அழகாக மட்டுமே, அழகாக எளிமை
நம்முடைய தெய்வீகமாக நியமிக்கப்பட்ட பொறுப்புகளை நம்மீது நாம் ஏற்றுக்கொள்வதால் நாம் சுவிசேஷத்தை எளிமையாக வைத்திருப்போமாக.
முன்னுரை
இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன்.
நான் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் இரண்டு கூறுகளையும், அதைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பரிசுத்தவான்களின் இந்த கொள்கைகளின் பயன்பாட்டை செயலில்காட்டும் நான்கு உணர்த்துதலான விவரங்களை இன்று விவரிக்கலாம் என நம்புகிறேன். தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதல் பணியான மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் முதல் கூறு, , தெய்வீகமாக நியமிக்கப்பட்ட பொறுப்புகளில் கவனம் செலுத்துகிறது. சுவிசேஷம் தெளிவானது, விலைமதிப்பற்றது மற்றும் எளிமையானது என்பதை இரண்டாவது கூறு நமக்கு நினைவூட்டுகிறது.
தெய்வீகமாக நியமிக்கப்பட்ட பொறுப்புகள்
நித்திய ஜீவன் பெற, “கிறிஸ்துவினிடத்தில் வந்து, அவரிலே பூரணப்பட்டிருங்கள்.”1 நாம் கிறிஸ்துவிடம் வந்து, மற்றவர்களும் அப்படிச் செய்ய உதவுவதால், தெய்வீகமாக நியமிக்கப்பட்ட பொறுப்புகளில் கவனம் செலுத்தும் தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுத்தும் பணியில் நாம் பங்கேற்கிறோம்.2 கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110வது பாகத்தில்,3 பதிவுசெய்யப்பட்டபடி, மோசே, எலியாஸ் மற்றும் எலியாவால் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட ஆசாரியத்துவ திறவுகோல்களுடன் இந்த தெய்வீக பொறுப்புகள் தங்களை இணைத்துக் கொள்கின்றன, மற்றும் நம்மைப் போலவே நம் அண்டை வீட்டாரையும் நேசிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த இரண்டாவது பெரிய கட்டளை.4 அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் புதுப்பிக்கப்பட்ட General Handbook, முதல் இரண்டு பக்கங்களில் அவை காணப்படுகின்றன.
“General Handbook” அல்லது “தெய்வீகமாக நியமிக்கப்பட்ட பொறுப்புகள்” என்ற வார்த்தைகளைக் கேட்கும் சிக்கலான அல்லது குழப்பத்திற்கு பயந்து நடுங்கினால், தயவு செய்து வேண்டாம். இந்த பொறுப்புகள் எளிமையானவை, உணர்த்துபவை, தூண்டுதலளிக்கும் மற்றும் செய்யக்கூடியவை. இதோ அவை:
-
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல்
-
தேவையிலிருப்போரைக் கவனித்தல்
-
அனைவரையும் சுவிசேஷத்தைப் பெற அழைத்தல்
-
நித்தியத்திற்காக குடும்பங்களை ஒன்றிணைத்தல்
என்னைப்போல் நீங்களும் அவற்றைப் பார்க்கலாம்: நமது அன்புள்ள பரலோக பிதாவிடம் திரும்புவதற்கான சாலை வரைபடமாக.
சுவிசேஷம் தெளிவானது, விலைமதிப்பற்றது மற்றும் எளிமையானது
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் “அழகாக மட்டுமே, அழகாக எளிமை” என்று கூறப்பட்டுள்ளது.5 உலகம் அப்படி இல்லை. அது சிக்கலானது, குழப்பமானது, கொந்தளிப்பு மற்றும் சச்சரவால் நிரம்பியுள்ளது. நாம் சுவிசேஷத்தைப் பெறும் மற்றும் நடைமுறைப்படுத்தும் வழியில் நுழைய, உலகில் மிகவும் பொதுவாயிருக்கிற சிக்கலை அனுமதிக்காமல் கவனமாக இருக்கும்போது நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.
