மகா மகிமையிலிருக்கிற தேவனுடைய வல்லமையினாலும்
உடன்படிக்கைகளை மதிப்பது நம்மை நீதியுடனும் தேவ வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடன் நமக்கு ஆயுதம் தரிக்கிறது.
காலங்களின் நிறைவின் ஊழியக்காலத்தில் இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதல் ஆகியவற்றின் அற்புதமான பணியை நாம் ஒன்றாகக் கருத்தில் கொண்டு பரிசுத்த ஆவியானவர் நம் அனைவரையும் அறிவுறுத்தி மற்றும் தெளிவுபடுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
ஜோசப் ஸ்மித்துடன் மரோனியின் முதல் சந்திப்பு
ஏறக்குறைய முதல் தரிசனத்தின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பிறகு, செப்டம்பர் 21, 1823 அன்று இரவு, இளம் ஜோசப் ஸ்மித் தனது பாவங்களைப் போக்கவும், தேவனுக்கு முன்பாக தனது தன்மை மற்றும் நிலைமைபற்றி அறிய ஜெபம் செய்தார்.1 அவருடைய படுக்கையருகில் ஒருவர் தோன்றி, ஜோசப்பை பெயர் சொல்லி அழைத்து, “தேவசமூகத்திலிருந்து அனுப்பப்பட்ட அவர் ஒரு தூதுவனெனவும், … அவனுடைய பெயர் மரோனியெனவும்” அறிவித்தான். அவன் “ஜோசப் செய்ய வேண்டிய ஒரு பணி தேவனிடம் இருக்கிறது” என்று விளக்கினான், 2 பின்னர் மார்மன் புத்தகத்தின் வருகை பற்றி அவனுக்கு அறிவுறுத்தினான். குறிப்பிடத்தக்க வகையில், மரோனியின் செய்தியில் கூறப்பட்ட முதல் தலைப்புகளில் மார்மனின் புத்தகம் ஒன்றாகும்.
மார்மனின் புத்தகம் இயேசு கிறிஸ்துவின் மற்றொரு ஏற்பாடு மற்றும் பிற்காலத்தில் மனமாற்றத்தின் சிறந்த கருவியாகும். சுவிசேஷத்தைப் பகிர்வதில் நமது நோக்கம் அனைவரையும் இயேசு கிறிஸ்துவிடம் வருமாறு அழைப்பதாகும்,3 மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களைப் பெற, மேலும் இரட்சகரின் மீதான விசுவாசத்தின் மூலம் இறுதிபரியந்தம் நிலைத்திருப்பதாகும்.4 இதயத்தின் வலிமையான மாற்றத்தை அனுபவிக்க தனிநபர்களுக்கு உதவுதல்5 மற்றும் பரிசுத்த உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள் மூலம் கர்த்தருடன் தங்களை பிணைத்துக் கொள்வது சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கான அடிப்படை நோக்கங்கள்.
காலத்தின் நிறைவின் ஊழியக்காலத்தில், திரையின் இப்பக்கத்தில் ஜோசப் ஸ்மித்துக்கு மார்மனின் புத்தகத்தை மரோனி அறிமுகம் செய்ததில் தனிநபர்களுக்கான இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதலின் பணியைத் தொடங்கியது.
ஜோசப்புக்கு அவனது அறிவுரையைத் தொடர்ந்து, ஜேம்ஸ் ராஜா பதிப்பில் பயன்படுத்தப்பட்ட மொழியில் சிறிது மாற்றத்துடன் பழைய ஏற்பாட்டின் மல்கியா புஸ்தகத்திலிருந்து மரோனி மேற்கோள் காட்டினான்:
“இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே எலியா தீர்க்கதரிசியின் கையினால் ஆசாரியத்துவத்தை நான் உங்களுக்கு வெளிப்படுத்துவேன்.
“… பிதாக்களுக்குச் செய்யப்பட்ட வாக்குத்தத்தங்களை பிள்ளைகளின் இருதயங்களில் அவன் நடுவான், பிள்ளைகளின் இருதயங்கள் தங்கள் பிதாக்களிடத்திற்கு திரும்பும். இல்லையெனில், அவனது வருகையில் பூமி முழுவதும் நிச்சயமாய்ப் பாழாக்கப்படும்.”6
ஆலயங்களைக் கட்டுவதில் நமது நோக்கம் பரிசுத்த உடன்படிக்கைகள் மற்றும் மனித குடும்பத்தின் இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதலுக்குத் தேவையான நியமங்கள் உயிரோடிருப்பவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். திரையின் இந்தப்பக்கத்தில் எலியா மற்றும் ஆசாரியத்துவ அதிகாரத்தின் முக்கிய பங்கு பற்றி ஜோசப் ஸ்மித்துக்கு மரோனியின் அறிவுறுத்தல் இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதலின் பணியை விரிவுபடுத்தியது, திரையின் மறு பக்கத்தில் மற்றும் நமது ஊழியக் காலத்தில் மரித்தோருக்கான பணி தொடங்கியது.
