“அத்தியாயம் 3: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் படித்து கற்பியுங்கள்” என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வழிகாட்டி (2023)
“இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் படித்து கற்பியுங்கள்,” என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்
அத்தியாயம் 3
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் படித்து கற்பியுங்கள்
இந்த அத்தியாயத்தில் உள்ள பாடங்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அத்தியாவசிய கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும் கட்டளைகளைக் கொண்டிருக்கின்றன. ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் நீங்கள் கற்றுக் கொள்ளவும் கற்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளவை இந்தப் பாடங்களே. கிறிஸ்துவின் கோட்பாட்டை பிறர் தெளிவாகப் புரிந்துகொள்ள நீங்கள் உதவும் வகையில் அவை கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த அத்தியாயத்தில் முதல் பகுதி ஞானஸ்நான அழைப்பாகும். மீதமுள்ள அத்தியாயம் பின்வரும் நான்கு பாடங்களைக் கொண்டுள்ளது:
ஒவ்வொரு பாடத்திலுமுள்ள வசனங்களைப் படித்து, கோட்பாட்டைப் பொக்கிஷப் படுத்துங்கள். நீங்கள் செய்யும்போது, நீங்கள் படிக்கும் சத்தியங்களுக்கு ஆவியானவர் சாட்சி கொடுப்பார். மற்றவர்கள் சத்தியத்தைப் பற்றிய சாட்சியத்தைப் பெறுவதற்கு உதவ என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும், என்பதை அறிய அவர் உங்களுக்கு உதவுவார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:85 பார்க்கவும்.)
அவர் அவர்கள் செய்ய அழைத்ததைச் செய்யும்போது, ஜனங்கள் இரட்சகரை இன்னும் முழுமையாக அறிந்துகொள்வார்கள், ஒவ்வொரு பாடத்திலும் அழைப்புகளை கொடுத்து, மக்கள் தங்கள் ஒப்புக்கொடுத்தல்களை கைக்கொள்ள உதவுங்கள். மக்கள் ஒப்புக்கொடுத்தல்களைக் கைக்கொள்வதால், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழத் தொடங்குகிறார்கள் மற்றும் தேவனுடன் உடன்படிக்கைகளை செய்யத் தயாராகிறார்கள்.
ஞானஸ்நானத்திற்கு முன்னும் பின்னும் அனைத்து பாடங்களையும் கற்பிக்கவும். முழுநேர ஊழியக்காரர்கள் இரண்டு முறையும் பாடங்களைக் கற்பிப்பதில் முன்னணியில் உள்ளனர். தொகுதி ஊழியக்காரர்கள் அல்லது மற்ற உறுப்பினர்கள் முடிந்தால் பங்கேற்கிறார்கள். கற்பித்தலில் உறுப்பினர்களைச் சேர்ப்பது பற்றிய தகவலுக்கு அத்தியாயங்கள் 10 மற்றும் 13 பார்க்கவும்.
கற்பிக்க ஆயத்தமாகுங்கள்
நீங்கள் கற்பிக்க ஆயத்தமாகும்போது, என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்களின் செயலியில் உள்ள ஒவ்வொரு நபருக்கான தகவலையும் மதிப்பாய்வு செய்யவும். நபரின் தேவைகளின் அடிப்படையில் பாடத் திட்டத்தை உருவாக்கவும். உங்கள் கற்பித்தல் சந்திப்பின் போது அவர் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் உணர வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளவும். நீங்கள் ஆயத்தப்படுவதற்கும் திட்டமிடுவதற்கும் நேரம் எடுக்கும் போது ஆவியானவர் உங்கள் முயற்சிகளை சிறப்பானதாக்குவார்.
நீங்கள் கற்பிக்கத் தயாராகும் போது, ஜெபத்துடன் சிந்திக்க உங்களுக்கும் உங்கள் தோழருக்கும் சில கேள்விகள் உள்ளன.
-
கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்த்து முன்னேற்றம் அடைய அந்த நபருக்கு உதவ நாம் என்ன அழைப்பை விடுப்போம்? அழைப்புகள், மக்கள் மனந்திரும்பவும், “மீட்பரின் வல்லமையை” அனுபவிக்கவும் நீங்கள் எவ்வாறு உதவுகிறீர்கள் என்பதாகும் (ஏலமன் 5:11). நபரின் முன்னேற்றம், சூழ்நிலை மற்றும் தேவைகளை கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் பாடத் திட்டத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அழைப்புகளைச் சேர்க்கவும்.