தலைவர் டாலின் எச். ஓக்ஸ் சொன்னார்: “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் பல சிறிய மற்றும் எளிமையான காரியங்கள் நாம் கற்பிக்கப்படுகிறோம். மொத்தத்தில் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டத்தில், அந்த சிறிய காரியங்கள் பெரிய காரியங்களை நிறைவேற்றுகின்றன என்பதை நாம் நினைவூகூர வேண்டும்.”6 அவருடைய நுகம் மெதுவாயும், சுமை இலகுவாயும் இருக்கிறது என்று இயேசு கிறிஸ்துவே விவரிக்கிறார்.7 நம் வாழ்வில், நம் குடும்பங்களில், நம் வகுப்புகள் மற்றும் குழுமங்களில், மற்றும் நமது தொகுதிகள் மற்றும் பிணையங்களில் சுவிசேஷத்தை எளிமையாக வைத்திருக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும், பின்வரும் கதைகளை நீங்கள் கேட்கும்போது, ஒருபுறம் உணர்த்தவும் மறுபுறம் தெரிவிக்கவும் அவை கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளம் காணவும். இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட தெய்வீகமாக நியமிக்கப்பட்ட பொறுப்புகளில் ஒன்றை நிறைவேற்றும் போது, தெளிவான, விலைமதிப்பற்ற, எளிய வழிகளில் சுவிசேஷத்தைப் பயன்படுத்துதலில், இந்த பிற்காலப் பரிசுத்தவான்களின் ஒவ்வொருவரின் செயல்களும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியாக மாறும்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல்
முதலாவது, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல் டென்மார்க்கின் ஜென்ஸ் சுவிசேஷத்தின்படி வாழ தினமும் ஜெபிக்கிறார் மற்றும் பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களை கவனிக்கிறார். அவர் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவதை உணரும்போது விரைவாகச் செயல்படக் கற்றுக்கொண்டார்.
ஜென்ஸ் பின்வருவனவற்றைப் பகிர்ந்துகொண்டார்:
“நாங்கள் கிராமத்தின் குளத்திற்கு அருகில், வசதியான சிறிய கிராமத்தின் மையத்தில், ஓலைக் கூரையுடன் கூடிய பாதிவீடு மரத்தாலான சிறிய வீட்டில் வசிக்கிறோம்.
“கற்பனை செய்யக்கூடிய மிக அழகான டேனிஷ் கோடை காலநிலை கொண்ட இந்த இரவில், கதவுகளும் ஜன்னல்களும் திறந்திருந்தன, எல்லாம் சமாதானத்தையும் அமைதியையும் சுவாசித்தன. எங்கள் புகழ்பெற்ற பிரகாசமான மற்றும் நீண்ட கோடை இரவுகள் காரணமாக, எங்கள் பயன்பாட்டு அறையில் எரிந்துபோன மின் விளக்கை மாற்றுவதற்கு நான் அவசரப்படவில்லை.
“திடீரென்று நான் அதை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற வலுவான உணர்வு எனக்கு வந்தது! அதே நேரத்தில், இரவு உணவு தயாராக இருந்ததால், என் மனைவி மரியான் என்னையும் பிள்ளைகளையும் கைகளைக் கழுவ அழைத்ததை நான் கேட்டேன்!
“நான் நீண்ட காலத்துக்கு முன்பே திருமணம் செய்து கொண்டதால், என் கைகளை கழுவுவதைத் தவிர வேறு எதையும் செய்யத் தொடங்க வேண்டிய நேரம் இதுவல்ல என்பதை அறிந்தேன் ஆனால் நான் ஒரு புதிய மின் விளக்கை வாங்க கடைக்குச் செல்வேன் என்று மரியானிடம் கூறுவதை நானே கேட்டேன். நான் உடனடியாக செல்ல வேண்டும் என்ற வலுவான உந்துதலை உணர்ந்தேன்.
“மளிகைக் கடை குளத்தின் மறுபக்கத்தில்தான் இருந்தது. நாங்கள் வழக்கமாக நடப்போம், ஆனால் இன்று நான் என் இருசக்கர வண்டியை எடுத்தேன். குளத்தை கடந்து செல்லும் போது, என் கண்ணின் மூலையில் இருந்து, சுமார் இரண்டு வயதுடைய ஒரு சிறுவன், குளத்தின் விளிம்பிற்கு அருகில், தண்ணீருக்கு மிக அருகில், தனியாக நடந்து செல்வதை நான் கவனித்தேன், திடீரென்று அவன் தண்ணீரில் விழுந்தான்! ஒரு நிமிடம் அவன் அங்கே இருந்தான், அடுத்த நிமிடம் அவன் மூழ்கி விட்டான்!
