“ஜூன் 28–ஜூலை 4. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 71-75: ‘உங்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)
“ஜூன் 28–ஜூலை 4. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 71–75,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
ஜூன் 28–ஜூலை 4
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 71–75
“உங்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்”
மூப்பர் க்வென்டின் எல். குக் போதித்தார், “பரிசுத்த ஆவியின் செல்வாக்கு பெரும்பாலும் தனிப்பட்ட வேதப் படிப்பு மற்றும் வீட்டில் ஜெபம் செய்வதுடன் வருகிறது” (“Deep and Lasting Conversion to Heavenly Father and the Lord Jesus Christ,” Ensign or Liahona, Nov. 2018, 10).
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
அவர் சிறுவனாக இருந்ததிலிருந்தே, ஜோசப் ஸ்மித் தேவனின் பணியைச் செய்ய முயன்றபோது விமர்சகர்களை, எதிரிகளையும் கூட எதிர்கொண்டார். ஆனால் 1831 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எஸ்றா பூத் சபையை பகிரங்கமாகத் தாக்கிப்பேசத் தொடங்கியபோது அது குறிப்பாக இருதயத்தைக் கிழித்திருக்க வேண்டும், ஏனெனில் இந்த விஷயத்தில் விமர்சகர் முன்னாள் விசுவாசி. ஒரு பெண்ணை குணப்படுத்த ஜோசப் தேவனின் வல்லமையைப் பயன்படுத்துவதை எஸ்றா பார்த்திருந்தார். மிசௌரியில் உள்ள சீயோன் தேசத்தின் முதல் மதிப்பாய்வுக்கு ஜோசப்புடன் செல்ல அவர் அழைக்கப்பட்டார். ஆனால் பின்னர் அவர் தனது விசுவாசத்தை இழந்திருந்ததால், தீர்க்கதரிசியை இழிவுபடுத்தும் முயற்சியில், ஓஹாயோ செய்தித்தாளில் தொடர் கடிதங்களை வெளியிட்டார். அவருடைய முயற்சிகள் செயல்படுவதாகத் தோன்றியது: இப்பகுதியில் “நட்பற்ற உணர்வுகள்… சபைக்கு எதிராக வளர்ந்தன” ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 71, பாகம் தலைப்பு). அதுபோன்ற விஷயத்தில் விசுவாசிகள் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு சரியான பதில் இல்லை என்றாலும், 1831 ஆம் ஆண்டில் இந்த விஷயம் உட்பட, பெரும்பாலும், “சுவிசேஷத்தை பிரகடனப்படுத்துவதன்” மூலம் சத்தியத்தை பாதுகாப்பதும், பொய்களை சரிசெய்வதும் கர்த்தரின் பதிலின் ஒரு பகுதியாகும். ( வசனம் 1 ). ஆம், கர்த்தருடைய பணியில் எப்போதும் விமர்சகர்கள் இருப்பார்கள், ஆனால் இறுதியில், “அதற்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்” (வசனம் 9).
“Ezra Booth and Isaac Morley,” Revelations in Context, 134 பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 71
கர்த்தர் தனது பணியை விமர்சிப்பவர்களை தனது சொந்த நேரத்தில் தாறுமாறாக்குவார்.
சபையையோ அல்லது அதன் தலைவர்களையோ மக்கள் குறைகூறுவதை அல்லது கேலி செய்வதை கேள்விப்படும்போது நாம் கவலைப்படலாம், குறிப்பாக நமக்குத் தெரிந்தவர்கள் மற்றும் நேசிப்பவர்கள் அந்த விமர்சனத்தால் செல்வாக்கடைவார்கள் என்று நாம் பயப்படுகிறோம். 1831 ஆம் ஆண்டில் ஓஹாயோவில் இதேபோன்ற ஒன்று நடந்தபோது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் தலைப்பு பாகத்தைப் பார்க்கவும் 71), ஜோசப் ஸ்மித் மற்றும் சிட்னி ரிக்டனுக்கு கர்த்தர் அனுப்பிய செய்தி விசுவாசத்தின் ஒரு செய்தியாகும், பயத்தின் செய்தி அல்ல. நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 71 படிக்கும்போது, கர்த்தர் மீதும் அவருடைய பணியின் மீதும் உங்கள் நம்பிக்கையை கட்டுவது எது? இந்த சூழ்நிலையில் கர்த்தர் தம் ஊழியர்களுக்கு அளித்த போதனைகளில் உங்களைக் கவர்ந்தது எது?
Robert D. Hales, “Christian Courage: The Price of Discipleship,” Ensign or Liahona, Nov. 2008, 72–75; Jörg Klebingat, “Defending the Faith,” Ensign, Sept. 2017, 49–53 ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 72
கர்த்தருடைய ராஜ்யத்தின் ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகார விவகாரங்களில் ஆயர்கள் பொறுப்பாளர்கள்.
நீவல் கே. விட்னி சபையின் இரண்டாவது ஆயராக பணியாற்ற அழைக்கப்பட்டபோது, அவருடைய கடமைகள் இன்றைய ஆயர்களின் கடமைகளிலிருந்து சற்று வித்தியாசமாக இருந்தன. உதாரணமாக, ஆயர் விட்னி, சீயோன் தேசத்தின் மிசௌரியில் குடியேறுவதற்கான சொத்து ஒதுக்கீடு மற்றும் அனுமதியைக் கண்காணித்தார். ஆனால் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 72ல் அவரது அழைப்பு மற்றும் கடமைகளைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, ஆயர்கள் இன்று என்ன செய்கிறார்கள் என்பதற்கான சில தொடர்புகளை, குறைந்தபட்சம், குறிப்பாக இல்லாவிட்டாலும், கருத்தில் அவர்களின் கடமைகளில் நீங்கள் கவனிக்கலாம். உதாரணமாக, உங்கள் ஆயருக்கு எந்த வழிகளில் “கணக்கு கொடுக்கிறீர்கள்”? (வசனம் 5). உங்கள் ஆயர் எந்த அர்த்தத்தில் “கர்த்தருடைய களஞ்சியத்தை வைத்திருக்கிறார்” மற்றும் தொகுதி அங்கத்தினர்களின் ஒதுக்கீடுகளை நிர்வகிக்கிறார்? ( வசனங்கள் 10, 12 பார்க்கவும்). ஒரு ஆயர் உங்களுக்கு எவ்வாறு உதவியிருக்கிறார்?