சுருக்கமாக, திரையின் இரு பக்கங்களிலும் 1823 செப்டம்பரில் மரோனியின் ன் போதனைகள் மார்மன் புத்தகம் மற்றும் எலியாவின் ஊழியம் இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதலின் பணிக்கான கோட்பாட்டு அடித்தளத்தை நிறுவியது
தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் போதனைகள்
ஜோசப் ஸ்மித் மரோனியிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் அவருடைய ஊழியத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் செல்வாக்கு ஏற்படுத்தியது. உதாரணமாக, ஏப்ரல் 6, 1837 அன்று கர்த்லாந்து ஆலயத்தில் நடைபெற்ற ஒரு பரிசுத்த கூட்டத்தில், தீர்க்கதரிசி கூறினார்: “சொல்லப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலாக, மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான கடமை சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதாகும்.”7
ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 7, 1844 அன்று, ஜோசப் ஸ்மித் இன்று கிங் ஃபோலெட் சொற்பொழிவு என்று அழைக்கப்படும் ஒரு பிரசங்கத்தை வழங்கினார். அந்த உரையில் அவர் அறிவித்தார், “இந்த உலகில் தேவன் நம்மீது வைத்துள்ள மிகப்பெரிய பொறுப்பு, நமது மரித்தவர்களைத் தேடுவது.”8
ஆனால் எவ்விதம் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது மற்றும் மரித்தவர்களைத் தேடுவது இரண்டுமே தேவன் நம்மீது வைத்துள்ள மிகப் பெரிய கடமை மற்றும் பொறுப்பாகும்? தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் இரண்டு அறிக்கைகளிலும் உடன்படிக்கைகள், அதிகாரப்பூர்வமான ஆசாரியத்துவ நியமங்கள் மூலம் பிரவேசித்து, நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் பிணைக்க முடியும் மற்றும் அது இரட்சிப்பின் அத்தியாவசியமான மையம் என்ற அடிப்படை உண்மையை வலியுறுத்துகிறார் என்று நம்புகிறேன்.
ஊழியம், ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணி என்பது ஒரு பெரிய வேலையின் நிரப்புகிற மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய அம்சங்களாகும், இது பரிசுத்த உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களை மையமாகக் கொண்டது, இது நம் வாழ்வில் தேவதன்மையின் வலலமையைப் பெற உதவுகிறது, இறுதியில், பரலோக பிதாவின் சமூகத்துக்கு திரும்ப உதவுகிறது. இவ்வாறு, ஆரம்பத்தில் முரண்பாடாகத் தோன்றக்கூடிய தீர்க்கதரிசியின் இரண்டு அறிக்கைகள், உண்மையில், இந்த சிறந்த பிற்கால பணியின் மையப் புள்ளியை எடுத்துக்காட்டுகின்றன.
உடன்படிக்கைகள் மற்றும் கட்டளைகள் மூலம் இரட்சகருடன் கட்டப்பட்டிருத்தல்
இரட்சகர் சொன்னார்:
“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
“என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”9
பரிசுத்த உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களைகளைப் பற்றி நாம் கற்றுக்கொள்வது, தகுதியுடன் பெறுவது மற்றும் மதிக்கும்போது இரட்சகரின் நுகத்தை நம்மீது எடுத்துக்கொள்கிறோம். நாம் ஏற்றுக்கொண்ட கடமைகளுக்கு ஏற்ப வாழ்வதற்கு நம்மால் முடிந்ததை நாம் உண்மையாக நினைவில் வைத்துக்கொண்டு இரட்சகருடன் பாதுகாப்பாகவும் கட்டப்பட்டும் இருக்கிறோம். அவருடனான அந்த பிணைப்பு நம் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் ஆவிக்குரிய பெலத்தின் ஆதாரமாகும்.
