“டிசம்பர் 7–13. மரோனி 7–9: ‘கிறிஸ்து உங்களை உயர்த்துவாராக’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)
“டிசம்பர் 7–13. மரோனி 7–9,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020
டிசம்பர் 7–13
மரோனி 7–9
“கிறிஸ்து உங்களை உயர்த்துவாராக”
மரோனி 7–9 நீங்கள் வாசிக்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதல்களுக்குச் செவிகொடுத்து, உங்களுக்கு அவரது செய்திகளை பதிவுசெய்யுங்கள். நீங்கள் அறிய வேண்டியவைகளையும், நீங்கள் செய்ய வேண்டியவைகளையும் அவர் உங்களுக்கு போதிக்க முடியும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
இன்று நாம் மார்மன் புஸ்தகம் என அறிகிற பதிவேட்டை மரோனி முடிப்பதற்கு முன், தன் சொந்த கடைசி வார்த்தைகளுடன், தன் தகப்பனாகிய மார்மனிடமிருந்து பெற்ற மூன்று செய்திகளை அவன் பகிர்ந்தான்: “சமாதானமுள்ள கிறிஸ்துவைப் பின்பற்றுவோருக்கு” (மரோனி 7:3) ஒரு செய்தியும், மற்றும் மரோனிக்கு மார்மன் எழுதிய இரு நிருபங்களும். அவனது நாள் மற்றும் நமது நாளுக்கு இடையே இருந்த அழிவுகளின் ஒற்றுமைகளை அவன் பார்த்ததினிமித்தம், மார்மன் புஸ்தகத்தில் இச்செய்திகளை ஒருவேளை மார்மன் சேர்த்திருக்கலாம். இந்த வார்த்தைகள் எழுதப்பட்டபோது, நேபிய ஜனம் முழுவதுமாக மதமாறுபாட்டுக்குள் தலைகீழாக விழுந்து கொண்டிருந்தது. அவர்களில் அநேகர் “ஒருவருக்கொருவர் மீதான அன்பை அவர்கள் இழந்தனர்” மற்றும் “நன்மையைத் தவிர மற்றனைத்திலும் பிரியப்பட்டிருந்தனர்” (மரோனி 9:5, 19). இருப்பினும் மார்மன் நம்பிக்கை என்பது உலகப்பிரகார பிரச்சினைகளை உதாசீனம் செய்வது அல்லது அவைகளை உணராமலிருப்பது என்பதாகாது என எங்களுக்குப் போதித்து, நம்பிக்கைக்கான காரணத்தைக் கண்டான். அதாவது அந்த பிரச்சினைகளைவிட மிகவும் நீடித்த மகத்தான வல்லமையுள்ள பரலோக பிதாவிலும் இயேசு கிறிஸ்துவிலும் விசுவாசம் வைப்பதாகும். அதாவது “எல்லா நன்மைகளையும் ஏற்றுக்கொள்வதாகும்” (மரோனி 7:19). அதாவது இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியை அனுமதித்து, “அவரது மகிமை, நித்திய ஜீவன் ஆகியவற்றில் நம்பிக்கை உன் மனதில் நிலைபெறுவதாகும்” (மரோனி 9:25). கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் மகிமையான நாள் வரைக்கும், அதாவது “எல்லா நீதிக்கும் சத்துருவானவனை மேற்கொள்ள … நாம் செய்ய வேண்டிய வேலையை ஒருபோதும் நிறுத்தாமலிருப்பது” (மரோனி 9:6).
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
கிறிஸ்துவின் ஒளி நன்மை தீமைக்கிடையே தீர்மானிக்க எனக்கு உதவுகிறது.
