பொது மாநாடு
சாலையைப் பார்
அக்டோபர் 2021 பொது மாநாடு


9:20

சாலையைப் பார்

மிக முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்துவது, குறிப்பாக “சாலையில் உள்ள” காரியங்கள், அந்த நித்திய காரியங்கள், இந்த வாழ்க்கையை சமாளிக்க முக்கியமாகும்.

எனக்கு 15 வயதாகும்போது, நான் ஒரு கார் ஓட்டக் கற்பவர் அனுமதியைப் பெற்றேன், இது என் பெற்றோரில் ஒருவர் என்னுடன் இருந்தால் ஒரு காரை ஓட்ட அனுமதித்தது. நான் கார் ஓட்ட செல்ல விரும்புகிறேனா என்று என் அப்பா கேட்டபோது, நான் பரவசமடைந்தேன்.

அவர் சில மைல்கள் நகரின் புறநகர்ப் பகுதிக்குச் சென்று ஒரு நீண்ட, சிலர் மட்டுமே பயன்படுத்திய, நேரான, இருவழிச் சாலைக்குச் சென்றார், ஒருவேளை அவர் பாதுகாப்பாக உணர்ந்த ஒரே இடமாக அது இருக்கலாம். அவர் சாலையின் ஓரத்தில் நிறுத்தினார், நாங்கள் இருக்கைகளை மாற்றினோம். அவர் எனக்கு கொஞ்சம் பயிற்சியளித்தார், பின்னர் என்னிடம் கூறினார், “சாலையில் இறங்கு, நான் நிறுத்தச் சொல்லும் வரை ஓட்டு.”

நான் அவருடைய உத்தரவை சரியாக பின்பற்றினேன். ஆனால் சுமார் 60 வினாடிகளுக்குப் பிறகு, அவர் சொன்னார், “மகனே, காரை ஓரமாக நிறுத்து. நீ என்னை குமட்ட வைக்கிறாய். நீ சாலை முழுவதும் அலைகிறாய்.” அவர் கேட்டார், “நீ என்ன பார்க்கிறாய்?”

சிறிது எரிச்சலுடன், நான் சொன்னேன், “நான் சாலையைப் பார்க்கிறேன்.”

பின்னர் அவர் இதை கூறினார்: “நான் உன் கண்களைப் பார்க்கிறேன், நீ காரின் மூடி முன்னால் உள்ளதை மட்டுமே பார்க்கிறாய். உனக்கு முன்னால் உள்ளதை மட்டும் பார்த்தால், நீ ஒருபோதும் நேராக ஓட்ட மாட்டாய்.” பின்னர் அவர் வலியுறுத்தினார், “சாலையைப் பார். அது நேராக ஓட்ட உனக்கு உதவும்.”

ஒரு 15 வயது சிறுவனாக, நான் அது ஒரு நல்ல ஓட்டுநர் பாடம் என்று நினைத்தேன். அது அன்றிலிருந்து ஒரு சிறந்த வாழ்க்கை பாடம் என்பதை நான் உணர்ந்தேன். மிக முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்துவது, குறிப்பாக “சாலையில் உள்ள” காரியங்கள், அந்த நித்திய காரியங்கள், இந்த வாழ்க்கையின் சூழ்ச்சிக்கு ஒரு திறவுகோலாகும்.

இரட்சகரின் வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்தில், அவர் தனியாக இருக்க விரும்பினார், எனவே “அவர் தனித்து ஜெபம் பண்ண ஒரு மலையின் மேல் ஏறினார்.”1 அவர் தனது சீஷர்களை கடலைக் கடக்க அறிவுறுத்தல்களுடன் அனுப்பினார். இரவின் இருளில், சீஷர்களைக் கொண்டு சென்ற கப்பல் ஒரு பயங்கரமான புயலை எதிர்கொண்டது. இயேசு அவர்களை காப்பாற்ற சென்றார், ஆனால் வழக்கத்திற்கு மாறான வழியில். வேத விவரம் சொல்கிறது, “இரவின் நாலாம் ஜாமத்திலே இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடத்துக்கு வந்தார்.”2 அவரைப் பார்த்ததும், அவர்கள் பயப்படத் தொடங்கினர், ஏனென்றால் தங்களை நெருங்கிய உருவம் ஏதோ ஒரு பூதம் அல்லது பேய் என்று அவர்கள் நினைத்தார்கள். இயேசு அவர்களின் நடுக்கத்தை உணர்ந்து, அவர்களின் மனதையும் இருதயத்தையும் நிம்மதியாக வைக்க விரும்பி, அவர்களை அழைத்தார், “திடன் கொள்ளுங்கள், நான்தான், படப்படாதிருங்கள்.”3

