“என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக பயன்படுத்துதல்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)
“என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக பயன்படுத்துதல்” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024
என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக பயன்படுத்துதல்
இந்த ஆதாரம் யாருக்கானது?
இந்த ஆதாரம் தனித்தனியாக, குடும்பமாக, மற்றும் சபை வகுப்புகளில் மார்மன் புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ள விரும்பும் எவருக்குமானது. முன்னர் நீங்கள் வேதங்களை வழக்கமாக படித்திருக்கவில்லை என்றால், ஆரம்பிப்பதற்கு இந்த ஆதாரம் உங்களுக்கு உதவும். ஏற்கனவே உங்களுக்கு வேதங்களைப் படிக்கும் நல்ல பழக்கம் இருந்தால், நீங்கள் அர்த்தமுள்ள அனுபவங்களைப் பெற இந்த ஆதாரம் உங்களுக்கு உதவ முடியம்.
வீட்டில் தனிநபர்களும் குடும்பங்களும்
சுவிசேஷத்தைக் கற்க சிறந்த இடம் வீடு. சபையில் உங்கள் ஆசிரியர்கள் உங்களுக்கு ஆதரவளிக்க முடியும், மற்ற தொகுதி உறுப்பினர்களிடமிருந்து நீங்கள் ஊக்கத்தைப் பெறலாம். ஆனால் ஆவிக்குரிய ரீதியில் வாழ்வதற்கு, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் “தேவனுடைய நல்வசனத்தினால்” தினசரி போஷிப்பு தேவை. (மரோனி 6:4). தலைவர் ரசல் எம். நெல்சன், “தொடக்க குறிப்புகள்,” லியஹோனா, நவ. 2018, 6–8 ஐயும் பார்க்கவும்).
உங்களுக்கு உதவிகரமான எந்தவிதத்திலும் இந்த ஆதாரத்தை பயன்படுத்துங்கள். குறிப்புகள் மார்மன் புஸ்தகத்தில் காணப்படும் சில நித்திய சத்தியங்களை கோடிட்டுக் காட்டுவதுடன், தனித்தனியாக, உங்கள் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் வேதங்களைப் படிக்க உதவும் யோசனைகளையும் நிகழ்ச்சிகளையும் பரிந்துரைக்கிறது. நீங்கள் படிக்கும்போது, உங்களுக்கு அர்த்தமுள்ள நித்திய சத்தியங்களைக் கண்டறிய ஆவியின் வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள். உங்களுக்கான தேவனின் செய்திகளைத் தேடுங்கள், நீங்கள் பெறும் தூண்டுதல்களைப் பின்பற்றுங்கள்.
சபையில் ஆசிரியர்கள் மற்றும் கற்பவர்கள்
நீங்கள் ஆரம்ப வகுப்பு, இளைஞர் அல்லது வயது வந்தோர் ஞாயிறு பள்ளி வகுப்பு, ஆரோனிய ஆசாரியத்துவ குழுமம் அல்லது இளம் பெண்கள் வகுப்பில் கற்பித்தால், நீங்கள் கற்பிக்கத் தயாராகும் போது, இந்த ஆதாரத்தில் உள்ள குறிப்புகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவீர்கள். என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக உங்கள் ஞாயிறு வகுப்புக்கான பாடத்திட்டம் ஆகும். இந்த ஆதாரத்தில் உள்ள கற்றல் யோசனைகள் வீட்டிலும் சபையிலும் கற்றலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் கற்பிக்க ஆயத்தமாகும்போது, வேதங்களில் உங்கள் சொந்த அனுபவங்களைப் பெறுவதன் மூலம் தொடங்குங்கள். நீங்கள் வேதங்களைத் தேடி, பரிசுத்த ஆவியின் உணர்த்துதல் பெறும்போது உங்களுடைய மிக முக்கியமான ஆயத்தம் நிகழும். பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவைப் போல் ஆக உங்களுக்கு உதவும் நித்திய சத்தியங்களைத் தேடுங்கள். என்னைப் பின்பற்றி வாருங்கள் இந்த சத்தியங்களில் சிலவற்றை அடையாளம் காணவும், வேதத்தின் உட்கருத்தைப் புரிந்துகொள்ளவும் உங்களுக்கு உதவும்.
