கிறிஸ்துவண்டை வாருங்கள், தனியாக வரவேண்டாம்
உலகத்தை மேம்படுத்த உங்களுக்கிருக்கிற சிறந்த வழி, அவரைப் பின்பற்ற அனைவரையும் அழைப்பதால், கிறிஸ்துவுக்காக உலகத்தை ஆயத்தப்படுத்துவதாகும்.
ஒரு ஆர்வமுள்ள இளம் பெண்ணிடமிருந்து சமீபத்தில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவள் எழுதியிருந்தாள் “நான் சிக்கிக்கொண்டேன். … நான் யாரென்று எனக்கு நிச்சயமாகத் தெரிவில்லை, ஆனால் ஏதோ ஒரு பிரும்மாண்டத்திற்காக நான் இங்கிருக்கிறேன் என நான் உணருகிறேன்.”
நீங்கள் யாரென்று பரலோக பிதா அறிவாரா என்றும் நீங்கள் அவருக்குத் தேவையா என்றும் வியப்புற்று, அந்த தேடுதல் உணர்வு உங்களுக்கு எப்போதாவது இருந்திருக்கிறதா? எனக்கன்பான இளைஞர்கள், மற்றும் அனைவருக்கும், பதில் ஆம்! என நான் சாட்சியளிக்கிறேன். கர்த்தர் உங்களுக்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அவருடைய வல்லமைமிக்க பணியில் நன்மைக்காக ஒரு பெலமாகவும் சக்தியாகவும் இருக்க அவர் உங்களை இந்த நாளுக்காக இப்போதே ஆயத்தம் செய்துள்ளார். நீங்கள் எங்களுக்குத் தேவை! நீங்களில்லாமல் இது பிருமாண்டமாக இருக்காது.
பரிசுத்தமான சூழ்நிலைகளின் கீழ், உங்களுடைய பிருமாண்டமான மகிமையான பணிக்கு அடித்தளமாக இருக்கிற இரண்டு எளிய உண்மைகளை நமது அன்பிற்குரிய தீர்க்கதரிசி தலைவர் ரசல் எம். நெல்சன் ஒருமுறை எனக்கு நினைவூட்டினார்.
என்னுடைய கணவருடன் சோபாவில் நான் அமர்ந்திருந்தபோது, ஏறக்குறைய முழங்காலுடன் முழங்கால் தொடுகிற அளவில், நமது தீர்க்கதரிசி தனது நாற்காலியை இழுத்து, அவரது ஊடுருவும் நீலக் கண்களால் என்னைப் பார்த்தார். இளம் பெண்கள் பொதுத் தலைவராக சேவை செய்ய அவர் என்னை அழைத்தபோது, என்னுடைய இருதயம் வேகமாக அடித்ததா அல்லது முழுவதுமாக நின்றுவிட்டதா என எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. இன்னமும் என் இருதயத்தில் எதிரொலிக்கிற ஒரு கேள்வியை அவர் என்னிடம் கேட்டார், “போனி, [இளைஞர்கள்] அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான காரியம் எது?”
சிறிது நேரம் நான் யோசித்துச் சொன்னேன், “அவர்கள் யாரென்று அவர்களுக்குத் தெரியவேண்டும்.”
அவர் உரக்கச் சொன்னார், “ஆம்! அவர்களுடைய நோக்கத்தை அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.”
நமது தெய்வீக அடையாளம்
நீங்கள் பரலோக பிதாவின் ஒரு நேசத்துக்குரிய அன்பான பிள்ளை. உங்களுக்காவும் எனக்காகவும் பாவநிவர்த்தி செய்ய அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அவர் அனுப்புமளவுக்கு உங்களை அவர் மிகஅதிகமாக நேசிக்கிறார்.1 நம்மீதுள்ள இரட்சகரின் அன்பு மாறாதது, நாம் தவறும்போதும்! தேவனுடைய அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்கமுடியாது.2 உங்களுடைய தெய்வீக அடையாளத்தில் உங்கள் நம்பிக்கையை பெலவீனப்படுத்த, உங்களுடைய திறனைக் குருடாக்க முயற்சிக்கிற, உலகத்தின் குழப்பத்தை, இந்த அன்பை நினைவுகூருதல் பின்னுக்குத் தள்ள உங்களுக்குதவும்.