“இது நடந்ததை என்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததில்லை. நான் என் வண்டியை தரையில் போட்டுவிட்டு, ஓடி, இடுப்பு ஆழ குளத்தில் குதித்தேன். இதனால் தண்ணீர் வழியாக பார்க்க இயலாததாயிருக்க நீரின் மேற்பரப்பு உடனடியாக களைகளால் மூடப்பட்டது. பின்னர் ஒரு பக்கத்தில் ஒரு அசைவை உணர்ந்தேன். நான் என் கையை தண்ணீருக்குள் விட்டு, ஒரு டி-ஷர்ட்டைப் பிடித்து, சிறுவனை மேலே இழுத்தேன். அவன் மூச்சுத் திணறவும், இருமவும், அழவும் ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து சிறுவன் தனது பெற்றோருடன் மீண்டும் இணைந்தான்.”
ஒரு பல்பை உடனடியாக மாற்றுவது போன்ற அசாதாரணமான ஒன்றுக்குக் கூட, பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களை அடையாளம் காண சகோதரர் ஜென்ஸ் ஒவ்வொரு காலையிலும் உதவிக்காக ஜெபிக்கும்போது, அவர் தேவனின் பிள்ளைகளை ஆசீர்வதிக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் ஜெபிக்கிறார். ஒவ்வொரு நாளும் தெய்வீக வழிகாட்டுதலைத் தேடுவதன் மூலம் சுவிசேஷத்தின்படி ஜென்ஸ் வாழ்கிறார், தகுதியுள்ளவராக இருக்க முயற்சி செய்கிறார், பின்னர் அந்த வழியைப் பின்பற்றுவதற்கு அவரால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்.
தேவையிலிருப்போரிடத்தில் அக்கறை
இதோ, தேவைப்படுபவர்களைப் பராமரிப்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு. ஒரு நாள் தனது இரண்டு இளம் பெண்களையும் பயங்கரமாகப் போராடிக்கொண்டிருக்கும் அவர்களின் மூத்த பதின்ம வயது சகோதரரையும் பார்க்க கொலம்பியாவில் உள்ள குக்குடா பிணையத்தில் உள்ள ஒரு தொகுதி தலைவர், இளம் பெண்கள் தலைவருடன் சென்றார். சமீபத்தில் அவர்களின் தகப்பன் மரித்துவிட்டார், மற்றும் அவர்களின் தாயார் ஒரு வருடம் முன்பு மரித்துவிட்டார். மூன்று உடன்பிறப்புகள் இப்போது தங்கள் சிறிய, தாழ்மையான தங்குமிடத்தில் தனியாக விடப்பட்டனர். சுவர்கள் பிளாஸ்டிக் பைகளால் மூடப்பட்ட கச்சா மரத்தால் ஆனது, மற்றும் தகர கூரை அவர்கள் உறங்கும் பகுதியை மட்டும் மூடியிருந்தது.
அவர்களின் சந்திப்புக்குப் பிறகு, அவர்களுக்கு உதவி தேவை என இந்த தலைவர்கள் அறிந்தனர். தொகுதி ஆலோசனைக் குழு மூலம் அவர்களுக்கு உதவும் திட்டம் உருவாகத் தொடங்கியது. தொகுதி மற்றும் பிணையத் தலைவர்கள், ஒத்தாசை சங்கம், மூப்பர்கள் குழுமம், வாலிபர்கள், இளம் பெண்கள், மற்றும் பல குடும்பங்கள், அனைவரும் இந்த குடும்பத்தை ஆசீர்வதிக்கும் பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கட்டுமானத்தில் பணிபுரியும் பல தொகுதி உறுப்பினர்களை தொகுதி அமைப்புகள் தொடர்பு கொண்டன. சிலர் வடிவமைப்பிற்கு உதவினார்கள், மற்றவர்கள் நேரத்தையும் உழைப்பையும் நன்கொடையாக அளித்தனர், மற்றவர்கள் உணவு தயாரித்தனர், இன்னும் சிலர் தேவையான பொருட்களை நன்கொடையாக அளித்தனர்.
சிறிய வீடு முடிக்கப்பட்டதும், உதவி செய்தவர்களுக்கும் மூன்று இளம் தொகுதி உறுப்பினர்களுக்கும் அது மகிழ்ச்சியான நாள். அவர்கள் தனியாக இல்லை என்பதையும், தேவன் எப்போதும் தங்களுக்கு இருக்கிறார் என்பதையும் அறிந்து கொண்ட இந்த அனாதை பிள்ளைகள் தங்கள் தொகுதி குடும்பத்தின் அரவணைப்பு மற்றும் உறுதியளிக்கும் பிணைப்புகளை உணர்ந்தனர். . அவர்களை அணுகியவர்கள், இந்த குடும்பத்தின் மீது இரட்சகரின் அன்பை உணர்ந்தவர்கள், அவர்களுக்கு சேவை செய்வதில் அவருடைய கரங்களாக செயல்பட்டனர்.