சுவிசேஷம் கற்றுக்கொள்வது, சிறந்த முறையில், வீட்டை மையமாகக் கொண்டது மற்றும் சபையால் ஆதரிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேறு வார்த்தைகளில் எனில், வீட்டில் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்வதற்கும், அதன்படி வாழ்வதற்கும் நீங்கள் கற்பிக்கும் நபர்களுக்கு ஆதரவளிப்பதே உங்களின் முக்கிய பொறுப்பு. அவர்களின் அனுபவங்கள், எண்ணங்கள் மற்றும் வேதப் பகுதிகளைப் பற்றிய கேள்விகளைப் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அவர்கள் கண்டறிந்த நித்திய சத்தியங்களைப் பகிர்ந்து கொள்ள அவர்களை அழைக்கவும். ஒரு குறிப்பிட்ட அளவு பாடத்தைக் கற்பிப்பதை விட இது மிகவும் முக்கியமானது.
ஆரம்ப வகுப்பு
நீங்கள் மார்மன் புஸ்தகத்தை தனிப்பட்ட முறையில் மற்றும் உங்கள் குடும்பத்துடன் படிக்கும் போது ஆரம்ப வகுப்பு பாடத்தை கற்பிப்பதற்கான உங்கள் ஆயத்தம் தொடங்குகிறது. நீங்கள் செய்யும்போது, உங்கள் ஆரம்ப வகுப்பில் உள்ள குழந்தைகளைப் பற்றிய ஆவிக்குரிய பதிவுகள் மற்றும் பரிசுத்த ஆவியின் உள்ளுணர்வுகளுக்குத் திறந்த மனதுடனிருங்கள். ஜெபத்தில் இருங்கள், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவ ஆவியானவர் உங்களை யோசனைகளால் உணர்த்துவார்.
நீங்கள் கற்பிக்கத் தயாராகும்போது, இந்த ஆதாரத்தில் உள்ள கற்பித்தல் யோசனைகளை ஆராய்வதன் மூலம் கூடுதல் உணர்த்துதல் பெறலாம். என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காகவிலுள்ள ஒவ்வொரு குறிப்பிலும் “பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்கான ஆலோசனைகள்” என்ற தலைப்பில் ஒரு பகுதி உள்ளது. உங்கள் உணர்த்துதலைத் தூண்டுவதற்கான பரிந்துரைகளாக இந்த யோசனைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் ஆரம்ப வகுப்பில் உள்ள குழந்தைகளை நீங்கள் அறிவீர்கள்—மேலும் வகுப்பில் அவர்களுடன் பழகும்போது அவர்களை இன்னும் நன்றாக அறிந்து கொள்வீர்கள். தேவன் அவர்களையும் அறிவார், மேலும் அவர்களுக்கு கற்பிப்பதற்கும் ஆசீர்வதிப்பதற்கும் சிறந்த வழிகளை அவர் உங்களுக்கு உணர்த்துவார்.
உங்கள் வகுப்பில் உள்ள குழந்தைகள் என்னைப் பின்பற்றி வாருங்களிலுள்ள சில நிகழ்ச்சிகளை ஏற்கனவே அவர்களுடைய குடும்பத்துடன் செய்திருக்க வாய்ப்புள்ளது. அது சரிதான். திரும்ப திரும்ப செய்வது நல்லது. வீட்டில் கற்றுக்கொண்டதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள குழந்தைகளை அழைப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்—அவர்கள் வீட்டில் கற்றுக் கொள்ளாவிட்டாலும், குழந்தைகள் பங்கேற்க வழிகளை நீங்கள் திட்டமிட வேண்டும். இந்த சத்தியங்கள் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் மீண்டும் கற்பிக்கப்படும்போது குழந்தைகள் சுவிசேஷ சத்தியங்களை மிகவும் திறம்பட கற்றுக்கொள்கிறார்கள். ஒரு கற்றல் நிகழ்ச்சி குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருப்பதை நீங்கள் கண்டால், குறிப்பாக நீங்கள் சிறு குழந்தைகளுக்கு கற்பிக்கிறீர்கள் என்றால் அதை மீண்டும் செய்யவும். முந்தைய பாடத்தின் நிகழ்ச்சியையும் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.
ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளைக் கொண்ட மாதங்களில், ஐந்தாம் ஞாயிறு அன்று திட்டமிடப்பட்ட என்னைப் பின்பற்றி வாருங்கள் பிற்சேர்க்கை B: ஆரம்ப வகுப்புக்காக—தேவனின் உடன்படிக்கையின் பாதையில் வாழ்நாள் முழுவதுக்குமாக பிள்ளைகளை ஆயத்தப்படுத்தலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்றல் நிகழ்ச்சிகளுடன் மாற்ற ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
இளைஞர் மற்றும் வயதுவந்தோர் ஞாயிற்றுக் கிழமை வகுப்புகள்
ஞாயிறு பள்ளி வகுப்புகளில் நாம் கூடிவருவதற்கு ஒரு முக்கிய காரணம், நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முயற்சி செய்யும்போது ஒருவரையொருவர் ஆதரிப்பதும் ஊக்குவிப்பதும் ஆகும். இதைச் செய்வதற்கான ஒரு எளிய வழி, “என்னைப் பின்பற்றி வாருங்களிலுள்ள, மார்மன் புஸ்தகத்தைப் படித்தபோது, இந்த வாரம் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு என்ன கற்பித்தார்?” போன்ற கேள்வியைக் கேட்பதாகும். இந்தக் கேள்விக்கான பதில்கள், இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய சுவிசேஷத்திலும் நம்பிக்கையை வளர்க்கும் அர்த்தமுள்ள விவாதங்களுக்கு வழிவகுக்கும்.