பேதுரு நிம்மதி அடைந்தது மட்டுமல்லாமல் தைரியமும் அடைந்தான். எப்பொழுதும் தைரியமாகவும் அடிக்கடி தூண்டுதலாகவும், பேதுரு இயேசுவிடம் கூக்குரலிட்டான், “ஆண்டவரே, நீரேயானால் நான் ஜலத்தின் மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும்.”4 இயேசு தனது பழக்கமான மற்றும் காலந்தாழ்த்தாத அழைப்பின் மூலம் பதிலளித்தார்: “வா.”5

பேதுரு, நிச்சயமாக எதிர்பார்ப்பால் சிலிர்த்து, படகில் இருந்து தண்ணீருக்குள் அல்ல, தண்ணீரின் மேல் ஏறினான். அவன் இரட்சகரிடம் கவனம் செலுத்தும்போது, அவனால் முடியாததைச் செய்ய முடியும், தண்ணீரில் கூட நடக்க முடியும். ஆரம்பத்தில், பேதுரு புயலால் பாதிக்கப்படவில்லை. ஆனால் “பலமாயிருந்த”6 காற்று இறுதியில் அவனை திசை திருப்பியது, மேலும் அவன் தனது கவனத்தை இழந்தான். பயம் திரும்பியது. இதன் விளைவாக, அவனது விசுவாசம் குறைந்து, அவன் மூழ்கத் தொடங்கினான். “ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான்.”7 எப்பொழுதும் காப்பாற்றத் துடிக்கும் இரட்சகர், அவனை அடைந்து பாதுகாப்பாக தூக்கினார்.

இந்த அற்புத விவரத்திலிருந்து கற்றுக்கொள்ள எண்ணற்ற பாடங்கள் உள்ளன, ஆனால் நான் மூன்றைக் குறிப்பிடுவேன்.

கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துங்கள்

முதல் பாடம்: இயேசு கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துங்கள். பேதுரு தன் கண்களை இயேசுவின் மீது வைத்திருந்தபோது, அவன் தண்ணீரில் நடக்க முடிந்தது. அவன் மீட்பர் மீது கவனம் செலுத்தும் வரை புயல், அலைகள் மற்றும் காற்று அவனைத் தடுக்க முடியவில்லை.

நமது இறுதி நோக்கத்தைப் புரிந்துகொள்வது நம் கவனம் என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நமக்கு உதவுகிறது. இலக்கை அறியாமல் நாம் ஒரு வெற்றிகரமான விளையாட்டை விளையாட முடியாது, அல்லது அதன் நோக்கத்தை அறியாமல் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியாது. மற்ற காரியங்களுக்கு மத்தியில், “வாழ்க்கையின் நோக்கம் என்ன?” என்ற கேள்விக்கு அது பதிலளிக்கிறது என்பது இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் பெரும் ஆசீர்வாதங்களில் ஒன்று. “இந்த வாழ்க்கையில் நமது நோக்கம் மகிழ்ச்சியடைந்து தேவனின் பிரசன்னத்திற்குத் திரும்ப ஆயத்தமாவதாகும்.”8 தேவனுடன் வாழத் தயாராவதற்கு நாம் இங்கே பூமியில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வது, கிறிஸ்துவிடம் நம்மை வழிநடத்தும் காரியங்களில் கவனம் செலுத்த உதவுகிறது.

கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துவதற்கு ஒழுக்கம் தேவைப்படுகிறது, குறிப்பாக சிறிய மற்றும் எளிமையான ஆவிக்குரிய பழக்கங்கள் நாம் சிறந்த சீஷர்களாக மாற உதவுகிறது. ஒழுக்கம் இல்லாமல் சீஷத்துவம் இல்லை.

நாம் எங்கு இருக்க விரும்புகிறோம், நாம் யாராக மாற விரும்புகிறோம் என்று நாம் சாலையைப் பார்க்கும் போது கிறிஸ்துவின் மீதான நமது கவனம் மேலும் தெளிவாகிறது, பின்னர் அங்கு செல்ல உதவும் காரியங்களைச் செய்ய ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்குங்கள். கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துவது நமது முடிவுகளை எளிமையாக்கி, நம் நேரத்தையும் ஆதாரங்களையும் எவ்வாறு சிறந்த முறையில் செலவழிக்க முடியும் என்பதற்கான வழிகாட்டியை அளிக்கும்.

நம் கவனத்திற்கு தகுதியான பல காரியங்கள் இருந்தாலும், கிறிஸ்துவை எப்போதும் நம் கவனத்தின் மையத்தில் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை நாம் பேதுருவின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் மூலம் மட்டுமே நாம் தேவனுடன் வாழத் திரும்ப முடியும். நாம் அவரைப் போல ஆக முயற்சி செய்து, நாம் தவறும்போது அவருடைய மன்னிப்பையும் பலப்படுத்தும் வல்லமையையும் நாடும்போது, நாம் கிறிஸ்துவின் கிருபையை நம்பியிருக்கிறோம்.

கவனச்சிதறல்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்

இரண்டாவது பாடம்: கவனச்சிதறல்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். பேதுரு தனது கவனத்தை இயேசுவிலிருந்து விலக்கி, காற்று மற்றும் அவரது காலடியில் மோதிய அலைகள் மீது திருப்பியபோது, அவன் மூழ்கத் தொடங்கினான்.

கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துவதிலிருந்தும் “சாலையில்” இருக்கும் நித்திய காரியங்களிலிருந்தும் நம்மை திசை திருப்பக்கூடிய “மூடிக்கு முன்னால்” பல காரியங்கள் உள்ளன. பிசாசு பெரிய கவனச்சிதறல் செய்பவன். பெரிய மற்றும் விசாலமான கட்டிடத்திலிருந்து வரும் குரல்கள் தேவனுடன் வாழத் தயாராகும் போக்கிலிருந்து நம்மை அழைத்துச் செல்ல முயல்கின்றன என்று லேகியின் கனவிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்.9

ஆனால் குறைவானதாக தோன்றக்கூடிய மற்ற கவனச்சிதறல்களும் ஆபத்தானவைகளாக இருக்கக் கூடும். பழமொழி சொல்வது போல், “தீமையின் வெற்றிக்கு தேவையான ஒரே விஷயம் நல்ல மனிதர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதுதான்.” நல்ல மனிதர்களை ஒன்றும் செய்யாமல் இருக்கச் செய்யவும், அல்லது குறைந்தபட்சம் அவர்களின் உயர்ந்த நோக்கங்களிலிருந்தும் இலக்குகளிலிருந்தும் திசைதிருப்பும் காரியங்களில் நேரத்தை வீணடிப்பதை சத்துரு தீர்மானித்திருப்பதாகத் தோன்றுகிறது. உதாரணமாக, மிதமான ஆரோக்கியமான திசைதிருப்பல்களான சில காரியங்கள் ஒழுக்கம் இல்லாத ஆரோக்கியமற்ற கவனச்சிதறல்களாக மாறலாம். கவனச்சிதறல்கள் பயனுள்ளதாக இருக்க மோசமாகவோ அல்லது ஒழுக்கக்கேடாகவோ இருக்க வேண்டியதில்லை என்பதை சத்துரு புரிந்திருக்கிறான்.

