என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
ஜனுவரி 22–28: “நீதியினாலும் தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரித்திருந்தார்கள்” 1 நேபி 11–15.


ஜனுவரி 22–28: “நீதியினாலும் தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரித்திருந்தார்கள்” 1 நேபி 11–15,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)

“ஜனுவரி 22–28. 1 நேபி 11–15,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: 2024(2024)

ஜனங்கள் ஜீவவிருட்சத்தின் கனியை உண்கிறார்கள்

தேவ அன்பு – சப்ரினா ஸ்கொயர்ஸ்

ஜனுவரி 22–28: “நீதியினாலும் தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரித்திருந்தார்கள்”

1 நேபி 11–15

அவருடைய தீர்க்கதரிசி செய்வதற்காக தேவன் ஒரு பிரமாண்ட வேலையை வைத்திருக்கும்போது, அவர் அடிக்கடி அந்த தீர்க்கதரிசிக்கு பிரமாண்டமான தரிசனத்தை கொடுக்கிறார். மோசே, யோவான், லேகி மற்றும் ஜோசப் ஸ்மித் ஆகிய அனைவருக்கும் இது போன்ற தரிசனங்கள் இருந்தன—அவர்களின் மனதை விரிவுபடுத்திய தரிசனங்கள் மற்றும் தேவனின் கிரியை உண்மையில் எவ்வளவு மகத்தானது மற்றும் பிரமிக்க வைக்கிறது என்பதைப் பார்க்க அவர்களுக்கு உதவியது.

இந்த வாழ்க்கையை மாற்றும் தரிசனங்களில் ஒன்று நேபிக்கும் இருந்தது. அவன் இரட்சகரின் ஊழியத்தையும், வாக்குத்தத்தத்தின் தேசத்தில் லேகியின் சந்ததியினரின் எதிர்காலத்தையும், தேவனின் கிரியை பிற்கால இலக்கையும் கண்டான். இந்த தரிசனத்திற்குப் பிறகு, வரவிருக்கும் பணிக்கு நேபி சிறப்பாக ஆயத்தப்படுத்தப்பட்டான். மேலும் இந்தத் தரிசனத்தைப் பற்றி வாசிப்பது உங்களைத் தயார்படுத்தவும் உதவும்—ஏனெனில் தேவனுடைய ராஜ்யத்தில் நீங்கள் செய்ய வேண்டிய வேலையும் அவருக்கு இருக்கிறது. நேபியால் பார்க்கப்பட்ட “ஆட்டுக்குட்டியானவரின் சபையின் பரிசுத்தவான்களின்” மத்தியில் நீங்கள் ஒருவராக இருக்கிறீர்கள் அவர்கள், “பூமியின் பரப்பின்மீது சிதறடிக்கப்பட்டார்கள்; அவர்கள் நீதியினாலும் மகா மகிமையிலிருக்கிற தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரித்திருந்தார்கள்” (1 நேபி 14:14).

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

1 நேபி 11

தேவன் தன் அன்பின் வெளிப்பாடாக இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.

லேகியின் தரிசனத்தில் விருட்சத்தின் அர்த்தத்தைப் பற்றி நேபி தேவதூதனிடம் கேட்டபோது, “அது தேவனின் அன்பைப் பிரதிபலிக்கிறது” என்று தேவதூதன் வெறுமனே கூறியிருக்க முடியும். அதற்கு பதிலாக, அவர் இரட்சகரின் வாழ்க்கையிலிருந்து தொடர்ச்சியான சின்னங்கள் மற்றும் அடையாளங்களை நேபியிடம் காட்டினார். 1 நேபி 11 வாசித்து சிந்திக்கும்போது, இந்தக் அடையாளங்களையும் நிகழ்வுகளையும் தேடுங்கள். இயேசு கிறிஸ்து ஏன் தேவனின் அன்பின் உச்சக்கட்ட வெளிப்பாடாக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுவது எது?

