2021
நமது முன்னோருக்கு குடும்ப வரலாறு உதவுகிறது
டிசம்பர் 2021


“நமது முன்னோருக்கு குடும்ப வரலாறு உதவுகிறது,” லியஹோனா டிசம்பர் 2021

லியஹோனா மாதாந்தர செய்தி, டிசம்பர் 2021

நமது முன்னோருக்கு குடும்ப வரலாறு உதவுகிறது

நமது குடும்ப உறுப்பினர்களைப்பற்றி கண்டுபிடித்தலும் அறிந்து கொள்ளுதலுமே குடும்ப வரலாறு. நமது முன்னோடிகளுக்கு நாம் ஆலயப்பணி செய்யும்படியாக அவர்களைப்பற்றிய தகவலையும் நாம் சேகரிக்கிறோம்.

alt text

பரலோக பிதாவின் சந்தோஷத்தின் திட்டத்தின் மையமாக குடும்பங்களிருக்கின்றன. என்றென்றும் தொடர அவர் குடும்பங்களுக்காக ஒரு வழியை ஆயத்தம் செய்திருக்கிறார். நமது குடும்ப வரலாறையும் ஆலயப்பணியையும் நாம் செய்யும்போது, ஜீவிக்கிற, மரித்த நமது குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வர நாம் உதவுகிறோம். (“ஆலயப்பணி என்பது” நம் துணைக்கு முத்திரிப்பதைப் போலவும், அப்படியே நம் முன்னோர்களுக்கு ஆலயத்தில் நியமங்கள் செய்வதைப் போலவும் நமக்கே நாம் ஆலய நியமங்களைப் பெறுவது என்பதாகும்.)

குடும்ப வரலாறும் ஆலயப்பணியும்

பூமியில் வாழ்ந்த அல்லது வாழப்போகிற ஒவ்வொரு நபருக்கும் சுவிசேஷத்தின் நியமங்கள் தேவையாயிருக்கிறது. நமது முன்னோர்களுக்கு அந்த வாய்ப்பில்லாது இருந்திருந்தால் அவர்களுக்காக ஆலயத்தில் நாம் நியமங்களைச் செய்யலாம். குடும்ப உறுப்பினர்களுடன் முத்திரித்தல் அந்த நியமங்களில் ஒன்று. “முத்திரித்தல்” என்றால், நாம் நீதியாயிருந்தால் நமது குடும்பங்களுடன் என்றென்றும் வாழ நமக்கு சாத்தியமாகும் என்பதாகும். ஆலயங்களில் மட்டுமே நமது குடும்பங்களுடன் நாம் முத்திரிக்கப்பட முடியும்.

குடும்ப வரலாற்றுப் பணியின் ஆசீர்வாதங்கள்

குடும்பம்

உயிரோடிருக்கிற நமது குடும்ப உறுப்பினர்களுடன் நமது உறவுகளைப் பெலப்படுத்த குடும்ப வரலாறு நமக்கு உதவலாம். கதைகளை, புகைப்படங்களை மற்றும் பிற நினைவுகளை ஒருவருக்கொருவர் நாம் பகிர்ந்துகொள்ளும்போது குடும்ப பிணைப்புகளை நாம் உருவாக்குகிறோம். ஒருவருக்கொருவர் மீதுள்ள நமது அன்பையும்கூட நாம் பெலப்படுத்தலாம். நமது குடும்ப வரலாறில் பணிபுரிவது, இயேசு கிறிஸ்துவிடம் நம்மை நெருக்கமாகக் கொண்டுவருமென தீர்க்கதரிசிகளும்கூட வாக்களித்திருக்கிறார்கள்.

நமது முன்னோர்களைக் கண்டுபிடித்தல்

சீன மொழியில் பதிவேடுகள்

நமது தற்போதைய குடும்பத்தினருடனும் நமது முன்னோர்களுடனும் நாம் முத்திரிக்கப்பட பரலோக பிதா விரும்புகிறார். நமது முன்னோர்களுடன் நாம் முத்திரிக்கப்படுவதற்கு முன்பு அவர்களைப்பற்றிய தகவலை நாம் கண்டுபிடித்து பின்னர் அவற்றை சேமிக்கவேண்டும். ஆனால், பெயர்களை, தேதிகளை மற்றும் இடங்களை ஆராய்வதைவிட குடும்ப வரலாறு முக்கியமானது. நமது முன்னோர்களைப்பற்றி நாம் அறிந்துகொள்ளும்போது அவர்களோடு நாம் அதிகமாக இணைக்கப்படுவதாக நாம் உணருகிறோம்.