நாம் மீட்கப்படலாம்

மூன்றாவது பாடம்: நாம் மீட்கப்படலாம். பேதுரு மூழ்கத் தொடங்கியபோது, கூப்பிட்டான், “ஆண்டவரே, என்னை ரட்சியும். உடனே இயேசு அவரது கையை நீட்டி அவனைப் பிடித்தார்.”10 நாம் மூழ்கும் போது, நாம் துன்பத்தை எதிர்கொள்ளும்போது, அல்லது நாம் தடுமாறும்போது, நாமும் அவரால் மீட்கப்படலாம்.

துன்பம் அல்லது சோதனையை எதிர்கொள்ளும்போது, நீங்கள் என்னைப் போல இருக்கலாம் மற்றும் மீட்பு உடனடியாக கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், இரவின் பெரும்பகுதி அவர்கள் புயலில் கடுமையாக கஷ்டப்பட்ட பிறகு, இரவின் நான்காவது ஜாமத்தில் அப்போஸ்தலர்களுக்கு இரட்சகர் உதவிக்கு வந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.11 உதவி உடனடியாக வராவிட்டால், அது குறைந்தபட்சம் ராத்திரியின் இரண்டாவது ஜாமத்திலோ அல்லது மூன்றாவது ஜாமத்திலோ கூட வரட்டும் என்று நாம் ஜெபிக்கலாம். நாம் காத்திருக்க வேண்டியிருக்கும் போது, நாம் சுமக்க இயல்வதை விட அதிகமாக நாம் தாங்க வேண்டியதில்லை என்பதை உறுதியாக்கி இரட்சகர் எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது உறுதி.12 இரவின் நான்காவது ஜாமத்தில் காத்திருப்பவர்களுக்கு, ஒருவேளை இன்னும் துன்பங்களுக்கு மத்தியிலும், நம்பிக்கையை இழக்காதீர்கள். உலக வாழ்க்கையின் போது அல்லது நித்தியங்களில் எப்போதுமே மீட்பு விசுவாசிகளுக்கு வருகிறது.

சில நேரங்களில் நமது தவறுகள் மற்றும் மீறுதல்களால் நமது மூழ்கும் நிலை வருகிறது. அந்தக் காரணங்களுக்காக நீங்கள் மூழ்கிக்கொண்டிருந்தால், மனந்திரும்புவதற்கு மகிழ்ச்சியான தேர்ந்தெடுப்பைச் செய்யுங்கள்.13 சில காரியங்கள் அவரிடம் திரும்புபவர்களை அல்லது திரும்பி வருபவர்களைக் காப்பாற்றுவதை விட இரட்சகருக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகின்றன என்று நான் நம்புகிறேன்.14 ஒரு காலத்தில் விழுந்து குறைபாடுள்ள ஆனால் மனந்திரும்பி கிறிஸ்துவின் விசுவாசத்தில் உறுதியாக இருந்தவர்களின் கதைகளால் வேதங்கள் நிரம்பியுள்ளன. இரட்சகருக்கு நம்மீதுள்ள அன்பும், நம்மை மீட்கும் அவரது வல்லமையும் எல்லையற்றது என்பதை நினைவூட்டுவதற்காக அந்த கதைகள் வேதங்களில் இருப்பதாக நான் நினைக்கிறேன். நாம் மனந்திரும்பும்போது இரட்சகர் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல, நாமும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

முடிவுரை

நீங்களாகவே “சாலையைப் பார்க்க வேண்டும்” மற்றும் உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்த காரியங்களில் உங்கள் கவனத்தை அதிகரிக்க நான் உங்களை அழைக்கிறேன் . கிறிஸ்துவை நம் கவனத்தின் மையத்தில் வைத்துக்கொள்வோம். அனைத்து கவனச்சிதறல்களுக்கும் மத்தியில், “மூடிக்கு முன்னால்” உள்ள காரியங்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சுழல்காற்றிலும், இயேசு, நம் இரட்சகர் மற்றும் நம் மீட்பர் மற்றும் நம்மை காப்பாற்றுபவர் என்றும் நான் சாட்சியமளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.