கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக ஆயத்தமாயிருத்தல்
எப்போதையும் விட, நாம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு நெருக்கமாகி வருகிறோம் என்ற உண்மையை முன்னெப்போதையும்விட நாம் எதிர்கொள்ள வேண்டும்.
மார்மன் புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நீதியுள்ள லாமானியனான சாமுவேல், நம் இரட்சகரின் பிறப்போடு வரும் அறிகுறிகளாக, அப்போது அவர்கள் பெரும்பாலும் ஒரு மதமாறுபாடுள்ள மக்களாக மாறின, நேபி மக்களுக்கு தீர்க்கதரிசனம் சொன்னான். 1 துக்ககரமாக, பெரும்பாலான நேபியர்கள் அந்த அறிகுறிகளை நிராகரித்தனர், ஏனென்றால் “கிறிஸ்து போன்ற ஒரு நபர் வரவேண்டுமென்பது நியாயமானதல்ல.”2
வருந்தும்படியாக, வேதப் பதிவின்படி, கலிலேயாவின் மதிக்கப்படாத மாகாணத்தைச் சேர்ந்த இயேசு என்ற நபர் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மேசியா என்பதை யூதர்களில் அநேகரால், அதே வழியில், ஏற்றுக்கொள்ள முடியவில்லை.3 எபிரேய தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்ட அநேக தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற வந்த இயேசு நிராகரிக்கப்பட்டு, சிலுவையிலும் அறையப்பட்டார், ஏனெனில், மார்மன் புஸ்தக தீர்க்கதரிசி யாக்கோபு போதித்ததைப்போல, “குறிக்கும் அப்பால் யூதர்கள் பார்த்தார்கள்.” இதன் விளைவாக, “அவர்களிடத்திலிருந்து தன்னுடைய தெளிவானவைகளைத் தேவன் எடுத்துவிட்டு, அவர்கள் விரும்பினபடியே, அவர்கள் புரிந்துகொள்ளமுடியாத அநேக காரியங்களை அவர்களுக்கு அளித்தார். மேலும், அவர்கள் விரும்பினதினிமித்தம் கர்த்தர் அப்படிச் செய்து, அவர்களை இடறப்பண்ணினார்.”4
இது விசித்திரமாகத் தோன்றினாலும், எந்த போதனையும், எந்த அதிசயமும், லாமானும் லெமுவேலும் கண்டதைப்போல, பரலோக தூதனின் எந்த தோற்றமும் தனிநபர்களை தங்கள் போக்கை, கண்ணோட்டத்தை அல்லது ஏதோ ஒன்று உண்மை என்ற நம்பிக்கையை மாற்றும்படி திருப்திப்படுத்தும் வலியுறுத்தும் சக்தி இருப்பதாக தோன்றவில்லை.5 போதனைகள் அல்லது அற்புதங்கள் ஒரு நபரின் முன்கூட்டிய விருப்பங்கள், ஆசைகள் அல்லது யோசனைகளுடன் உடன்படாதபோது அது விசேஷித்த காரியமாகும்.
