கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
ஜூன் 7–13. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63: “உன்னதத்திலிருந்து வருகிற எதுவும் பரிசுத்தமானது”


“ஜூன் 7–13. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63: ‘உன்னதத்திலிருந்து வருகிற எதுவும் பரிசுத்தமானது,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“ஜூன் 7–13. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

மிசௌரி வயல்

ஸ்ப்ரிங் ஹில், டேவிஸ் கவுண்டி, மிசௌரி-கார்த் ராபின்சன் ஓபோர்ன்

ஜூன் 7–13

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63

“உன்னதத்திலிருந்து வருகிற எதுவும் பரிசுத்தமானது”

கர்த்தர் சொன்னார், “நீங்கள் ஜெபத்தின் மூலமாக ஆவியைப் பெறுகிறீர்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:64). உங்கள் படிப்புக்கு வழிகாட்ட ஆவியானவருக்காக ஜெபிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

சீயோன் நகருக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சபைத் தலைவர்கள் இப்பகுதிக்குச் சென்று பரிசுத்தவான்களின் ஒன்றுகூடும் இடமாக அர்ப்பணித்திருக்கின்றனர். ஜோசப் ஸ்மித்தின் வரலாற்றின்படி, “சீயோன் தேசம் இப்போது பார்வையில் மிக முக்கியமான உலகப்பிரகார பொருளாக இருந்தது” ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63, பாகத்தலைப்பு ). ஆனால் சீயோன் குறித்த பார்வைகள் வேறுபட்டிருந்தன. பல பரிசுத்தவான்கள் மிசௌரியில் ஒன்றுகூட ஆரம்பிக்க ஆர்வமாக இருந்தனர். மறுபுறம், எஸ்றா பூத் போன்றவர்கள் சீயோன் தேசத்தில் ஏமாற்றமடைந்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். உண்மையில், ஜோசப் மிசௌரியிலிருந்து கர்த்லாந்துக்குத் திரும்பியபோது, அவர் வெளியே இருந்தபோது சபைக்குள் பிளவு மற்றும் மதமாறுபாடு நுழைந்ததைக் கண்டார். இந்த பின்னணியில்தான் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63 வெளிப்படுத்தல் பெறப்பட்டது. இங்கே கர்த்தர் நிலம் வாங்குவதையும் பரிசுத்தவான்களை மிசௌரிக்கு நகர்த்துவதையும்பற்றி கூறினார். ஆனால் இதுபோன்ற நடைமுறை விஷயங்களில் ஒரு சரியான நேரத்தில் நினைவூட்டல் இருந்தது: “இதோ, கர்த்தராகிய நான் என்னுடைய குரலில் பேசுகிறேன், அதற்கு கீழ்ப்படியவேண்டும்” (வசனம் 5). அவருடைய குரல், அவருடைய விருப்பம், அவருடைய கட்டளை, இவை அனைத்தும் “உன்னதத்திலிருந்து [வந்தவை]”, இழிந்ததாகவோ அல்லது சாதாரணமாகவோ கருதப்படக்கூடாது. இது “பரிசுத்தமானது, கவனமாக பேசப்பட வேண்டும்” (வசனம் 64).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:1–6, 32–37

கர்த்தருடைய கோபம் துன்மார்க்கர்களுக்கும் மற்றும் கலகக்காரர்களுக்கும் எதிராகத் தூண்டப்படுகிறது.

இந்த வெளிப்பாடு கிடைத்தபோது, ஜோசப் ஸ்மித் அவருக்கு எதிராக திரும்பிய சபையின் பல அங்கத்தினர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் (“Ezra Booth and Isaac Morley,” Revelations in Context, 130–36 பார்க்கவும்). “துன்மார்க்கர் மற்றும் கலகக்காரர்” குறித்து கர்த்தர் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:1–6, 32–37 ல் என்ன எச்சரிக்கைகள் கொடுத்தார்? இத்தகைய எச்சரிக்கைகள் எவ்விதம் தேவனின் அன்பின் சான்றுகளாக இருக்கின்றன?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:7–12

அடையாளங்கள் விசுவாசத்தினாலும் தேவ சித்தத்தினாலும் வருகின்றன.