கர்த்தரின் உடன்படிக்கை ஜனம்
உடன்படிக்கையை காத்துக்கொள்ளும் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை பரிசீலிக்க நான் உங்களை அழைக்கிறேன். உதாரணமாக, நேபி “தேவ ஆட்டுக்குட்டியானவரின் சபையையும் [பிற்காலத்தில்] பார்த்தான், மேலும் அதன் எண்ணிக்கை குறைவாக இருந்தது, … தேவனுடைய பரிசுத்தவான்கள், பூமியின் பரப்பின் மேலெல்லாம் இருந்தனர்; மற்றும் அவர்களின் ஆளுகை … சிறியதாக இருந்தது.”10
அவர் “தேவ ஆட்டுக்குட்டியின் வல்லமையைப் பார்த்தார், அது ஆட்டுக்குட்டியின் சபையின் பரிசுத்தவான்கள் மீது இறங்கியது, மற்றும் கர்த்தரின் உடன்படிக்கை ஜனம் மீது … மேலும் அவர்கள் நீதியுடனும், தேவனின் வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடன் ஆயுதம் தரித்திருந்தனர்”11
“நீதியினாலும் மகா மகிமையிலிருக்கிற தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதம் தரித்தவர்களாய்” என்ற சொற்றொடர் வெறுமனே ஒரு நல்ல யோசனை அல்லது அழகான வேத மொழியின் எடுத்துக்காட்டு மட்டுமே அல்ல. மாறாக, இந்த ஆசீர்வாதங்கள் கர்த்தரின் எண்ணற்ற பிற்கால சீஷர்களின் வாழ்க்கையில் தெளிவாகத் தெரிகிறது.
பன்னிருவரில் அங்கத்தினராக எனது பணிகள் என்னை உலகம் முழுவதும் கொண்டு செல்கின்றன. மேலும் உங்களைச் சந்தித்து பலரிடமிருந்தும் மறக்கமுடியாத பாடங்களை கற்றுக்கொள்ள நான் ஆசீர்வதிக்கப்பட்டேன். இன்று கர்த்தரின் உடன்படிக்கை ஜனம் உண்மையில் நீதியினாலும் மகா மகிமையிலிருக்கிற தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதம் தரித்தவர்களாய் உள்ளனர் என்று நான் சாட்சியமளிக்கிறேன். தேவனால் வழங்க முடிகிற,உலகப்பிரகார திறனுக்கு அப்பாற்பட்டு விசுவாசம், தைரியம், முன்னோக்கு, விடாமுயற்சி மற்றும் மகிழ்ச்சியை நான் கண்டிருக்கிறேன்.
ஒரு பயங்கரமான வாகன விபத்தில் ஓரளவு முடங்கிப்போன ஒரு இளம் சபை உறுப்பினரின் வாழ்க்கையில் உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள் மூலம் தேவனின் நீதியையும் வல்லமையையையும் மகா மகிமையுடன் கண்டேன். இந்த மனிதரின் வேதனையான பல மாத குணமாதலுக்குப் பின்பு, அளவான இயக்கம் கொண்ட ஒரு புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்ட பிறகு, நான் இந்த உறுதியான ஆத்மாவை சந்தித்து பேசினேன். எங்கள் உரையாடலின் போது நான் கேட்டேன், “இந்த அனுபவம் உங்களுக்கு என்ன கற்றுக்கொள்ள உதவியது?” உடனடி பதில், “நான் சோகமாக இல்லை. எனக்கு பைத்தியம் இல்லை. மேலும் எல்லாம் சரியாகிவிடும்.”