இன்றைய உலகம் செல்வாக்கு மிக்க செய்திகள் நிறைந்தது; எது சரி எது தவறு என நாம் எப்படிச் சொல்ல முடியும்? மரோனி 7ல் உள்ள மார்மனின் வார்த்தைகள், “தவறாக நிதானிப்பதை” தவிர்க்க நாம் பயன்படுத்தக்கூடிய பல கொள்கைகளை நமக்குக் கொடுக்கிறது (மரோனி 7:18). நீங்கள் மரோனி 7:12–20படித்து, தேவனுக்கு நெருக்கமாக எது கொண்டு வரும், எது கொண்டுவராது என அறிய உங்களுக்கு உதவக்கூடிய சத்தியங்களைத் தேடுங்கள். நீங்கள் எதிர்கொள்கிற செய்திகளையும் இந்த வாரத்தில் நீங்கள் பெறும் அனுபவங்களையும் மதிப்பீடு செய்யவும், நீங்கள் நன்மை செய்ய அவை உங்களைத் தூண்டுகிறதா இல்லையா என தீர்மானிக்கவும் இந்த சத்தியங்களை நீங்கள் பயன்படுத்தலாம் (மரோனி 7:13 பார்க்கவும்).
“Judging Others,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.org; Bible Dictionary, “Light of Christ ஐயும் பார்க்கவும்.”
கிறிஸ்துவில் விசுவாசத்தின் மூலம், நான் “எல்லா நன்மையான காரியத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்.”
நன்மை தீமையை எப்படி பிரித்தறிவது என போதித்த பிறகு, இன்று பொருத்தமானதாக தோன்றுகிற ஒரு கேள்வியை மார்மன் கேட்கிறான்: “விசேஷமாக சத்துருவின் சோதனைகள் மிகவும் தூண்டுவதாக இருக்கும் போது, எல்லா நன்மையான காரியத்தையும் ஏற்றுக்கொள்வது எப்படி சாத்தியமாகும்?”(மரோனி 7:20). 7 ம் அதிகாரத்தின் மீதி முழுவதிலும் மார்மனின் பதிலைக் காண முடியும். வசனங்கள் 20–48 நீங்கள் வாசிக்கும்போது, இயேசு கிறிஸ்துவினிமித்தம் நீங்கள் பெற்றுள்ள எல்லா நன்மையான காரியத்தையும் அடையாளம் காண உங்களுக்கு உதவக்கூடிய சத்தியங்களைத் தேடவும். அவரில் விசுவாசம் வைத்திருப்பது நன்மையான காரியங்களைத் தேட உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது? அதிக நல்ல காரியங்களை நீங்கள் எப்படி “பற்றிக்கொள்ள முடியும்”?
விசுவாசப் பிரமாணங்கள் 1:13ஐயும் பார்க்கவும்.
“தயாளத்துவம் கிறிஸ்துவின் தூய்மையான அன்பு.”
தலைவர் டாலின் எச். ஓக்ஸ் சொன்னார்: “தயாளத்துவம் ஒருபோதும் தோற்பதில்லை என்பதற்கும் ‘தயாளத்துவம் கிறிஸ்துவின் சுத்தமான அன்பு’ (மரோ. 7:47), என்பது ஒரு செயலல்ல ஆனால் ஒரு நிலைமை அல்லது இருக்கிற நிலை. …என்பதால் நன்மையின் மிக முக்கிய செயல்களைவிடவும் தயாளத்துவம் உயர்வானது என்பதற்கான காரணம் … தயாளத்துவம் என்பது, ஒருவர் ஆகிற ஒன்று” (“The Challenge to Become,” Ensign, Nov. 2000, 34). நீங்கள் மரோனி 7:44–48 வாசிக்கும்போது, தயாளத்துவத்தைப்பற்றிய மார்மனின் விவரிப்பை கருத்தில் கொள்ளவும் மற்றும் பரிசுத்த ஆவியிடமிருந்து உணர்த்துதல்களுக்குச் செவிகொடுக்கவும், நீங்கள் மேம்பட வழிகளைக் காண அவர் உதவ முடியும். தயாளத்துவத்தின் வரத்தைப் பெற நமக்கு ஏன் விசுவாசமும் நம்பிக்கையும் தேவை?
எனது கற்புடைமையும் நற்குணமும் என்னிடத்திலிருந்து எடுக்கப்பட முடியுமா?