-
எந்தக் கோட்பாடும் கொள்கைகளும் நாம் அழைப்பு விடுத்துள்ள அந்த நபருக்கு, ஒப்புக்கொடுத்தல்களைக் கைக்கொள்ள உதவும்? தங்கள் ஒப்புக்கொடுத்தல்களை கைக்கொள்வது ஏன் அவர்களுக்கும் கர்த்தருக்கும் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு என்ன கோட்பாடுகள் மற்றும் கொள்கைகள் உதவும் என்பதை ஜெபத்துடன் தீர்மானிக்கவும்.
-
அந்த நபர் கோட்பாட்டைக் கற்றுக்கொள்ள நாம் எவ்வாறு உதவுவோம்? கோட்பாட்டைக் கற்பிக்கத் தயாராக, பாடங்கள் 1–4 பயன்படுத்தி நீங்கள் என்ன கற்பிப்பீர்கள் என்பதை ஒழுங்கமைத்து சுருக்கவும். நீங்கள் கற்பிப்பதைப் புரிந்துகொள்ள அந்நபருக்கு உதவும் கேள்விகள், வசனங்கள், எடுத்துக்காட்டுகள் மற்றும் பொருத்தமான ஊடகங்களைக் கண்டறியவும். உங்கள் கற்பித்தலை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றிய தகவலுக்கு அத்தியாயம் 10ஐப் பார்க்கவும்.
-
ஒப்புக்கொடுத்தல்களை ஏற்றுக்கொள்வதற்கும் அதைக் கடைப்பிடிப்பதற்கும் தேவன் என்ன ஆசீர்வாதங்களை வாக்களித்திருக்கிறார்? நீங்கள் கோட்பாட்டைப் படிக்கும்போது, தேவனின் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை அடையாளம் காணுங்கள். நீங்கள் கற்பிக்கும்போது, ஆசீர்வாதங்களை வாக்களித்து, அவற்றைக்குறித்து சாட்சியளியுங்கள்.
-
எந்த உறுப்பினர்கள் பங்கேற்கலாம்? வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், எந்தெந்த உறுப்பினர்கள் அந்த நபருக்குக் கற்பிக்கவும் ஆதரவளிக்கவும் உங்களுக்கு உதவ முடியும் என்பதைத் தீர்மானிக்கவும். பாடத்திற்கு முன், அவர்களின் பங்கேற்பைப் பற்றி கலந்துரையாடவும். அத்தியாயம் 10 பார்க்கவும்.
-
நாம் வெளியே வந்த பிறகு மக்கள் தங்கள் ஒப்புக்கொடுத்தல்களைக் கைக்கொள்ள உதவுவதற்கு நாம் என்ன செய்யலாம்? மக்கள் தங்கள் ஒப்புக்கொடுத்தல்களைக் கைக்கொள்ள உதவ, ஒரு சுருக்கமான தினசரி தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் பின்தொடரவும். நீங்கள் கற்பிப்பவர்கள் தங்கள் ஒப்புக்கொடுத்தல்களைக் கைக்கொள்ள உதவுவதில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். இந்த தொடர்பு மார்மன் புஸ்தகம் அல்லது பிற வேதங்களிலிருந்து ஒரு அதிகாரம் படிப்பதை உள்ளடக்கலாம். யாராவது முந்தைய ஒப்புக்கொடுத்தல்களைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், மற்றொன்றை கொடுக்கும் முன் அதற்கு உதவுவது நல்லதாக இருக்கலாம். அத்தியாயம் 11 பார்க்கவும்.
-
அடுத்த முறை அவர்களுக்கு எப்படி சிறப்பாக நாம் உதவ முடியும்? ஒவ்வொரு கற்பிக்கும் சூழ்நிலைக்குப் பிறகு, நீங்கள் கற்பிக்கும் நபர்களின் அனுபவத்தை மதிப்பீடு செய்யுங்கள். கிறிஸ்து மீதான அவர்களின் விசுவாசம் பெருகுகிறதா? அவர்கள் ஆவியை உணர்கிறார்களா? அவர்கள் மனந்திரும்பி, ஒப்புக்கொடுத்து, கைக்கொள்கிறார்களா? அவர்கள் ஜெபிக்கிறார்களா, மார்மன் புஸ்தகத்தைப் படிக்கிறார்களா, சபைக்கு வருகிறார்களா? அவர்களுக்கு உதவ ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.