பின்வரும் இரண்டு வேத வசனங்களை தயவுசெய்து சிறிதுநேரம் மாறுபாடாய் பாருங்கள், முதலாவது மனிதனின் வழிகளை விவரித்து, பிற்காலத்தைப்பற்றி பேசிய அப்போஸ்தலன் பவுலிலிருந்து, இரண்டாவது மனுக்குலத்திற்கு மத்தியில் தேவன் எவ்வாறு அவருடைய பணியைச் செய்கிறார் என்பதை ஆல்மா தீர்க்கதரிசி காட்டியதிலிருந்து. முதலாவதாக பவுலிடமிருந்து:
“மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
“எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,
“சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
“துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும்; …
“எப்போதும் கற்றாலும், ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிறார்கள்.”6
“இப்பொழுது இது என் மதியீனத்தால் சொல்லப்படுகிற ஒரு காரியம் என நீ எண்ணலாம், இதோ நான் உனக்குச் சொல்கிறேன், அற்பமும் சொற்பமுமானவைகளைக் கொண்டுதான் பெரிய காரியங்கள் செய்யப்படுகின்றன, அற்பமானவைகளே அநேக தடவைகளில் ஞானவான்களைத் தாழ்த்தும்.”7
மிகுந்த அறிவும் திறமையும் நிறைந்த நவீன உலகில் நாம் வாழ்கிறோம். ஆயினும்கூட, இந்த காரியங்கள் பெரும்பாலும் அவை கட்டப்பட்ட நிலையற்ற அடித்தளத்தை மறைக்கின்றன. இதன் விளைவாக, அவைகள் உண்மையான சத்தியத்திற்கும் தேவனை நோக்கியும் நடத்தாது மற்றும் வெளிப்பாட்டைப் பெறும் வல்லமை, ஆவிக்குரிய அறிவைப் பெறுதல் மற்றும் இரட்சிப்புக்கு வழிவகுக்கும் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கையை வளர்ப்பது இல்லை8
அவருடைய பாவநிவாரண பலியின் மாலைநேரத்தில், தோமாவிடமும் பிற அப்போஸ்தலர்களிடமும் பேசிய நமது கர்த்தருடைய வார்த்தைகளை நாம் ஆழமாக நினைவுகூருகிறோம்: “அதற்கு இயேசு நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றார்.”9
காண்பதற்கு கண்களையும், கேட்பதற்கு காதுகளையும் மற்றும் உணர்வதற்கு இருதயங்களையும் கொண்டவர்கள், முன்னெப்போதையும் விட, நாம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு நெருக்கமாகி வருகிறோம் என்ற உண்மையை எதிர்கொள்ள வேண்டும். உண்மையாக, பூமியில் அவருடைய திரும்பி வருதலுக்காகக் காத்திருக்கிறவர்களுக்கு, மிகுந்த கஷ்டங்கள் காத்திருக்கின்றன, ஆனால் இது சம்பந்தமாக, விசுவாசிகள் பயப்படத் தேவையில்லை.
இப்போது, “இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை” என்ற தலைப்பின் கீழ் சபையின் சுவிசேஷ தலைப்புகளிலிருந்து இப்போது நான் ஒருகணநேரம் மேற்கோள் காட்டுகிறேன்:
“இரட்சகர் மீண்டும் வரும்போது, பூமியை அவருடைய ராஜ்யமாக உரிமைகோர அவர் வல்லமையோடும், மகிமையோடும் வருவார். அவருடைய இரண்டாம் வருகை ஆயிரம் வருஷத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும்.
“துன்மார்க்கருக்கு இரண்டாம் வருகை, பயமுறுத்துகிற, துக்ககரமான நேரமாயிருக்கும், ஆனால் நீதிமான்களுக்கு சமாதானத்தின் ஒரு நாளாயிருக்கும். கர்த்தர் அறிவித்தார்:
“‘ஏனெனில் ஞானமுள்ளவர்களும் சத்தியத்தைப் பெற்றவர்களும் தங்கள் வழிகாட்டியாக பரிசுத்த ஆவியை வைத்துக்கொண்டவர்களும் ஏமாற்றப்படவில்லை, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படுவதில்லை, அந்நாளிலே தரித்திருப்பார்கள்.
“‘ஒரு சுதந்தரமாக பூமி அவர்களுக்குக் கொடுக்கப்படும். அவர்கள் பலுகிப்பெருகி பலங்கொள்வார்கள், அவர்களின் பிள்ளைகள் இரட்சிப்படைய பாவமில்லாதவர்களாக வளர்வார்கள்.