சபையில் புதிதாக ஞானஸ்நானம் பெற்ற மற்றும் திடப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் வாழ்க்கையில் உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள்மீது விசுவாசத்தின் மூலம் பெறப்பட்ட தேவ நீதியையும் வல்லமையையும் நான் கண்டேன். இந்த மனமாறியோர் கற்றுக்கொள்ளவும், சேவை செய்யவும் ஆர்வமாக இருந்தனர், ஆனால் பழைய பழக்கவழக்கங்கள் மற்றும் வலுவான மரபுகளை எப்படி ஒதுக்கி வைப்பது என்பது பற்றி பெரும்பாலும் நிச்சயமற்றவர்களாக இருந்தனர், ஆனால் “பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாய்” மாறுவதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.12
இறப்பு நேரக்கூடிய நோயால் பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணை மற்றும் பெற்றோரை மென்மையாகக் கவனித்த குடும்பத்தின் வாழ்க்கையில் உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள்மீது விசுவாசம் மூலம் தேவ நீதியையும் மகா மகிமையுமான வல்லமையையும் கண்டேன். இந்த துடிப்புமிக்க சீஷர்கள் தங்கள் குடும்பம் தனிமையாக உணர்ந்த நேரங்களை —மற்றும் கர்த்தரின் கரம் தங்களை தூக்கி வலுப்படுத்துவதை அவர்கள் அறிந்த நேரங்களை விவரித்தனர். இந்தக் குடும்பம் நம்மை வளர்த்து நம் பரலோக பிதா மற்றும் நம் மீட்பரான, இயேசு கிறிஸ்துவைப் போல ஆக அனுமதிக்கிற, கடினமான பூலோக அனுபவங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது. தேவன் இந்த குடும்பத்தை பரிசுத்த ஆவியின் துணையுடன் போஷித்து, ஆசிர்வதித்தார் மற்றும் அவர்களின் வீட்டை ஆலயம் போன்ற புனிதமான புகலிடமாக ஆக்கினார்.
விவாகரத்தின் இதய வலியை அனுபவித்த ஒரு சபை உறுப்பினரின் வாழ்க்கையில் உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள்மீது விசுவாசம் மூலம் பெறப்பட்ட தேவ நீதி மற்றும் வல்லமையை நான் கண்டேன். இந்த சகோதரியின் ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சி ரீதியான துயரம் அவரது கணவரின் நியாயமற்ற உடன்படிக்கை மீறல் மற்றும் அவர்களின் திருமண முறிவு ஆகியவற்றின் தொடர்பினால் அதிகரித்தது. அவளுக்கு நீதி மற்றும் பொறுப்பேற்றல் தேவை.
இந்த விசுவாசமிக்க பெண் தனக்கு நேர்ந்த எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்ததால், அவள் வாழ்வில் முன்பை விட மிகவும் ஆர்வத்தோடும் தீவிரத்தோடும் இரட்சகரின் பாவநிவர்த்தி பற்றி படித்து, யோசித்துப் பார்த்தாள். படிப்படியாக, கிறிஸ்துவின் மீட்பின் ஊழியம் பற்றிய ஆழமான புரிதல் அவளுடைய ஆத்துமாவின் மீது பொழிந்தது—நம் பாவங்களுக்காக அவர் அனுபவிக்கும் துன்பம், நமது வலிகள், பலவீனங்கள், ஏமாற்றங்கள் மற்றும் வேதனைகள். மேலும் அவள் தன்னை ஊடுருவும் கேள்வியைக் கேட்க உணர்த்தப்பட்டாள்: அந்தப் பாவங்களுக்கான விலை ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருப்பதால், அந்த விலையை இரண்டு முறை செலுத்தும்படி நீங்கள் கோருவீர்களா? அத்தகைய தேவை நியாயமானதாகவோ அல்லது இரக்கமுள்ளதாகவோ இருக்காது என்பதை அவள் உணர்ந்தாள்.
இந்த பெண் உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள் மூலம் தன்னை இரட்சகருடன் பிணைத்துக்கொள்வது, மற்றொரு நபரின் ஒழுக்க சுயாதீனத்தின் அநீதியான பிரயோகத்தால் ஏற்படும் காயங்களை குணமாக்கும் மற்றும் மன்னிக்கும் திறனைக் கண்டறிந்து, அமைதி, கருணை மற்றும் அன்பை பெற உதவியது.
வாக்களிப்பும் சாட்சியும்
உடன்படிக்கை வாக்குறுதிகளும் ஆசீர்வாதங்களும் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவால் மட்டுமே சாத்தியமாகும். தன்னை நோக்கிப் பார்க்க அவர் நம்மை அழைக்கிறார்,13 அவரிடத்தில் வரவும்,14 அவரிடத்தில் கற்றுக் கொள்ளவும்,15 அவரோடு நம்மைப் பிணைக்கவும்16 அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள் மூலம் நம்மை அழைக்கிறார். உடன்படிக்கைகளை மதிப்பது நம்மை நீதியுடனும் தேவ வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடன் நமக்கு ஆயுதம் தரிக்கிறது என நான் வாக்குறுதி அளித்து சாட்சியமளிக்கிறேன். ஜீவிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் இரட்சகர் என்று நான் சாட்சி கூறுகிறேன். இந்த சத்தியங்களைப்பற்றி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் மகிழ்ச்சியுடன் சாட்சியமளிக்கிறேன், ஆமென்.