என்னைப் பின்பற்றி வாருங்கள்
டிசம்பர் 14–20. மரோனி 10: “கிறிஸ்துவினிடத்தில் வந்து, அவரிலே பூரணப்பட்டிருங்கள்”


“டிசம்பர் 14–20. மரோனி 10: ‘கிறிஸ்துவினிடத்தில் வந்து, அவரிலே பூரணப்பட்டிருங்கள்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“டிசம்பர் 14–20. மரோனி 10,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

நேபியருக்கு இயேசு தரிசனமாகுதல்

நீங்கள் அறியும்படிக்கு– காரி எல்.கார்ப்

டிசம்பர் 14–20

மரோனி 10

“கிறிஸ்துவினிடத்தில் வந்து, அவரிலே பூரணப்பட்டிருங்கள்”

மார்மன் புஸ்தகத்தை வாசிப்பதை நீங்கள் நிறைவுசெய்யும்போது, இது உண்மையென்ற ஒரு புதுப்பிக்கப்பட்ட சாட்சியை பரிசுத்த ஆவியிடமிருந்து பெறுவதை கருத்தில் கொள்ளவும். நீங்கள் அப்படிச் செய்யும்போது, நீங்கள் பெறுகிற எண்ணங்களைப் பதிவு செய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

“கர்த்தருடைய மென்மையான இரக்கங்கள், அவர் தெரிந்துகொண்டவர்களின் விசுவாசத்தினிமித்தமாக அவர்கள் எல்லோர் மேலுமிருக்கும்” (1 நேபி 1:20) என்பதை நமக்குக் காட்ட நேபியின் வாக்குறுதியுடன் மார்மன் புஸ்தகம் ஆரம்பிக்கிறது. பதிவேடுகளை “முத்திரையிட” மரோனி ஆயத்தப்பட்டபோது, இதைப்போன்ற ஒரு செய்தியுடன் புஸ்தகம் நிறைவடைகிறது: “கர்த்தர் எவ்வளவு இரக்கமுள்ளவராய் இருந்திருக்கிறார் என்பதை நினைவுகூர” ( மரோனி 10:2–3) நம்மை அழைத்தான். மார்மன் புஸ்தகத்தில் பதிக்கப்பட்டுள்ள அநேக இரக்கங்களை மட்டும் நீங்கள் நினைத்தாலும், இது சிந்திக்க அதிகமானவைகளை நமக்கு கொடுக்கிறது. உங்கள் மனதில் என்ன எடுத்துக்காட்டுகள் வருகின்றன? வனாந்தரத்தின் வழியேயும் பெருந்தண்ணீர்களைக் கடந்தும் லேகியின் குடும்பத்தை வழிநடத்திய தேவனின் இரக்கமான விதத்தைப்பற்றியும், ஏனோஸின் ஆத்துமா மன்னிப்புக்காக ஏங்கிக்கொண்டிருந்தபோது அவனுக்கு அவர் காட்டிய மென்மையான இரக்கங்களைப்பற்றியும், அல்லது சபையின் அச்சமற்ற பாதுகாவலாளர்களில் ஒருவனான, சபையின் கசப்பான எதிரியான ஆல்மாவுக்கு அவர் காட்டிய இரக்கத்தைப்பற்றியும் நீங்கள் சிந்திக்கக்கூடும். அவர்களது நோயாளிகளை இரட்சகர் குணமாக்கியபோதும், அவர்களுடைய சிறுபிள்ளைகளை ஆசீர்வதித்தபோதும் உயிர்த்தெழுந்த இரட்சகர் ஜனங்களிடம் காட்டிய இரக்கத்திற்கு உங்கள் சிந்தனைகள் திரும்பக்கூடும். ஒருவேளை இவைகள் எல்லாவற்றிலும் மிக முக்கியமானதான இது, “உங்களிடத்தில் கர்த்தர் எவ்வளவு இரக்கமுள்ளவராயிருக்கிறார்” என்பதை உங்களுக்கு நினைவூட்டலாம், ஏனெனில் “கிறிஸ்துவினிடத்தில் வந்து, அவரிலே பூரணப்பட்டிருங்கள்” (மரோனி 10:32) என்ற மரோனியின் விடைபெறும் வார்த்தைகளில் எளிதாக வெளிப்படுத்தப்பட்ட ஒரு அழைப்பான தேவனின் இரக்கத்தைப் பெற நம் ஒவ்வொருவரையும் அழைப்பது மார்மன் புஸ்தகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மரோனி 10:3–7

பரிசுத்த ஆவியின் வல்லமையால் சத்தியத்தை நான் அறியமுடியும்.