நேபி பார்த்த நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய வேதாகம காணொலிகளை சுவிசேஷ நூலகத்தில் பார்ப்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம். உங்கள் பரலோக பிதாவின் அன்பை உணர இரட்சகர் உங்களுக்கு எப்படி உதவினார்?

சூசன் எச். போர்ட்டர், “தேவனின் அன்பு: ஆத்துமாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி,” லியஹோனா, நவ. 2021, 33–35 பார்க்கவும்.

1 நேபி 12–14

நான் “நீதியினாலும் தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரிக்க” முடியும்.

நேபி தனது தரிசனத்தில் கண்டவற்றில் பெரும்பாலானவற்றை நேரில்காண உயிர்வாழ மாட்டான். இந்த காரியங்களை அறிந்துகொள்வது நேபிக்கு மதிப்புமிக்கதாக இருக்கும் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? இந்த காரியங்களை அறிந்துகொள்வது உங்களுக்கு ஏன் மதிப்பானதாக இருக்கிறது? நேபி தனது தரிசனத்தில் பார்த்த ஒன்றைப்பற்றி நீங்கள் படிக்கும் ஒவ்வொரு முறையும் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள் (1 நேபி 12–14 பார்க்கவும்). கர்த்தருடைய “பெரிய மற்றும் … அற்புதமான கிரியையைப்பற்றி” நீங்கள் என்ன எண்ணங்களைப் பெறுகிறீர்கள்? (1 நேபி 14:7). அவர் உங்களுக்காகச் செய்த சில பெரிய மற்றும் அற்புதமான காரியங்கள் யாவை?

1 நேபி 14:14லுள்ள விசேஷமாக வாக்குத்தத்தத்தை கருத்தில் கொள்ளவும். உங்கள் வாழ்வில் இந்த வாக்குறுதியை இரட்சகர் எவ்வாறு நிறைவேற்றினார்? (சில உதாரணங்களுக்காக, டேவிட் ஏ. பெட்னார், “மகா மகிமையிலிருக்கிற தேவனுடைய வல்லமையினாலும்,” லியஹோனா, நவ. 2021, 28–30, விசேஷமாக கடைசி இரண்டு பாகங்கள் பார்க்கவும்.)

1 நேபி 13:1–9; 14:9–11

நேபி கண்ட “பெரிதும் அருவருப்புமான சபை” எது?

மூப்பர் டாலின் எச். ஓக்ஸ் விளக்கினார், நேபியால் விவரிக்கப்பட்ட “பெரிதும் அருவருப்புமான சபை” என்பது “தேவன் மேல் உள்ள நம்பிக்கையை எதிர்க்கிற எந்த தத்துவத்தையும் அல்லது நிறுவனத்தையும் பிரதிபலிக்கிறது. இந்த ‘சபை’ எந்த ‘சிறையிருப்புக்குள்’ பரிசுத்தவான்களைக் கொண்டுவர நாடுகிறதோ அது தவறான கருத்துக்களின் சிறைபிடிப்பை விட அதிக சரீரரீதியான சிறைவாசமாக இருக்காது” (“Stand as Witnesses of God,” Ensign, Mar. 2015, 32). தவறான எண்ணங்களின் சிறையை தவிர்க்கவும் தப்பிக்கவும், இரட்சகர் உங்களுக்கு எப்படி உதவுகிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

1 நேபி 15:1–11

நான் விசுவாசத்தில் கேட்டால் தேவன் எனக்குப் பதில் அளிப்பார்.

நீங்கள் எப்போதாவது தனிப்பட்ட வெளிப்படுத்தலைப் பெறுவதில்லை என்று உணர்ந்ததுண்டா, அதாவது தேவன் உங்களுடன் பேசுவதில்லை என்று? இதைப்போன்று நேபியின் சகோதரர்கள் உணர்ந்தபோது அவர்களுக்கு அவன் என்ன ஆலோசனையளித்தான்? (1 நேபி 15:1–11 பார்க்கவும்.) நேபியின் அறிவுரையை உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு கடைப்பிடிக்கலாம்?