அறிகுறிகளோ அற்புதங்களோ மட்டும் நீடித்த விசுவாசத்தைத் தருவதில்லை. 1831 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், கர்த்லாந்தில் ஒரு மெதடிஸ்ட் பாதிரியாரான எஸ்றா பூத், தன் நண்பரான எல்சா ஜான்சனின் கையை ஜோசப் ஸ்மித் அற்புதமாக குணப்படுத்தியதைக் கண்டு ஞானஸ்நானம் பெற முடிவு செய்தார்.

இருப்பினும், சில மாதங்களுக்குள், பூத் தனது விசுவாசத்தை இழந்து தீர்க்கதரிசியை விமர்சித்தார். அவர் கண்ட அதிசயத்தை கருத்தில் கொண்டால், இது எப்படி நடந்திருக்கும்? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:7–12 வாசிக்கும்போது இதை சிந்தித்துப் பாருங்கள். “மனுஷரின் நன்மைக்காக அல்லாமல், [தேவனின்] மகிமைக்காகவே” சிலர் அறிகுறிகளைப் பெறுகிறார்கள், (வசனம் 12) பிறர் “ஆக்கினைக்குள்ளாகும்” படிக்கே, (வசனம் 11) என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம். நீங்கள் வாசித்தவற்றின் அடிப்படையில், அறிகுறிகளைப்பற்றி நீங்கள் சிந்திக்கவும் உணரவும் கர்த்தர் விரும்புகிறார் என்று எப்படி நினைக்கிறீர்கள்?

மத்தேயு 16:1–4; யோவான் 12:37; மார்மன் 9:10–21; ஏத்தேர் 12:12, 18ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:13–23

கற்பு என்றால் என் எண்ணங்களையும் செயல்களையும் தூய்மையாக வைத்திருத்தல் என்பதாகும்.

விபச்சாரம் தவறு என்று பெரும்பாலான ஜனங்கள் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:13–19 ல், காம எண்ணங்களும் கடுமையான ஆவிக்குரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை இரட்சகர் தெளிவுபடுத்தினார். “காமம் ஏன் இத்தகைய கொடிய பாவமாக இருக்கிறது?” மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலன்ட் போதித்தார்: “சரி, அது நம்முடைய ஆத்துமாக்களுக்கு முற்றிலும் ஆவியை அழிக்கும் தாக்கத்திற்கு மேலதிகமாக, இது ஒரு பாவம் என்று நான் கருதுகிறேன், ஏனென்றால் அநித்திய காலத்தில் தேவன் நமக்குக் கொடுக்கும் மிக உயர்ந்த மற்றும் புனிதமான உறவை அது தீட்டுப்படுத்துகிறது, ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பும், தம்பதியினர் என்றென்றும் இருக்க விரும்பும் குடும்பத்தில் பிள்ளைகளை கொண்டு வர ஆசைப்படுவதுமாகும்” (“Place No More for the Enemy of My Soul,” Ensign or Liahona, May 2010, 44).

முறையற்ற எண்ணங்கள் மற்றும் செயல்களுக்காக மனந்திரும்பாதவர்களுக்கு கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் 63:13–19 ல் வரவிருக்கிற என்ன விளைவுகளை கர்த்தர் குறிப்பிடுகிறார்? உண்மையுள்ளவர்களுக்கு இரட்சகர் வசனங்கள் 20 மற்றும் 23 ஆகியவற்றில் வாக்குறுதி அளித்த ஆசீர்வாதங்களைக் கவனியுங்கள். கற்புடமை நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படியாமல் உங்கள் வாழ்க்கையில் என்ன ஆசீர்வாதங்கள் வந்துள்ளன? தூய்மையாக இருக்க அல்லது ஆக இரட்சகர் உங்களுக்கு எப்படி உதவுகிறார்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:45; Linda S. Reeves, “Worthy of Our Promised Blessings,” Ensign or Liahona, Nov. 2015, 9–11 ஐயும் பார்க்கவும்.

ஆலயத்தின் அருகில் ஆணும் பெண்ணும்

நம் எண்ணங்களையும் செயல்களையும் தூய்மையாக வைத்திருப்பதால் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:24–46

கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகார விவகாரங்களை இயக்குகிறார்.

