கிறிஸ்துவில் அதிகமாக மாறுதல்: சரிவின் உவமை
கர்த்தருடைய நேரத்தில், நாம் எங்கு தொடங்குவது என்பது அல்ல, ஆனால் நாம் எங்கு செல்கிறோம் என்பது தான் முக்கியம்.
ஒரு சிறுவனாக, எனக்கு பெரிய ஆசைகள் இருந்தன. பள்ளி முடிந்த பிறகு ஒரு நாள் நான் கேட்டேன்: “அம்மா, நான் வளரும்போது நான் என்னவாக இருக்க வேண்டும்: ஒரு தொழில்முறை கூடைப்பந்து வீரர் அல்லது ஒரு ராக் ஸ்டார்?” துரதிருஷ்டவசமாக, கிளார்க் “பல் இல்லாத அதிசயமானவன்” எதிர்கால விளையாட்டு அல்லது இசைப் புகழின் அறிகுறிகளைக் காட்டவில்லை. பல முயற்சிகள் செய்தபோதிலும், எனது பள்ளியின் மேம்பட்ட கல்வித் திட்டத்தில் எனக்கு மீண்டும் மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. இறுதியாக நான் வழக்கமான வகுப்பிலேயே இருக்க வேண்டும் என்று எனது ஆசிரியர்கள் பரிந்துரைத்தனர். காலப்போக்கில், நான் ஈடுசெய்து, படிக்கும் பழக்கத்தை உருவாக்கினேன். ஆனால் ஜப்பானில் எனது ஊழியத்துக்குப் பிறகுதான் எனது அறிவார்ந்த மற்றும் ஆவிக்குரிய சாத்தியங்கள் தோன்றத் தொடங்கின. நான் தொடர்ந்து கடினமாக உழைத்தேன். ஆனால் என் வாழ்க்கையில் முதல் முறையாக, நான் எனது வளர்ச்சியில் கர்த்தரை முறையாக ஈடுபடுத்தினேன், அது அனைத்து வித்தியாசங்களையும் ஏற்படுத்தியது.
சகோதர சகோதரிகளே, இந்த சபையில், நாம் தேவனின் பிள்ளைகளின் அனைவரின் தெய்வீக ஆற்றலையும், கிறிஸ்துவில் மேலும் ஏதாவது ஆகக்கூடிய நமது திறனையும் நம்புகிறோம். கர்த்தருடைய நேரத்தில், நாம் எங்கு தொடங்குவது என்பது அல்ல, ஆனால் நாம் எங்கு செல்கிறோம் என்பது தான் முக்கியம்.1
இந்த கொள்கையை செயலில்காட்ட, நான் சில அடிப்படை கணிதத்தை பயன்படுத்துவேன். இப்போது, பொது மாநாட்டில் கணிதம் என்ற வார்த்தையைக் கேட்டு திகிலடைய வேண்டாம். நமது பிஒய்யு–ஐடஹோ கணித ஆசிரியர்கள், தொடங்குபவர் கூட இந்த மையக் கருத்தைப் புரிந்துகொள்வார்கள் என்று எனக்கு உறுதியளிக்கிறார்கள். இது ஒரு வரியின் சூத்திரத்துடன் தொடங்குகிறது. நமது நோக்கங்களுக்காக குறுக்குக்கோடு, நமது வரியின் ஆரம்பம். குறுக்குக்கோடு உயர் அல்லது தாழ்ந்த தொடக்க புள்ளியைக் கொண்டிருக்கலாம். கோட்டின் சாய்வு பின்னர் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ சாய்ந்திருக்கும்.