நேபியரின் கொடிய பாவங்களைப்பற்றிய மார்மனின் விவரிப்பு, பாலின தாக்குதல் அல்லது துர்ப்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டோர் கற்புடைமை நியாயப்பிரமாணத்தை மீறுவதாக சிலர் தவறுதலாக நினைக்க வழிநடத்துகிறது. எனினும் மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட் அது அப்படியல்ல என தெளிவு படுத்தினார். அவர் போதித்தார், “மற்றொருவரின் பலாத்கார செயல்கள், புரட்டு அல்லது முறையற்ற செயல் உங்கள் எண்ணத்துக்கு விரோதமாக உங்களை பயங்கரமாக காயப்படுத்தினால், நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள் மற்றும் நீங்கள் குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை என நான் பயபக்தியுடன் சாட்சியளிக்கிறேன்.” (“Healing the Tragic Scars of Abuse,” Ensign, May 1992, 32).
என்னுடைய சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது கிறிஸ்துவில் நான் நம்பிக்கை வைக்கமுடியும்.
அவன் பார்த்த துன்மார்க்கத்தை விவரித்த பிறகு மார்மன் தன் குமாரனிடத்தில் துக்கப்படாதிருக்குமாறு சொன்னான். மார்மனின் நம்பிக்கையின் செய்தியில் எது உங்களைக் கவர்கிறது? கிறிஸ்து “[உங்களை] உயர்த்துவது” என்றால் என்ன என நினைக்கிறீர்கள்? கிறிஸ்துவின் எந்த தன்மைகள் மற்றும் அவரது சுவிசேஷ கொள்கைகள் “உங்கள் மனதில் பதிந்து” உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது?(மரோனி 9:25).
Dieter F. Uchtdorf, “The Hope of God’s Light,” Ensign or Liahona, May 2013, 70, 75–77 ஐயும் பார்க்கவும்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.
மரோனி 7:5–11
மரோனி 7:5–11ன்படி, சரியான காரணத்துக்காக சரியான காரியங்களைச் செய்வது ஏன் முக்கியமாகும்? “ உண்மையான நோக்கத்தோடு” நாம் ஜெபிக்கிறோமா மற்றும் தேவ கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறோமா என நாம் எவ்வாறு அறிய முடியும்? வசனம் 6.
மரோனி 7:12–19
நாம் எவ்வாறு நமது நேரத்தை செலவிடுகிறோம் மற்றும் நாம் யாரோடு அதை செலவிடுகிறோம் என நல்ல தேர்ந்தெடுப்புகளைச் செய்ய மார்மனின் ஆலோசனைகள் நமக்கு எவ்வாறு உதவ முடியும்? உங்கள் வீட்டைத் தேட அல்லது ஏற்றுக்கொள்ள குடும்ப அங்கத்தினர்களை நீங்கள் அழைக்கலாம் (மரோனி 7:19), அல்லது நன்மை செய்யவும், தேவனை நேசிக்கவும், அவரைச் சேவிக்கவும் அவர்களை அழைக்கிறவற்றை பற்றிக்கொள்ளவும் (மரோனி 7:13). அவர்கள் கண்டுபிடிக்கிற நல்லவற்றுக்காக அவர்களைப் புகழவும்.
மரோனி 7:29
இந்த வசனத்தை வாசித்த பிறகு, அவர்களது வாழ்க்கையில் தேவ கரத்தை அவர்கள் பார்த்த அற்புதங்கள் அல்லது பிற வழிகளைப்பற்றி குடும்பத்தினர் பேசலாம்.
மரோனி 8:5–26
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியைப்பற்றி சிறு பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்த நேபியர் எதை தவறாக புரிந்துகொண்டனர்? மார்மனின் போதனைகளிலிருந்து பாவநிவர்த்தியைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
மரோனி 8:16–17
“பரிபூரண அன்பிருப்பது” என்றால் என்ன? பயத்தை மேற்கொள்ள அது எப்படி நமக்கு உதவுகிறது? சத்தியத்தை தைரியமாக போதிக்க அது நமக்கு எவ்வாறு உதவுகிறது? அதை நாம் எவ்வாறு மேம்படுத்துகிறோம்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.