ஒரு எப்.எஸ்.ஒய் மாநாட்டில், போராடிக் கொண்டிருந்த, இரண்டு இளம் பெண்களை நான் சந்தித்தேன். தனிப்பட்ட முறையில் அவளுக்காக கர்த்தருடைய அன்பையும் வழிநடத்துதலையும் மீண்டும் கண்டுபிடிக்க அவளுடைய கோத்திரப்பிதாவின் ஆசீர்வாதங்களைப் புரட்டிப் பார்த்ததை இரண்டு இளம் பெண்களும் குறிப்பிட்டார்கள். உங்கள் கோத்திரப்பிதாவின் ஆசீர்வாதத்தைக் கண்டுபிடியுங்கள், தேவையானால் நீங்கள் தூசி தட்டுங்கள், அடிக்கடி படியுங்கள். உங்களிடம் அது இல்லாதிருந்தால் விரைவிலேயே அதைப் பெறுங்கள். நீங்கள் யாரென்பதைப்பற்றி இப்போது கர்த்தர் உங்களுக்கு என்ன கூற விரும்புகிறாரென்பதைக் கண்டுபிடிக்க தாமதிக்காதிருங்கள்.
நமது நித்திய நோக்கம்
அந்த நாளில் நமக்காகப் பேசப்பட்ட தலைவர் நெல்சனின் இரண்டாவது சத்தியம் நமது நோக்கத்தை அறிவது. இது நமது மகத்தான உத்தமமான கட்டளை.
அநேக ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய மகன் டானர் அவனுடைய முதல் கால்பந்து விளையாட்டை விளையாடியபோது அவனுக்கு சுமார் ஐந்து வயதுதான். அவன் சிலிர்ப்படைந்தான்!
நாங்கள் விளையாட்டு மைதானத்திற்கு வந்துசேர்ந்தபோது, அவனுடைய அணி ஒரு ஒழுங்குமுறை அளவிலான கால்பந்து இலக்கைப் பயன்படுத்துகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம், சில சிறிய பாப்-அப் கோல் அல்ல, ஆனால் ஐந்து வயது பிள்ளைகளுக்கு மிகப் பெரியதாகத் தோன்றிய மிகப் பெரிய வலை.
டானர் கோலி நிலையை எடுப்பதை நான் கண்டபோது, விளையாட்டு புராண அளவை அடைந்தது. நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். வலையைப் பாதுகாப்பதில் அவனுடைய நோக்கத்தை உண்மையிலே அவன் புரிந்துகொண்டானா?
விசில் ஊதப்பட்டது, நாங்கள் விளையாட்டில் மூழ்கி, டானரை மறந்துவிட்டோம். திடீரென்று எதிரணி குழு உறுப்பினர்களில் ஒருவர் பந்தைப் பெற்று அவனை நோக்கி விரைவாக தட்டிச் சென்றார். அவனுடைய இடத்தில் நின்று கோலைத் தடுப்பான் என்பதை உறுதி செய்ய டானரின் திசையை நோக்கி நான் பார்த்தேன். நான் பார்த்த ஒன்று நான் எதிர்பாராதது.
விளையாட்டின் ஒரு கட்டத்தில், டானர் கவனம் திருப்பப்பட்டு வலையின் வெவ்வேறு துளைகள் வழியாக தனது இடது கையை பின்னத் தொடங்கினான். பின்னர் அதையே அவன் தனது வலது கையால் செய்தான். அடுத்து, அவனுடைய இடது கால். இறுதியாக வலது காலாலும் செய்தான். டானர் முழுவதுமாக வலையில் சிக்கிக்கொண்டான். அவனுடைய நோக்கத்தையும், அவன் செய்ய ஒப்படைக்கப்பட்டதையும் அவன் மறந்துவிட்டான்.
டானரின் கால்பந்து வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை என்றாலும் அந்த நாளில் எனக்கு அவனுடைய பாடம் ஒருபோதும் மறக்காது. நாம் ஏன் இங்கிருக்கிறோம் என்பதிலிருந்து நாம் அனைவரும் எப்போதாவது திசை திருப்பப்பட்டு, நமது ஆற்றல்களை எங்காவது வழிதவற விடுகிறோம். தேவைப்படும் சமயங்களில், நல்ல மற்றும் சிறந்த காரணங்களுடன் நம்மை திசை திருப்புவது, நம்மை இந்த உலகத்திற்கு அழைத்த பணியில் இருந்து நம்மை குருடாக்கலாம், பிணைக்கலாம் என்பது சாத்தானின் மிக சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்று.3
கிறிஸ்துவண்டை வருவதும் அவருடைய மகத்தான பணியில் அவரோடு உற்சாகமாக சேருவதும் நமது நித்திய நோக்கம். தலைவர் நெல்சன் போதித்ததைச் செய்வதைப் போன்று இது எளியது: “தேவனுடன் தங்களுடைய உடன்படிக்கைகளைச் செய்யவும் கைக்கொள்ளவும், யாருக்கும் உதவுகிற எதையும் எப்போது வேண்டுமானாலும் நாம் செய்கிறோம், நாம் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க உதவுகிறோம்.”4 அவருடன் ஒன்றாகச் சேர்ந்து அவருடைய பணியை நாம் செய்யும்போது, நாம் அவரை அதிகமாக அறிகிறோம், அவரை நேசிக்கிறோம்.
