“நம் கால்களுக்கு ஒரு தீபம்,” இளைஞரின் பெலனுக்காக, ஆக. 2022.
இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஆகஸ்டு 2022
நம் கால்களுக்கு ஒரு தீபம்
பண்டைய இஸ்ரவேலர்களுக்கு ஒரு பொதுவான பொருள், கர்த்தர் நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை நமக்குக் கற்பிக்க முடியும்.
உண்மைகள்
பழைய ஏற்பாட்டு காலத்தில், இருளில் வெளிச்சத்தை எடுத்துச் செல்ல எண்ணெய் விளக்குகளை மக்கள் பயன்படுத்தினர். இந்த விளக்குகளில் பெரும்பாலானவை மூன்று அடிப்படை அம்சங்களைக் கொண்டிருந்தன:
-
ஆலிவ் எண்ணெயை வைத்திருக்க ஒரு களிமண் கிண்ணம்; பொதுவாக ஒரு நபரின் உள்ளங்கையில் பிடிக்கும் அளவுக்கு சிறியது
-
எண்ணெயை உறிஞ்சிய பிறகு ஒரு நூல் திரியை ஏற்ற வேண்டும்
-
திரியைப் பிடிக்க ஒரு துளி அல்லது முனை
ஒரே ஒரு திரியுள்ள எளிய எண்ணெய் விளக்குகள் அவற்றைச் சுற்றி ஒரு சில அடிகளுக்கு ஒளி வீசும். நடக்கும்போது பயன்படுத்தினால், இருட்டில் நீங்கள் கவனமாகச் சுற்றி வருவதற்கு, உங்களுக்கு முன் ஒரு படி மேலே பார்க்க போதுமான வெளிச்சம் அதில் இருக்கும்.
நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்
உலகில் நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளிலும் குழப்பத்தினூடேயும் கர்த்தரின் வார்த்தை நம் வழியை ஒளிரச் செய்ய முடியும்.
நம்முடைய ஒளியை மறைக்காமல், மற்றவர்கள் அதைப் பார்க்கும்படியாக, சுவிசேஷத்தின் ஒளியை நம்முடன் எடுத்துச் செல்லுமாறு கர்த்தர் நம்மைக் கேட்டுக்கொண்டார் (மத்தேயு 5:14–16 பார்க்கவும்).
நம் விளக்குகளில் எண்ணெய் நிரப்பப்படுவதை உறுதி செய்வது நம் கையில்தான் உள்ளது (மத்தேயு 25:1–13 பார்க்கவும்). ஜெபம், வேதப் படிப்பு, சேவை, தீர்க்கதரிசியைப் பின்பற்றுதல் மற்றும் விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பின் பிற நடத்தைகள் மூலம் இதைச் செய்கிறோம் (Spencer W. Kimball, Faith Precedes the Miracle [1972], 256 பார்க்கவும்).
நாம் விசுவாசத்தைக் கடைப்பிடித்தால், இன்னும் ஒரு அடி எடுத்து வைக்கும் அளவுக்கு கர்த்தர் சில சமயங்களில் நம் பாதையை ஒளிரச் செய்கிறார் (Boyd K. Packer, “The Candle of the Lord,” Ensign, Jan. 1983, 54 பார்க்கவும்).
© 2022 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly For the Strength of Youth Message, August 2022 மொழிபெயர்ப்பு. Tamil. 18316 418