“அவர் வந்தார்,” இளைஞரின் பெலனுக்காக, டிசம்பர் 2021.
இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, டிசம்பர் 2021
அவர் வந்தார்
இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து அவர் யாரென்றும் அனைத்து மக்களுக்கும் அவர் என்ன கொண்டு வந்தாரென்றும் நமக்கு போதிக்கிறாரென்று கோட்பாடும் உடன்படிக்கைகளும் சாட்சியளிக்கிறது.
வழங்கப்பட்டது - ஜெனடி பெய்க்
“நான் உலகத்தில் இருந்ததாலும் மாம்சத்தை என்னுடைய கூடாரமாக்கியதாலும் மனுஷ குமாரர்களுக்கு மத்தியில் வாசம் செய்தேன்.”
“நானே தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து. நான் என் சொந்தமானவர்களிடத்தில் வந்தேன், எனக்கு சொந்தமானவர்களோ என்னை ஏற்றுக்கொள்ளவில்லை.”
அவர் பிதாவின் சித்தத்தைச் செய்ய வந்தார்
பரலோகத்திலிருப்பதைப் போலவே பூமியிலும் - ஜஸ்டின் குன்ஸ்
“நானே இயேசு கிறிஸ்து; எனது பிதாவின் சித்தத்தின்படி நான் வந்தேன், அவரது சித்தத்தை நான் செய்கிறேன்.”
பிள்ளை வளர்ந்து ஆவியில் பலங்கொண்டது - வால்டர் ரானே
“முதலில் அவர் பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை, ஆனால் பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளும்வரை கிருபையிலிருந்து கிருபைக்கு தொடர்ந்தார்;
“இப்படியாக அவர் தேவகுமாரனென்று அழைக்கப்பட்டார், ஏனெனில் முதலில் அவர் பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.”
சகல ஜனங்களையும் அவர் மீட்க வந்தார்
கெத்செமனேயில் கிறிஸ்து –மைக்கேல் மால்ம்
“நானே தேவன், உலகத்தின் மீட்பிற்காக என்னுடைய ஒரேபேறான குமாரனை உலகத்திற்குள் அனுப்பினேன்.”
“இதோ, உலகத்தின் இரட்சகரான நானே இயேசு கிறிஸ்து.”
அவரைக் குறித்து சாட்சியமளிக்க மற்றவர்களை அவர் அனுப்புகிறார்
பட விளக்கம் - ஜஸ்டின் குன்ஸ்
“பூமியின் குடிகளுக்கு நற்செய்திகளை அறிவியுங்கள்.”
“நீங்கள் கேட்ட, மெய்யாகவே நீங்கள் நம்புகிற, சத்தியமென அறிந்த காரியங்களை அறிவியுங்கள்.”
“நானே அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், இருளானது அதை விளங்கிக்கொள்ளாத, இருளில் பிரகாசிக்கிற ஒளியான, உலகத்தின் ஒளியும் ஜீவனுமாயிருக்கிறேன்.”
“உலகத்தில் வருகிற ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி நானே.”
© 2021 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாவில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly For the Strength of Youth Message, December 2021 மொழிபெயர்ப்பு. Tamil. 17476 418