2022
இல்ல மாலை என்றால் என்ன?
ஆகஸ்டு 2022


“இல்ல மாலை என்றால் என்ன?” Liahona, Aug. 2022.

லியஹோனா மாதாந்தர செய்தி, ஆகஸ்டு 2022

இல்ல மாலை என்றால் என்ன?

அம்மா, அப்பா மற்றும் சிறுமி வெளியில் அமர்ந்திருத்தல்

இல்ல மாலை என்பது உங்கள் குடும்பத்தினர் ஒன்றுகூடுவதற்கு வாரத்தில் ஒதுக்கப்பட்ட நேரம். இந்த நேரத்தில், நீங்கள் “சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளலாம், சாட்சிகளைப் பலப்படுத்தலாம், ஒற்றுமையைக் கட்டியெழுப்பலாம், ஒருவருக்கொருவர் மகிழலாம்” (General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 2.2.4, ChurchofJesusChrist.org). இல்ல மாலை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வித்தியாசமாக இருக்கும். ஆனால் ஒன்றுகூடி நெருங்கி வரவும், இரட்சகருடன் நெருங்கி வருவதற்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்துவதே குறிக்கோள்.

ஆயத்தம்

உங்கள் குடும்பம் விரும்பும் ஒரு நிகழ்ச்சியையும், நீங்கள் ஒன்றாக விவாதிக்கவும் கற்றுக்கொள்ளவும் விரும்பும் ஒரு சுவிசேஷத் தலைப்பைப்பற்றியும் சிந்தியுங்கள். மேலும், ஒவ்வொரு வாரமும் பெரும்பாலான அல்லது அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சந்திக்கக்கூடிய ஒரு நாளையும் நேரத்தையும் தேர்ந்தெடுக்கவும். திங்கட்கிழமை இரவுகளில் இல்ல மாலையை நடத்த உறுப்பினர்களை சபை ஊக்குவிக்கிறது. ஆனால் இது குடும்பங்களுக்கு மிக நன்றாக அமையும்போது அவர்கள் சந்திக்கலாம்.

குடும்பம் ஜெபித்தல்

ஜெபம்

பல குடும்பங்கள் ஜெபத்துடன் இல்ல மாலையைத் தொடங்கி முடிக்கின்றன. இது பரிசுத்த ஆவியை தங்கள் வீட்டிற்குள் அழைக்கிறது. பிள்ளைகளும் பெரியவர்களும் ஒரு சிறிய குழுவுடன் ஜெபம் செய்ய கற்றுக்கொள்ள இல்ல மாலை ஒரு சிறந்த நேரம்.

இசை

பல குடும்பங்களில் ஒரு தொடக்க மற்றும் நிறைவு பாடல் உள்ளது. வழக்கமாக பாடல் புத்தகம் அல்லது ஆரம்ப வகுப்பு பாடல் புத்தகத்தில் இருந்து ஒரு பாடலை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். music.ChurchofJesusChrist.orgல் பாடல்களின் பியானோ பதிவுகள் சபையில் உள்ளன. ஆலய சதுக்கத்திலுள்ள டாபர்னாக்கல் சேர்ந்திசைக் குழுவின் காணொலிகளையும் நீங்கள் பார்க்கலாம். இல்ல மாலை நேரத்தில் பாடுவது, சபையில் பாடப்படும் பாடல்களை கற்றுக்கொள்ள உறுப்பினர்களுக்கு உதவுகிறது.

பாடம்

இல்ல மாலைக்கு உதவும் பல ஆதாரங்கள் சபையில் உள்ளன. லியாஹோனா, Friend அல்லது இளைஞர்களின் பெலனுக்காகவிலிருந்து ஒரு கட்டுரையைப் படித்து விவாதிக்க நீங்கள் சில நிமிடங்களை எடுக்கக்கூடும். சபை காணொலிகளைப் பார்க்கவும் விவாதிக்கவும் இது ஒரு நேரமாக இருக்கலாம். அல்லது பொது மாநாட்டிலிருந்து ஒரு உரையைப் படிக்கலாம், வேதங்களைப் படிக்கலாம் அல்லது என்னைப் பின்பற்றி வாருங்களிலுள்ள, அந்த வார வாசிப்பைப்பற்றி விவாதிக்கலாம்.

பிள்ளைகள் தின்பண்டங்களை சமைத்தல்

பிள்ளைகள் தின்பண்டங்களை சமைக்கிற புகைப்படம் - மிச்சேல் லோய்னஸ்

குடும்ப ஈடுபாடு

இல்ல மாலையில் பிள்ளைகள் பங்கேற்கலாம். அவர்கள் நிகழ்ச்சிகளைத் திட்டமிடலாம், ஜெபம் செய்யலாம் அல்லது பாடல்களைத் தேர்ந்தெடுத்து நடத்தலாம். அவர்கள் பாடங்களையும் கற்பிக்கலாம். இல்ல மாலைக்கு முன், உங்கள் பிள்ளைக்கு Friend இதழில் ஒரு கதையை அல்லது அவர்களுக்குப் பிடித்த வேதக் கதையைப் படிக்க உதவலாம். அந்தக் கதையை அந்தப் பிள்ளை அந்தக் குடும்பத்திற்குப் பாடமாகச் சொல்லலாம். பல பிள்ளைகள் இல்ல மாலைக்காக வேதக் கதைகளை நடிக்க விரும்புகிறார்கள். வயதான பிள்ளைகள் பாடத்தைத் திட்டமிடட்டும் அல்லது அவர்கள் படிக்க விரும்பும் பொது மாநாட்டு உரையைத் தேர்ந்தெடுக்கட்டும். பின்னர் அவர்கள் விவாதத்தை நடத்த வேண்டும்.

செயல்பாடுகள்

பல குடும்பங்கள் இல்ல மாலையின் ஒரு பகுதியாக நிகழ்ச்சிகளைச் செய்து மகிழ்கின்றனர். உள்ளரங்க செயல்பாடுகளில் விளையாட்டு விளையாடுதல், கைவினைப்பொருட்கள் செய்தல் அல்லது ஒன்றாக சமைத்தல் ஆகியவை அடங்கும்.

வெளியரங்க செயல்பாடுகளுக்கு நீங்கள் நடைப்பயிற்சி செய்யலாம், குடும்பமாக பயணம் செய்யலாம் அல்லது வெளியே ஒன்றாக விளையாடலாம். அனைத்து குடும்ப உறுப்பினர்களும் செய்யக்கூடிய ஒரு செயல்பாட்டைநிகழ்ச்சியைக் கண்டறிந்து, ஒன்றாக மகிழ்ச்சியாக இருங்கள். பரிசுத்த ஆவியை விரட்டக்கூடிய போட்டித் தருணங்களைத் தவிர்க்கவும்.

சேவை

மற்றவர்களுக்கு சேவை செய்ய இல்ல மாலை குடும்பங்களுக்கு ஒரு சிறந்த நேரம். உதாரணமாக, நீங்கள் சில வயதான அயலாருக்கு உதவலாம், வீடற்று தங்குமிடத்திலிருப்போருக்கு உணவு பரிமாறலாம், ஊழியக்காரர்களுக்கு எழுதலாம் அல்லது குப்பைகளை எடுக்கலாம்.