சீயோன் எங்கு கட்டப்படும் என்று கர்த்தர் அடையாளம் காட்டியபின், ஓஹாயோவில் உள்ள பரிசுத்தவான்களுக்கு எப்போது செல்லத் தொடங்குவது, நிலத்தை வாங்குவதற்கான பணம் எங்கு கிடைக்கும் என்பதைப்பற்றிய வழிகாட்டுதல் தேவை. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:24–46 நீங்கள் வாசிக்கும்போது, சீயோனைப்பற்றி கர்த்தர் கொடுத்த ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகார வழிகாட்டுதலைத் தேடுங்கள். கர்த்தர் உங்களுக்கு என்ன ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகார வழிகாட்டுதலை அளிக்கிறார்?

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:7–12.எல்சா ஜான்சன் குணமடைவதைக் கண்ட போதிலும் எஸ்றா பூத் சபையை விட்டு வெளியேறிய கதை (“தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்” மற்றும் இந்த குறிப்போடு வரும் கலைப்படைப்புகளில் சுருக்கமான விவரங்களைப் பார்க்கவும்) அற்புதங்களைப்பற்றிய விவாதத்தைத் தூண்டக்கூடும். உங்கள் குடும்பம் அல்லது உங்கள் குடும்ப வரலாற்றின் அனுபவங்கள் உட்பட, விசுவாசத்தைப் பலப்படுத்திய அற்புதங்களைப்பற்றி உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் பேசலாம். இந்த அற்புதங்களைப் பெறுவதற்குத் தேவையான விசுவாசத்தை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள்? விசுவாசத்திற்கும் அற்புதங்களுக்கும் இடையிலான உறவைப்பற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:7–12 என்ன கற்பிக்கிறது?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:13–19.ஆபாசப் படங்கள் உட்பட தகுதியற்ற தாக்கங்களிலிருந்து நாம் எவ்வாறு நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்? (குடும்பங்களுக்கு அநேக உதவிகரமான ஆதாரங்களை நீங்கள் AddressingPornography.ChurchofJesusChrist.org ல் காணலாம்) கற்புடைமை நியாயப்பிரமாணத்தின்படி வாழ்வதன் ஆசீர்வாதங்கள் யாவை?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:23.“[ராஜ்யத்தின்] இரகசியங்கள்” அல்லது சுவிசேஷ சத்தியங்கள் “ஜீவ தண்ணீரின் துரவு” போன்று எப்படி இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும்? உதாரணமாக, நீங்கள் அருகிலுள்ள நீரூற்று அல்லது நதிக்குச் செல்லலாம் (அல்லது ஒரு காணொலி அல்லது படத்தைக் காண்பிக்கலாம்). சுவிசேஷ சத்தியங்கள் எவ்வாறு நீர் போன்று இருக்கின்றன?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:58.பாகம் 63ல் என்ன எச்சரிக்கைகளை நாம் காண்கிறோம்? இன்று நமது சபைத் தலைவர்களிடமிருந்து நாம் கேட்கும் சில எச்சரிக்கைகள் யாவை?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:58–64.உங்கள் குடும்பத்துக்கு ஒரு விலைமதிப்பற்ற குடும்ப பொக்கிஷத்தைக் காட்டுங்கள். மதிப்புமிக்கதாக இல்லாத பிற விஷயங்களை விட இந்த பொருளை எவ்வாறு வித்தியாசமாக கருதுகிறோம்? பரிசுத்தமான விஷயங்களை மதிக்க நாம் என்ன செய்ய முடியும் என்பதைப்பற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63:58–64 நமக்கு என்ன கற்பிக்கிறது?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “The Priesthood Is Restored,” Children’s Songbook, 31.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

நீங்கள் கற்றுக்கொண்டதன்படி வாழுங்கள். “சுவிசேஷத்தைப் புரிந்துகொள்வதிலிருந்து வருகிற மகிழ்ச்சியை நீங்கள் உணரும்போது, நீங்கள் கற்றவற்றைப் பிரயோகிக்க விரும்புவீர்கள்” உங்கள் புரிதலுக்கு இசைவாக வாழ முயற்சி செய்யுங்கள். அவ்வாறு செய்வது உங்கள் விசுவாசம், அறிவு மற்றும் சாட்சியை பலப்படுத்தும்” (Preach My Gospel, 19).

ஜோசப் ஸ்மித் பெண்ணின் கையைப் பிடித்திருத்தல்

எல்சா ஜான்சனின் தோளை குணமாக்குதல்–சாம் லாலர்