“ஜூன் 21–27. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 67–70: ‘முழு பூமியின் ஆஸ்தியான சபைக்கு முக்கியத்துவமாக,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)
“ஜூன் 21–27. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 67–70,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
ஜூன் 21–27
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 67–70
“முழு பூமியின் ஆஸ்தியான சபைக்கு முக்கியத்துவமாக”
கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் உள்ள பல வெளிப்பாடுகள் குறிப்பிட்ட நபர்களுக்கு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கொடுக்கப்பட்டாலும், அவை “அனைவருக்கும் பயனுள்ளவை” (“கோட்பாடும் உடன்படிக்கைகளும் புத்தகத்தின் உண்மைக்கு பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் சாட்சியம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளுக்கு முன்னுரை ). நீங்கள் படிக்கும்போது, உங்களுக்கு பயனுள்ள உண்மைகளையும் கொள்கைகளையும் தேடுங்கள்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
1828 முதல் 1831 வரை, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் கர்த்தரிடமிருந்து பல வெளிப்பாடுகளைப் பெற்றார், இதில் தனிநபர்களுக்கான தெய்வீக ஆலோசனை, சபையை நிர்வகிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பிற்கால தரிசனங்கள். ஆனால் பல பரிசுத்தவான்கள் அவற்றைப் படிக்கவில்லை. வெளிப்பாடுகள் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் கிடைக்கக்கூடிய சில பிரதிகள் தனித்தனி தாள்களில் கையால் எழுதப்பட்டன, அவை உறுப்பினர்கள் மத்தியில் பரப்பப்பட்டு ஊழியக்காரர்களால் எடுத்துச் செல்லப்பட்டன.
பின்னர், 1831 நவம்பரில், ஜோசப் சபைத் தலைவர்களின் குழுவை அழைத்து, வெளிப்பாடுகளை வெளியிடுவது குறித்து கலந்துரையாடினார். கர்த்தருடைய சித்தத்தை நாடிய பிறகு, இந்தத் தலைவர்கள் இன்றைய கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் முன்னோடியான, கட்டளை புத்தகத்தை வெளியிடத் திட்டமிட்டனர், “நம்முடைய இரட்சகரின் ராஜ்யத்தின் ரகசியங்களின் திறவுகோல்கள் மீண்டும் மனிதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்பதற்கான தெளிவான சான்று, ஒரு வாழ்ந்த தீர்க்கதரிசி மூலம் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையை விரைவில் எல்லோரும் தாங்களே படிக்க முடியும். இந்த மற்றும் பல காரணங்களுக்காக, பரிசுத்தவான்கள் இப்போதும் இந்த வெளிப்பாடுகளை “முழு பூமியின் ஆஸ்தியான சபைக்கு முக்கியத்துவமாக” கருதுகின்றனர் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 70, பாகத்தலைப்பு).
Saints, 1:140–43 பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 67:1–9; 68:3–6
அவர் நாமத்தில் பேசும் வார்த்தைகளுக்கு தேவன் தம்முடைய வேலைக்காரர்களுக்கு துணை நிற்கிறார்.
ஜோசப் ஸ்மித் பெற்ற வெளிப்பாடுகளை வெளியிடுவதற்கான முடிவு எளிதானது என்று தோன்றுகிறது, ஆனால் சில ஆரம்பகால சபைத் தலைவர்கள் இது ஒரு நல்ல யோசனை என்று உறுதியாக நம்பவில்லை. ஜோசப் ஸ்மித் வெளிப்பாடுகளை எழுதப் பயன்படுத்திய மொழியில் உள்ள குறைபாடுகளினால் ஒரு கவலை இருந்தது. கவலைக்கு பதிலளிக்கும் விதமாக பாகம் 67ல் வெளிப்பாடு வந்தது. வசனங்கள் 1–9 லிருந்து தீர்க்கதரிசிகள் மற்றும் வெளிப்பாட்டைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? 68: 3–6லிருந்து என்ன கூடுதல் உள்ளுணர்வுகளைப் பெறுகிறீர்கள்?
கட்டளைகளின் புத்தகம் அச்சிடப்படுவதற்கு முன்பு, பல சபைத் தலைவர்கள் புத்தகத்தில் உள்ள வெளிப்பாடுகள் உண்மை என்று எழுதப்பட்ட சாட்சியத்தில் கையெழுத்திட்டனர். அவர்களது சாட்சியைப்பற்றிய ஒரு பிரதியைப் பார்க்க “Testimony, circa 2 November 1831,” Revelation Book 1, 121, josephsmithpapers.org பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:1–8
பரிசுத்த ஆவியின் உணர்த்துதல் கர்த்தரின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது.
இந்த வசனங்களில் உள்ள சொற்கள் ஆர்சன் ஹைட் மற்றும் மற்றவர்கள் “ஜனங்களிலிருந்து ஜனங்களுக்கும், தேசங்களிலிருந்து தேசங்களுக்கும், ஜீவிக்கிற தேவனின் ஆவியால் நித்திய சுவிசேஷத்தை பிரகடனப்படுத்த” அழைக்கப்பட்டனர் (வசனம் 1). வசனம் 4ல் உள்ள அறிவிப்பு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுப்பப்படும் ஒருவருக்கு எவ்வாறு உதவக்கூடும்? இந்த வார்த்தைகள் உங்களுக்கு எப்படி பொருந்தும்? ஏதாவது சொல்ல அல்லது செய்ய நீங்கள் “பரிசுத்த ஆவியால் உணர்த்தப்பட்ட” (வசனம் 3) ஒரு காலத்தைப்பற்றி சிந்தியுங்கள். ஆவிக்குரிய தூண்டுதல்களைப் பின்பற்றுவதற்கான தன்னம்பிக்கையைத் தரக்கூடிய இந்த வசனங்களில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:25–28
பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.
