத்தில், உங்கள் ஜெபங்களுக்கான பதில்கள் வரும், ஆகவே, அவரது குரலுக்கு செவிகொடுக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” (“Receiving a Testimony of Light and Truth,” Ensign or Liahona, Nov. 2014, 21).
4 நேபி 1:15
உங்கள் வீட்டில் பிணக்கைக் குறைக்க இந்த வாரத்தில் ஒருவருக்கொருவரிடம் அதிக அன்புடனிருக்க ஒருவேளை குடும்ப அங்கத்தினர்கள் ஒரு இலக்கை ஏற்படுத்தலாம். இந்த வாரம் முடிந்த பிறகு, உங்கள் முன்னேற்றத்தை ஒன்றாக பரிசீலித்து, அதிக அன்பு செலுத்துவது உங்கள் குடும்பத்தை எவ்வாறு பாதித்திருக்கிறது என கலந்துரையாடவும்.
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.