நாம் அனைவரும் வாழ்க்கையில் வெவ்வேறு குறுக்குக்கோடுகளைக் கொண்டிருக்கிறோம், நாம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வாழ்க்கை தரிப்பித்தல்களுடன் தொடங்குகிறோம். சிலர் அதிக குறுக்குக்கோடுகளுடன், முழு வாய்ப்புகளுடன் பிறக்கிறார்கள். மற்றவர்கள் சவாலான மற்றும் நியாயமற்றதாகத் தோன்றும் ஆரம்ப சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர்.2 பின்னர், நாம் தனிப்பட்ட முன்னேற்றத்தின் சரிவில் முன்னேறுகிறோம். நமது எதிர்காலம் நமது தொடக்கப் புள்ளியால் மிகக் குறைவாகவும், மேலும் நமது சரிவில் மிக அதிகமாகவும் தீர்மானிக்கப்படும். நாம் எங்கு தொடங்கினாலும் இயேசு கிறிஸ்து தெய்வீக ஆற்றலைப் பார்க்கிறார். அவர் அதை பிச்சைக்காரர், பாவி மற்றும் அங்கவீனம் உள்ளவர்களிடம் பார்த்தார். அவர் அதை மீனவர், வரி வசூலிப்பவர் மற்றும் வைராக்கியமுள்ளவரிடத்தில் கூட பார்த்தார். நாம் எங்கு ஆரம்பித்தாலும், நமக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை வைத்து என்ன செய்கிறோம் என்பதைக் கிறிஸ்து கருத்தில் கொள்கிறார்.3 உலகம் நம் குறுக்குக்கோட்டில் கவனம் செலுத்துகையில், தேவன் நம் சாய்வில் கவனம் செலுத்துகிறார். கர்த்தரின் கணக்கீட்டில், அவர் நம்முடைய சாய்வுகளைபரலோகத்தை நோக்கி திருப்புவதற்கு நமக்குதவ, அவரால் முடிந்த அனைத்தையும் செய்வார்.
இந்த கொள்கை போராடுபவர்களுக்கு ஆறுதலளிக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு சாதகமும் இருப்பதாகத் தோன்றுவோருக்கு இடைநிறுத்தப்பட வேண்டும். வறுமை, கல்விக்கான வரையறுக்கப்பட்ட சாத்தியம், சவாலான குடும்ப சூழ்நிலைகள் உள்ளிட்ட கடினமான தொடக்க சூழ்நிலைகளுடனுள்ள தனிநபர்களை குறிப்பிட்டு தொடங்குகிறேன். பிறர் சரீர சவால்கள், மனநலக் கட்டுப்பாடுகள் அல்லது வலுவான மரபணு முன்தாக்கங்களை எதிர்கொள்ளலாம்.4 கடினமான தொடக்க கோடுகளில் போராடும் எவரும், இரட்சகருக்கு நமது போராட்டங்கள் தெரியும் என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். அவர் “அவரது மனம் இரக்கத்தால் நிரப்பப்பட,… [நம்] அங்கவீனத்துக்கேற்ப எப்படி [நமக்கு] உதவுவது” என்று அவர் அறியும்படிக்கு நம்முடைய அங்கவீனங்களை தம்மீது எடுத்துக் கொண்டார்.”5
கடினமான தொடக்க சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களுக்கு ஊக்கத்தின் இரண்டு பகுதிகளைப் பகிர்ந்து கொள்கிறேன். முதலில், நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள், நீங்கள் எங்கு தொடங்கினீர்கள் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள். உங்கள் சூழ்நிலைகளை புறக்கணிப்பது தவறானது, அவை உண்மையானவை மற்றும் கவனிக்கப்பட வேண்டும். ஆனால் கடினமான தொடக்கப் புள்ளியில் அதிக கவனம் செலுத்துவது உங்களை வரையறுக்கவும் உங்கள் தேர்ந்தெடுக்கும் திறனைக்கூட கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும்.6