ஆரம்பவகுப்பு பொதுத் தலைவர், தலைவர் ஜாய் டி. ஜோன்ஸ் கற்பித்தார், “குழந்தைகளுக்கு பாவத்தை எதிர்க்க உதவும் [ஒரு] முக்கிய அம்சம், சிறு வயதிலேயே அடிப்படை சுவிசேஷ கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளை அன்பாக ஊக்குவிப்பதே, வேதத்திலிருந்து, விசுவாசப் பிரமாணத்திலிருந்து, வாலிபரின் பெலனுக்காக சிற்றேட்டிலிருந்து ஆரம்ப வகுப்பு பாடல்கள், கீதங்கள், மற்றும் நமது சொந்த சாட்சிகளிலிருந்து, அவை பிள்ளைகளை இரட்சகரிடத்தில் வழிநடத்தும்.” (“A Sin-Resistant Generation,” Ensign or Liahona, May 2017, 88).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:25–28ன் படி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று தலைவர் ஜோன்ஸ் குறிப்பிட்ட சில “அடிப்படை சுவிசேஷ கோட்பாடுகள்” என்ன? இந்த முக்கியமான பொறுப்பு பெற்றோருக்கு ஏன் வழங்கப்படுகிறது? இந்த விஷயங்களை தனது பிள்ளைகளுக்கு கற்பிக்க தகுதியற்ற ஒரு பெற்றோரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
Tad R. Callister, “Parents: The Prime Gospel Teachers of Their Children,” Ensign or Liahona, Nov. 2014, 32–34 ஐயும் பார்க்கவும்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 67:10–14.பொறாமை, பயம், பெருமை ஆகியவை கர்த்தருடன் நெருக்கமாக வளரவிடாமல் இருப்பது எப்படி? ஒரு “சுபாவ மனுஷன்” ஏன் கர்த்தருடைய சமூகத்தில் இருக்க முடியாது? (வசனம் 12; மோசியா 3:19 பார்க்கவும்). இந்த வசனங்களில் “[நாம்] முழுமையடையும் வரை பொறுமையுடன் தொடர” தூண்டுகிற எதை நாம் இந்த வசனங்களில் காண்கிறோம். (வசனம் 13).
நீங்கள் ஒரு குடும்பமாக மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்டின் செய்தியையும் பரிசீலனை செய்யலாம்“ Be Ye Therefore Perfect—Eventually” (Ensign or Liahona, Nov. 2017, 40–42).
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:3–4.கர்த்தருடைய ஊழியர்களின் வார்த்தைகள் “கர்த்தருடைய சித்தம்,” “கர்த்தருடைய மனம்”, “இரட்சிப்புக்காக தேவனுடைய வல்லமை” ( வசனம் 4) என்ற நம்பிக்கையை பலப்படுத்திய அனுபவங்களை குடும்ப அங்கத்தினர்கள் பகிர்ந்து கொள்ளலாம்). அல்லது உங்கள் குடும்பம் எதிர்கொள்ளும் சவாலுக்கு பொருந்தக்கூடிய சமீபத்திய பொது மாநாட்டு செய்திகளை அவர்கள் தேடலாம்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:25–35.இந்த வசனங்களில் “சீயோனில் வசிப்பவர்களுக்கு” (வசனம் 26) முக்கியமான ஆலோசனைகள் உள்ளன. இந்த வசனங்களை வாசித்த பிறகு மேம்படுத்துவதற்கு நாம் என்ன உணர்த்தப்படுகிறோம்? இந்த வசனங்களில் சில கொள்கைகளை சித்தரிக்கும் படங்களை உருவாக்கி அவற்றை உங்கள் வீடு முழுவதும் மறைப்பது வேடிக்கையாக இருக்கலாம். பின்னர், வரவிருக்கும் நாட்களில் யாராவது ஒரு படத்தைக் கண்டறிந்தால், அந்தக் கொள்கையைப்பற்றி கற்பிப்பதற்கான வாய்ப்பாக நீங்கள் அதைப் பயன்படுத்தலாம். வீடு பிள்ளைகளுக்கு இந்த விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடமாக ஏன் இருக்கிறது?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 69:1–2.ஆலிவர் கவுட்ரி மிசௌரிக்கு அச்சிடப்பட்ட தீர்க்கதரிசியின் வெளிப்பாடுகளின் எழுதப்பட்ட நகல்களுடன் அங்கு சபையைக் கட்டியெழுப்ப உதவும் பணத்துடன் அனுப்பப்பட்டார். ஆலிவரின் பயணம் குறித்து கர்த்தர் வசனம் 1ல் என்ன ஆலோசனை வழங்கினார்? “உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கும்” மக்களுடன் இருப்பது ஏன் முக்கியம்? (வசனம் 1). நல்ல அல்லது கெட்ட முடிவுகளை எடுக்க நண்பர்கள் எப்போது நம்மில் செல்வாக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள்? மற்றவர்கள் மீது நாம் எவ்வாறு நல்ல செல்வாக்கு செலுத்த முடியும்?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 70:1–4.வெளிப்பாடுகளை வெளியிடுவதை மேற்பார்வையிடும் பொறுப்பை கர்த்தர் சில மூப்பர்களுக்கு வழங்கினார். அந்த குறிப்பிட்ட பொறுப்பு நம்மிடம் இல்லை என்றாலும், எந்த அர்த்தத்தில் “வெளிப்படுத்தல்களுக்கும் கட்டளைகளுக்கும் உக்கிராணக்காரர்களாயிருக்க” என்று நாம் கருதலாம்? (வசனம் 3).
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Home Can Be a Heaven on Earth,” Hymns, no. 298.