சுவிசேஷத்தைப் பெற அனைவரையும் அழைத்தல்
சுவிசேஷத்தைப் பெற அனைவரையும் அழைக்கும் இந்த உதாரணத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு நாள் தனது தொகுதியின் வேதபாட வகுப்பிற்குள் நுழைவதால் என்ன நடக்கும் என்று கேப் வெர்டேவைச் சேர்ந்த பதினேழு வயதான கிளீடனுக்கு தெரியவில்லை. ஆனால் அவன் செய்ததால் அவனது வாழ்க்கையும் மற்றவர்களின் வாழ்க்கையும் என்றென்றைக்குமாய் மாறியது.
கிளீடன், அவனது தாயார் மற்றும் மூத்த சகோதரருடன், சில காலத்திற்கு முன்பே சபையில் ஞானஸ்நானம் பெற்றான், ஆனாலும் குடும்பம் கலந்துகொள்வதை நிறுத்தியது. வேதபாட வகுப்பில் கலந்து கொள்ளும் அவனது ஒற்றை செயல் குடும்பத்திற்கு ஒரு முக்கிய புள்ளியாக இருக்க நிரூபிக்கும்.
வேதபாட வகுப்பில் மற்ற இளைஞர்கள் அன்பாகவும் வரவேற்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் கிளீடனை வீட்டிலிருப்பதுபோல் உணரவைத்தனர் மற்றும் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவனை ஊக்குவித்தனர். அவனும் அவ்வாறு செய்தான், விரைவில் மற்ற சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினான். ஒரு புத்திசாலியான ஆயர் கிளீடனில் ஆவிக்குரிய திறனைக் கண்டார் மற்றும் அவனை அவரது உதவியாளராக அழைத்தார். ஆயர் குரூஸ் கூறுகையில், “அந்த தருணத்திலிருந்து, கிளீடன் மற்ற இளைஞர்களுக்கு ஒரு உதாரணமாகவும் செல்வாக்காகவும் மாறினான்.”
கிளீடன் மீண்டும் சபைக்கு அழைத்த முதல் நபர் அவனது தாயார், பின்னர் அவனது மூத்த சகோதரன். பின்னர் அவன் தனது வட்டத்தை நண்பர்களுக்கு விரிவுபடுத்தினான். அந்த நண்பர்களில் ஒருவன், வில்சன் என்ற அவனது வயது இளைஞன். ஊழியக்காரர்களுடனான முதல் சந்திப்பின் போது, வில்சன் ஞானஸ்நானம் பெற விருப்பம் தெரிவித்தான். கிளீடன் வில்சனுடன் ஏற்கனவே எவ்வளவு பகிர்ந்து கொண்டான் என்று ஊழியக்காரர்கள் ஈர்க்கப்பட்டனர் மற்றும் ஆச்சரியப்பட்டனர்.
கிளீடனின் முயற்சிகள் அங்கு நிற்கவில்லை. அவன் மற்ற மத நண்பர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், மற்ற ஆர்வம் குறைவான உறுப்பினர்கள் திரும்ப வரவும் உதவினான். இன்று இந்த தொகுதியில் 35 சுறுசுறுப்பான இளைஞர்கள் உள்ளனர், வெற்றிகரமான வேத பாட வகுப்புடன், அன்பு, பகிர்வு மற்றும் அழைப்புக்கான கிளீடனின் அதிகமான முயற்சிகளுக்கு பெருமளவில் நன்றி. கிளீடன், அவனது மூத்த சகோதரன் க்ளேபரும் இருவரும் முழுநேர ஊழியங்களைச் செய்யத் தயாராகிறார்கள்.
நித்தியத்திற்காக குடும்பங்களை ஒன்றிணைத்தல்
இறுதியாக, நித்தியத்துக்கும் குடும்பங்களை ஒன்றிணைக்கும் ஒரு அழகான உதாரணத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். உக்ரைனின் கார்கிவ் நகரைச் சேர்ந்த லிடியா, ஊழியக்காரர்களிடமிருந்து ஆலயத்தைப்பற்றி முதலில் கற்றுக்கொண்டாள். உடனடியாக, லிடியா ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்ற தீவிரமான விருப்பத்தை உணர்ந்தாள், அவள் ஞானஸ்நானம் பெற்ற பிறகு, ஒரு ஆலய பரிந்துரையைப் பெறத் தயாரானாள்.