விசுவாசம், போற்றப்படுகிற மனந்திரும்புதல், கட்டளைகளை கைக்கொள்ளுதல் மூலமாக இரட்சகரண்டை நெருங்கிவர நாம் தொடர்ந்து நாடுகிறோம். உடன்படிக்கைகள், நியமங்கள் மூலமாக, நம்மையே அவருடன் நாம் கட்டும்போது, அதிகரித்த நம்பிக்கையுடன்,5 பாதுகாப்புடன்,6 ஆழமான நீடித்த சந்தோஷத்துடன்7 நமது வாழ்க்கை நிரப்பப்படுகிறது.
நாம் அவரிடம் வரும்போது, அவருடைய கண்கள் மூலமாக மற்றவர்களை நாம் பார்க்கிறோம்.8 கிறிஸ்துவண்டை வாருங்கள். இப்போது வாருங்கள், ஆனால் தனியாக வராதிருங்கள்!9
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் நேர்த்தியானது மட்டுமல்ல, அது அனைவருக்கும் அத்தியாவசியமானது. “மனுஷன் கிறிஸ்துவினாலும் அவர் மூலமுமேயன்றி வேறெந்த வழியினாலும் முறையினாலும் இரட்சிக்கப்பட முடியாது.”10 இயேசு கிறிஸ்து நமக்கு வேண்டும்! இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வேண்டும்.11
நினைவுகூருங்கள், உலகத்தை மேம்படுத்த உங்களுக்கிருக்கிற சிறந்த வழி, அவரைப் பின்பற்ற அனைவரையும் அழைப்பதால், கிறிஸ்துவுக்காக உலகத்தை ஆயத்தப்படுத்துவதாகும்.
நேபியர்களுடன் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைப்பற்றி வல்லமையுடன் பேசுகிற மார்மன் புஸ்தகத்தில் ஒரு கதையிருக்கிறது. அது எப்படியிருக்குமென உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
பிதாவினிடத்திற்கு அவர் திரும்பவேண்டுமென கிறிஸ்து அறிவித்தபோது, “அவர் தம்முடைய கண்களை மறுபடியும் நேராய் ஏறெடுத்தார்.”12 மக்களின் கண்களில் கண்ணீரைப் பார்த்தபோது, அவர்களது இருதயங்கள் அவர் தங்கி இருக்க வேண்டும் என்று ஏங்குவதை அவர் அறிந்திருந்தார்.
அவர் கேட்டார்: “உங்களுள் வியாதியஸ்தர் எவரேனும் உண்டோ? அவர்களை இங்கே கொண்டுவாருங்கள். உங்களுள் முடவராயோ, குருடராயோ, … செவிடராயோ, எந்த விதத்திலும் உபத்திரவப்பட்டவராயோ எவரேனும் உண்டோ? அவர்களை இங்கே கொண்டுவாருங்கள், நான் அவர்களை சுகமாக்குவேன்.”13
மிகுந்த இரக்கமுள்ளவராய், அவர் எந்த வரம்புகளையும் நிர்ணயிக்காமல், “எந்த விதத்திலும் உபத்திரவப்பட்ட” அனைவரையும் அவர் அழைத்தார். சுகமளிக்க இயேசு கிறிஸ்துவுக்கு எதுவும் மிகப்பெரியதல்ல, மிகச்சிறியதுமல்ல என்பது எனக்குப் பிடிக்கும்.
நமது துன்பங்களையும் அவர் அறிகிறார், கவலை, மனச்சோர்வு, சோர்வு, பெருமை மற்றும் பாதுகாப்பற்ற, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட, தனிமையான அல்லது “எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களை” கொண்டுவர அழைக்கிறார்.