பின்னர் நீங்கள் என்னைப் பின்பற்றி வாருங்களிலுள்ள ஆய்வு பரிந்துரைகளின் அடிப்படையில் கலந்துரையாடலுக்கு அழைக்கலாம் உதாரணமாக, மனந்திரும்புதலில் இரட்சகரின் பங்கைப் பற்றி போதிக்கும் ஆல்மா 36ல் தேடி,வார்த்தைகளின் பட்டியலை உருவாக்க ஒரு ஆய்வு யோசனை பரிந்துரைக்கலாம். அவர்கள் கண்டறிந்த வார்த்தைகளைப் பற்றிப் பகிரவும் பேசவும் வகுப்பு உறுப்பினர்களை நீங்கள் கேட்கலாம். அல்லது ஒரு வகுப்பாக சேர்ந்து பட்டியலை உருவாக்க சிறிது நேரம் செலவிடலாம்.
ஆரோனிய ஆசாரியத்துவ குழுமங்கள் மற்றும் இளம் பெண்கள் வகுப்புகள்
ஞாயிற்றுக்கிழமைகளில் ஆரோனிய ஆசாரியத்துவக் குழுமங்கள் மற்றும் இளம் பெண்கள் வகுப்புகள் சந்திக்கும் போது, அவற்றின் நோக்கம் ஞாயிறு பள்ளி வகுப்பிலிருந்து சற்றே வித்தியாசமானது. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்வதற்கு ஒருவருக்கொருவர் உதவுவதோடு, இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுத்தும் பணியை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை வழங்கவும் இந்த குழுக்கள் கூடுகின்றன. (General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 1.2 பார்க்கவும்). அவர்கள் வகுப்பு மற்றும் குழுமத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இதைச் செய்கிறார்கள்.
இந்தக் காரணத்திற்காக, ஒவ்வொரு குழுமமும் அல்லது வகுப்புக் கூட்டமும் குழுமத்தின் உறுப்பினர் அல்லது வகுப்புத் தலைமைத்துவத்தின் உறுப்பினருடன் தொடங்க வேண்டும், எடுத்துக்காட்டாக, சுவிசேஷத்தின்படி வாழ்வது, தேவையிலிருப்பவர்களுக்கு ஊழியம் செய்வது, சுவிசேஷத்தைப் பகிர்வது அல்லது ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணியில் பங்கேற்பது போன்ற முயற்சிகள் பற்றிய கலந்துரையாடலை நடத்துகிறது.
ஒன்றாக ஆலோசனை வழங்கும், இந்த நேரத்திற்குப் பிறகு, ஒரு பயிற்றுவிப்பாளர், சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்வதில் வகுப்பு அல்லது குழுவில் சேர்ந்துகொள்கிறார். வயதுவந்தோர் தலைவர்கள் அல்லது வகுப்பு அல்லது குழுமத்தின் உறுப்பினர்கள் கற்பிக்க நியமிக்கப்படலாம். வகுப்பு அல்லது குழுமத் தலைமை, வயதுவந்தோர் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, இந்த பணிகளைச் செய்கிறது.
கற்பிக்க நியமிக்கப்பட்டவர்கள் என்னைப் பின்பற்றி வாருங்கள் வாராந்திர குறிப்பில் உள்ள கற்றல் பரிந்துரைகளைப் பயன்படுத்தி ஆயத்தமாக வேண்டும் ஒவ்வொரு குறிப்பிலும், இந்த சின்னம் இளைஞர்களுக்கு குறிப்பாக பொருத்தமான ஒரு நிகழ்ச்சியைக் குறிக்கிறது. இருப்பினும், குறிப்பில் உள்ள எந்தப் பரிந்துரைகளும் இளைஞர்களுக்கான கற்றல் நடவடிக்கையாகப் பயன்படுத்தப்படலாம்.
குழுமம் மற்றும் வகுப்பு கூட்டங்களுக்கான மாதிரி நிகழ்ச்சி நிரலுக்கு, பிற்சேர்க்கை D பார்க்கவும்.