“கேளுங்கள், செவிகொடுங்கள், கவனியுங்கள்,” இளைஞரின் பெலனுக்காக, ஜனு. 2021, 32.
இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஜனுவரி 2021
கேளுங்கள், செவிகொடுங்கள், கவனியுங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் முதன்முதலான வார்த்தை செவிகொடுங்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:1 பார்க்கவும்). இதன் பொருள் “கீழ்ப்படிய வேண்டும் என்ற நோக்கத்துடன் கேட்பது.” செவிகொடுத்தல் என்பது “அவருக்கு செவிகொடுப்பதாகும்” இரட்சகர் சொல்வதைக் கேட்டல் பின்பு அவரது ஆலோசனையைக் கவனிப்பதாகும். ”அவருக்குச் செவிகொடுங்கள்”, என்ற அந்த இரு வார்த்தைகளில், தேவன் நமக்கு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் இந்த வாழ்க்கையில் சந்தோஷத்துக்கு மாதிரியைக் கொடுக்கிறார். நாம் கர்த்தரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க வேண்டும், அவர் நமக்குச் சொன்னவற்றுக்குச் செவிகொடுத்து, கவனிக்க வேண்டும்.
அவர் சொல்வதைக் கேட்க நாம் எங்கு செல்லமுடியும் ?
நாம் வேதங்களிடத்தில் செல்லமுடியும். ஆலயத்திலும் நாம் அவருக்குச் செவிகொடுக்க முடியும். பரிசுத்த ஆவியின் கிசுகிசுப்புக்களை அடையாளம் காண நமது திறமைகளை நாம் சுத்திகரிக்கும்போது, நாம் அதிக தெளிவாக அவருக்குச் செவி கொடுக்கிறோம். கடைசியாக, தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்களின் வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கும்போது, நாம் அவருக்கு செவிகொடுக்கிறோம்.
மீட்பர் என்ன சொன்னார், இப்போது அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் அவர் என்ன சொல்கிறார் என்பதை நீங்கள் அதிக தன்னிச்சையாக கேட்டு, செவிகொடுத்து, கவனிக்கும்போது என்ன நடக்கும்? சோதனை, போராட்டங்கள் மற்றும் பெலவீனங்களை சமாளிக்க கூடுதல் வல்லமையுடன் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என நான் வாக்களிக்கிறேன். உங்கள் திருமணம், குடும்ப உறவுகள், மற்றும் அன்றாட வாழ்வில் அற்புதங்களை நான் வாக்களிக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் கொந்தளிப்பு அதிகரித்தாலும் சந்தோஷத்தை உணரும் உங்கள் திறன் அதிகரிக்குமென நான் வாக்களிக்கிறேன்.
© 2020 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாடுகளில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly For the Strength of Youth Message, January 2021 மொழிபெயர்ப்பு. Tamil. 17463 418.