வேதபாட வகுப்பு சின்னம்

1 நேபி 15:23–25

தேவனுடைய வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொள்வது சாத்தானின் செல்வாக்கை எதிர்த்து நிற்க உதவுகிறது.

நேபி அடிக்கடி தன் சகோதரர்களிடம் அவசரமான விஷயங்களைச் சொல்ல வேண்டியிருந்தது. ஆனால் 1 நேபி 15:23–25 இல் அவன் அவர்களிடம் சொன்னதில் அவன் குறிப்பாக உணர்ச்சிவசப்பட்டதாகத் தோன்றியது. நேபியின் செய்தி என்ன, அதை அவன் ஏன் மிகவும் வலுவாக உணர்ந்தான் என்று நினைக்கிறீர்கள்?

“தேவனின் வார்த்தை” என்பது வேதவாக்கியங்களையும், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும், இயேசு கிறிஸ்துவையும் குறிக்கும் என்று மூத்த டேவிட் ஏ. பெட்னார் போதித்தார். வேதங்களையும், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் “இறுக்கமாகப் பிடித்துக் கொள்வது” என்றால் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இயேசு கிறிஸ்துவை “இறுக்கமாகப் பிடித்துக்கொள்வது” என்றால் என்ன? இக்கேள்விகளின் சாத்தியமான பதில்களுக்காக நீங்கள் மூப்பர் பெட்னாரின் செய்தி, “ஆனால் நாம் அவர்களுக்கு செவிகொடுக்கவில்லை” (லியஹோனா, மே 2022, 14–16) பார்க்கவும்.

தேவனுடைய வார்த்தையை இறுக்கமாகப் பற்றிக்கொள்வது சத்துருவை எதிர்த்து நிற்க உங்களுக்கு எப்படி உதவுகிறது? இது போன்ற அட்டவணையை நிரப்புவது உங்கள் எண்ணங்களை ஒழுங்கமைக்க உதவும்:

 … சோதனையின் இருளை மேற்கொள்ள எனக்கு உதவுகிறது? (1 நேபி 12:17 பார்க்கவும்)

 … உலகத்தின் மாயைக்கும் பெருமைக்கும் “செவிகொடாதிருக்க” எனக்கு உதவுகிறது? (1 நேபி 12:18)

வேதங்களையும், வாழும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் இறுக்கமாகப் பற்றிக் கொள்வது எப்படி …

இரட்சகரை இறுக்கமாகப் பற்றிப்பிடிப்பது எப்படி …

ஜோர்ஜ் எப். ஜெபலோஸ், “எதிரியை எதிர்க்கும் வாழ்க்கையை உருவாக்குதல்,” லியஹோனா, நவ. 2022, 50–52 பார்க்கவும் “The Iron Rod,” Hymns, no. 274;

குடும்பம் வேதம் வாசித்தல்

வேதம் ஒரு இரும்பு கம்பி போன்றது, அது நம்மை ஜீவ விருட்சத்துக்கு அழைத்துச் செல்கிறது.

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

1 நேபி 11:16–33

பரலோக பிதா என்னை நேசிப்பதால் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.

  • தேவனின் அன்பைப் பற்றி நேபிக்குக் கற்பிக்க, ஒரு தூதன் இரட்சகரின் வாழ்க்கையிலிருந்து நிகழ்வுகளை நேபிக்குக் காட்டினான். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் அவ்வாறே செய்யலாம்— 1 நேபி 11:20, 24, 27, 31, மற்றும் 33ல் நேபி பார்த்த நிகழ்ச்சிகளின் படங்களை அவர்களுக்கு கொடுங்கள்.(பார்க்கவ Gospel Art Book, nos. 30, 35, 39, 4257). நீங்கள் இந்த வசனங்களைப் படிக்கும்போது, அதற்குப் பொருத்தமான படத்தைக் கண்டுபிடிக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். இந்த வசனங்களிலிருந்தும் படங்களிலிருந்தும் இயேசு கிறிஸ்துவைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்?

