“இளம் வீரர்கள்,” நண்பன், ஆகஸ்ட் 2024, 26–27.
நண்பன் மாதாந்தர செய்தி, ஆகஸ்ட் 2024
இளம் வீரர்கள்
அம்மோனாலும் அவனது சகோதரர்களாலும் கற்பிக்கப்பட்ட மக்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினர். அவர்கள் தங்கள் ஆயுதங்களைப் புதைத்துவிட்டு, இனி ஒருபோதும் சண்டையிட மாட்டோம் என்று தேவனிடம் வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் விரைவில் அவர்கள் தங்கள் குடும்பங்களை பாதுகாக்க வேண்டியிருந்தது. தங்கள் ஆயுதங்களை புதைத்த பிதாக்கள் தேவனிடம் கொடுத்த வாக்குறுதியை மீற விரும்பவில்லை. எனவே அவர்களின் குமாரர்கள் அவர்களுக்கு பதிலாக போரிட தயாரானார்கள். அவர்கள் இரண்டாயிரம் இளம் வீரர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஸ்ட்ரிப்லிங் என்றால் “இளமை” என்று பொருள்.
இளம் வீரர்கள் இதற்கு முன்பு ஒரு போரிலும் சண்டையிட்டதில்லை. ஆனால் அவர்களுடைய தாய்மார்கள் அவர்களை ஆயத்தப்படுத்த உதவினார்கள், தேவனை நம்பும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.
அவர்கள் ஏலமனைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் தைரியமாக இருந்தார்கள்,தேவன் அவர்களுக்கு உதவினார். அவர்கள் அனைவரும் காயமடைந்தனர், ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். தேவன் அவர்களுடைய விசுவாசத்தை கனம் பண்ணினார், அவர்கள் அனைவரும் உயிர்தப்பினர்!
© 2024 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்திர நண்பன் செய்தி, ஆகஸ்ட் 2024. மொழிபெயர்ப்பு. Tamil. 19290 418