பல ஆண்டுகளுக்கு முன்பு, மாசசூசெட்ஸின் பாஸ்டனில் உள்ள உள்-நகர இளைஞர்களின் குழுவோடு நான் பணியாற்றினேன், அவர்கள் பெரும்பாலும் சுவிசேஷம் மற்றும் சபையின் எதிர்பார்ப்புகளுக்கு புதியவர்கள். தேவனின் தராதரங்களைக் குறைக்கும் விருப்பத்துடன் அவர்களின் சூழ்நிலைக்கான எனது பச்சாதாபத்தையும் அக்கறையையும் குழப்புவதற்கு இது தூண்டியது.7 என் அன்பைக் காட்டும் மிக சக்திவாய்ந்த வழி, என் எதிர்பார்ப்புகளை ஒருபோதும் குறைக்கக்கூடாது என்பதை நான் இறுதியில் உணர்ந்தேன். செய்வதற்கு நான் அறிந்த எல்லாவற்றுடனும், நாங்கள் அவர்களின் திறனில் கவனம் செலுத்தினோம், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சாய்வுகளை உயர்த்தத் தொடங்கினர். சுவிசேஷத்தில் அவர்களின் வளர்ச்சி படிப்படியாக இருந்தது, ஆனால் நிலையானது. இன்று, அவர்கள் ஊழியம் செய்துள்ளனர், கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கிறார்கள், ஆலயத்தில் திருமணம் செய்தார்கள் மற்றும் குறிப்பிடத்தக்க தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இரண்டாவதாக, உங்கள் சாய்வைத் தூக்கும் பணியில் கர்த்தரை ஈடுபடுத்துங்கள். பி.ஒய்.யு– பாத்வே வர்ல்ட்வைட்- ன் தலைவராக பணியாற்றும் போது, மூப்பர் கார்லோஸ் ஏ. கோடோய் பேச்சாளராக இருந்த பெருவின் லிமாவில் ஒரு பெரிய ஆராதனையில் அமர்ந்திருந்ததை நினைவில் கொள்கிறேன். அவர் கூட்டத்தினரைப் பார்த்தபோது, விசுவாசமிக்க முதல் தலைமுறை பல்கலைக்கழக மாணவர்களைப் பார்த்து அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒருவேளை தனது சொந்த பாதையை நினைத்து, மூப்பர் கோடோய் உணர்ச்சிபூர்வமாக கூறினார்: “நீங்களே உங்களுக்கு உதவுவதை விட அதிகமாக கர்த்தர் உங்களுக்கு உதவுவார். [எனவே] இந்த செயல்பாட்டில் கர்த்தரை ஈடுபடுத்துங்கள்.”8 தீர்க்கதரிசி நேபி போதித்தான், “நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்த பின்பு, நாம் கிருபையாலேயே இரட்சிக்கப்படுகிறோம்.”9 நாம் மனந்திரும்புதல் உள்ளிட்ட,10 நம் பங்கை செய்ய வேண்டும், ஆனால் கர்த்தருடைய கிருபையால் மட்டுமே நம் தெய்வீக திறனை நாம் உணர முடியும்.11
இறுதியாக, உயர்ந்த தொடக்க புள்ளிகளைக் கொண்டவர்களுக்கு ஆலோசனையின் இரண்டு பகுதிகளைப் பகிர்ந்து கொள்கிறேன். முதலாவதாக, நாமே உருவாக்கிக் கொள்ளாத சூழ்நிலைகளுக்காக நாம் கொஞ்சம் மனத்தாழ்மையைக் காட்ட முடியுமா? முன்னாள் பி.ஒய்.யு தலைவர் ரெக்ஸ் ஈ. லீ தனது மாணவர்களிடம் மேற்கோள் காட்டியபடி, “நாம் அனைவரும் நாம் தோண்டாத கிணறுகளில் இருந்து குடித்தோம், நாம் மூட்டாத நெருப்புகளால் நம்மை சூடாக்கிக் கொண்டோம்.”12 முன்னதாக முன்னோடிகள் கட்டிய கல்வி கிணறுகளை திரும்பத்தரவும், புனரமைக்குமாறும் பின்னர் அவர் தனது மாணவர்களை அழைத்தார். மற்றவர்களால் நடப்பட்ட வயல்களை மறுநடவுசெய்யத் தவறினால் ஒரு தாலந்தை அதிகரிக்காமல் திரும்பக் கொடுப்பதற்கு சமமாக இருக்கும்.
