என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
ஜனுவரி 15–21: “வந்து, கனியைப் புசிக்க வேண்டும்.” 1 நேபி 6–10


“ஜனுவரி 15–21: ‘வந்து கனியைப் புசிக்க வேண்டும்.’ 1 நேபி 6-10,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“ஜனுவரி 15-21. 1 நேபி 6-10,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: 2024(2023)

படம்
ஜீவ விருட்சத்தைப்பற்றிய லேகியின் தரிசனம்

Lehi’s Dream (லேகியின் கனவு) – ஸ்டீவன் லாய்ட் நீல்

ஜனுவரி 15–21: “வந்து, கனியைப் புசிக்க வேண்டும்”

1 நேபி 6–10

இருப்புக் கோல், இருள் மூடுபனி, விசாலமான கட்டிடம், மற்றும் “மிக மதுரமான” கனிகள் கொண்ட விருட்சம் ஆகியவற்றோடு, இரட்சகரின் அன்பு மற்றும் பாவநிவாரண பலியின் ஆசீர்வாதங்களைப் பெற, லேகியின் கனவு ஓர் உணர்த்துதலான அழைப்பு ஆகும். இருப்பினும், லேகிக்கு, இந்த தரிசனம் அவனுடைய குடும்பத்தைப் பற்றியதும்தான்: “நான் கண்ட காரியத்தினிமித்தம், நேபி மற்றும் சாமைப்பற்றி கர்த்தருக்குள் களிகூர எனக்குக் காரணமுண்டு. … ஆனால் இதோ, லாமான், லெமுவேலே, உங்களைக் குறித்து நான் மிகவும் அஞ்சுகிறேன்” (1 நேபி 8:3–4). லேகி தமது தரிசனத்தை விவரித்து முடித்தபோது, அவன் லாமான் மற்றும் லெமுவேலிடம், “அவனது வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்க வேண்டும் என்றும், ஒருவேளை கர்த்தர் அவர்களுக்கு இரக்கமாய் இருப்பார் என்றும்” கெஞ்சினான் (1 நேபி 8:37). நீங்கள் பலமுறை லேகியின் தரிசனத்தை படித்திருந்தாலும், இந்த முறை அதைப்பற்றி லேகியைப் போல சிந்தியுங்கள், நீங்கள் நேசிக்கும் ஒருவரைப்பற்றி சிந்தியுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யும்போது, இருப்புக்கோலின் பாதுகாப்பு, விசாலமான கட்டிடத்தின் அபாயங்கள், மற்றும் கனியின் மதுரம் யாவும் புதிய அர்த்தத்தைப் பெறும். மேலும் இந்த அற்புதமான தரிசனத்தைப் பெற்ற “மென்மையான பெற்றோரின் எல்லா உணர்வுகளையும்” இன்னும் ஆழமாக நீங்கள் புரிந்து கொள்ளுவீர்கள்.

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

1 நேபி 7:6–21

நான் பிறரை மன்னிக்க முடியும்.

1 நேபி 7:6–21ல் நேபியின் எடுத்துக்காட்டில் நமக்கு உணர்த்துவது என்ன? நாம் ஒருவரை ஒருவர் “வெளிப்படையாக” மன்னிக்கும்போது நாம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறோம்? “கர்த்தர் நேபியை அவனுடைய கலகக்கார சகோதரர்களிடமிருந்து விடுவிக்கிறான்” (சுவிசேஷ நூலகம்) என்ற காணொலி உங்கள் படிப்பிற்கு உதவியாக இருக்கும்.

1 நேபி 8

தேவ வார்த்தையை பிடித்துக்கொள்வது என்னை இரட்சகரிடத்தில் நடத்தி அவரது அன்பை உணர உதவி செய்கிறது.

இரட்சகரைப் போல ஆகுவதற்கான உங்கள் தனிப்பட்ட பயணத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், என்பதைப்பற்றி சிந்திக்க லேகியின் தரிசனம் ஒரு அழைப்பை வழங்குகிறது. தலைவர் பாய்ட் கே. பாக்கர் சொன்னார்: “நீங்கள் அதில் இருக்கிறீர்கள்; நாம் அனைவரும் அதில் இருக்கிறோம். இருப்புக் கோலைப்பற்றிய லேகியின் கனவு அல்லது தரிசனத்தில் ஒரு … பிற்காலப் பரிசுத்தவான் வாழ்க்கையின் சோதனையைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டிய எல்லாம் அதிலிருக்கிறது” (“Lehi’s Dream and You,” New Era, Jan. 2015, 2).

நீங்கள் படிக்கும்போது, இது போன்ற ஓர் விளக்கப்படத்தில் நிரப்புவதைக் கருத்தில் கொள்ளவும்.

லேகியின் தரிசனத்தில் இருந்து அடையாளம்

அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

லேகியின் தரிசனத்தில் இருந்து அடையாளம்

விருட்சமும் அதன் கனிகளும் (1 நேபி 8:10–12)

அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

தேவ அன்பை புசிக்க பிறரை அழைக்க நான் என்ன செய்துகொண்டு இருக்கிறேன்?