அனைவரும் … “போனார்கள்…; அவர் அவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தினார்.…
“… குணமடைந்தவர்களும் சுகப்பட்டவர்களும், அவருடைய பாதத்தில் முழங்கால்படியிட்டு அவரைத் தொழுதுகொண்டார்கள்.”14
இதைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் நான் என்னையே கேட்டுக்கொள்வேன்: நான் கிறிஸ்துவிடம் யாரைக் கொண்டு வருவேன்? நீங்கள் யாரைக் கொண்டு வருவீர்கள்?
இயேசு செய்ததைப்போல, யாரையும் தவறவிடாமல் உறுதி செய்யவும், ஒவ்வொருவரும் அவரை அறிய வருமாறு அழைக்கவும், அவர் செய்ததைப் போல் நாம் மீண்டும் சுற்றிலும் பார்க்க முடியுமா?
அது எவ்வளவு எளிதென்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை நான் பகிர்ந்து கொள்கிறேன். 15 வயதான எனது தோழி பெய்டன், ஒவ்வொரு நாளும் காலை உணவில் ஐந்து வேதவசனங்களை வாசிக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை வைத்திருந்தாள், ஆனால் அவள் அதை தனியாகச் செய்யவில்லை. மீண்டும் பார்த்து, பெய்டன் தனது பெற்றோர்களையும் உடன்பிறப்புகளையும், அவளுடைய ஐந்து வயது சகோதரனையும்கூட அழைத்தாள். “அவர்களை இங்கே கொண்டுவாருங்கள்” என அவர் அழைத்தபோது கிறிஸ்து போதித்த இது சிறிய செயலாகத் தோன்றுகிறது.
கர்த்தரிடமிருந்து வருகிற அழைப்பு இன்னமும் இ்ன்றும் நீட்டிக்கப்படுகிறது. இளம் பெண்களே, வாலிபர்களே, உங்கள் சொந்த வீட்டில், இப்போதே ஆரம்பியுங்கள். உங்கள் பெற்றோர் தொடர்ந்து கிறிஸ்துவண்டை வர, அவர்களை எவ்வாறு ஆதரிக்க முடியுமென பரலோக பிதாவிடம் நீங்கள் ஜெபித்து, கேட்பீர்களா? அவர்களுக்கு நீங்கள் தேவைப்படுகிற அளவுக்கு நீங்கள் அவர்களுக்கு தேவை.
பின்னர், உங்கள் உடன்பிறப்புகளை, உங்கள் நண்பர்களை, உங்கள் அண்டைவீட்டாரை மீண்டும் பாருங்கள். கிறிஸ்துவண்டை நீங்கள் யாரைக் கொண்டு வருவீர்கள்?
“இதோ, நானே ஒளி; நான் உங்களுக்காக உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறேன்”15 என நமது இரட்சகர் அறிவித்தார். “என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்”16 என அவர் வாக்களித்திருப்பதால் தேவனுடைய குடும்பத்தை இரட்சிப்பதில் நாம் அவருடன் சேரும்போது, இரட்சகரின் அன்பை சமாதானத்தை நாம் உணருவோம்.
கிறிஸ்துவின் பணியில் ஈடுபட்டிருப்பது என்ன ஒரு மகிமையான நேரம்!
ஆம், நீங்கள் ஏதோ பிருமாண்டமான காரியத்திற்காக இங்கே இருக்கிறீர்கள். “உலகத்தை மாற்ற கர்த்தருக்கு நீங்கள் தேவை. உங்களுக்கான அவருடைய சித்தத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டு பின்பற்றும்போது, சாத்தியமற்றதை நிறைவேற்றுவதை நீங்களே காண்பீர்கள்!”17 என்று சொன்ன தலைவர் நெல்சனுடன் நான் இணைகிறேன்.
நீங்கள் யாரென்று கர்த்தர் அறிந்திருக்கிறார் என்றும், அவர் உங்களை நேசிக்கிறார் என்றும் நான் தைரியமாக சாட்சியளிக்கிறேன்! கிறிஸ்துவே இந்த பூமிக்குத் திரும்பி, நம் ஒவ்வொருவரையும் “இங்கு” வருமாறு அழைக்கும் அந்த மகத்தான நாள் வரை ஒன்றாக நாம் அவருடைய நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம். நாங்கள் மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடுவோம், ஏனென்றால் நாமே கிறிஸ்துவண்டை வருகிறவர்கள், நாம் தனியாக வருவதில்லை இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.