  • நீங்கள் பாடிய பிறகு, பாடலில் இருந்து அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்று உங்கள் குழந்தைகளிடம் கேளுங்கள். 1 நேபி 11:22–23 லிருந்து தேவனின் அன்பைப் பற்றி நாம் வேறு என்ன கற்றுக்கொள்கிறோம்?

குழந்தைகள் கற்றுக்கொள்ள ஓவியத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் குழந்தைகளுக்கு ஒரு வேதக் கதையைக் கற்பிக்கும்போது, அதைக் காட்சிப்படுத்த அவர்களுக்கு உதவுங்கள். நீங்கள் படங்கள், காணொலிகள், பொம்மைகள், உடைகள் மற்றும் பலவற்றைப் பயன்படுத்தலாம்.

1 நேபி 13:26–29, 35–36, 40

மார்மன் புத்தகம் விலையேறப்பெற்ற சத்தியங்களைப் போதிக்கிறது.

  • மார்மன் புஸ்தகத்திலுள்ள “தெளிவானதும் விலையேறப்பெற்றதுமான” சத்தியங்களை உங்கள் பிள்ளைகள் மதிக்க உதவுவதற்கு, நீங்கள் ஒரு படத்தை வரைந்து, படத்தின் பகுதிகளை மாற்ற அல்லது அகற்றும்படி உங்கள் பிள்ளைகளை அழைக்கலாம். வேதாகமத்தில் உள்ள விஷயங்கள் காலப்போக்கில் மாற்றப்பட்டு வெளியே எடுக்கப்பட்டன என்று கற்பிக்க இதைப் பயன்படுத்தலாம். 1 நேபி 13:40ஐ ஒன்றாக வாசித்து, வேதாகமத்தில் இருந்து (”முதல்” பதிவுகள்) தொலைந்துபோன “தெளிவானதும் விலையேறப்பெற்றதுமான விஷயங்களை” புரிந்துகொள்ள மார்மன் புஸ்தகம் (“இந்தக் கடைசிப் பதிவுகள்”) எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றிப் பேசுங்கள். மார்மன் புஸ்தகத்திலிருந்து என்ன “தெளிவானதும் விலையேறப்பெற்றதுமான” சத்தியங்களை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள்?

  • குழந்தைகள் காணொலியிலிருந்து விளக்கப்படத்தை மீண்டும் உருவாக்கி மகிழலாம்.

வெவ்வேறு மொழிகளில் மார்மன் புஸ்தகத்தின் நகல்கள்

மதமாறுபாட்டின் காலத்தில் இழந்துபோன சுவிசேஷ சத்தியங்களை மார்மன் புஸ்தகம் மறுஸ்தாபிதம் செய்கிறது.

1 நேபி 15:23–24

தேவனுடைய வார்த்தையை பற்றிப் பிடித்துக் கொள்வது சோதனையை எதிர்க்க உதவுகிறது.

  • லேகியின் தரிசனத்தைப் பற்றி அவர்கள் நினைவில் வைத்திருப்பதைப் பகிர்ந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பளிக்கவும். கடந்த வார குறிப்பில் உள்ளதைப் போன்ற படத்தைப் பயன்படுத்த இது உதவக்கூடும். மக்கள் மரத்தை அடைய விடாமல் தடுத்தது எது? அதை அடைய அவர்களுக்கு எது உதவியது? படத்தில் இரும்புக்கோலைக் கண்டுபிடிக்கும்படி நீங்கள் அவர்களிடம் கேட்கலாம். இரும்புக்கோல் எதைக் குறிக்கிறது மற்றும் அது எவ்வாறு நமக்கு உதவும் என்பதை அறிய 1 நேபி 15:23–24ஐ ஒன்றாகப் படியுங்கள்.

மரியாள் மற்றும் குழந்தை இயேசுவைப்பற்றிய நேபியின் தரிசனம்

மரியாளைப்பற்றிய நேபியின் தரிசனம் - ஜேம்ஸ் ஜான்சன்