ஆவியின் வழிகாட்டுதலின்படி உங்கள் இருதயத்திலிருந்து கற்றுக்கொடுங்கள்
அனைத்து மூப்பர்கள் மற்றும் சகோதரிகளிடம் பேசுகையில், பிரதான தலைமையும், பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமமும் கூறினார்கள்:
“மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் செய்தியை, ஊழியக்காரர்கள் மற்றும் கற்பிக்கப்படுபவர்கள் இருவரையும் வழிநடத்த ஆவியானவரை அனுமதிக்கும் விதத்தில் கற்பிப்பதே எங்கள் நோக்கம். [பாடங்களின்] கருத்தாக்கங்களைக் கற்றுக்கொள்வது அவசியம், ஆனால் இவை மனப்பாடம் செய்வதன் மூலம் கற்பிக்கப்படக்கூடாது. ஊழியக்காரர் ஆவியால் தூண்டப்பட்டபடி தனது சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்த சுதந்தரமாக உணர வேண்டும். அவர் மனப்பாடம் செய்து ஒப்பிக்கக் கூடாது, ஆனால் அவரது சொந்த வார்த்தைகளில் இருதயத்திலிருந்து பேச வேண்டும். அவர் பாடங்களின் வரிசையிலிருந்து விலகலாம், அவரது [நபரின்] ஆர்வம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, அவர் செய்ய உணர்த்தப்பட்டதைக் கொடுக்கலாம். அவர் தனது சொந்த நம்பிக்கையுடனும் அவரது சொந்த வார்த்தைகளுடனும் பேசினால், அவர் தனது போதனைகளின் உண்மைக்கு சாட்சியளிக்க வேண்டும்.
தனிநபர் தேவைகளுக்கு ஏற்ப கற்பித்து அழைக்கவும்
மக்கள் முழுமையாக ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்குத் தயாராவதற்கு எந்த வகையிலும் பாடங்களைக் கற்பிக்க உங்களுக்கு நெகிழ்வுத்தன்மை உள்ளது. நீங்கள் எந்தப் பாடத்தைக் கற்பிக்கிறீர்கள், எப்போது கற்பிக்கிறீர்கள், அதற்கு எவ்வளவு நேரம் கொடுக்கிறீர்கள் என்பது நீங்கள் கற்பிக்கும் நபரின் தேவைகள் மற்றும் ஆவியின் வழிகாட்டுதலின் மூலம் சிறப்பாக தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிறிஸ்தவப் பின்னணி இல்லாதவர்களுக்குக் கற்பிக்கும்போது, பரலோக பிதாவுடன் அதிக தொடர்பை வளர்த்துக்கொள்ளவும், அவருடைய திட்டத்தைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கு உதவுவதன் மூலம் நீங்கள் தொடங்கலாம் (அத்தியாயம் 10ல் “Teaching People Who Do Not Have a Christian Background” பார்க்கவும்).
எந்த அழைப்பை கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் என்பதில் ஆவியானவர் உங்களுக்கு வழிகாட்டுவாராக. சரியான நேரத்தில் சரியான அழைப்பு, அவர்களின் விசுவாசத்தை வளர்க்கும் விஷயங்களைச் செய்ய மக்களைத் தூண்டும். இந்த செயல்கள் இருதயத்தில் பெரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும் (மோசியா 5:2; ஆல்மா 5:12–14 பார்க்கவும்).
எளிமையான, தெளிவான மற்றும் சுருக்கமான பாடங்களைக் கற்பிக்கவும். குறிப்பாக, கற்பித்தல் சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது, மற்றும் 5 நிமிடத்தில்கூட ஒருவருக்கு நீங்கள் கற்பிக்கலாம்.
ஒரு பாடத்தின் கொள்கைகளை கற்பிக்க பொதுவாக பல சந்திப்புகள் உங்களுக்கு தேவைப்படும். நீங்கள் குறுகிய பாடங்களைக் கற்பித்தால், அடிக்கடி கற்பித்தால், சிறிய பகுதிகளைக் கற்பித்தால், மக்கள் உங்கள் செய்தியை நன்றாகப் புரிந்துகொள்வார்கள்.