ஃப்ரீபெர்க் ஜெர்மனி ஆலயத்தில் தனது தரிப்பித்தலைப் பெற லிடியா சென்றாள், பின்னர் அங்கு பல நாட்கள் பதிலி பணிகளைச் செய்தாள். கீவ் உக்ரைன் ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லிடியா அடிக்கடி ஆலயம் சென்றாள். அவளும் அவளுடைய கணவர் அனடோலியும் அங்கே நித்தியமாக முத்திரிக்கப்பட்டனர், பின்னர் ஆலய ஊழியக்காரர்களாக சேவை செய்ய அழைக்கப்பட்டனர். ஒன்றாக அவர்கள் 15,000 க்கும் மேற்பட்ட மூதாதையர்களின் பெயர்களைக் கண்டறிந்து அவர்களுக்காக ஆலய நியமங்களை வழங்க உழைத்துள்ளனர்.
ஆலயப்பணி தொடர்பான அவளுடைய உணர்வுகளைப்பற்றி கேட்டபோது, லிடியா சொல்கிறாள், “ஆலத்தில் நான் என்ன பெற்றேன்? நான் தேவனுடன் புதிய உடன்படிக்கைகளை செய்து கொண்டேன். எனது சாட்சியம் பலப்படுத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட வெளிப்பாட்டைப் பெற நான் கற்றுக்கொண்டேன். மரித்த என் மூதாதையர்களுக்காக நான் இரட்சிப்பின் நியமங்களைச் செய்ய முடிகிறது. நான் மற்றவர்களை நேசிக்கவும் சேவை செய்யவும் முடிகிறது.” இந்த உண்மையான வாக்கியத்துடன் அவள் முடித்தாள்: “தேவன் எங்களை அடிக்கடி ஆலயத்தில் பார்க்க விரும்புகிறார்.”
முடிவுரை
இந்த நான்கு கதைகளை மையமாகக் கொண்ட ஒவ்வொன்றும் மாறுபட்ட மற்றும் வேறுபட்ட பின்னணியைக் கொண்ட இந்த பிற்காலப் பரிசுத்தவான்களின் நன்மையால் நான் ஈர்க்கப்பட்டேன். எளிமையான சுவிசேஷ கொள்கைகளின் எளிமையான பயன்பாட்டின் மூலம் கொண்டுவரப்பட்ட அற்புத விளைவுகளிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் செய்தது அனைத்தும் நமக்கும் சாத்தியமாகும்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ்வதற்கான தெய்வீகமாய் நியமிக்கப்பட்ட பொறுப்புகளை நாம் ஏற்றுக்கொள்வதால், டென்மார்க்கில் ஜென்ஸ் செய்தது போல் தூண்டுதல்களுக்கு உணர்திறன் இருக்கும்படியாக சுவிசேஷத்தை எளிமையாக வைத்துக்கொள்வோம். அனாதை தொகுதி உறுப்பினர்களுக்கு தங்குமிடம் வழங்குவதில் கொலம்பியாவில் உள்ள குக்குடா பிணையத்தின் உறுப்பினர்கள் காண்பித்தபடி தேவைப்படுபவர்களைப் பராமரிக்க. ஆப்பிரிக்க தீவு நாடான கேப் வெர்டேவைச் சேர்ந்த க்ளீடன் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செய்த விதத்தில் சுவிசேஷத்தைப் பெற அனைவரையும் அழைக்க. இறுதியாக, உக்ரைனில் இருந்து சகோதரி லிடியா, தனது சொந்த ஆலய நியமங்கள், குடும்ப வரலாறு முயற்சிகள் மற்றும் ஆலய சேவை மூலம் எடுத்துக்காட்டாயிருந்ததைப்போல, குடும்பங்களை நித்தியத்திற்காக ஒன்றிணைக்க.
அவ்வாறு செய்வது நிச்சயமாக மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும். இதைக் குறித்தும், இயேசு கிறிஸ்து நம்முடைய இரட்சகர், மீட்பர் என்றும் நான் வாக்களிக்கிறேன், சாட்சி அளிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.