மரோனி 10:3–7லிலுள்ள வாக்குறுதி உலகமுழுவதிலுமுள்ள மில்லியன்கணக்கான ஜனங்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. இது உங்களை எவ்வாறு மாற்றியது? மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய உங்களுடைய சாட்சியைப் பெற அல்லது பெலப்படுத்த நீங்கள் நாடுகிறீர்களோ இல்லையோ, மரோனியின் அழைப்பு உங்களுக்குப் பொருந்துகிறது. மரோனி 10:3–7ஐ நீங்கள் வாசிக்கும்போது, முன்பைவிட மிகுந்த கவனத்துடன் வாசிப்பதைக் கருத்தில்கொள்ளவும். இதன் பொருள் என்ன? என்பன போன்ற கேள்விகளை உங்களையே நீங்கள் கேட்டு ஒவ்வொரு பத்தியையும் நீங்கள் ஆராயலாம். இதை நான் எப்படி சிறப்பாகச் செய்யமுடியும்? இதில் நான் என்ன அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்? மார்மன் புஸ்தகத்தின் உண்மையைப்பற்றி பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு எனக்குக் காட்டியிருக்கிறார்?

மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய உங்களுடைய சாட்சியைக் கேட்க விரும்புகிற ஒருவரைப்பற்றியும் சிந்தியுங்கள். அவன் அல்லது அவளுடைய சொந்த சாட்சியை நாடுகிற அந்த நபருக்கு நீங்கள் எவ்வாறு உதவுவீர்கள்?

மரோனி 10:8–25

“தேவ வரங்களை மறுதலிக்க வேண்டாம்.”

ஒருவர், “தேவ வரங்களை … மறுதலிக்கக்கூடிய அநேக வழிகளிருக்கின்றன (மரோனி 10:8). இந்த வரங்களிருக்கின்றன என்பதைக்கூட சில ஜனங்கள் மறுதலிக்கிறார்கள். தங்களுக்கு ஆவிக்குரிய வரங்களிருப்பதை மற்றவர்கள் மறுதலிக்கக்கூடும், ஆனால் மற்ற ஜனங்களிடத்தில் அவற்றை அடையாளங்காணுங்கள். இருந்தும் அவைகளை உதாசீனம் செய்வதால் மற்றவர்கள் தங்கள் வரங்களை மறுதலிக்கிறார்கள் அல்லது அவைகளை விருத்தி செய்ய தவறுகிறார்கள்.

மரோனி 10:8–25, ஐ நீங்கள் வாசிக்கும்போது, உங்களுடைய ஆவிக்குரிய வரங்களைக் கண்டுபிடிக்க உங்களுக்குதவும் சத்தியங்களைத் தேடுங்கள் மற்றும் உங்களையும் மற்றவர்களையும் ஆசீர்வதிக்க மிகுந்த வல்லமையுடன் அவைகளைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு தேவன் கொடுத்திருக்கிற வரங்களைப்பற்றி அல்லது நீங்கள் நாடவேண்டுமென அவர் விரும்புகிற வரங்களைப்பற்றிய உள்ளுணர்வுகளை நாடுங்கள். “ஒவ்வொரு நல்ல வரமும் கிறிஸ்துவினிடத்திலிருந்து வருகிறதென்று நினைவுகூருவது” ஏன் முக்கியமானது?? (மரோனி 10:18).

மூப்பர் ஜான் சி. பிங்ரி இளையவரிடமிருந்து இந்த ஆலோசனையையும் கருத்தில் கொள்ளவும்: “ஆகவே, நமது வரங்களைப்பற்றி நாம் எவ்வாறு அறிந்துகொள்கிறோம்? இயல்பாகவே நாம் எதில் நல்லவர்களாயிருக்கிறோம், ரசிக்கிறோம் என்பதை அடையாளங்காண, நம்முடைய கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைக் குறிப்பிட்டு, நம்மை நன்றாகவும் தனிப்பட்டவர்களாகவும் அறிந்திருக்கிறவர்களிடம் கேட்கலாம். மிக முக்கியமாக, தேவனிடம் நாம் கேட்கலாம் (யாக்கோபு 1:5; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:10 பார்க்கவும்). நமக்கு அவைகளை அவர் கொடுத்ததால் நமது வரங்களைப்பற்றி அவர் அறிகிறார்” (“I Have a Work for Thee,” Ensign or Liahona, Nov. 2017, 33).

Guide to the Scriptures, “Gifts of the Spirit,” scriptures.ChurchofJesusChrist.org பார்க்கவும்.

மரோனி 10:30–33

இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மூலம் நான் பூரணப்படமுடியும்.