லேகியின் தரிசனத்தில் இருந்து அடையாளம்

நதி (1 நேபி 8:13)

அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

லேகியின் தரிசனத்தில் இருந்து அடையாளம்

இருப்புக் கோல் (1 நேபி 8:19–20, 30)

அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

லேகியின் தரிசனத்தில் இருந்து அடையாளம்

இருள் மூடுபனி (1 நேபி 8:23)

அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

லேகியின் தரிசனத்தில் இருந்து அடையாளம்

பெரிய விசாலமான கட்டிடம் (1 நேபி 8:26–27, 33)

அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

லேகி பார்த்த ஜனங்களின் நான்கு குழுக்களைப் பற்றி அறிய பின்வரும் வசனங்களையும் நீங்கள் தேடலாம்: 1 நேபி 8:21–23, 24–28, 30, மற்றும் 31–33. இந்த குழுக்களுக்கிடையே என்ன வித்தியாசங்களை நீங்கள் கவனிக்கிறீர்கள்? ஏன் சிலர் மரத்தினருகில் சென்ற பிறகு பழங்களை ருசித்துவிட்டு கிளம்பினார்கள் (வசனங்கள் 24–28 பார்க்கவும்)? இந்த அனுபவங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

மேலும் பார்க்கவும் கெவின் டபிள்யூ. பியர்சன், “மரத்தடியில் இருங்கள்,” லியஹோனா, மே 2015, 114–16; “ஜீவ விருட்சத்தின் தரிசனத்தை லேகி பார்த்தல்” (காணொலி), சுவிசேஷ நூலகம்.

லேகியின் தரிசனம் பற்றி அறிந்துகொள்ள உதவும் உரையாடல் அனுபவத்திற்கு, இங்கே கிளிக் செய்யவும்.

கற்பவர்கள் தங்கள் சொந்த கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ளட்டும். கற்றுக்கொள்பவர்களை அவர்கள் கண்டறிந்த சத்தியங்களைத் தாங்களாகவே வேதங்களில் தேடுவதற்கு அழைப்பதைக் கருத்தில் கொள்ளவும். எடுத்துக்காட்டாக, மேலே உள்ள விளக்கப்படத்தில் உள்ள வேதக் குறிப்புகளைத் தாங்களாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ தேட அவர்களை அழைக்கலாம். அவர்கள் கண்டறிந்த உண்மைகளை நினைவில் வைத்துக் கொள்வார்கள்.

படம்
ஜீவ விருட்சத்திற்கு நடத்துகிற இருப்புக்கோலை மக்கள் பிடித்திருத்தல்

Common Thread (பொதுவான நூல்) – கெல்சி மற்றும் ஜெஸ்ஸி பாரெட்

1 நேபி 10:2–16

பூர்வகால தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைப்பற்றி அறிந்திருந்தார்கள் மற்றும் அவரைக் குறித்து சாட்சி அளித்தார்கள்.

1 நேபி 10:2–16 ல் காணப்படும் உண்மைகளை லேகியின் குடும்பமும், நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கர்த்தர் ஏன் விரும்புகிறார் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் அன்புக்குரியவர்கள் இரட்சகரை அவர்களின் வாழ்க்கையில் அழைக்க நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

1 நேபி 10:17–19

படம்
வேத பாட வகுப்பு சின்னம்
பரிசுத்த ஆவியின் வல்லமையால் தேவன் எனக்கு சத்தியத்தை வெளிப்படுத்துவார்.

நீங்கள் புரிந்து கொள்ளாத ஒரு சுவிசேஷ கொள்கைப்படி வாழுமாறு கேட்கப்படும்போது நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? பின்வரும் வசனங்களில், லேகியின் தரிசனத்துக்கு நேபி அளித்த பதிலுக்கும் (1 நேபி 10:17–19; 11:1 பார்க்கவும்) மற்றும் லாமான் மற்றும் லெமுவேலின் பதிலுக்கும் (1 நேபி 15:1–10 பார்க்கவும்) உள்ள வேறுபாடுகளைக் கவனியுங்கள். நேபி செய்ததைப்போல பிரதிவினையாற்ற அவனுக்கு வழிவகுத்த என்ன சத்தியங்களை அவன் புரிந்துகொண்டான்?

நேபியின் உதாரணத்தை மனதில் கொண்டு, நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள விரும்பும் சுவிசேஷ கொள்கைகளின் பட்டியலை உருவாக்கவும். நீங்களே பதில்களைக் கண்டுபிடிக்க என்ன செய்யலாம்?

நேபி தன் தகப்பனின் வார்த்தைகள் உண்மை என்று தனக்குத்தானே கண்டுபிடித்தது போல், தற்கால தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் வார்த்தைகளைக் கேட்கும்போது நாமும் அதையே செய்யலாம். மிக சமீபத்திய பொது மாநாட்டில் தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் நமக்கு என்ன கற்பித்தார்கள்? அவர்கள் கற்பித்தவற்றின் தனிப்பட்ட சாட்சியை நீங்கள் எவ்வாறு பெற்றீர்கள்?