Gospel Topics, “Bishop,” topics.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 73
சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை நான் தேடலாம்.
எஸ்றா பூத் செய்த சில சேதங்களை சரிசெய்ய ஜோசப் ஸ்மித் மற்றும் சிட்னி ரிக்டன் ஆகியோர் தங்கள் சிறு பிரசங்க பணியில் இருந்து திரும்பிய பிறகு (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 71 பார்க்கவும்), வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணிக்குத் திரும்பும்படி கர்த்தர் அவர்களிடம் சொன்னார் (Bible Dictionary, “Joseph Smith Translation” பார்க்கவும்). ஆனால் அவர்கள் தொடர்ந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 73 நீங்கள் வாசிக்கும்போது, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது எப்படி, தொடர்ந்து “செயல்படுத்தக் கூடியது” (வசனம் 4), அல்லது உங்கள் வாழ்க்கையின் யதார்த்தமான ஒரு பகுதியாக உங்கள் பொறுப்புகளுக்கு மத்தியில் எவ்வாறு செய்ய முடியும் என்பதைக் கவனியுங்கள்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 75:1–12
தம்முடைய சுவிசேஷத்தை உண்மையாக பிரகடனம் செய்பவர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்.
சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க “உலகமெங்கும் செல்லுங்கள்” என்ற கட்டளைக்கு பதிலளித்த (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68: 8), பல விசுவாசமுள்ள மூத்தவர்கள் இந்த கட்டளையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார் என்பதைப்பற்றிய கூடுதல் தகவல்களை நாடினர். சுவிசேஷத்தை எவ்வாறு திறம்பட பிரசங்கிப்பது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிற என்ன சொற்களையும் சொற்றொடர்களையும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 75: 1–12 ல் நீங்கள் காண்கிறீர்கள்? விசுவாசமிக்க ஊழியக்காரர்களுக்கு கர்த்தர் என்ன ஆசீர்வாதங்களை அளிக்கிறார்? நீங்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது இந்த அறிவுறுத்தல்களும் ஆசீர்வாதங்களும் உங்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 71.சபையையும் அதன் தலைவர்களையும் மற்றவர்கள் விமர்சிக்கும்போது ஜோசப் ஸ்மித் மற்றும் சிட்னி ரிக்டன் என்ன செய்யச் சொன்னார்கள்? தேவனின் வெளிப்படுத்தல்களை மக்கள் பெறுவதற்கான “வழியை ஆயத்தப்படுத்துவதை” நாம் எவ்வாறு செய்கிறோம்?(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 71:4.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 72:2.ஆயர்கள் நமது குடும்பத்தை எவ்வாறு ஆசீர்வதித்திருக்கிறார்கள்? நமது ஆயர் என்ன செய்யச் சொல்லியிருக்கிறார், அவரை எவ்வாறு நாம் ஆதரிக்க முடியும்? ஒருவேளை உங்கள் ஆயரின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் அட்டையை உங்கள் குடும்பத்தினர் உருவாக்கலாம்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 73:3–4.ஜோசப் ஸ்மித்தின் வேதாகம மொழிபெயர்ப்பைப்பற்றி அறிந்து கொள்வதால் உங்கள் குடும்பத்தினர் பயனடைவார்களா? (வேதாகம அகராதி, “ ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு” பார்க்கவும்). ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பில் திருத்தப்பட்ட சில பாகங்களை நீங்கள் ஆராய்ந்து, தீர்க்கதரிசி மூலம் கர்த்தர் வெளிப்படுத்திய விலையேறப்பெற்ற உண்மைகளைப்பற்றி விவாதிக்க முடியும். சில உதாரணங்களுக்கு, ஆதியாகமம் 14:25–40 மற்றும் ஆதியாகமம் 50:24–38 in the Bible appendixல் ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு; மத்தேயு 4:1–11ல் பல்வேறு அடிக்குறிப்புகள்; மற்றும் லூக்கா 2:46, அடிக்குறிப்பு c.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 74:7.இந்த வசனம் இயேசு கிறிஸ்து மற்றும் சிறு பிள்ளைகளைப்பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 75:3–5, 13,16.“சும்மா” இருப்பதற்கும் “[நமது] பலத்துடன் பிரயாசப்படுதற்கும்” உள்ள வித்தியாசத்தைப்பற்றி பேசுவதன் மூலம் நாம் எவ்வாறு அவரைச் சேவிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் உதவலாம். ஒருவேளை நீங்கள் சில வீட்டு வேலைகளைத் தேர்ந்தெடுத்து, குடும்ப அங்கத்தினர்களை அந்த வேலைகளை சும்மா செய்வதையும் பின்னர் அவர்களின் முழு ஊக்கத்துடனும் செய்யவும் அழைக்கலாம். நம்முடைய முழு ஊக்கத்துடனும் நாம் எவ்வாறு கர்த்தருக்கு சேவை செய்ய முடியும்? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 75:3–5, 13, 16ன் படி, அவர் தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு என்ன வாக்குறுதி அளிக்கிறார்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Let Us All Press On,” Hymns, no. 243.