கிறிஸ்துவண்டை வரும்படியான மரோனியின் புத்திமதியில் அவரைப்பற்றி அறிந்துகொள்வதைப்பற்றி அல்லது மிக அடிக்கடி அவரைப்பற்றி சிந்திப்பதையும்விட அல்லது அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள கடினமாக முயற்சிப்பதையும்விட இந்தக் காரியங்களைப் போல முக்கியமானவைகளாய் இருக்கின்றன. மாறாக, அவரிருப்பதைப்போலாக, மிக முழுமையான சாத்தியமான அர்த்தத்தில் கிறிஸ்துவண்டை வர இது ஒரு அழைப்பு. மரோனி 10:30–33ஐ நீங்கள் வாசிக்கும்போது, “ஒவ்வொரு நல்ல வரத்தையும் பற்றிப்பிடித்தல்” “எல்லா தேவதன்மையற்றவைகளையும் நீங்கள் மறுத்தல்” மற்றும் “அவரில் பூரணப்பட்டிருத்தல்” (italics added) போன்ற கிறிஸ்துவண்டை முழுமையாக வருவதென்பதற்கு அர்த்தமென்ன என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்குதவும் சொற்றொடர்களைக் கவனிக்கவும்.

இது எப்படி சாத்தியமாகும்? மரோனி 10:30–33ல் பதில்களைத் தேடுங்கள். “கிறிஸ்துவினிடத்தில் வந்து, அவரிலே பூரணப்பட்டிருக்க” மிக முழுமையாக நீங்கள் செய்யவேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்?

ஓம்னி 1:26; Guide to the Scriptures, “Perfect,” scriptures.ChurchofJesusChrist.org பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் கலந்துரையாடவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

மரோனி 10

இந்த அதிகாரத்தை ஒன்றுசேர வாசித்து புத்திமதி சொல் என்ற வார்த்தையை மரோனி பயன்படுத்திய ஒவ்வொரு முறையையும் தேடுங்கள். மரோனி புத்திமதி கூறியவற்றை அல்லது நாம் செய்யவேண்டுமென பெலமாக ஊக்குவித்ததை பட்டியலிடவும் அல்லது குறித்துவைக்கவும். அவனுடைய புத்திமதிகளைப் பின்பற்ற நாம் என்ன செய்யமுடியும்?

மரோனி 10:3

இந்த ஆண்டு மார்மன் புஸ்தகத்தை நாம் வாசிக்கும்போது, கர்த்தருடைய இரக்கத்தைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம்? நமது குடும்பத்துடன் கர்த்தர் எவ்வாறு இரக்கமுள்ளவராயிருந்திருக்கிறார்?

மரோனி 10:3–5

இந்த வசனங்களை வாசித்த பின்னர், மார்மன் புஸ்தகம் உண்மையென எவ்வாறு அவர்கள் அறிந்தார்கள் என்பதைப் பகிர்ந்துகொள்ள குடும்ப அங்கத்தினர்களை நீங்கள் கேட்கலாம். “Search, Ponder, and Pray” (Children’s Songbook, 109) போன்ற சத்தியத்தைத் தேடுவதைப்பற்றி ஒரு பாடலை ஒன்று சேர பாடுவதைக் கருத்தில் கொள்ளவும். அவர்களுடைய சாட்சிகளை ஒரு குடும்ப நாட்குறிப்பில் பதிவுசெய்ய குடும்ப அங்கத்தினர்களை நீங்கள் அழைக்கலாம்.

மரோனி 10:8–18

பரிசுகள் பெறுவதைப்பற்றி சிந்திக்க கிறிஸ்துமஸ் ஒரு இயற்கையான நேரம். மரோனி 10:9–16ல் குறிப்பிடப்பட்டுள்ள தேவ வரங்களை பிரதிபலிக்கிற பரிசுகளை ஒருவேளை குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவருக்காக பொதியலாம். அவர்கள் ஒருவரிலொருவர் காண்கிற கிறிஸ்துவிடமிருந்து வருகிற பிற நல்ல வரங்களையும்கூட இந்த வரங்கள் குறிக்கலாம்.

மரோனி 10:27–29, 34

அவர்கள், “மகா யேகோவாவின் இன்பமான நியாயவிசாரணைக் கூண்டுக்கு முன்பாக [அவனைக்] காணும்போது” மரோனியிடம் அவர்கள் சொல்ல விரும்புவதை குடும்ப அங்கத்தினர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சியளிப்பதுவே மார்மன் புஸ்தகம் மற்றும் அனைத்து வேதங்களின் நோக்கம். மரோனி 10ல் இயேசு கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? அவரிடத்தில் வர என்ன செய்யவேண்டுமென உணர்த்தப்படுவதாக நீங்கள் உணருகிறீர்கள்?

தங்கத் தகடுகளை மரோனி புதைத்தல்

தங்கத் தகடுகளை மரோனி புதைத்தல்–ஜோன் மாக்நாட்டன்