“‘ஏனெனில் கர்த்தர் அவர்களின் நடுவிலிருப்பார், அவருடைய மகிமை அவர்கள் மேலிருக்கும், அவர் அவர்களின் ராஜாவாயும் அவர்களின் பிரமாணத்தைக் கொடுப்பவராயுமிருப்பார்’ (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:57–59.).”10
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக நமது ஆயத்தத்தில், பழைய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான, ஆறுதலளிக்கும் குறிப்பை விசுவாசிகளுக்காக நான் வழங்குகிறேன்: “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.”11
இந்த உணர்வில், உலகத்திற்கு கர்த்தருடைய இன்றைய தீர்க்கதரிசியான தலைவர் ரசல் எம். நெல்சன் இந்த சமீபத்திய உணர்த்துதலான ஆலோசனையை நமக்குக் கொடுத்தார்: “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மனந்திரும்புதலின் சுவிசேஷமாக இருக்கிறது. இரட்சகரின் பாவநிவிர்த்தியினால், மாறவும், வளரவும், அதிக தூய்மையாக ஆகவும் அவருடைய சுவிசேஷம் ஒரு அழைப்பை வழங்குகிறது. இது நம்பிக்கை, குணப்படுத்துதல் மற்றும் முன்னேற்றத்தின் சுவிசேஷம். அப்படியாக, சுவிசேஷம் ஒரு மகிழ்ச்சியின் செய்தி! முன்னேற நாம் எடுக்கும் ஒவ்வொரு சிறிய அடியிலும் நமது ஆவிகள் களிகூருகின்றன.”12
வாழ்க்கையின் தாழ்ந்த மற்றும் உயர் நிலைகளில் இருந்து தேவனின் யதார்த்தம் மற்றும் எண்ணற்ற மக்களின் அன்றாட வாழ்வின் அற்புதங்களைப்பற்றி நான் தயக்கமின்றி சாட்சியமளித்து சான்றழிக்கிறேன். உண்மையாகவே, அவற்றின் தெய்வீக தோற்றம் மற்றும் அதன் விளைவாக நன்கு அறியப்படாத சிலர் கேலி செய்யும் வாய்ப்பு உள்ளதால் அநேக பரிசுத்த அனுபவங்கள் ஓரளவில் அரிதாகவே பேசப்படுகின்றன.
இது சம்பந்தமாக, மார்மன் புஸ்தக தீர்க்கதரிசிகளில் கடைசியான மரோனி நமக்கு நினைவூட்டுக்றான்:
“மேலும், தேவ வெளிப்பாடுகளை மறுதலித்து, அவை சம்பவிப்பதில்லை என்றும், வெளிப்பாடுகளோ, தீர்க்கதரிசனங்களோ, வரங்களோ, சுகப்படுத்தலோ, அன்னிய பாஷைகளில் பேசுதலோ, அன்னிய பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதலோ இல்லை என்று சொல்கிறவர்களுக்கு நான் மறுபடியும் பேசுவதாவது;
“இதோ நான் உங்களுக்குச் சொல்கிறேன், இவைகளை மறுதலிக்கிறவன் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறியான், ஆம், அவன் வேத வாக்கியங்களை வாசிக்கவில்லை, வாசித்திருந்தாலும் அவன் அவைகளை அறிந்து கொள்ளவில்லை.
“ஏனெனில் தேவன் நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும் அவரில் யாதொரு மாறுதலும், யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை என்றும் நாம் வாசிப்பதில்லையா?”13
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் எதிர்பார்த்திருந்தபோது, அவருடைய ஊழியத்தின் கடைசிக்குப் பக்கத்தில் அவரிடமிருந்து கொடுக்கப்பட்ட ஒரு உண்மையான உணர்த்துதலான தீர்க்கதரிசன அறிவிப்புடன் எனது உரையை நான் முடிக்கிறேன்: “இவ்வளவு பெரிய காரியத்திற்காக நாம் செல்லவேண்டாமா? முன்னோக்கிச் செல்லுங்கள், பின்னோக்கியல்ல. தைரியமாயிருங்கள், சகோதரரே [சகோதரிகளையும் நான் சேர்த்துக்கொள்ளட்டுமா]; தைரியமாக மேலும் மேலும் ஜெயத்தை நோக்கி! உங்கள் இருதயங்கள் களிகூரட்டும், மிகுந்த மகிழ்ச்சியடையட்டும்.14 இதைப்பற்றி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எனது சாட்சியை சேர்க்கிறேன், ஆமென்.