1நேபி 2:11–19; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:1–3ஐயும் பார்க்கவும்; 

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

1 நேபி 8

தேவனின் வார்த்தையைப் பற்றிக் கொள்வது என்னை அவரிடம் அழைத்துச் செல்கிறது மற்றும் அவருடைய அன்பை உணர உதவுகிறது.

  • நீங்கள் 1 நேபி 8ஐ ஒன்றாக வாசிக்கும்போது உங்கள் பிள்ளைகள் லேகியின் தரிசனத்தின் படத்தை வரைந்து மகிழலாம். அவர்கள் தங்கள் படங்களைப் பகிர்ந்து கொள்ளட்டும், மேலும் கனவில் உள்ள சின்னங்கள் எதைக் குறிக்கின்றன என்பதைக் கண்டறிய உதவுங்கள் (1 நேபி 11:21–22; 12:16–18; 15:23–33, 36 மற்றும் இவ்வார நிகழ்ச்சி பக்கம்). இந்தக் கேள்விக்கு தங்களால் இயன்ற பதில்களைப் பகிர்ந்துகொள்ளும்படி அவர்களிடம் கேளுங்கள்: லேகியின் தரிசனத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

  • லேகியின் தரிசனத்தில் இரும்புக் கம்பியைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய குழாய் அல்லது குச்சி போன்ற ஏதாவது உங்களிடம் உள்ளதா? உங்கள் பிள்ளைகளை ஒரு அறையைச் சுற்றி இரட்சகரின் படத்திற்கு அழைத்துச் செல்லும்போது அவற்றைப் பிடித்துக் கொள்ளட்டும். லேகியின் தரிசனத்தில் இரும்புக் கம்பி ஏன் முக்கியமானது? 1 நேபி 8:20, 24, 30. இரும்புக் கம்பி எப்படி தேவனுடைய வார்த்தையைப் போலாகும்?

  • 1 நேபி 8:10–12 வரை வாசிக்க உங்கள் பிள்ளைகளில் சிலரை அழைக்கவும் மற்றும் லேகி பார்த்ததை விவரிக்கவும். 1 நேபி 11:20–23ஐ வாசித்து, நேபி பார்த்ததை விவரிக்க மற்றவர்களிடம் கேளுங்கள். தேவனின் அன்பைப் பற்றி கற்பிக்க தேவதூதன் ஏன் குழந்தை இயேசுவை நேபியிடம் காட்ட வேண்டும்? உங்கள் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் தேவனின் அன்பை எப்படி உணர்ந்தார்கள் என்பதைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள்.

1 நேபி 10:17–19; 11:1

பரிசுத்த ஆவியின் வல்லமையால் தேவன் எனக்கு சத்தியத்தை வெளிப்படுத்துவார்.

  • 1 நேபி 10:19ல் நேபி என்ன போதித்தான் என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்? ஒருவேளை நீங்கள் இரட்சகரின் படத்தையோ அல்லது வேறு ஒரு சிறப்புப் பொருளையோ போர்வைக்குள் மடித்து, அதை விரிக்க உங்கள் குழந்தைகளை அழைக்கலாம். நீங்கள் 1 நேபி 10:19ஐ வாசிக்கும்போது, “வெளிப்படுத்தப்பட்டது” மற்றும் “பரிசுத்த ஆவி” என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது அவர்கள் கைகளை உயர்த்த முடியும். பிறகு, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு சத்தியத்தைக் கண்டறிய உதவிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

  • ஒரு கேள்விக்கான பதில்களைக் கண்டுபிடிக்க உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி பேசச் சொல்லுங்கள். சுவிசேஷத்தைப் பற்றிய ஒரு கேள்விக்கான பதில்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்று யாராவது அவரிடம் கேட்டால் நேபி என்ன சொல்லலாம்? 1நேபி 10:17–19; 11:1 வாசிப்பதன் மூலம் குழந்தைகள் கண்டறிய ஊக்குவிக்கவும்.

  • உங்கள் பிள்ளைகள் எப்பொழுதாவது பரிசுத்த ஆவியானவர் தங்களுக்கு ஏதோ உண்மை என்று தெரிந்துகொள்ள உதவியதாக உணர்ந்திருக்கிறார்களா? அவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளட்டும். பரிசுத்த ஆவியின் மூலம் பதில்களைப் பெற முடியாது என்று நினைக்கும் அவன் அல்லது அவளுக்கு நாம் என்ன சொல்வோம்? அந்த நண்பருக்கு உதவக்கூடிய எதை 1 நேபி 10:17–19 மற்றும் 11:1ல் நாம் காணலாம்?

படம்
லேகியின் தரிசனம்

The Tree of Life (ஜீவ விருட்சம்) - ஏவன் ஓக்கேசன்

அச்சிடவும்