இரண்டாவதாக, ஒரு உயர் தொடக்க புள்ளியில் கவனம் செலுத்துவது, நாம் செழித்து வளர்கிறோம் என்ற உணர்வில் நம்மை அடிக்கடி சிக்க வைக்கலாம், உண்மையில், நம் உள் சாய்வு மிகவும் தேங்கி நிற்கலாம். ஹார்வர்ட் பேராசிரியர் கிளேட்டன் எம். கிறிஸ்டென்சன் கற்பித்தார், மிகவும் வெற்றிகரமான மக்கள் தாழ்மையானவர்கள், ஏனென்றால் அவர்கள் திருத்தப்படவும், யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ளவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.13 மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன் “மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் [வழிகளைக் கண்டுபிடித்து] சரிசெய்துகொள்ள” நமக்கு அறிவுரை கூறினார்.14 காரியங்கள் நன்றாக நடப்பதாகத் தோன்றினாலும், ஜெப விண்ணப்பம் மூலம் மேம்படுவதற்கான வாய்ப்புகளை நாம் தேட வேண்டும்.
நாம் ஏராளமான அல்லது கடினமான சூழ்நிலைகளில் தொடங்கினாலும், நாம் தேவனை நம் பங்குதாரராக ஆக்கும் போதுதான் நமது இறுதி திறனை உணர்ந்து கொள்வோம். பி.ஒய்.யு–பாத்வே மாணவர்களின் வெற்றியைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்த தேசிய அளவில் பிரபலமான கல்வியாளருடன் சமீபத்தில் நான் உரையாடினேன். அவர் புத்திசாலி மற்றும் அவரது விசாரணை நேர்மையானது, ஆனால் அவர் தெளிவாக ஒரு மதச்சார்பற்ற பதிலை விரும்பினார். எங்கள் தக்கவைத்தல் திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல் முயற்சிகளை அவருடன் பகிர்ந்து கொண்டேன். ஆனால், நான் சொல்லி முடித்தேன், “இவை அனைத்தும் நல்ல நடைமுறைகள், ஆனால் நமது மாணவர்கள் முன்னேறுவதற்கான உண்மையான காரணம் அவர்களின் தெய்வீக ஆற்றலை நாம் அவர்களுக்குக் கற்பிப்பதே ஆகும். உங்கள் வாழ்நாள் முழுவதும், நீங்கள் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று சொல்லப்பட்டிருந்தால் கற்பனை செய்து பாருங்கள். பின்னர், நீங்கள் தெய்வீக சாத்தியம் கொண்ட தேவனின் உண்மையான மகன் அல்லது மகள் என்று கற்பிக்கப்படுவதன் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்.” அவர் இடைநிறுத்தினார், பின்னர் பதிலளித்தார், “அது வல்லமையானது.”
சகோதர சகோதரிகளே, இந்த கர்த்தரின் சபையின் அதிசயங்களில் ஒன்று, நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவில் இன்னும் மேலாக முடியும். அதன் உறுப்பினர்களுக்கு சேவை செய்வதற்கும், திருப்பித் தருவதற்கும், மனந்திரும்புவதற்கும், சிறந்த மக்களாக மாறுவதற்கும் அதிக வாய்ப்புகளை வழங்கும் வேறு எந்த அமைப்பையும்பற்றி எனக்குத் தெரியாது. நாம் கடினமான அல்லது தாராளமான ஆவிக்குரிய சூழ்நிலைகளில் தொடங்கினாலும், நம் பார்வைகள் மற்றும் நமது சாய்வுகள் பரலோகத்தை நோக்கிச் செல்ல வைப்போமாக. நாம் செய்யும்போது, கிறிஸ்து நம்மை உயர்ந்த இடத்திற்கு உயர்த்துவார். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.